பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்புவே நமஹ ! : 5

 குஷ்பு இதயக்கனி ஆனது இப்படிதான் !   இந்த உலககில் எது நடந்தாலும், ஏன் அது அழிந்தால் கூட, நம் கடமையினை நாம் செய்து கொண்டே இருக்கவேண்டும்.. இந்த காலகட்டத்தில் தமிழில் குஷ்பூ நம்பர் 1 நடிகையாக இருந்தபொழுதிலும் மற்ற தென்னக மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்துகொண்டே இருந்தார். சுருக்கமாக சொன்னால் தென்னிந்திய சினிமா உலகின் ராணியாக அவர் முடிசூட்டபட்ட நேரம் அது. அந்த கிரீடம் இன்னும் அப்படியேத்தான் இருக்கின்றது. அவர் நடிக்க வந்த […]

சினி மினிகள்…

நான் போகும்பொழுது எதனையும் கொண்டு போகபோவது இல்லை : தனுஷ் பேட்டி ஆனால் மாமனார் போகும்பொழுது பாதி சொத்து இவருக்கு வரும், அதனை இவர் வேன்டாம் என்றேல்லாம் சொல்ல மாட்டார். புதுகட்சி தொடங்கும் பணியில் ரஜினி : செய்தி விரைவில் அவர் படம் ரிலீசாக போகின்றது என்பதுதான் அர்த்தம், வேறோன்றுமேயில்லை. வேலைக்காரன் படத்தில் சிவகார்திகேயனோடு நடிக்கின்றார் நயன் தாரா இவ்வளவுதான் நயனின் நிலை, அடுத்து பரோட்டா சூரியின் நாயகியாவார், அப்படி மலிந்துவிட்டது அவர் மார்க்கெட் ஆனால் 100 […]

பெரும்போரின் களப்பலி : 01

அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று. அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், தமிழன் திருமூலர்தான் சொன்னார். இதில்லாம் பகுத்தறிவிவாதிகள் மறுப்பு சொல்ல முடியாது அமெரிக்க அணுஆய்வுகூடங்களில் நடராஜர் சிலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி. அது அணுவின் இயக்க தத்துவம் என அடித்து சொல்கின்றனர் […]

ஓவியா வெளியேறிவிட்டாரா?

ஒவியா வெளியேறிவிட்டது உறுதி என செய்திகள் வருகின்றன, அந்த பைத்தியக்கார வீட்டிலிருந்து சோம்பிகள் கூட்டத்திலிருந்து அவர் வெளிவந்திருப்பது நல்லது. நண்பர் Omm Prakash “கண்ணே.. கலைமானே.. ” என ஓவியா படத்த்தினை மடியில் வைத்துகொண்டு அந்த “மூன்றாம் பிறை” பாடலை இதுவரை பாடிகொண்டிருந்தார் ஆனால் திடீரென கடலோர கவிதைகள் சத்யராஜாக “போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே” என்ற பாடலை பாடுவதால் விஷயம் உறுதி. இனி ஓவியா ஆர்மி என்ன செய்யும்? குஷ்பூ சங்கம் உங்களுக்காக கதவுகளை திறந்துவைத்துள்ளது என்பதை […]

பெரும் சர்ச்சைகுரிய நபர் இந்த நடராசன் !

“இந்திய ஈழ நட்புறவு மையம்” என ஈழ கோஷ்டிகள் ஒன்றை தொடங்கியிருக்கின்றன, இதன் மையமாக இருப்பவர் யார் தெரியுமா? மா.நடராசன் அதாவது எம்ஜிஆருக்கு பின் ஜெயாவின் ஒவ்வொரு முடிவினையும் எடுத்த நடராசன். இலங்கையில் அமைதிபடை சண்டையிடும் பொழுது ராஜீவிற்கு ஆதரவளித்து, திமுக ஆட்சியினை கலைக்க சொல்லி அழுத்தம் கொடுத்த அந்த நடராசன் ஆம் அன்று திமுக அமைதிபடையினை கண்டித்து அதனை வெளியேற்ற சொல்லிகொண்டிருந்தது, ஆனால் நடராசனின் அதிமுக கொஞ்சமும் அக்கவலையின்றி ராஜிவிடம் உங்களுக்கு ஆதரவு, கலைஞரை விரட்டுங்கள் […]

ராகுல் .. சித்தராமைய்யா…

ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் கண்டனம் இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பேசலாம் அதற்காக கல்லெறிவது எல்லாம் ஏற்றுகொள்ள கூடிய விஷயம் அல்ல‌ குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது, எதிர்கட்சி தலைவர் என்றமுறையில் ராகுல் பார்க்க சென்றிருக்கின்றார், அங்கு கல் எறிந்திருக்கின்றார்கள் இவ்வளவிற்கும் கடந்த 15 வருடமாக பாஜக ஆளும் மாநிலம் அது , கல் எரியவேண்டுமென்றால் அவர்கள் மீதுதான் எறிந்திருக்க வேண்டும், அதனைவிட்டு வெள்ளத்தை பார்வையிட […]

புலிகளின் இந்த மோசடிக்கு விகடன் பதில் சொல்லுமா?

இனி தேசபக்தர்கள் அலுவலகம் புகுந்து கேட்காமல் ஆனந்த விகடன் திருந்தாது ஆறிபோன விஷயங்களை மறுபடி தோண்டி எடுப்பதாக சொல்லிகொள்கின்றது, அதாவது ஆகஸ்டு 4, 1987ல்தான் பிரபாகரன் சுதுமலையில் பெரும் பிரகடனம் செய்தாராம். இப்பொழுது அந்த கதை எதற்கு என்றால்? எல்லாம் காசி ஆனந்தன், சீமான் வகைகளை வளர்த்து விடுகின்றார்களாம். அந்த சுதுமலை பிரகடனம் பற்றி யாருக்கு தெரியாது, இந்தியாவினை நம்பி நம் ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம் என சொன்னார் பிரபாகரன், கூட்டம் ஆர்பரித்தது. இதனை எதிர்பார்க்கா பிரபாகரன் முகம் […]

மன்னாதி மன்னன்

மன்னாதி மன்னன் படம் ஓடிக்கொண்டிருக்கின்றது, நடன பந்தயம் நடக்கின்றது. பத்மினி ஆடுகின்றார், ராமசந்திரன் குதிக்கின்றார் பத்மினியின் நடனம் எவ்வளவு அழகு, எவ்வளவு நளினம்? எவ்வளவு அழகான முகபாவமும் அசைவுகளும். அருகே கழுத்து வெட்டபட்ட கோழிபோல ராமசந்திரன் குதிப்பதை காண சகிக்கவில்லை. பவர் ஸ்டாரெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. அந்த நடன இம்சையினை கூட பொறுக்கலாம், ஆனால் குடைராட்டினத்தில் சுற்றும் குழந்தை போல அந்த ராமசந்திரன் ஈஈஈஈஈஈ என இளித்துகொண்டே ஆடுவதைத்தான் சகிக்க முடியவில்லை இந்த லட்சணத்தில் ராமசந்திரன் வெற்றிபெற்றதாக […]

இந்த போஸ்டரை பாருங்கள் பல விஷயம் இருக்கின்றது

இந்த போஸ்டரை பாருங்கள் பல விஷயம் இருக்கின்றது அதாவது இதுவரை புலி ஆதரவு, காஷ்மீரிய யாசின் மாலிக்கிற்கு ஆதரவு என சொல்லிகொண்டிருந்த அங்கிள் சைமன் இப்பொழுது தமிழக சிறையில் இருக்கும், குறிப்பாக அல் உம்மா போன்ற தீவிரவாதிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றாராம் நன்றாக பாருங்கள், கோவை குண்டுவெடிப்பு போன்ற படுபயங்கர குற்றசாட்டில் உள்ளே இருக்கும் தீவிரவாதிகளை விடுதலை செய் என இஸ்லாமிய அமைப்புகளோடு முஷ்டி தூக்குகின்றார் இவருக்கு என்ன பிரச்சினை? கொலை கொள்ளை செய்தவன் எவன் சிறையிலிருந்தாலும் நான் […]

நடிகர் அஜித்திற்கு தஞ்சையில் சிலை திறப்பு விழா

நடிகர் அஜித்திற்கு தஞ்சையில் சிலை திறப்பு விழா, நெல்லையில் சிலை அமைக்கபடுகின்றது அஜித் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாம், அதனால் சிலையாம், தஞ்சையில் காவேரி காய்ந்து மக்கள் படாதபாடு படும்பொழுது இது மகா அவசியமா என யாரும் கேட்கவில்லை நெல்லையிலும் சிலையாம், அது வெண்ணிற ஆடை மூர்த்திசிலைபோல் இருக்கின்றது என விஜய் ரசிகர்கள் சொல்லிகொள்கின்றார்கள் (அப்படித்தான் இருக்கின்றது, ஷாலினி பார்த்துவிட்டாரா என்பது தெரியவில்லை, விஷயம் தெரிந்தால் அவர் விவாகரத்து வரை செல்ல வாய்பிருக்கின்றது) இனி விஜய்,தனுஷ் […]