குஷ்பூ ஏன் அமைதியானார்
கொட்டாத அருவினையும், ஒளிவிடாத நட்சதிரத்தினையும் காய்ந்துவிட்ட வயலினையும், தோகையில்லா மயிலினையும், கூவாத குயிலையும் , சீறாத சிங்கத்தையும் காண்பது ஒருவித கொடுமை. அப்படி கொஞ்ச நாட்களாக அமைதியாகிவிட்ட குஷ்பூவினையும் நோக்கவேண்டியிருக்கின்றது. என்ன ஆனதோ தெரியவில்லை. முதலில் டிவிட்டரில் இருந்து விலகினார், அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தனிமைபடுத்துகின்றார். இப்பொழுது தமிழகமே கொந்தளிக்கும் விவகாரங்களில் அவர் இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. அவரின் இயல்பு இது அல்ல. தேனீ போல மகா சுறுசுறுப்பாக வலம் வந்த அவர், இப்படி அமைதியாவது சாத்தியமில்லை. […]