பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போயஸ் வீட்டை தரமாட்டேன் : தீபா மற்றும் சில

போயஸ் வீட்டை தரமாட்டேன் : தீபா. கிணற்று நீரை கூட சொந்த ஊர் மக்களுக்கு கொடுக்கமாட்டேன் : பன்னீர். கட்சி, ஆட்சி, ஜெயா சொத்து, கட்சி, சிறை என எல்லாம் எங்களுக்கே, : மன்னார்குடி குடும்பம், எது எப்படி போனாலும் பதவி எனக்கே : பழனிச்சாமி இவர்கள்தான் பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்திற்கும் தங்களை அர்பணித்திருக்கும் அதிமுக தலமைகள், இவர்களா பலன் எதிர்பாரா அரசியல் சேவை செய்வார்கள்? இவர்களிடம் சிக்கினால் தமிழகம் என்ன ஆகும்? எதனையாவது விட்டு வைப்பார்களா? ஆனாலும் […]

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்…

இந்த ஓவியா பிக்பாஸில் இருக்கும்வரை நல்ல சுதந்திரம் இருந்தது, என்ன செய்தாலும் பாகம்பிரியாள் கண்டுகொள்வதே இல்லை. எதிர்த்த வீட்டு சீனப்பெண்ணுடன் பேசினாலும் கண்டுகொள்ளாத அளவு பெரும் சுதந்திரம் இருந்தது. வீட்டை எப்படி அலங்கோலமாக்கி வைத்திருந்தாலும் கண்டு கொள்ளவே இல்லை. இப்பொழுது ஓவியா களத்தில் இல்லை என்பதால் மறுபடியும் நம் மீதான கண்காணிப்பு அதிகரித்துவிட்டது, “அங்கே என்ன பார்வை? , இப்பொழுது ஏன் வாட்சப்?, அந்த புத்தகத்தை எவ்வளவு நாளாக படிப்பீர்கள்? ” என பழைய பார்மிற்கு வந்துவிட்டார் […]

குர்திஸ்தான் என்றொரு நாடு …

குர்திஸ்தான் என்றொரு நாடு சைரஸ் மன்னன் காலத்தில் அரேபியாவில் இருந்தது, பின் ஆளாளுக்கு பிடித்து மகாணம் ஆக்கினார்கள், அப்படி ஆட்டோமன் துருக்கியரின் பிரதேசமானது பின் பிரிட்டன் வசமானது. அன்றைய அரேபியாவில் பெட்ரோல் வளம் தெரியாததால், இந்த மாபெரும் பிரிட்டன் பேரிச்சம்பழம் பொறுக்காது என சொல்லி பல நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு கிளம்பிற்று. பின் குர்திஸ்தான் 2 நாடுகளால் அமுக்கபட்டது இன்று அது சிரியா, ஈராக், துருக்கி என 2 நாடுகளில் பிராதனமாக பிரிந்து கிடக்கின்றது. இந்த நாடுகளில் […]

உறவினை அறுத்த கோடு

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கலாம் என லண்டனின் அறிகுறிகள் தென்பட்ட உடனே, பிரிட்டிஷ் இந்தியா பெரும் கலவரத்திற்கு தயராயிற்று. அதாவது இதே இந்தியவா? அல்லது துண்டாடபட்ட இந்தியாவா? என சர்ச்சைகள் ஒரு புறம், இருவரும் வேண்டாம் இது எமது பூமி என ஐதரபாத் நிஜாம், காஷ்மீர் அரசர் ஒருபுறம் என குழப்பங்கள் அதிகரித்தன. “என் பிணத்தின் மீது இந்த தேசம் பிரியட்டும்” என அடம்பிடித்த காந்தியாலும் முடியவில்லை. ஜின்னா பாகிஸ்தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்தாலும் அவர் மட்டும் […]

பிக் பாஸ் .. புதிய வரவுகள் ….

சுஜா என்றொரு நடிகையினை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவிட்டாயிற்று. உடனே அவர் “அயிட்டம் டான்சர்” என முகம் சுழிப்பது யாரென்றால் காயூ ஆண்டி& கோ பிரபுதேவா மீது காயூ ஆண்டி கால் போட்டு ஆடியதெல்லாம் என்ன யோகா நிகழ்ச்சியா? பிந்துமாதவி ஆடாத ஆட்டமா? ஓடாத ஓட்டமா? சரி நமீதா என்றொருவர் முன்பு காயூ ஆண்டியிடம் கொஞ்சி கொண்டிருந்தாரே? அவர் என்ன ஸிரிவித்யா போல தளைய தளைய பட்டுபுடவையில் மட்டும் வந்தவரா? நமீதா போன்றதொரு “டவுசர்” ஆட்டகாரியினை எங்காவது உலகில் […]

அக்கட.. இக்கட.. எக்கட…

தெலுங்கில் திரைப்படமாகிறது பிரபாகரன் தலைமையிலான ஈழப்போர் அங்கிள் சைமன், உங்களுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது .. என்ன தைரியமிருந்தால் தமிழரை தமிழ்நாட்டில் ஒடுக்கிய தெலுங்கன், இலங்கையில் சிங்களனோடு சேர்ந்த தெலுங்கன் உங்கள் அண்ணன் கதையினை படமாக எடுப்பான்? திருப்பதிக்கு சிங்கள அதிபரை வரவேற்கும் தெலுங்கனுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார்? ம்ம். உங்கள் வீர தமிழ் எளிய பிள்ளைகளை கூட்டிகொண்டு கிளம்புங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் சிக்கல் இல்லையென்றால் கன்னடம் அணைகட்டலாம் : உச்ச நீதிமன்றம் யோசனை […]

உயிரிழந்த வீரர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று வைகோ ஆறுதல்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வீரர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று வைகோ ஆறுதல் மிஸ்டர் வைகோ, உங்கள் நிலைப்பாடுதான் என்ன? இந்திய ராணுவத்தை அந்நிய நாட்டு தீவிரவாத கும்பல் ஈழத்தில் சுட்டுகொன்றபொழுது , அந்த கும்பலை ஆதரித்துத்தான் நீங்கள் கடல் கடந்து விசா இல்லாமல் கள்ளதோணியில் எல்லாம் சென்றீர்கள். அதனை வீரசாகசமாக இன்றுவரை மேடையில் மட்டுமல்ல‌ கழிவறையில் கூட உங்களுக்கு நீங்களே சொல்கின்றீர்கள். சொந்த நாட்டு ராணுவத்தை எப்படி எல்லாம் அவமானமாக பேசினீர்கள். இந்நாட்டில் […]

தமிழக முதல்வரை யாரும் ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? : கமலஹாசன்

இவ்வளவு நடந்தும் தமிழக முதல்வரை யாரும் ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? : கமலஹாசன் கேள்வி மனிதர் கொஞ்சம் அறிவாளி என நினைத்தால், இப்படி கொஞ்சம் கூட விவரமில்லாமல் கேள்வி கேட்கின்றார்?. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் இருந்தால்தான், எவனும் தடுக்கிவிழுந்து செத்தால் கூட, பறவைக்கு காய்ச்சல் வந்தால் கூட ஏன் அண்டை நாட்டில் எது நடந்தால் கூட, அண்டார்டிக்காவில் பென்குயின் செத்தால் கூட, கருணாநிதியே ராஜினாமா செய் என கூச்சலிடுவார்கள் அவரை தவிர யார் இருந்தாலும், அவர்கள் […]

தமிழக பத்திரிகைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை

இந்த தமிழக பத்திரிகைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை, சொல்பவன் சொல்லட்டும் பதிவிடுபவர்கள் கொஞ்சம் யோசித்து பத்திரிகையில் பதிவிட கூடாதா? ஒரு பொறுப்பு வேண்டாமா இந்த வாட்சப் வதந்திதான் காமராஜர் அப்துல் கலாமினை மிதித்தார், தன்னை சந்திக்க தமிழகம் வந்த ஹிட்லரை அவமானபடுத்தினார் என அள்ளிவிடுகின்றன. இன்னும் பல விஷயங்கள் பகீர் ரகம். வாட்சப் வாந்திகள் அந்த ரகம், விட்டுவிடலாம் ஆனால் பெரும் பொறுப்பு கொண்ட ஊடகங்கள் அப்படி செய்யலாமா? இதோ வாஞ்சிநாதனின் பேரன் பேட்டிகொடுத்திருகின்றான், அதாவது வாஞ்சிநாதன் […]

தினகரனை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கின்றது

முதலில் ராஜாஜி சொன்னார், அதன் பின் நேரு, அதன் பின் இந்திரா, கொஞ்சநாளில் கோடாரி காம்பு ராமசந்திரன், இடையில் குமாரமங்கலம், அடுத்து ராஜிவ், ராஜிவின் தமிழக அடிப்பொடிகள், அதற்கடுத்து வைகோ , பெரும்பலத்துடன் இருந்த ஜெயலலிதா என எத்தனையோ பேர் சொன்னதுதான் “திமுகவினை அழிப்பேன்..” இப்படி சொன்ன பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் மண்ணை கவ்வி மண்ணாகிவிட்டபின் இப்பொழுது தினகரனும் சொல்கின்றாராம். திமுகவினை அழிக்க கிளம்பியவர்கள்தான் அழிந்தார்களே தவிர திமுக அப்படியே இருக்கின்றது பெரும் புயலும், பெரும் படையும், […]