பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டெல்லியில் திமுக மகளிரணி போராட்டம் நடத்தும் : கனிமொழி

  மார்ச் 20ம் தேதி பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்ககோரி, டெல்லியில் திமுக மகளிரணி போராட்டம் நடத்தும் : கனிமொழி திமுகவில் 33% பெண்களுக்கு இடம் கேட்டு எப்பொழுது அறிவாலம் முன்னால் போராட்டம் நடத்தபோகின்றீர்கள் மேடம்? (கட்சியில் இருந்த குஷ்பூவினை விரட்டியாயிற்று, தமிழச்சி தங்கபாண்டியனை எல்லாம் காணவே இல்லை) கட்சியில் பெண்களுக்கு 33% கொடுத்துவிட்டு, டெல்லியில் சென்று கேட்டால் ஒரு மதிப்பும் மரியாதையும் திமுக மேல் ஏற்படும் அல்லவா? ஆக முதலில் செயல்தலைவர் முன்னால் சென்று […]

காமராஜரும், கக்கனும் முதல் வகை

கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், காமராஜர் ஆட்சியில் பஞ்சம் இருந்தது அவர் அரிசி கொடுக்கவில்லை, கக்கன் ஒரு கொடுங்கோல் அமைச்சர் என பல கதைகளை கிளப்புகின்றார்கள் அது சுதந்திரம் பெற்றிருந்த சமீபகாலம், இந்தியாவில் முறையாக எதுவுமில்லை, சுரண்டிவிட்ட பாண்டமாக வெள்ளையன் இந்தியாவினை விட்டுசென்றிருந்தான் இந்தியா என்றெல்ல, மொத்த உலகமே 2ம் உலகப்போரில் கொடுமையில் பஞ்சத்தில்தான் இருந்தது, எல்லா நாடும் மூச்சுவிட ஆரம்பித்ததே 1970க்கு பின் தான் அந்த பஞ்சம் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்தது, சீனாவில் இருந்தது, ஜெர்மனியில் இருந்தது, இன்னும் […]

டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தார் : செய்தி

டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தார் : செய்தி சங்கரமடம் என்பது டெல்லியின் தமிழக கிளை என்பது யாருக்கு தெரியாது, அங்கு விழுந்தால் சாட்சாத் டெல்லி காலில் விழுந்தது போல அல்லவா? பன்னீர் உண்ணாவிரதம், தேர்தல் ஆணைய சிக்கல்கள் என பல பெரும் பிரச்சினைகள் இருக்கும்பொழுது இவர் காஞ்சிமடம் சென்றது ஏன் என யோசித்தால்… சரண்டர் ஆகும் படலம் பகிரங்கமாக நடக்கின்றது. நடக்கட்டும் அங்கோ சங்கரராமன் கொலை சர்ச்சை, இங்கோ அப்பல்லோ சர்ச்சை, ஆக இரு சர்ச்சைகுரியவர்கள் சந்தித்து […]

மறுபடியும் மீனவர் பிரச்சினை….

https://youtu.be/o11m1GBNmkI கச்சத் தீவை மீட்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இரு நாட்களுக்கு முன்பு 7 தமிழர்கள் விடுதலை செய்யபடவேண்டும் என்றார் ஸ்டாலினுக்கு என்னமோ ஆகிவிட்டது , ஒருமாதிரி பேசிகொண்டிருக்கின்றார். மீணவர்கள் பிரச்சினையில் அன்று கலைஞர் சொன்னது உண்மை, பேராசை பட கூடாது என அவர் சொன்னது, கூலிக்கு மீணவர்களை பயன்படுத்தும் பெரும் மீன்வியாபாரிகளை பற்றியது, அது புரியவேண்டியவர்களுக்கு புரியும். உண்மையில் தமிழக மீணவர்களை இலங்கை கடற்படை பெரும் காரணமின்றி சுட்டால் என்றோ இந்திய […]

குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

உலகெங்கிருந்தும் குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன, உலகின் எல்லா தெய்வங்களிடமும், எல்லா மொழிகளிலும் அவருக்க்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது அந்த கலைமகள் வந்த பின் தமிழக திரையுலகம் அழகானது, அவரால் தமிழகமே அழகானது, அவர் மணவாழ்க்கைக்குள் புகுந்தபின் சுந்தரின் வாழ்க்கையும் சிறப்பானது இதுபோன்ற ஜோடி தமிழ்திரையுலகில் இல்லவே இல்லை. எந்நாளும் விளக்காக‌, எத்திசையிலும் கிழக்காக அவர்கள் வாழட்டும் எல்லா உலக தெய்வங்களும், தேவதைகளும் இவர்களை வாழ்த்தட்டும் கண்ணான மளவாளனுடன் , பொன்னான மகராசி பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு […]

நிச்சயமாக கமலஹாசன் கலக்கல் தமிழன்… இன்னும் பிற…

சு.சாமி தமிழ்பொறுக்கி தமிழ்பொறுக்கி என சொல்லிகொண்டிருப்பதற்கு மிக சரியான பதிலை கமலஹாசன் சொல்லியிருந்தார் “ஆம், நாங்கள் தமிழ்பொறுக்கிகள். உங்களை போல டெல்லியில் பொறுக்குபவர்கள் அல்ல” இப்படி நெற்றியில் அடித்து சொன்னபிறகும் இந்த சு.சாமி இன்னும் தமிழ்பொறுக்கி, தமிழ்பொறுக்கி என சொல்லிகொண்டே இருக்கின்றார் இவரை அடக்க அழகான வழி உண்டு ராஜிவ் கொலைசதியினை மீண்டும் விசாரிக்கவேண்டும் என கோரிக்கைகள் வைத்தாலே போதும், அன்னார் அடங்கிவிடுவார் கடும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் ராஜிவிற்கான கருப்பு பூனை பாதுகாப்பினை இவர் அமைச்சராக இருந்தபொழுதுதான் […]

எஸ்ரா சற்குணம் என்ற ஆயரின் உச்சகட்ட உளறல்

ஒரு உச்சகட்ட உளறல் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த எஸ்ரா சற்குணம் என்ற ஆயரின் சமீபத்திய சர்ச்சை பேச்சுதான் சாட்சி மனிதர் திருப்பலியில் ஒயின் குடித்தாரா? இல்லை டாஸ்மாக் சரக்கினை ஊற்றி வைத்துவிட்டு பேட்டிக்கு அழைத்தார்களா என தெரியவில்லை, அப்படி ஒரு அபத்தம் இவர் ஆயரோ, மேய்ப்பரோ அது தேவையில்லை, ஆனால் இந்நாட்டில் பிறந்து வளர்ந்த இந்தியகுடிமகன், இந்நாட்டு வரலாறு அவசியம் அவர் படித்திருக்கவேண்டும் இந்தியாவில் மொகலாயர் நல்லாட்சி நடத்தினர், ஆங்கிலேயர் நல்லாட்சி நடத்தினர் என அப்படி […]

இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது: ஓபிஎஸ் கண்டனம் ஆமாம், ஜெயலலிதாதான் தமிழக படைகளை அனுப்பி இலங்கை கடற்படையினரை மிரட்டி வைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது ஜெயா காலத்தில் தமிழக மீணவர்கள் இலங்கை தாண்டி, இந்தோனேஷியா வரை சென்று மீன்பிடித்தனர் என நம்பிகொள்ளுங்கள் மெரினாவினை சுத்தபடுத்துகின்றேன் என சொல்லி சொந்த தமிழக மீணவர்களை சுட்டுகொன்றவர் எம்ஜிஆர், எத்தனை பேர் செத்தார்கள் என்பது இதுவரை தெரியாது இடிந்தகரை மீணவ‌ மக்கள் அடித்து நொறுக்கபடும் பொழுதும், சிலர் சாகும்பொழுதும் […]

உண்ணாவிரத அரசியல்…

அக்கட்சியினர் பெரும்பாலும் பொதுபிரச்சினைக்கு போராடமாட்டார்கள், பெரும் போராட்டமெல்லாம் நடத்தமாட்டார்கள், ஆனால் தேர்தலில் மட்டும் ஜெயிப்பார்கள் அவர்கள் பிதாமகன் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருந்தது ஒருமுறை இந்திரா தமிழகத்திற்கு அரிசியினை குறைத்தார் என்பதர்காக‌ இன்னொருமுறை ஈழத்தில் படுகொலை நடந்தது என்பதர்காக. ஆனால் அவர்தான் முதல்வர், அவர் ஏன் பதவியினை ராஜினாமா செய்ய கூடாது என ஒருபயலும் கேட்கவில்லை, அவர் ஜாதகம் அப்படி 1993ல் ஜெயலலிதா ஒருமுறை உண்ணாவிரதம் இருந்தார், அது காவேரிக்காக, அப்போது அவர்தான் முதல்வர் அதன்பின் அக்கட்சியினர் உண்ணாவிரதம் […]

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்…

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் அனைத்தும் செயலற்று போயின, உலகம் அதுவரை கண்டிராத புதிய பரபரப்பு, இப்படியும் நடக்குமா? என வியந்த அதிசயம். காரணம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக போராட‌ புறப்பட்டனர். பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் வேண்டும், வேலை நேரத்தினை எட்டு மணி நேரமாக குறையுங்கள் , என்றெல்லாம் கோரிக்கை வைத்து உலக வரலாற்றிலே அதிரடியாக பெண்கள் புரட்சி நடந்தது. இந்த போராட்டத்தின் […]