பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காலத்திற்கு ஏற்றவாறு நாடு மாறுவது அவசியம்…

ஒரு நாடு இயங்க மகா முக்கியமான விஷயம் போக்குவரத்து, அது எவ்வளவுக்கு எளிதாகின்றதோ அவ்வளவிற்கு நாடு முன்னேறும் காலத்திற்கு ஏற்றவாறு நாடு மாறுவது அவசியம், அதுவும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மாறியே தீரவேண்டும். அதில் ஒரு விஷயம்தான் புல்லட் ரயில். மிக மிக வேகமான ரயில் அது, இந்தியாவில் என்றோ வந்திருக்க வேண்டிய விஷயம், ஆனால் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, இதுவே தாமதம். எப்படியோ மோடி அறிமுகபடுத்தியிருக்கும் உருப்படியான திட்டம் இது. முதன் முறையாக மும்பை அகமதாபாத் இடையே […]

ரொஹிங்கியா : நடப்பது என்ன?

ரொஹிங்கியா அகதிகள் மீது இந்தியா இரண்டாம் படுகொலைகளை நிகழ்த்துவதாக விகடன் பத்திரிகை சொல்லியுள்ளது, ஷோபா சக்தி என்பவர் எழுதியிருக்கின்றார். நடப்பது என்ன? ரோஹிங்யா இஸ்லாமியர் உலகெல்லாம் தெரித்து ஓடுகின்றனர். பல நாடுகள் அகதிகளாக அடைக்கலம் கொடுக்கின்றன அதில் ஒன்று இந்தியா. இப்பொழுது உள்ள உலக சூழலில் யார் அகதி? யார் தீவிரவாதி என்பதே பெரும் குழப்பம். அகதிகள் பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவது மகா எளிது. ஈழ அகதிகளோடே புலிகளும் ஊடுருவியது ஒன்றும் ரகசியமல்ல‌ இன்று சிரிய அகதிகளை […]

பகத் சிங்கிற்கு வீர வணக்கம்…

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர். 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன், அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று. சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் […]

கலைஞர் நலமுடன் இருக்கின்றாரா?

கலைஞர் நலமுடன் இருக்கின்றார் எஎன சொன்னால் போதாதா? இந்த படத்தை பார்த்தால் தோன்றுவது என்ன? உண்மையான திமுகவினர் , கலைஞர் விரும்பிகள் நிச்சயம் இப்படத்தை விரும்புவதில்லை.  

மிஸ்டர் உதயகுமார், சொல்ல முடியுமா?

இந்த மனிதருக்கு கவலை என்ன கண்டீர்களா? தமிழக முதல்வருக்கு தனிமனித ஒழுக்கம் மகா முக்கியமாம், நல்லது. ஆனால் ஜெயா இருக்கும் வரை அதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், இப்பொழுது கமலஹாசன் வரும்பொழுது அது நாற்றம் என சொல்வது எப்படி? அதற்கு முன்பு என்ன மணம் வீசியதா? இன்றைய பிரான்ஸ் அதிபர் தன்னை விட வயதில் மிக‌ மூத்த பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மனைவிகள் ஏராளம். ஆனானபட்ட நெப்போலியன் முதல் கென்னடி வரை […]

சென்னையில் டெங்கு பரவுகின்றது

பண்டிகைக்கால சிறப்புப் பேருந்துகள் குறித்த விவரங்கள் – விஜயபாஸ்கர் வெளியீடு சென்னையில் டெங்கு பரவுகின்றது, 4 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள், இன்னும் எத்தனை பேர் பாதிக்கபட்டிருக்கின்றார்களோ தெரியாது அரசு அதில் என்ன நடவடிக்கை எடுத்தது? எப்படி டெங்கினை தடுக்கின்றது என்பது பற்றி ஒரு அறிவிப்புமில்லை. டெங்கு என்பது மருந்தேயில்லாத நோய். தொடக்கத்தில் கட்டுபடுத்தலாம், முற்றிவிட்டால் அவ்வளவுதான். அப்படி மகா சிக்கலான நிலையில் சென்னை இருக்க, அமைச்சர் தீபாளிக்கு பஸ் விட்டுகொண்டிருக்கின்றார் ஒருவேளை டெங்கு பரவாமல் இருக்க சென்னையினை விட்டு […]

ராமசந்திரனுக்காவது ஒரு படம் வந்தது, ஜெயாவிற்கு அதுவுமில்லை

எம்ஜிஆர் சாகும்பொழுது பல சர்ச்சைகள் வந்தன, பல வதந்தியும் வந்தது. அதில் ஒன்று ராமசந்திரனுக்கு மோரில் விஷம் வைத்தார் ஜாணகி என முதல் சர்ச்சை வந்தது, கிளப்பிவிட்டது யாரென்றால் சாட்சாத் ஜெயலலிதாதான். இன்னொரு வதந்தி தமாஷானாது, அதாவது ராமசந்திரன சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலே தங்கிவிட்டு, தன்னை போல இருந்த ஒருவனை தமிழகத்திற்கு அனுப்பி தன் கட்சி நிலவரத்தை அறிந்ததாகவும், அவனை இவர்கள் கொன்றுவிட்டதாகவும் ஒரு வதந்தி. அப்படியானால் ஒரிஜினல் ராமசந்திரன் எங்கே? இங்கு வந்தால் கொன்றுவிடுவார்கள் என்று […]

உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை

உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை, உலகம் தடுமாறிய மந்தநிலை காலங்களில் இந்திய பொருளாதாரத்தை காத்து நின்ற பெரும் அறிவாளி இன்று இந்தியா காட்டும் பொருளாதார பாய்ச்சலுக்கு அன்றே அஸ்திவாரமிட்ட பெரும் சிந்தனையாளன் மாற்றுகட்சி ஆயினும் அவர்களும் வந்து ஆலோசனை கேட்கும்பொழுதும் நாட்டுமுன்னேற்றத்திற்காய் நல்ல ஆலோசனைகளை வழங்கும் பெருமகன் அவர் பதவிவகித்த காலங்களில் அவரை தேடிவந்து பாராட்டியவர்களே அதிகம் தவிர, அவர் தேடிசென்ற நாடுகள் குறைவு. காரணம் நல்ல அறிவும் சிந்தனையும் எங்கிருந்தாலும் தேடி வரும் உலகமிது, […]

அடித்து ஆடவேண்டிய நேரத்தில் ..

அடித்து ஆடவேண்டிய நேரத்தில் விதிவசத்தால் ஓரமாய் இருந்து தவிப்பவர்கள் இரண்டுபேர். ஒன்று கலைஞர் இன்னொருவர் நடராஜன். இருவரும் ஆடிய அரசியல் ஆட்டம் கொஞ்சமல்ல, எத்தனையோ பேர் கதறிகொண்டு ஓடியதற்கும், காணாமல் போனதற்கும் காரணம் இவர்கள். தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்கவிடாமல் தடுத்ததிலும், தந்திரமாக அவர்களை காலடி செருப்பாக பயன்படுத்தியதிலும் வித்தகர்கள். தாங்கள் யார் என நிரூபிக்க வாய்ப்பு கண்முன் இருந்தும் அவர்களால் செயலாற்ற முடியவிலை. இரண்டு வித்தகர்களையும் களம் திறந்துகிடக்கும் இந்நேரத்தில் காலம் அடக்கி, ஒடுக்கி மூலையில் […]

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம் – செல்லூர் ராஜு

அமைச்சர்கள் அனைவருமே ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம் – செல்லூர் ராஜு உயிரோடு இருந்தை பார்த்தார்களா? இல்லை அவர் இறந்தபின் பார்த்தார்களா என்பது பற்றி அமைச்சர் சொல்லவே இல்லை. ஒருவர் பார்க்கவேயில்லை என்கின்றார், ஒருவர் நாங்கள் பொய் சொன்னோம் என்கின்றார், இதோ ஒருவர் மொத்தமாக பார்த்தோம் என்கின்றார். ஒருவேளை பல ஜெயலலிதாக்கள் இருந்திருப்பார்களோ? ஒரிஜினல் ஜெயலலிதாவினை விரட்டிவிட்டு டூப்ளிகேட் ஜெயலலிதாவினை மருத்துவமனையில் சேர்த்திருப்பார்களோ? அந்த டூப்ளிகேட் ஜெயலலிதா கவர்ணருக்கு கையினை உயர்த்தி, இன்னும் பலருக்கு தலையினை உயர்த்தி பேசியிருப்பாரோ? […]