பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2-வில் நடிப்பது உறுதியாகிவிட்டது : செய்தி இம்முறை ஆர்.எஸ்.எஸ் வீர் சாவர்க்கர் வேடத்தில் கமல் நடிக்கலாம், நடப்புகளை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது. சாவர்கரும் சுதந்திர போராளிதான், வெள்ளையன் கப்பலில் சிறு ஓட்டை வழியாக தப்பி கடலில் குதித்த சாகசம் எல்லாம் அவருக்கு உண்டு பின்பு அந்தமான் சிறையில்தான் பாதை மாறி சிந்திக்க தொடங்கிவிட்டார். காந்தி கொள்கை ஹேராம், நேதாஜியின் இந்தியன் தாத்தா வரிசையில் இப்பொழுது அரை டவுசருடன் சாவர்க்கர் கெட்டப்பில் கமல் […]

தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லையா?

தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லை என்பதால் அது சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கபட்டது : உபி அரசு அறிவிப்பு இந்த டெல்லி செங்கோட்டை சமுத்திர குப்தன் கட்டி வைத்ததா? அசோகரின் சக்கரம் குறிப்பது என்ன? புத்தமதம் நேபாள இறக்குமதி அல்லவா? எடுத்துவிடலாமா? மும்பையில் இன்றும் பல்லாயிரம் பயணிகளை தாங்கும் இன்றைய சிவாஜி ரயில் நிலையத்தை அன்றே விக்டோரியா டெர்மினல் என கட்டியது யார்? நாடாளுமன்றத்தை கட்டியது யார்? அது என்ன இந்திய அடையாளமா? இன்னும் ஏராளமான விஷயங்கள் […]

யஷ்வந்த் சின்கா மர்ம காய்ச்சலால் நிரம்ப பாதிக்கபட்டுள்ளார் போலும்

இந்த யஷ்வந்த் சின்கா எனும் பாஜக தலைவர் மர்ம காய்ச்சலால் நிரம்ப பாதிக்கபட்டுள்ளார் போலும் ஒரு மாதிரியாக பேசிகொண்டிருக்கின்றார், இந்தியாவில் எல்லாம் மோடியால் போயிற்று என்றார், இப்பொழுது காஷ்மீரை நாம் இழக்கபோகின்றோம் என சொல்லாமல் சொல்லிகொண்டிருக்கின்றார் அதாவது காஷ்மீரிகள் தங்களை இந்தியராக எண்ணவில்லையாம், அந்த அளவிற்கு நிலமை கெட்டு போயிற்றாம் காஷ்மீருக்கு இருக்கும் 370 சட்டபிரிவினை ரத்து செய்வோம் என அத்வாணி சொன்னபொழுது கைதட்டியவர் இவர்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது, தனி கொடி கூடாது […]

மோடி என்னைவிட சிறந்த நடிகர் : பிரகாஷ் ராஜ்

மோடி என்னைவிட சிறந்த நடிகர் : பிரகாஷ் ராஜ் அன்னாருக்கு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் அரசியல் நிறைய பேசுகின்றார். யார்தான் அரசியல் பேசவில்லை எல்லோருமே பேசுகின்றார்கள். பேசட்டும் மோடி இந்நாட்டிற்கு ஏதோ செய்ய நினைக்கின்றார். அதன் விளைவுகள் பின்னர்தான் தெரியும் என்றாலும் சில விஷயங்களில் அவரது அணுகுமுறை நன்றாகத்தான் இருக்கின்றது. சீனாவுடன் போரை தவிர்த்தது, பாகிஸ்தானை அமெரிக்காவிடம் இருந்து தனிமை படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றது. அரபு நாடுகள் எண்ணெய் சந்தையில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் […]

ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் : சீமான்

அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ், பணம் மட்டும் போதாது என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் : சீமான் அதிமுக ஆட்டம் கண்டதில் இருந்து, பாஜக இரும்பு பிடி போட தொடங்கியதில் இருந்தே அங்கிள் சைமன் பல விஷயங்களை வரவேற்க தொடங்கிவிட்டார் “ஏய் முழியாங்கண்ணா, நீர் நேரத்திற்கு ஏற்றபடி எப்படி எல்லாம் டைப் டைப்பாக முழியினை மாற்றுவீர் என்பது தெரியாதா?”  · சிவாஜி நினைவக திறப்பு விழாவில் ஒ.பன்னீர் செல்வத்துடன் ரஜினி, கமலும் பங்கு பெற்றனர் ஆக […]

மேட்டூர் அணை விவசாயத்திற்காக திறப்பு

மேட்டூர் அணை விவசாயத்திற்காக திறப்பு காவேரி என சீறும் எவனையும் இப்பொழுது காணமுடியாது, சிலருக்கு கடும் வருத்தம் கூட இருக்கலாம். அது வராமல் இருந்தால் கன்னடன் ஒழிக, இந்தியா ஒழிக என குதிப்ப்பார்கள், வந்துவிட்டால் சத்தமே இருக்காது இதில் கவனிக்கவேண்டிய விஷயம் , கல்லணை தாண்டி எவ்வளவு நீர் இனி வீணாக கடலுக்கு செல்லும் என்பதைத்தான். ஒரு சொட்டு நீர் கடலுக்கு சென்றாலும் அது நிச்சயம் தலைகுனிவுதான். எப்படியோ, காவேரி பிரச்சினையினை தீர்த்து வைக்கும் சக்தி வருணபகவானை […]

ஜெயாவினை பற்றி மகளிர் பேசினால் அதன் சக்தியே தனி

அப்பொழுது திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி இருந்தது. தொகுதிதான் திருச்செந்தூர், நெல்லை,கன்னியாகுமரி என பிரிந்திருக்குமே தவிர மக்களின் இயல்பு ஒன்றுதான் வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் நடந்தது, ஜெயா அரசால் செய்யபட்ட படுகொலை என்றே செய்திகள் சொன்னது. சாத்தான்குளம் இடைதேர்தலில் ஜெயாவின் வலதுகரமாக சுழன்ற வெங்கடேச பண்ணணையார்தான், பின்பு கொல்லபட வேண்டிய ஆபத்தானவன் என அதே ஜெயா ஆட்சியில்  சுட்டும் கொல்லபட்டார். தென் மாவட்டங்கள் கொந்தளித்தபொழுது கலைஞரின் கணக்கு மிக கச்சிதமாய் இருந்தது. மனிதாபிமானம், இரக்கம், அரசியல் என எல்லாம் […]

தேசபிதா மகாத்மா காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது. அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி, உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது. கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க […]

நியாயமான , தைரியமிக்க ஸ்டாலினின் கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்

ஸ்டாலின் கடல் அலை போல தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றார். ஜெயலலிதா மர்மம் தொடர்பான விஷயத்தை அவர் இனி விடுவதில்லை என்றே தெரிகின்றது. அட்டகாசமான பார்மிற்கு வந்துவிட்டார். சீனிவாசன் முதல் ஆளுநர் வரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை உண்மையில் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எழும் கேள்விகள் அவை. மருத்துவமனையில் இருந்தது ஒரு முதல்வர், அவரை சந்திக்க சென்றது ஆளுநர். அந்த ஆளுநர் தான் ஜெயாவினை பார்த்ததாக சொல்லியிருந்தார். இப்பொழுது அமைச்சரும் தினகரனும் ஜெயாவினை யாரும் பார்க்கவேயில்லை […]

கதரை பயன்படுத்துங்கள் : முதல்வர் பழனிச்சாமி

கதரை பயன்படுத்துங்கள் : முதல்வர் பழனிச்சாமி காந்தி பிறந்தநாள் என்றால் இவருக்கு கதர் நினைவுக்கு வருகின்றது, சுதேசி கொள்கையாம் எங்கே? இந்திய தயாரிப்பு காரில் செல்லட்டும் பார்க்கலாம், அப்படி ஒரு கார் இல்லையென்றால் இந்திய தயாரிப்பு மாட்டுவண்டியில் செல்வாரா? இவர்கள் பயன்படுத்தும் ஒரே இந்திய தயாரிப்பு ரூபாய் நோட்டு மட்டுமே… காந்தி மதுவிலக்கு வேண்டுமென்றார், அதனை ஏன் பழனிச்சாமி செய்யவில்லை?