பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அத்தப்பூ கோலம் போட்டு, ஊஞ்சலாட தமிழிசை ரெடி

பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எடப்பாடி, பன்னீரை தொடர்ந்து தினகரனும் ஆதரவு இதுதான் நவீன வாமண அவதாரம், இரண்டு இலைக்காக இந்த அதிமுக 3 அடி நிலம் கொடுப்பதாக வாக்களித்தது, உடனே விஸ்வரூபமெடுத்த பாஜக ஒரு காலால் பன்னீர் தலையினையும், இன்னொரு காலால் எடப்பாடியினையும் அழுத்தியது மூன்றாம் அடியினை எங்கே வைப்பது என பாஜக கேட்டபொழுது ஓடிவந்து தலைகொடுத்திருக்கின்றார் தினகரன். இனி என்ன? அப்படியே அதிமுகவினை பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு வோணம் கொண்டாட ஆரம்பிப்பார்கள் அத்தப்பூ கோலம் போட்டு, ஊஞ்சலாட […]

நம் வீட்டிலும் ஒரு கவிஞன் உருவாகி கொண்டிருக்கின்றான்..

எனக்கொரு தங்கையும் அவளுக்கொரு மகனும் உண்டு, 5 வயது இருக்கும், அவன் பேசினால் கொடு மலையாளம் போல “நங்யா முங்யா” என்றிருக்கும், ஒன்றும் புரியாது, இவ்வளவிற்கும் தமிழில் தான் பேசுவான் 15 நிமிடம் போனில் பேசினான், “எலேய் மாமா, சன் சுடுதுல, சன் ரேல்ல, மேகம்ல்ல்ல..திட்டிச்சில்ல.. வலிச்சில்ல…அழுதுட்டுல்ல…மழைல்ல்ல” என சொல்லிகொண்டிருந்தான் , ஒன்றுமே புரியவில்லை, சொல்லிபார்த்துவிட்டு கோபத்தில் சென்றுவிட்டான், வழக்கம் போல அவனின் அன்னை விளக்கினாள் அதாவது அவர் கவிஞராகிவிட்டாராம், கவிதை சொல்லியிருக்கின்றார் சூரியன் அவனை வெயிலால் […]

மரணமில்லா கவிஞனின் பிறந்தநாள் (ஜூன் 24)

மரணமில்லா கவிஞனின் பிறந்தநாள் (ஜூன் 24) வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் […]

கலைஞர் பங்களிக்காத ஜனாதிபதி தேர்தல்

60 ஆண்டுகாலத்திற்கு பின்பு கலைஞர் பங்களிக்காத ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது விவி கிரி போல எத்தனை ஜனாதிபதிகள் அவரை வாழ்த்தியிருக்கின்றனர், எத்தனை ஜனாதிபதிகள் அவர் அரசை காரணமின்றி டிஸ்மிஸ் செய்திருக்கின்றனர் இரண்டையும் ஒன்றாகவே எடுத்துகொண்டு அரசியல் நடைபோட்டவர் கலைஞர்.. காலம் எவ்வளவு வேகமாக ஓடியிருக்கின்றது என்பதை நினைத்துபார்க்க முடிகின்றது எவ்வளவு பெரும் சகாப்தம் ஒய்ந்திருக்கின்றது என்பதை நினைக்கும் பொழுதே மனதில் ஒரு சிலிர்ப்பு வந்துவிட்டுத்தான் போகின்றது அவரிடம் “ராம்நாத் கோவிந்த்” பற்றி சொல்ல சொன்னால் எப்படி […]

பவானிசாகரில் தமிழக‌ சிறுமிக்கு பாலியல் தொல்லை

பவானிசாகரில் தமிழக‌ சிறுமிக்கு பாலியல் தொல்லை, தட்டிகேட்ட நடத்துனர் மீது தாக்குதல், ஈழ அகதிகள் அட்டகாசம், இதனை கண்டித்து பவானி சாகர் மக்கள் நாளை கடையடைப்பு போராட்டம் இது கொஞ்சகாலமாகவே வந்துகொண்டிருக்கும் செய்தி, அந்த அகதிகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறி செல்வதாக சொல்லபட்டது ஈழ மக்களின் பிரச்சினைகளை குத்தகைக்கு எடுத்து பிழைப்பு நடத்தும் அங்கிள் சைமன், வைகோ, வேல்முருகன், திருமா கோஷ்டிகள் எல்லாம் இப்பொழுது கண்ணை மூடிகொள்வார்கள் சிங்களன் எங்கள் பெண்களை கற்பழிக்கின்றான் என சொல்லி […]

யோகா மானிடரின் ஆரோக்கியத்திற்கு அது மிக பெரும் விஷயம்

யோகா அற்புதமான விஷயம், மானிடரின் ஆரோக்கியத்திற்கு அது மிக பெரும் விஷயம் அன்று இந்தியா கடைபிடித்த அந்த விஷயம் தான் பின்பு தென்கிழக்கு ஆசியா எங்கும் பரவியது, கிழக்காசியாவின் பல இனங்களில் யோகாவின் தாக்கம் உண்டு, சீனாவில் அது அதிகம் புத்தம், சமணம் என எல்லா மதங்களிலும் தியானமும் , பயிற்சியும் உண்டு. அதாவது யோகா அங்கு வேறுபெயரில் அழைக்கபடும். யோகாவினை கற்பிப்பதும், இளம் தலைமுறைக்கு சொல்லிகொடுப்பதும் நல்ல விஷயமே திருகுறள் போல அது மானிடர்க்கு தேவையான […]

சவுதி அரசருக்கு ஞானம் வந்திருக்கின்றது

வாரிசு அறிவிக்காமல் திரண்ட அதிகாரத்தின் , செல்வத்தின் அதிபதிகள் கண்ணை மூடுவதால் என்னென்ன விளைவு ஏற்படும் என்பதை அதிமுக உலகிற்கு சொல்லிகொண்டிருக்கின்றது இதில் யாருக்கு ஞானம் வந்ததோ இல்லையோ சவுதி அரசருக்கு வந்திருக்கின்றது, தான் வாரிசு யார் என இப்பொழுதே அறிவித்துவிட்டார் இனி புதியவர்தான் “செயல் அரசர்”. வடகொரிய அதிபரை போல இந்த சவுதி செயல் அரசருக்கும் 30+ வயது, அதற்கேற்றபடி செயல்பாடும் இருக்கின்றது ஏமனில் யுத்தம் நடத்துவது , கத்தாரை முறைப்பது என பல காரியங்களை […]

சஞ்சய் காந்தி மறைந்த தினம்….

கட்சியின் எந்த பதவியிலும், அரசின் எந்த பதவியிலும் இல்லாத ஒருவன் தன் குடும்ப அரசியல் பலத்தால் பெரும் நாட்டையே ஆட்டி வைக்கலாம் என இந்தியாவிற்கு புது இலக்கணம் எழுதியவர் சஞ்சய் காந்தி இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி. வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் […]

குடியரசுத் தலைவர் தேர்தல் : மீரா குமார் நல்ல தேர்வு

ஒரு வழியாக மீரா குமாரை எதிர்வேட்பாளராக எதிர்கட்சிகள் அறிவித்திருக்கின்றன, முக ஸ்டாலினும் ஆதரிப்பதாக சொல்லியிருக்கின்றார் குடியரசு தலைவர் தேர்தல் முறை கொஞ்சம் குழப்பமான விஷயம், பாஜக பக்கம் காற்று சுழன்றடிக்கின்றது ஆயினும் எதிர்கட்சிகளும் மல்லுகட்டுகின்றன‌ மீரா குமார் நல்ல தேர்வு, கலைஞருக்கு அவர் மீது நல்ல அபிமானம் இருந்ததும் நினைவுக்கு வருகின்றது. குடியரசு தேர்தல் விவகாரம் அதிமுகவின் முகதிரையினை கிழித்திருப்பதுதான் காமெடி. மொத்தமாக எல்லா அணியும் பாஜக் காலில் விழுந்து கிடக்கின்றது, அடித்து கொண்டவர்கள் எல்லாம் ஒன்றாக […]

சிறு குறுச் செய்திகள்..

ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர் அதாவது பாஜகவின் தமிழக கிளைச்செயலாளர்கள் இருவர் முன்மொழிந்திருக்கின்றனர், இதிலென்ன அதிசயம் இவர்கள் ஆட்சியினை காப்பாற்றிகொள்ள தமிழிசையினை கூட முதல்வராக முன்மொழிய தயாராக இருப்பவர்கள், இதில் ராம்நாத் கோவிந்தனை முன்மொழிந்ததா ஆச்சரியம்? இனி தமிழக பாஜக வரிசை பொன்னார், தமிழிசை என்பதை தாண்டி பன்னீர், பழனிச்சாமி, தம்பிதுரை தினகரன் என நீளும்.. மிஸ்டர் பன்னீர் செல்வம், அம்மா மரணத்திற்கு நீதிவிசாரணை கோரும் உங்கள் தர்மயுத்தம் என்னாயிற்று? […]