பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை

ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை: தமிழக அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்து விமான நிலைய விஷயத்தில் முதலில் செய்யவேண்டியது சென்னை விமான நிலைய விரிவாக்கம், உள்நாட்டு முனையம் இடிந்து விழுகின்றது, பன்னாட்டு முனையத்திலும் ரன்வெயிலும் நெருக்கடி ஆக முதல் தேவை சர்வதேச தரத்தில் பெரும் விமான நிலையத்தை சென்னை புறநகரில் அமைப்பது அடுத்து மதுரையினை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றவேண்டும், தென்னக பெரும் பிரச்சினை தீரும் திருச்சி விமான நிலைய கொள்ளைக்கு முடிவு கட்டவேண்டும் […]

மு.க ஸ்டாலின் ஜாதகத்தை பலர் கணிக்கிறார்கள்…

திராவிட பகுத்தறிவு பாரம்பரியத்தில் வந்தவர் மு.க ஸ்டாலின் அவரின் ஜாதகத்தை வைத்து பலர் கணித்துகொண்டிருக்கின்றனர் இதுவே கலைஞர் என்றால், “சட்டம் போட்டு கருணாநிதி ஆள்வதை , கட்டம் போட்டு கணிக்கமுடியுமா?, வட்டம் போட்டு நில் என்றால், காட்டாறு நிற்குமா” என பேசிவிட்டு நகர்ந்திருப்பார் யாரும் அதுபற்றி கேட்காவிட்டால் கூட, அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் எழுதியிருப்பார்.. ஸ்டாலின் இந்த ஜாதக சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை, மறுக்கவுமில்லை தமிழகத்து கடைசி பகுத்தறிவின் ஓளி, கோபாலபுரத்து இல்ல தனி அறையில் […]

திருமுருகன் காந்தியின் கைது பற்றி இலங்கை அமைச்சர் தொண்டைமான் கண்டனம்

திருமுருகன் காந்தியின் கைது பற்றி இலங்கை அமைச்சர் தொண்டைமான் கண்டனம் தெரிவித்திருக்கின்றாராம் என்ன அநியாயம் இது? தமிழக அரசோ, இந்திய அரசோ ஈழ உணர்வாளர்களை கைது செய்யும் பொழுது இவர்களின் ஆலோசனையோ அல்லது அனுமதியோ வேண்டுமா? அப்படி என்ன அதிகாரம் ஒன்றுமில்லாமல் இருக்கும்பொழுதே இப்படி பேசுபவர்கள், ஒருவேளை 9ம் அதிசயமாக ஈழம் அமைந்திருந்தால், தமிழகத்து முடிவுகளை எல்லாம் அவர்கள்தான் எடுத்திருப்பார்களோ?? தமிழக அரசு என்ன செய்யவேண்டும், செய்ய கூடாது என யாழ்பாணத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கலாம், நல்ல […]

டெனான்மன் ஸ்குயரில் இந்திய டெஸ்டிமோனோ குஷ்பூ…

இதனை எழுதிய யுவ கிருஷ்ணா அவர்களை வாழ்த்துகின்றோம், விரைவில் மன்றத்தின் சார்பில் அவருக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கபடும் நிகழ்ச்சி நடைபெறும் இந்த கட்டுரையில் குஷ்பூ தமிழகத்திற்கு வந்து ஜெயித்த விதத்தை சொல்லியிருந்தார், இவை எல்லாம் நாம் பைபிள், கீதை, உலக வரலாறு போல தேடி தேடி படித்த விஷயங்கள் ஆனால் அதிர்ச்சியான விஷயம், கோவில் கட்டிய செய்தி பொய்யாக இருக்கலாம் என அவர் முடித்திருந்ததுதான் அது பொய்யாக விடுவோமா? விடவே மாட்டோம் இவ்வுலகில் பல வகையான கோயில்கள் […]

மதுரையில் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பதாக செய்திகள் ….

மதுரையில் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பதாக செய்திகள் வருகின்றன‌ நூறுநாள் கெடாத பால், கொழுப்பு நீக்கபட்ட, மிக திக்கான பால் என செய்திகள் வரும்பொழுல்லாம் வராத பரபரப்பு இப்பொழுது வருகின்றதாம், சோப் ஆயில் 100 நாள் என்ன? ஆயிரம் நாள் ஆனாலும் கெடாது இப்பொழுதும் அதற்கு அரசு இன்னும் தடை விதிக்கவில்லை, இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றதாம், மக்களாக இனி தடை விதித்தால்தான் உண்டு. பாலின் கொழுப்பினை பிரித்து பலவாறு பயன்படுத்துவார்கள், அதில் சில சோப் போன்றவை தயாரிக்க […]

கேரளம் உருப்படுமா? தமிழகம் உருப்படுமா?

மாட்டுகறி தடையினை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் கம்யூ,காங்கிரஸ் சேர்ந்து தீர்மானம், கேரளம் முழுக்க மாட்டுகறி விருந்து உண்டு எதிர்ப்பு தமிழகத்தில் இப்படி எதிர்கட்சிகள் சேருமா? இவ்வளவிற்கு திராவிட கட்சிகள் தான் பெரிய கட்சிகள். ஆரிய சட்டத்திற்கு எதிராக 60 ஆண்டுகாலம் ஆண்டதாக சொல்லும் திராவிட கட்சிகள் நிலை என்ன? பெரும் எதிர்ப்பு என ஒன்றுமில்லை, திமுக ஒரு மாதிரி முணங்குகின்றது, அதிமுக கிட்டதட்ட மயான நிலை பெரும் எதிர்கட்சிகள் இணைந்து அமர்களமான எதிர்ப்பினை தெரிவிக்கும் காட்சி கேரளத்தில் […]

தமிழிசைக்கு போனிலும், கடிதத்திலும் மிரட்டல் : செய்தி

தமிழிசைக்கு போனிலும், கடிதத்திலும் மிரட்டல் : செய்தி இது வன்மையாக கண்டிக்கதக்கது, அவர் ஒரு அரசியல்வாதி அவர் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றால் கண்டிக்கலாம், விமர்சிக்கலாம் மிரட்டல் என்பதை எல்லாம் ஏற்றுகொள்ள முடியாது. மாட்டுகறி தடை என சொன்னது தமிழிசை அல்ல, அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மத்திய அரசின் அலுவலகம், மத்திய அரசு சம்பந்தமான அணுவுலை அடுப்பு என சென்று எதிர்ப்பு தெரிவிக்கலாம் தமிழிசையினை மிரட்டுவது என்பது கோழைகளின் வேலை, வீணர்களின் மூளை கெட்ட சதி தமிழிசை […]

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணி கூட்டத்தி கலவரம்

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணி கூட்டத்தி கலவரம், அடி உதை நடந்திருக்கின்றது, இதில் ஆச்சரியபட என்ன இருக்கின்றது அவர்கள் கலாச்சாரம் அது, சின்னம் என்ன என்பதை அருகிலிருப்பவர் கன்னத்திலும், முதுகிலும் பதித்து கட்சி விசுவாசம் காட்டுவார்கள், முன்பு வேட்டி கிழிந்து, செருப்புகள் பறந்ததில் அதன் வாசலில் ஒரு வேட்டிகடையும், செருப்பு கடையுமே திறக்கபோன அளவிற்கு வீர வரலாறுகள் உண்டு இப்பொழுது மகளிர் முறை, அதுவே நடந்திருக்கின்றது, இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை, மகளிர் மட்டும் சளைத்தவர்களா? “ஆணுக்கு […]

அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது: ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது: ஓ.பன்னீர்செல்வம் வேறு என்ன ம….க்கு முன்பு தியானம், ஆளுநர் சந்திப்பு, நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றேல்லாம் ஓப்பாரி வைத்தீர் அய்யா? ஆட்சி வேண்டாம் என்றுதான் சட்டபேரவையில் கலவரம் நிகழ்த்த முயன்றார், இப்பொழுது அதே ஆட்சி வேண்டுமாம், ஆதரிப்பாராம்… உங்களையும் நம்பி அந்த ரிசாட்டை என்னபாடு படுத்தினார்கள்?, எவ்வளவு கஷ்டம் அவர்களுக்கு இதனை அன்றே சொல்லியிருக்கலாமே? அன்று ஒரு நிலைப்பாடு, இன்றொரு நிலைப்பாடா? இதன் பெயரா தர்மயுத்தம்? ஜெயா இறந்த […]

கம்பன் கண்ட சீதையின் தாய் வடிவம் இதோ..

கம்பன் கண்ட சீதையின் தாய் வடிவம் இதோ.. இந்த நடமாடும் பல்லவ சிலையினை, நடமாடும் மேகத்தை, மாணிக்க தேரினை, பழங்கால சின்னமாக மின்னும் அழகினை இலக்கிய ரசனையோடு பார்க்க தெரியாத குருடர்களுக்கு , அந்த திரிசடையின் தங்கை, சூர்பநகையின் சித்தி நல்லி எலும்பு நாயகி அழகாக‌ தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது, அவர்களுக்கு குளிர்நிலவுக்கும் கொள்ளிகட்டைக்கும் வித்தியாசம் தெரியவா போகின்றது?? தெரியாது LKG Boys… இதோ வைடூரிய குளிர்நிலவு, இதுதான் அழகின் இலக்கணம் புரிகின்றதா?