பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிரம்ப் என்பவரை பற்றி …

இந்த டிரம்ப் என்பவரை பற்றி பலரும் பலவிதமாக சொன்னாலும் மனிதர் சில நல்ல விஷயங்களை செய்யத்தான் செய்கின்றார். சில போர்களை தவிர்க்கின்றார், பாகிஸ்தானை மிரட்டுகின்றார், அப்படியே இந்தியாவோடு நெருங்குகின்றார். பெரும் கிறிஸ்தவ வெறியன். வெள்ளை மாளிகையில் 24 மணிநேரமும் பைபிள் மட்டும் படிக்க கட்டளையிட்டிருக்கின்றார் என்றேல்லாம் சொல்லபட்ட டிரம்ப் உற்சாகமாக தீபாவளி கொண்டாடியிருக்கின்றார் தீபாவளி சொன்ன நல்ல செய்தி அது அந்தமானில் நம் நாட்டு ராணுவவீரர்களுடன் மகா உற்சாகமாக தீபாவளி கொண்டாடியிருக்கின்றார் நமது பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா […]

கமல் காமெடிகள்

இன்று: பணமதிப்பு நீக்கம் கறுப்பு பணத்தை ஒழிக்கும் என்பதால் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் திட்டம் தோல்வி என்பதால் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன் : கமலஹாசன் நாளை: பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் திறமையும் , அறிவும் தெரியாமல் பேசிவிட்டேன், இனி அவர்களை எதிர்க்க மாட்டேன். மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் : கமலஹாசன் கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை அதாவது இவரின் கருத்துக்களான விரைவில் தாமரை மலரும், கோட்டையில் காவி கொடி பறக்கும் […]

மெர்சல் எனும் இம்சையினை இன்னும் பார்க்கவில்லை

மெர்சல் படத்தில் பிரதமர் மோடியின் திட்டங்களையும், ஜிஎஸ்டியினையும் விஜய் விமர்சித்துள்ளார், தவறாக பாஜக அரசின் கொள்கை சித்தரிக்கபட்டிருக்கின்றது, அதனால் படத்தை தடை செய்யவேண்டும் : தமிழிசை என்னடா விஜய்க்கு வந்த சோதனை? அதிமுக அரசாவது படம் வெளிவரும் முன்னால்தான் பிரச்சினை செய்யும், வந்த பின் விட்டுவிடும் ஆனால் பாஜக வந்தபின்னாலும் விடாது போலிருக்கின்றது தமிழிசையின் குற்றசாட்டு ஓரளவு நியாயமானது என்பதாலும், அட்லியும் விஜயும் அநியாயத்திற்கு அள்ளி விட்டிருப்பதாலும் கொஞ்சம் சிக்கல்தான் இனி என்னாகும்? அவரசரமாக அந்த “ஆளபோறான் […]

பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது ..

பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது வாழ்வின் மிக மிக கொடுமையான தருணம் என்ன செய்வது? இவ்வுலகில் சில மதங்கள் இருப்பதுதான் காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இன்னும் சில மதங்கள் அவசியம் நாம் பல மதம் பரப்ப முடியாது, ஒரே ஒரு மதம் மட்டும் தொடங்கி வருங்கால சந்ததி நம்மை வாழ்த்தும்படி செய்துவிடலாம் விரைவில் குஷ்பூ மதம் தொடங்கி, “குஷ்பூ அவதார திருவிழா”, “குஷ்பூ தமிழகம் வந்த விழா” என சில பண்டிகைகளை வருங்காலம் கொண்டாட […]

ஶ்ரீவித்யா இறந்த நாள் இதே அக்டோபர் 19

தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள் அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா அமைதியான முகம், அதில் துருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். குறிப்பாக அந்த கண்கள், அது மட்டுமே ஆயிரம் கதைகளை அட்டகாசமாக பேசும் சினிமாவில் வாயினை விட கண்களால் அதிகம் பேசியவர் அந்த […]

எவ்வளவு நல்ல ஆடுகள் அவை..

அக்காலத்தில் குக்கர் கிடையாது, மைக்ரோ வேவ் இம்சைகள் கிடையாது, வெறும் மண்சட்டிதான் ஆனாலும் வெட்டிபோட்டால் ஆடு சமத்தாக வெந்திருக்கின்றது. எவ்வளவு நல்ல ஆடுகள் அவை.. இப்பொழுது என்னதான் குக்கரில் வேகவைத்தாலும் அது வேக மறுக்கின்றது, இப்போதுள்ள ஆடுகள் எல்லாமே கள்ளமும் கபடும் நிறைந்த ஆடுகள் போல‌ இவ்வுலகில் மனிதர்கள்தான் மாறிகொண்டே வருகின்றார்கள் என்றால், ஆட்டுகறியுமா மாறிகொண்டே வரவேண்டும்? நண்பர் Vivek Vivekanandam கொடுத்த பாதுஷா எனும் இனிப்பில் தொடங்குகின்றது தீபாவளி கொண்டாட்டம் நண்பர் கோவைக்காரர், அதனால் கோவை மக்களின் இயல்பான […]

வீரப்பனால் யாருக்கு லாபம்?

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை? காவல்துறையில் அந்த தீவிரபரபரப்பில் ஒரு கைதி கர்நாடக சிறையில் இருந்து தப்புகிறார், அவரைபற்றி அன்று அதிகம் யாருக்கும் தெரியாது, கன்னட எல்லையில் ஒரு கொலைகுற்றவாளி […]

அதிமுக 46ம் ஆண்டுவிழா கொண்டாட்டம்

அதிமுக 46ம் ஆண்டுவிழா கொண்டாட்டம் இனி ஜென்மத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்துகொண்ட அதிமுகவினர் இப்பொழுதெல்லாம் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர் மரத்தின் உச்சிக்கு சென்ற குரங்கு , இறங்கும் முன் கிளையினை ஆட்டுவது போல் ஆட்டிகொண்டிருக்கின்றனர் ஜெயா செத்து இரு மாதம் கூட நிறைவடையா நிலையில் ராமசந்திரன் நூற்றாண்டு விழா என ஒரே அழிச்சாட்டியம், இப்பொழுது 46ம் ஆண்டு விழாவாம் கவனியுங்கள் கட்சி தொடங்கி 46 வருடம் ஆயிற்று, அது தொடங்கபட்ட 5 வருடத்தில் ஆட்சிக்கு வந்தது […]

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் தேர்தல் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே, பல வகையான காரணங்களை சொல்வார்கள், அதனில் முதலானது நரகாசுர வதம். இன்னொன்று ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் தீப ஓளியேற்றி மகிழ்ந்தார்கள் என்பதும் இந்துசமய நண்பர்களின் நம்பிக்கை. மிகபழமையான ஆனால் தற்போது சுருங்கிவிட்ட சமண மதத்தவருக்கு, அந்நாளில்தான் மகாவீரருக்கு அறிவொளி ஞானம் கிடைத்தது, அதனால் தீபமேற்றி கொண்டாடவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை, அவர்களும் கொண்டாடுவார்கள். இன்னும் ஒரு தீபாவளி […]

தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த […]