பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முப்பாட்டன் உ.வே.சாமிநாதய்யர்

முப்பாட்டன் உ.வே.சாமிநாதய்யர். பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 60 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம். எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும். இப்படிஎல்லாம் கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று […]

வடகொரியா அணுகுண்டு வைத்திருப்பதால் …

வடகொரியா அணுகுண்டு வைத்திருப்பதால் அதனை நொறுக்க அமெரிக்கா கிளம்பிவிட்டதாக பல ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன‌ இன்றைய தேதியில் இந்தியா உட்பட ஏராளமான நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது, இஸ்ரேலிடம் உள்ளது, ஈரானிடம், பாகிஸ்தானிடம், உக்ரைனிடம் என எல்லோரிடமும் உள்ளது அப்படி தடுப்பதாக இருந்தால் முன்பே தடுப்பார்கள், சதாமின் அணுவுலைகளை, சிரிய அணுவுலைகளை இஸ்ரேல் தகர்க்கவில்லையா? யார் கேட்டார்கள்? அப்படி பாகிஸ்தான் அணுகுண்டினை ஏன் அமெரிக்கா தடுக்கவில்லை என கேள்வி எழலாம், அது அரசியல், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தால்தா இந்தியாவினை அடக்கி […]

எல்லா வஞ்சகர்களையும், முடிச்சவிக்கிகளையும் ஒன்றாய் வைக்கவே கூடாது

பெரும் பலசாலிகள் எல்லோரும் ஒரு சேரே இடத்தில் இருந்தால் அங்கு தோல்விதான் என்பதை முதலில் சொன்னது மகாபாரதம், கவுரவர் அணி அப்படித்தான் பலத்தோடு இருந்தது, பின் நாசமானது காரணம் எல்லோரும் பெரும் வீரர்கள், ஈகோ முதல் “நான் யார் தெரியுமா?”, “”என் ஒருவனுக்கு பதில் சொல்ல முடியுமா?” , “உன்னுடன் நானா? என் தகுதிக்கு தகுமா?” என்பது வரை ஏகபட்ட சிக்கல்கள் இருந்தன, கவுரவர் அணி தோற்றது அப்படி இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐபில் அணியும் […]

கலைஞர் நிச்சயம் ராஜமவுலிக்கு வழிகாட்டி

இன்று தொழில்நுட்பம் பெரிதாக‌ வளர்ந்திருக்கின்றது, கேமரா முதல் கிராபிக்ஸ் வரையில் வித்தை காட்ட முடிகின்றது , எந்த புத்தகம் ஆனாலும், எந்த விஷயமானாலும் கணிபொறியின் முன் அமர்ந்துவிடுகின்றது சினிமாவினை தொழில்நுட்பத்திலே முடித்துவிடலாம்.. ஆனால் அன்று அப்படி அல்ல, புத்தகங்கள் குறைவு, தொழில்நுட்பமும் இல்லை, காட்சி அமைப்பும் பிரமாதம் இல்லை, படம் என்பது வசனங்களிலே உணர்ச்சி ஊட்டபடவேண்டும் எனும் நிலை எல்லா வித்தைகளையும் “வசனதமிழ்” என்றொரு ஒரு விஷயத்தில் அடக்கி அப்படங்களை வெற்றிபடங்களாக்கிய கலைஞரின் நினைவு இந்த பாகுபலி […]

உலகெல்லாம் ‘பாகுபலி 2’ மழை பெய்ய தொடங்கிவிட்டது

உலகெல்லாம்’ பாகுபலி 2 ‘மழை பெய்ய தொடங்கிவிட்டது, எல்லோரையும் போல நனைந்துவிட வேண்டும் பாகுபலி எப்படி வென்றது? அரசர் படங்கள் ஒன்றும் புதிதல்ல, பேசும் படங்கள் வந்த காலத்திலிருந்து வருபவைதான், ஆனால் பாகுபலி எப்படி பெரும் அடையாளமாயிற்று என்றால் அதில் டைரக்டரின் தேடலும், ஆர்வமும் தெரிந்தது, சந்தேகமின்றி சொல்லலாம் இன்றைய ஆசியாவின், ஆசியா என்ன? உலகின் மிக சிறந்த டைரக்கடர்களில் ராஜமவுலியும் ஒருவர் எல்லோரும் அரசர் கதை எடுக்கலாம், மனோகரா, காஞ்சி தலைவன் என பல வரலாம் […]

விணுசக்கரவர்த்தி : நல்ல கலைஞனுக்கு மகத்தான அஞ்சலி..

1980களின் மிக சிறந்த இயக்குநரும், கதாசிரியரும், அதன் பின் 2016 வரை எல்லா பாத்திரங்களிலும் நடிப்பில் ஜொலித்தவருமான விணுசக்கரவர்த்தி காலமாகிவிட்டார் சட்டை இல்லா உடலில் சந்தணம் பூசிகொண்டு வரும் நாட்டாமை பாத்திரம் முதல், அட்டகாசமான மீசையோடு வந்த கமிஷணர் வேடம் வரை அவரை மறக்கமுடியாது இன்னொருகோணத்தில் பார்த்தால் ரஜினிகாந்தோடு இணைந்து பயணித்த நடிகர், 1980களில் இருந்து அவரோடு நடித்தவர், ரஜினியின் சிவாஜி படத்திலும் அவர் இருந்தார், பின் தூக்கபட்டார் ரஜினியின் பெரும் வெற்றிபடங்களில் இவரின் பங்களிப்பும் இருந்தது.. […]

தியாராய செட்டி (எ) பிட்டி தியாகராயர்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார் மற்ற சாதி மக்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது நீதிகட்சிதான், அது […]

தமிழிசை பலரின் தூக்கத்தை கெடுக்க துவங்கிவிட்டார்….

தமிழக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இன்னபிற சீசனல் கட்சிகளின் பெரும் கவலை இப்பொழுது என்னவென்றால், அதிமுக விவகாரத்தில் பிஜேபி தலையிடுவது பற்றியது. சங்கு சக்கர சாமி வந்து குதிக்கின்றார்கள் அப்படி அந்த அதிமுக இவர்களை மதித்த கட்சியும் அல்ல, கூட்டணியாக 4 சீட் கொடுத்ததும் அல்ல, ஆட்சியில் அமர்த்திய கட்சியும் அல்ல‌ கூட்டணி என அழைத்து ஒரு டீ கூட கொடுத்தகட்சி அல்ல, டீ என்ன? இவர்களை மதித்து அமர கூட வைத்ததில்லை சுருக்கமாக சொன்னால் இப்படி சில […]

தமிழக அரசு மின்சாரம் வாங்கியதற்காக செலுத்தவேண்டிய தொகை பாக்கி….

திருவள்ளுர் மாவட்டம், வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு தமிழக அரசு செலுத்தவேண்டிய தொகை பாக்கி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி செலுத்தவேண்டி உள்ளதால், வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிவிட்டு மின்சாரத்தை நிறுத்தியதாகவும் ஒரு செய்தி ஜெயா சொத்துமதிப்பு எத்தனாயிரம் கோடி?, கணக்கில் வராத சொத்துக்கள் எத்தனை ஆயிரம் கோடி?, கூவத்தூரில் செலவழிக்கபட்டது எத்தனை ஆயிரம் கோடி…… அதிமுக அமைச்சர்கள் வீட்டில் நடந்த சோதனையில் ஏராளமான நூறு கோடிகள் கைபற்றபட்டது, ஆர்கே நகரில் அதிமுக பல […]

தமிழகமெங்கும் கடுமையான மின்வெட்டு : செய்தி

மின் உற்பத்தி பாதிப்பு, தமிழகமெங்கும் கடுமையான மின்வெட்டு : செய்தி இப்பொழுதிருக்கும் அமைச்சர்கள் வித்தியாசமானவர்கள் அல்லவா? வீடு வீடாக பேட்டரி வழங்குதல் போன்ற திட்டங்களில் இறங்கலாம். அதற்கும் மேலாக மின் உற்பத்தி டர்பன்களை கையால் சுழற்றும் திட்டமும் இருக்கலாம் சென்னையில் எந்த மின்வெட்டானும் ராமசந்திரன் சமாதி ஏரியா மட்டும் இருளில் மூழ்காது, ஏனென்றால் அவரும், ஜெயாவும் விழித்திருந்து அண்ணாயிச கொள்கைகளை படிக்கின்றார்கள் அல்லவா? கல்லறைகளுக்கு இருக்கும் மின்வசதி அங்கு மக்களுக்கு இல்லை. கூடன்குளம், கல்பாக்கம் என பல […]