பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கிருஷ்ணார்பணம் – கோகுலாஷ்டமி

இந்த பூமி பிரபஞ்சத்தின் கட்டுபாட்டில் இயங்குவது, பூமியினை அந்த பிரபஞ்சம் இயக்குகின்றது, இந்த பிரபஞ்சம் பூமியின் எல்லா குரலுக்கும் செவி சாய்க்கின்றது அன்று அந்த காலம் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது, தர்மம் நாராய் கிழிந்து கிடந்தது, பாம்பினை கண்ட பறவை குஞ்சாய் ஒடுங்கி கிடந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரம கூட்டம் மிதமிஞ்சி ஆடியது கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். பெற்ற வரத்தை அதர்மத்தின் […]

இந்தியாவின் சீன எல்லை விளையாட்டு…

முதல் முறையாக இந்தியாவும் வியட்நாமும் சேர்ந்து செய்த ராணுவ பயிற்சிகள் நிறைவு பெற்றிருப்பதாக இந்திய ராணுவ செய்திகள் அறிவிக்கின்றன‌ ஆகஸ்டு 1 முதல் 20ம் தேதிவரை நடக்க திட்டமிடபட்ட பயிற்சி இன்றோடு முடிந்து நாளை முறைப்படி முடிவதாக அறிக்கைகள் சொல்கின்றன‌ வியட்நாம் சீனாவினை அண்மித்து இருக்கும் நாடு, இந்தியாவுக்கு இலங்கை போல சீனாவுக்கு வியட்நாம் அந்த வியட்நாமுக்கும் சீனாவுக்கும் பொருந்தாது, காரணம் தன்னை சுற்றி இருக்கும் எல்லா நாடுகளுடனும் வம்பிழுத்து வைப்பதுதான் நல்லாட்சி என நம்பும் சீனா […]

குமரகுருபரர் நீதிநெறி : 63

“பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்சிற்றுயிர்க் காக்க மரிதம்மா – முற்றும்வரவர வாய்மடுத்து வல்விராய் மாயஎரிதழன் மாயா திரா” சிறு தீயாக எரியும் நெருப்பு அருகில் இருக்கும் பொருட்கள் மேல் எல்லாம் பரவிகொண்டே இருக்கும், அப்படி பேராசை மிக்கவர்கள் தங்களுக்கு இருக்கும் பொருளோடு திருப்தி அடையாமல் அடுத்தவர் பொருட்களை விழுங்குவதிலே குறியாக இருபார்கள் நெருப்புக்கு எவ்வளவு கொடுத்தாலும் தீராது, அது தன்னில் விழுவதையெல்லாம் எரித்து இன்னும் கேட்டு கொண்டேதான் இருக்கும், பேராசை மிக்கவரின் ஆசைக்கும் அப்படி முடிவே இல்லை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 05

“தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்காஞ்சனமே யாகுங் கருத்து” இக்குறள் “தான் செய்யும் வினை எல்லாம் தன்மையற உணரில் காஞ்சனமே ஆகும் கருத்து” என பிரிந்து பொருள் தரும் அதாவது ஒருவன் தவத்தில் மூழ்கி ஈசனில் நிறைந்து அந்த ஞான சிந்தனையில் பிரபஞ்ச பேரருளில் நிறைந்து தன் உயர்ந்த தன்மையில் சிந்தித்து சொல்லும் கருத்துக்கள் பொன்போல் மின்னும் பொன்போல் மின்னும் என்றால் அது எல்லா காலமும் ஜொலித்து கொண்டே இருக்கும், அழியாத ஜொலிப்புடன் மதிப்புடன் காலம் காலமாக நிலைத்திருக்கும் […]

அந்த கண்ணன் பன்முகம் கொண்டவன்

அந்த கண்ணன் பன்முகம் கொண்டவன், ஏகபட்ட முகங்களை கொண்ட வைடூரியம் போல, பல வகை மணம் கொடுக்கும் மனோரஞ்சிதம் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தை அன்றும் இன்றும் வழங்கிகொண்டே இருக்கின்றான் அவனை தவிர இன்னொரு அவதாரத்துக்கு அது சாத்தியமே இல்லை கண்ணனை வணங்குபவர்களுக்கு எல்லாமும் கை கூடும் என்பார்கள், அது பாண்டவர் காலத்தில் இருந்தே கண்ட உண்மை அது இக்காலத்திலும் நடக்கின்றது, அவனை சிந்தித்து அவன் அருமையினை உணர்ந்தோரை அவனே வந்து கைபிடித்து நடத்துகின்றான் உலகில் இன்றும் […]

ஆயர்பாடி மாளிகையில்

உலகின் மிகபெரிய கொண்டாட்டங்களில் ஒன்று கோகுலாஷ்டமி என்கின்றது ஆய்வு, இந்தியாவில் மிக பெரிதாகவும் இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் சிறப்பாகவும் கொண்டாடடும் நாள் அது அந்த கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றன, கண்ணனின் நினைவில் உலகம் ஆரவாரத்துடன் கொண்டாட தொடங்கியிருக்கின்றது உலகெங்கும் கோகுலாஷ்டமி உற்சாகமாய் கொண்டாடபட்டு கொண்டிருகின்றது இந்த மண்ணும் தர்மமும் இச்ச சமூகமும் எப்படி எல்லாம் குழந்தைகளை கொண்டாடியது?, அது கொண்டாடியது போல் இன்னொரு சமூகம் கொண்டாடியிருக்க முடியாது. வள்ளுவன் மக்களுடமை என அதிகாரமே அமைத்து “குழலினிது யாழினிது” என்றான், இன்னொரு […]

நேதாஜி

ஐ.என்.ஏ எனப்படும் நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர்கள் இன்றும் வெகுசிலர் உண்டு, அவர்களிடம் பேசினால் அவர்களின் குரல் இப்படித்தான் சொல்லும் கட்சிக்கும் பதவிக்கும் காசுக்கும் அல்லாமல் நாட்டுக்காக சாக நேதாஜி பின்னால் சென்ற அந்த உத்தமர்களின் ஆன்மாவின் குரல் எக்காலமும் உண்மையினைத்தான் சொல்லும் கண்களில் நீர் வழிய, தங்கள் கனவுகளின் உடைந்த பிம்பங்களை நினைத்தபடியே கேவி கேவி இடை நிறுத்தி , தவித்து, அழுது அவர்கள் சொல்லும் நினைவுகள் உண்மையும் சத்தியமுமானவை தாய்பாலில் மாசு இல்லை, அந்த உன்னதமான […]

ஐ.என்.எஸ் துருவ்…

இந்திய பத்திரிகைகளும் சில வெளிநாட்டு ஊடகங்களும் சீன கப்பலின் இலங்கை வருகையினை தொடர்ந்து சில விஷயங்களை கசியவிடுகின்றன, இது ஊடகங்களின் செய்தி என்றாலும் இந்திய அரசின் ரகசிய அனுமதி இல்லாமல் அது வெளிவர வாய்ப்பே இல்லை அந்த செய்தி இந்திய கப்பல் ஐ.என்.எஸ் துருவ் பற்றியது இந்த கப்பலை பார்க்கும் முன்னால் இந்திய தமிழக ஊடகங்கள் செய்யும் அழிச்சாட்டியம் பற்றி பார்க்கலாம், இந்திய ஊடகங்கள் அந்த சீன கப்பல் யுவான் வாங் ராக்கெட் ஏவும் கப்பல், அணுகுண்டை […]

சத்திரபதி சிவாஜி : 44

சத்திரபதி சிவாஜி : 44 // அக்கா, அவனுக்கு மலை எலி என்ற பெயர் பொருத்தமானது, அவன் சாதாரண எலி அல்ல, எப்படியெல்லாம் குடைகின்றான் தெரியுமா? // // இங்கு ஈரானியர்கள், போர்ச்சுகீசியர்கள் என யார்யாரோ வந்து அரசு அமைத்து, எங்கிருந்தோ வந்த‌ உங்களுக்கு கட்டுபட்டு நிற்கும்பொழுது இந்த மண்ணின் மகனாகிய நான் ஒரு இந்து அரசனாக சிறிய ராஜ்ஜிய மன்னனாக இருந்துவிட்டால் என்ன பிரச்சினை // // அங்கு மதம் பிரச்சினையே இல்லை பெரியவரே, அங்கு […]

மதன்லால் திங்காரா

அவன் பெயர் மதன்லால் திங்காரா, பஞ்சாபின் இந்து குடும்ப பிறப்பு 1883ல் அமிர்தசரஸில் பிறந்த அவன் கல்வியில் நன்கு தேறினான் 1904ம் ஆண்டு லாகூர் கல்லூரியில் பிரிட்டிஷ் துணியில் சீருடை கொடுக்கபட்டதை தைரியமாக எதிர்த்தான், உள்நாட்டு கதர் ஆடையில்தான் சீருடை அணிவேன் என அவன் சீறி நின்றதில் கல்லூரி நிர்வாகம் அவன் படிப்பை தடை செய்தது அவன் தேசபற்று இயக்கங்களுடன் சேர்ந்து போராட சித்தமாயிருந்தான், அவன் பெற்றோரோ அவனை லண்டனுக்கு அனுப்பினார்கள் 1906ம் ஆண்டு எந்திர பொறியியல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications