பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீவிரவாத தாக்குதல் ஈரானிலும் தொடங்கிவிட்டது

தீவிரவாத தாக்குதல் ஈரானிலும் தொடங்கிவிட்டது, ஈரானிய பாராளுமன்றம் சிறைபிடிக்கபட்டதாகவும், ஷியாக்களின் ஒப்பற்ற தலைவர் கோமேனியின் கல்லறையில் சண்டை நடப்பதாகவும் செய்திகள் ஈரான் ஷியா மீது ஐஎஸ் போன்ற சன்னி பிரிவு இயக்கங்கள் பெரும் வெறுப்பில் இருந்தது உண்மை, ஈரானும் ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான போரில் இருந்தது இவ்விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்துகின்றது, இன்னும் முழு நிலவரம் தெரியவில்லை ஒரு வகையான முரட்டு நாடு ஈரான், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என கணிக்கமுடியாது, ஆனால் நிச்சயம் சுமூகமாக […]

வளைகுடா ஒற்றுமை அவசியம்

வளைகுடா ஒற்றுமை அவசியம்: சவுதி அரேபியா மன்னரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் அல்லது எடப்பாடிக்கும் ஆதரவு, தினகரனுக்கும் ஆதரவு என்பது இதுதான் வளைகுடா நாடுகள் ஒற்றுமை இல்லாமல் இருக்க காரணமே அன்னாரின் திருவிளையாடல்தான், சமீபத்தில் இவர் சென்று சவுதிக்கு தருவதாக சொன்ன ஆயுதங்களும், அதனை தொடர்ந்து ஈரானுக்கும் கத்தாருக்கும் எழுந்த அச்சமே இந்நிலைக்கு காரணம் இதில் அந்நாடுகள் ஒற்றுமையுடன் இருக்க டிரம்ப் கோருகின்றாராம் இரு நாடுகளிலும் அமெரிக்க ராணுவம் […]

உலகின் அதி அற்புதமான நகரங்களுள் ஒன்று ஜெருசலேம்

உலகின் அதி அற்புதமான நகரங்களுள் ஒன்று ஜெருசலேம், மிக பழமையும், மிக புதுமையும் கொண்டு இன்றைய உலகில் ஒரு மிக விசித்திரமான நகரம் அது அதனை விட மகா முக்கியம், யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு அதுதான் புண்ணியஸ்தலம் அது முதலில் ஆபிராகம் தன் மகனை பலியிட்ட இடம் என்பது யூதரின் நம்பிக்கை, அந்த சம்பவம் நடந்து ஆபிரகாம் சந்ததி எகிப்தில் அடிமையாகி திரும்பும் பொழுது அது ஜெபூசியர் எனும் இனத்தின் கையில் இருந்தது இஸ்ரேலிய மாமன்னன் […]

நம்ம ஊரு அரசியல்…

அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற உத்தரவு வரலாம் : செய்தி இந்த முதலமைச்சர், அமைச்சர் குடும்பங்களுக்கு இது பொருந்துமா? தமிழக அரசே அவர்கள்தான்.? ஆக அவர்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகளும் அரசு பள்ளியில் படித்தாக வேண்டும்.. அப்படியே அதிமுகவினர் அக்கட்சி பிரமுகர்கள் நடத்தும் பள்ளியிலும், திமுகவினர் அந்த கட்சி பிரபலங்கள் நடத்தும் பள்ளியிலும்தான் படிக்க வேண்டும் என சட்டம் வாய்மொழியாக வரும்.. தமிழிசை, எச்.ராசாவின் குடும்ப குழந்தைகளுக்கு சிக்கல் இல்லை, காவி […]

என்ன ஒரு வேகம்? என்ன ஒரு ஓட்டம்? என்ன ஒரு பல்டி?

உசேன் போல்ட் அசந்து போய் இருக்கின்றார், அவமானத்தால் நொறுங்கிபோய் இருக்கின்றார் ஓட்டபந்தயத்தில் தான் மட்டுமே மிக வேகமானவன் என்ற அவரின் பெருமிதத்தை தமிழக அதிமுக எம்.எல்.ஏக்கள் நொறுக்கி கொண்டிருக்கின்றனர் என்ன ஒரு வேகம்? முதலில் ஜெயா கார் ஹெலிகாப்டர் என ஓட்டம், , பின் பன்னீர், பின் கூவத்தூரில் சசிகலா, பின் பழனிச்சாமி, இப்பொழுது தினகரன் பின்னால் என அப்படி ஒரு வேகம் ஓடுவது கூட பெரிய விஷயம் இல்லை, இப்படி குறுக்கே வெட்டி, பல்டி அடித்து, […]

இந்த குமரி அனந்தன் எங்கிருக்கின்றார் என தெரியாது…

இந்த குமரி அனந்தன் எங்கிருக்கின்றார் என தெரியாது, ஆனால் அவரை தேடி கண்டுபிடித்து தமிழிசையிடம் பல பழைய வரலாறுகளை கற்பிக்க சொல்ல வேண்டும் காரணம் ஒரு வரலாறும் தெரியாமல் தமிழிசை இஷ்டத்திற்கு ஏய் காங்கிரசே, ஏய் திமுகவே என கத்திகொண்டே இருக்கின்றார் எச்,ராசா கத்தினால் அவருக்கு ஒன்றும் தெரியாது என விட்டுவிடலாம், ஆனால் தமிழிசை எப்படிபட்ட காங்கிரஸ்காரரின் வாரிசு? விட முடியுமா? முடியாது. நிச்சயம் குமரி அனந்தன் அருகில் இருந்தால் தமிழிசை இப்படி எல்லாம் அர்த்தமின்றி உளற […]

ராகுல் காந்தி என்ன சொன்னார்?

ராகுல் காந்தி என்ன சொன்னார்?, பகவத் கீதையினை, உபநிஷங்களை கவனமாக படிக்கின்றேன், அப்பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு பதிலளிக்க முடியும் என சொல்லியிருந்தார் அவ்வளவுதான், தமிழிசை குதிக்க ஆரம்பித்துவிட்டார் ராகுல் “இலங்கையில் தமிழர் கொல்லபட்டபோது எங்கே போனார் ஏய்..” என முப்பந்தல் இசக்கி போல ஆட ஆரம்பித்துவிட்டார் அம்மா தமிழிசை, ராகுலுக்காவது ஒரு காரணம் இருந்தது, அக்குடும்பம் ஒரு தலைவனை பறிகொடுத்திருந்தது, இன்னும் களமிறங்கி மொத்த குடும்பத்தை தொலைக்க அவர்கள் தயாரில்லை ஆனால் நீங்களோ உங்கள் கட்சியோ ஒரு […]

ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா: சீமான் ஆவேசம்

ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா: சீமான் ஆவேசம் 2016ல் ஜெயலலிதா வென்றாலும், அவர் ஆளவில்லை வெறும் 3 மாதமே முதல்வராக இருந்தார், அதற்குள் 5 லட்சம் கோடி கடன் வந்திருக்க முடியாது, இவை எல்லாம் 2011ம் ஆண்டு தொடர்ச்சிகள் 2011ல் ஜெயலலிதா முதல்வராக துடித்தது யார்? இதே அங்கிள் சைமன். இவர்தான் 2011ல் ஜெயலலிதாவினை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு கேட்டவர் என்பதும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ரைமிங்காக […]

இனி வானமும் நமக்கு வசப்படும்

அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கின்றது இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது பெரும் வெற்றி இஸ்ரோ இந்திராகாந்தி காலத்தில் தொடங்கபட்டது, பின் பிஎஸ்ல்வி எனபடும் குறைந்த சக்தி கொண்ட ராக்கெட்டுகளை உருவாக்கினொம் பெரும் சக்திகொண்ட ஜிஎஸ்எல்வி எனப்படு ராக்கெட்டுகள் இன்றி அடுத்தகட்டத்திற்கு நகரமுடியாது என கருதபட்ட காலத்தில்தான் ராஜிவ் பிரதமரானார் கோர்பவேவுடன் அவர் செய்த ஒப்பந்தத்தில் அதனைத்தான் கேட்டிருந்தார், சோவியத் ரஷ்யாவும் சம்மதித்திருந்தது ரஷ்ய உடைவும், ராஜிவின் மரணமும் அந்த கனவில் […]

மிஸ்டர் டிரம்ப்-க்கு ஒரு யோசனை

“என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன். ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. வெறுப்பாயிருக்கின்றது” இப்படி அரசியலுல் அலுத்துகொண்டவர் யார் தெரியுமா? நம்ம டிரம்ப் தான் அன்னாருக்கு அனுபவமில்லை, ரகசிய தகவல்களை உளறி கொட்டியதில் சந்தி சிரிக்கின்றது, அவரால் ஒரு முடிவும் […]