பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆர்.கே நகரில் எல்லாம் கெட்டு கிடக்கின்றது

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுபோயிற்று என்றால் ஆட்சியினை ரத்துசெய்துவிட்டு கவர்ணர் ஆட்சி கொண்டுவர இந்திய சட்டம அனுமதிக்கின்றது இப்பொழுது ஆர்.கே நகரில் எல்லாம் கெட்டு கிடக்கின்றது, சட்டம் ஒழுங்கு என எதுவுமில்லை பணத்தினை தவிர‌ இந்நிலையில் அங்கு இனி கவர்னர்தான் சமஉ என அறிவித்துவிட்டு, இந்த கட்சிகளை எல்லாம் விரட்டிவிட்டு, கவர்ணரின் நேரடி பொறுப்பில் கொண்டுவர முடிந்தால் கொண்டுவரலாம் அதனை தவிர ஆர்.கே நகருக்கு நல்ல முடிவு கொடுக்க முடியாது…  

புட்டுகளில் சிறந்தது சுறா புட்டு..

உணவுகளில் புட்டு என்பது அவ்வளவு சுவையானது, பலவகையான புட்டுக்கள் உலெகல்லாம் உலாவுகின்றன‌ ஆனானபட்ட சிவபெருமானே புட்டிற்காக மண் சுமந்திருக்கின்றார் என்பதை விட அதன் பெருமையினை சொல்ல என்ன இருக்கின்றது? பலவகை புட்டுக்களில் சுறா புட்டு மிக சுவையானது, சிவன் சைவம் என்பதால் அதனை சுவைத்திருக்க வாய்ப்பில்லை, சுவைத்திருந்தால் மதுரை கிரானைட் கல்குவாரி வேலைக்கும் வந்து திருவிளையாடல் நடத்தியிருப்பார் அவதாரங்களில் மீனோடு கலந்தவர் இயேசு, மீணவர்களோடுதான் வாழ்ந்தார், மீன் பிடித்தார், மீன்களை வைத்துதான் புதுமைகள் எல்லாம் செய்தார், மீன்களை […]

சிரியாவில் நடப்பது…

ஏதாவது செய்ய வேண்டும், 4 பேரை கொல்லாவிட்டால் என்ன அமெரிக்க ஜனாதிபதி எனும் வெறியில் இருந்த டிரம்ப் சிரியாவில் செய்துவிட்டார் ஏவுகனைகளை சிரியா மீது ஏவி பலரை கொன்றது மூலம் சர்ச்சையினை தொடங்கிவிட்டார், ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் மீது, போர் அறிவிக்காமல் திடீரென தாக்குவது சர்வதேச அடாவடிதனம், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது ரஷ்யாவின் எதிர்ப்பினை சமாளிக்கும் விதமாக டிரம்ப், இது விஷயாவு தாக்குதலால் தான் செய்ய நேர்ந்தது, ஆக தவறல்ல என சொல்ல, அவரின் அடிப்பொடிகளான […]

இந்த தருண்விஜய் ஏன் அப்படி சொல்லவேண்டும்?

டெல்லியிலும் நொய்டாவிலும் ஆப்ரிக்கர்கள் தாக்கபட்ட சம்பவம் இனவெறி என சர்ச்சை கிளம்பியது இந்தியாவில் அப்படி எல்லாம் இல்லை, இங்கு இனவெறி இல்லை, கருப்பான தமிழர்கள் கூட இந்தியனே என வட இந்திய திருகுறள் முனுசாமி தருண் விஜய் சொல்லிவிட்டாராம் சர்ச்சைகள் வெடிக்கின்றன, முன்பு மலையாளி ஜெயராம் இப்படித்தான் சொல்லி சிக்கிகொண்டார். இந்த தருண்விஜய் ஏன் அப்படி சொல்லவேண்டும்? இந்தியாவில் தமிழர்கள் மட்டும்தான் கருப்பு நிறமா? தருண் விஜய் எந்த நோக்கத்தில் சொல்லியிருந்தாலும் இது கண்டிக்கபடவேண்டிய ஒன்று என்பதில் […]

வருமான வரி சோதனை …..

எத்தனையோ வருமானவரி சோதனைகள் நடந்திருக்கின்றன, இன்னும் நடக்கும் சரி இவற்றில் ஏதாவது ஒன்று வழக்கு ஆனதா? யாராவது ஒருவர் தண்டிக்கபட்டாரா? இல்லை ஜெயா மட்டும் சொத்துகுவிப்பு வழக்கு மட்டும் சிக்கினார், அதற்கு பல காரணங்கள் இருந்தன. மற்றபடி வருமானவரி சோதனை எல்லாம் இழுத்து மூடபடும், கொஞ்சநேரம் காட்டும் வானவேடிக்கை காட்சிகள் இவை, அதன் பின் புஸ்வானம்தான் பூட்டிய வீட்டுக்குள் சோதனை என்பார்கள், அது சோதனையா இல்லை கிடா வெட்டி சாப்பிட்டு தூங்குகின்றார்களா என யாருக்கு தெரியும்? சோதனைகள் […]

வாழ்த்துக்கள் கவிஞர் வைரமுத்து….

7ம் முறையாக தேசிய விருது வாங்கி தன்னை நிரூபித்திருக்கின்றார் வைரமுத்து கிராமத்து ஏக்கமும், சோகமும், மகிழ்வும் மிக எளிமையான வார்த்தைகளில் அவரிடமிருந்து பாடலாக வரும், அவரின் பலம் அது, வரமும் அது முதல் மரியாதை முதல் இந்த தர்மதுரை பாடல் வரை பார்த்தால் அது அழக்காக தெரியும், அவரின் கிராமம் அவருக்கு அந்த அளவு கற்றுகொடுத்திருக்கின்றது, அந்த நினைவு அவரை அந்த அளவு உயர்த்தியிருக்கின்றது அவர் இளம்வயதில் மிகவும் நேசித்து பின் அணையில் மூழ்கிய‌ அந்த கிராமமும், […]

அக்‌ஷரா ஹாசன் படத்திற்கு எதிராக விசுவ இந்து பரிஷத் போராட்டம்

திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் இளம்பெண்ணை பற்றிய படத்தில் அக்‌ஷரா ஹாசன் : படத்திற்கு எதிராக விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் கஸ்தூரி ராஜா, செல்வராகவன் போன்றோரின் “கருத்தாழமிக்க” படங்கள், சிந்துசமவெளி, உயிர் போன்ற “சமூக அக்கறை” படங்கள் வரும்பொழுதெல்லாம் இவர்கள் கோவில் கருவறை பூஜையிலும், உழவாரபணியிலும் இருக்கின்றார்கள் கமலஹாசன் அல்லது அவர் மகள் படமென்றால் மட்டும் அந்த திருப்பணிகளை அப்படியே போட்டு விட்டு வெகுண்டெழுந்து போராட‌ வருகின்றார்கள் விஸ்வ ஹிந்து அல்ல, விசித்திரமான ஹிந்து பரிஷத் […]

இரு குல்லா தலையர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்

இந்த உலகத்தில் இரு குல்லா தலையர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள், யாரவது போராடியிருப்பார்கள் பலன் இவர்களுக்கு சேர்ந்திருக்கும், வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்கள் அவர்களில் முதல் அதிர்ஷ்டசாலி ஜின்னா, அவர் இந்திய சுதந்திரத்திற்கு போராடியவரும் அல்ல, பாகிஸ்தான் வேண்டும் என துப்பாக்கி தூக்கியவரும் அல்ல, கட்டபொம்மன் முதல் காந்திவரை போராடிய போராட்டத்தின் முடிவில் தனிநாடு கிடைத்தென்னவோ இவருக்குத்தான்.. வெள்ளையன் தானகவே தூக்கி கொடுத்து சென்றான், அவ்வளவுதான். பாகிஸ்தான் சுதந்திரபோர் என ஏதாவது வரலாற்றில் உண்டா? இல்லை இன்னொரு அதிர்ஷ்சாலி தமிழக […]

சோதனை மேல் சோதனை …. போதுமடா சாமி..

ஆர்.கே நகரில் பணத்தினை அள்ளி வீசுகின்றார்களாம், அவர்கள் ஆயிரம் என்றால் இவர்கள் இரண்டாயிரம், இவர்கள் இரண்டாயிரம் என்றால் அவர்கள் மூவாயிரம்… ஆக வாக்கு ஆரம்பம் ரூபாய் ஆயிரம்… இரண்டாயிரம்.. 4 ஆயிரம்…. 6 ஆயிரம் என பாண்டியராஜன் காமெடி போலவே வாக்கு ஏலம் நடக்கின்றது நடக்கட்டும், முடிவில் இவர்களுக்கு கிடைக்கபோவதென்னமோ “பிம்பிலிக்கி பிலாக்கி… குறிப்பாக “மாமாவுக்கு பிஸ்கோத்து….”   அக்காவிற்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? இவர்களிடம் பணம், பிணம் எல்லாம் கிடையாது மசூதி இடித்தல், மாட்டு தொழுவம் […]

ஜெயா பொம்மை, அதற்கொரு மாலை.. ஹா ஹா ஹி ஹி ….

இங்கு அடிக்கொரு பூங்காக்கள் உண்டு, பசுமையான பூங்காக்கள் , சும்மா சொல்ல கூடாது, அரசின் வருமானத்தில் பாதி அதனை பராமரிக்கவே செலவாகலாம், அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார்கள் காலையும் மாலையும் அதில் உடற்பயிற்சி செய்வோர் ஏராளம், அந்த பூங்காக்கள் அதிகாலையும் மாலையும் வேலைக்கு செல்பவர்களுக்கு,தினமும் காலை 8 மணிவாக்கில் ஒய்வுபெற்றவர்களுக்கு அவர்கள் அப்படித்தான் தினமும் கொஞ்ச தூரமாவது நடக்கவேண்டும் என்பது அவர்கள் வகுத்த விதி, நடக்க முடியாவிட்டாலும் ஊன்றுகோலோடு நடப்பார்கள். கோலும் அவர்களும் ஒன்றுபோல்தான் இருப்பார்கள் சிலர் நடப்பார்கள், […]