பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பல தலைவர்கள் ஒழிந்து ஒரே தலைவர் ஆகட்டும்

கிட்டதட்ட 47 ஆண்டு காலம் கழித்து திமுகவில் பல தலைவர்கள் உருவாகின்றார்கள் சமீபத்தில் “செயல் தலைவர்” என ஸ்டாலினை சொன்னார்கள், இப்பொழுது ‘இளம் தலைவர்’ கனிமொழியாம் அடுத்து யார்? அழகிரி விரைவில் “கடும் தலைவர்” ஆகலாம், அன்பழகன் “பழம் தலைவர்” ஆகலாம், தயாநிதி மாறன் “மன‌ தலைவர்” ஆகலாம் மு.க தமிழரசு “ஒதுங்கிவிட்ட தலைவர்”, முரசொலி செல்வம் “பேப்பர் தலைவர்” என ஆகலாம்., மு.க முத்து “விரட்டபட்ட தலைவர்” ஆகலாம் துரைமுருகன் “மகிழ்ச்சி தலைவர்”, ஆற்காடு வீராசாமி […]

பெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா வந்திருந்தார்

பெரியவர் Avt Janardhanan மலேசியா வந்திருந்தார், நேற்று கிளம்பிவிட்டார், கிட்டதட்ட 1 மாதம் தங்கியிருந்தார் வேகமான இந்த வாழ்க்கையில் அவ்வப்போதுதான் அவரை சந்திக்க முடிந்தது, அற்புதமான மனிதர் அவர் அவரின் தந்தை கோவை கம்யுனிஸ்ட் தலைவராக இருந்திருக்கின்றார், இவர் ஜனதா தளத்தில் ஒரு காலத்தில் மிக வேகமான தொண்டராக இருந்திருக்கின்ரார் தமிழக அரசியல் வரலாறு அவரிடம் கொட்டி கிடக்கின்றது, பேசும் பொழுது அவ்வளவு தகவல்கள் வருகின்றன, இந்த அரசியலை கவனித்து வளர்ந்த ஒருவராலன்றி அது சாத்தியமில்லை, அவ்வளவு தகவல்கள் எல்லா […]

சபர்மதி ஆசிரமம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் தலமையகமாக இருந்த இடங்கள் சில, அவற்றில் ஒன்றுதான் சபர்மதி ஆசிரமம் மகாத்மா காந்தி சபர்மதி ஆற்றங்கரையில் அதனை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் தொடங்கினார், இந்திய ஞானமரபு படி வெள்ளையனை எதிர்க்க அதில்தான் சிந்தித்தார் ‘என்னை வருத்தி உன்னை திருத்துவேன்..” என்ற இந்திய ஞான தத்துவம் அது, புத்தன் எனும் பெரும் ஞானியும், இயேசுவும் சொன்ன தத்துவம் அது, வெள்ளையனை ஆயுதம் மூலம் ஒரு காலமும் விரட்டமுடியாது என்பதை உணர்ந்த காந்தி, […]

ஐஎஸ் இயக்க தலைவர் பத்தாதி …

ஐஎஸ் இயக்க தலைவர் பத்தாதி, இவரின் தலைதான் இன்று விலை உயர்ந்த மனித தலை, ஏராளமான கோடிக்கு விலை வைக்கபட்டிருக்கின்றது பாகுபலி காளகேய தலைவனை போல, இவரை கொல்ல ஒரு பக்கம் அமெரிக்காவும் இன்னொரு பக்கம் ரஷ்யாவும் துடித்து முன்னேறிகொண்டிருக்கின்றன‌ இதில் அவரை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அடிக்கடி சொல்லும் ஆனால் யாரும் நம்பவில்லை அவனும் சாகவில்லை முதல் முறையாக அவனை கொன்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது, உலகில் இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது விடுமா அமெரிக்கா? அவனை போல ஒரு […]

புழல் சிறைக்கு மாற்றகோரி நளினி உண்ணாவிரதம் இன்னும் பிற …

புழல் சிறைக்கு மாற்றகோரி நளினி உண்ணாவிரதம் அம்மணிக்கு புழல்சிறையினை பற்றி சரியாக தெரியாது போல, தெரிந்தால் இப்படி எல்லாம் உண்ணாவிரம் இருக்கமாட்டார். ராம்குமார் அறையின் பக்கத்து அறை வேண்டுமா என கேட்டால் அதன் பின் அம்மணி புழல் சிறைக்கு வருவார்? அம்மா பெயரில் பெட்ரோல் பங்குகள் அமைக்கபடும் : தமிழக அரசு ஏற்கனவே பெட்ரொல் பங்குகளில் மோசடி, கலப்படம், பதுக்கல் என பல சர்ச்சைகள் இருப்பதால் அதற்கு அம்மா பெயரை தவிர இன்னொரு பொருத்தமான பெயர் கிடைக்காது […]

மீன் பதப்படுத்தும் ஆலை வேண்டும் : ராதாபுரம் எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் மீன் பதப்படுத்தும் ஆலை வேண்டும் என ராதாபுரம் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தாராம், அது சுவையான மீன்கள் என வேறு குறிப்பிட்டாராம் உடனே அமைச்சர் ஜெயகுமார் அப்படியானால் எங்கள் எல்லோருக்கும் அந்த மீனை கொடுங்கள் என சொன்னாராம், மசோதா நிறைவேறும் பொழுது நிச்சயம் உண்டு என சொன்னாராம் ராதாபுரம் எம்.எல்.ஏ அந்த இடிந்தகரையில்தான் கூடங்குளம் அணுவுலை உள்ளது, 5,6ம் அணுவுலை என புட்டீன் சொன்னதும் இந்தியாவில் சலசலப்பு வந்தது, கேரள முதல்வர் கூட […]

ஆதார‌ சிடியுடன் சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலின்!

பண விவகாரம்: ஆதார‌ சிடியுடன் சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலின்! அது என்ன ஆதாரம்? எந்த மீடியாவிடமும் இல்லாத ஆதாரம் இவரிடம் கிடைத்திருந்தால் இவரை பாராட்டலாம், ஆனால் என்ன சங்கதி என தெரியாமல் என்ன சொல்வது? இவர் கொடுக்கும் ஆதாரத்தை தனபால் என்ன செய்வார்? அவருக்கு தெரியாத ஆதாரங்களா? அவர் காணாத காட்சிகளா? இப்படி தனபாலுக்கு கொடுப்பதற்கு பதில் ஆளுநர் மாளிகை முன் ஒரு புரொஜக்டரை கட்டி கவர்னருக்கு காட்டலாம், கொஞ்சமாவது பலன் இருக்கும், தனபாலிடம் சிடி கொடுப்பதும், […]

நியூட்ரினோ திட்டம் விரட்டியடிக்கபட்டுள்ளது

ஒரு வழியாக நியூட்ரினோ திட்டம் விரட்டியடிக்கபட்டுள்ளது, தமிழகத்தில் இதுவரை நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் இது ஒன்றுதான் நிறைவேறியுள்ளது இந்த வெற்றிக்கு யார் உரிமை கொண்டாட போகின்றார்களோ தெரியாது? ஆனால் என்னால்தான் விரட்டமுடிந்தது என விரைவில் சில கும்பல்கள் பெரும் யுத்தம் புரியும் என்பது மட்டும் உண்மை அடுத்த போராட்டம் எங்கே? குலசேகர பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திலா? அந்த ராக்கெட் நிலையம் அமைவதில் ஒரு பிரச்சினையும் இருக்க முடியாது, அப்துல் கலாம் பெயரில் அது அமையுமானால் […]

அக்னிபரீட்சையில் தீபமாக‌ ஜொலித்தார் குஷ்பூ

குழப்பமில்லா கருத்துக்கள், பதட்டமில்லா பேச்சு அதனை முன் வைக்கும் தைரியம், அதிமுக முதல் மோடி வரை கிழித்துபோடும் துணிச்சல், அரசியலில் காங்கிரசின் நிலைப்பாடு , சிக்கலான கேள்விகளில் நகர்ந்து சென்று மறைமுகமாக செவிட்டில் அடிக்கும் சாமார்த்தியம் … தன் மீதான கேள்விகளுக்கு மிக எளிதான பதிலாக எடுத்து சொல்லும் பக்குவம், தமிழிசை என் நண்பர் என சொல்லும் நாகரீகம் … என மிக அழகாக அக்னிபரீட்சையில் தீபமாக‌ ஜொலித்தார் குஷ்பூ, கார்த்திகை செல்வன் கேள்விகளுக்கு எல்லாம் கார்த்திகை […]

சாலையில் திமுக அமரலும் , நடிகை கஸ்தூரியின் குமுறலும் …

திமுகவினர் மறியல் செய்ய ரோடு அவங்க அப்பன் வீட்டு சொத்தா : நடிகை கஸ்தூரி கலைஞர் பாணி பதில் இப்படி இருக்கும்…. “ஆம், இது எங்கள் பகுத்தறிவு தந்தை பெரியார் மண்ணின் சொத்து, எங்கள் அண்ணாவின் மண்ணின் சொத்து, அதில் அவர்கள் வழிவந்த நாங்கள் அமராமல் எங்கிருந்தோ மாடுமேய்க்க வந்த ஆரிய கூட்டமா அமரும்? காரோடு சாலை, ரயிலோடும் தண்டவாளத்தில் எல்லாம் அமர்ந்து நியாயம் கேட்டது நம் இயக்கம், அப்படித்தான் அமர்ந்தோம். தமிழகம் வாழ, நியாயம் கிடைக்க, […]