பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 25 “வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்காத்தது கொண்டாங் குகப்பெய்தார் – மாத்தகையஅந்தப் புரத்தது பூஞை புறங்கடையகந்துகொல் பூட்கைக் களிறு” அரசனின் அரண்மனையில் பலமான யானைகள் வெளியே புழக்கடையில் தொழுவத்தில் சங்கிலியால் கட்டபட்டிருக்கும், ஆனால் பூனை அரசனின் அந்தபுரத்தின் அழகிய மஞ்சத்தில் அரசனை அடுத்து சுகமாக படுத்திருக்கும் ஆனால் நாட்டை காப்பது எதுவென்றால் அந்த யானைதானே தவிர பூனை அல்ல‌ அப்படி மேன்மக்கள் எங்கு இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நாட்டை காப்பார்கள், ஆனால் […]

“நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் […]

இந்து ஞானியரின் மனம் பிரபஞ்சத்தோடு இணைந்தது, அவர்கள் கண்கள் அந்த சக்தி இழையோடும் இடங்களை எளிதாக உணரும் சக்தி படைத்தவைஉயரபறக்கும் கழுகு தன் இரையினை சரியாக பார்ப்பது போல, காட்டுமலையில் எங்கோ இருக்கும் விலங்குகளுக்கு நீர் இருக்குமிடம் தெரிவது போல, எறும்ம்புக்கு சர்க்கரை இருக்குமிடம் தெரிவது போல‌ ஞானியருக்கு பிரபஞ்ச சக்திகள் குவிந்திருக்கும் இடம் அழாகாக தெரியும்இதனால்தான் ஞானியர் கேதர்நாத் முதல் இமயம் வரை சரியாக தேடி அமர்ந்தார்கள், ரமணர் யோகிராம் சுரத்குமார் போன்றோர் திருவண்ணாமலைக்கு சென்றார்கள்இந்திய […]

வரலாற்றை வீரர்கள் படைப்பதில்லை, பெரும் சாம்ராஜ்யத்தை வாள்முனைகள் மட்டும் அமைப்பதில்லை, மாபெரும் தேசத்தின் மாற்றங்கள் வீரனாலும் மக்களாலும் மட்டும் கிடைப்பதில்லை ஒவ்வொரு தேசத்தின் வரலாற்றிலும் அதன் பொற்காலத்திலும் அத்தேசம் வலிமையாக எழவும் மாற்றங்கள் எழவும் ஒரு ஞானி வேண்டும் ஞானியே வரலாற்றினை மாற்றுவான், ஆன்மீக ஞானியே அக்கினி குஞ்சாக மக்களின் சிந்தனை காட்டை எரியவைப்பான், அவனே சூரிய வெப்பம் போல் மேகம் கூட காரணமாவான், அவனே பெருமழையாக கொட்டி பெரும் பசுமை செழிப்பை கொடுப்பான் வரலாற்றில் அரிஸ்டாட்டில், […]

சகோதர சகோதரிகளே

“நான் உங்களை நோக்கி சகோதர சகோதரிகளே என சொன்னதும் கைதட்டுகின்றீர்கள் எங்கம் மதம் எங்களுக்கு இதைத்தான் போதிக்கின்றது, பெற்றோரும். குருவும் மனைவியும் தவிர ஒருவனுக்கு எல்லா உறவும் சகோதர உறவே அதுவும் இந்து சன்னியாசிக்கு எல்லோரும் சகோதர‌ சகோதரர்களே எனும் சொல்லும் தர்மத்தின் வழியில் இருந்து வந்திருக்கின்றேன் உங்கள் நாட்டில் பெண்களை அம்மா என அழைத்தேன் என்னை கோபமாக பார்த்தார்கள், எனக்கு வயதாயிற்றா? என சீறினார்கள். அம்மா என அழைத்தால் மூதாட்டி என நினைத்தாயோ என திரும்ப […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 24

“கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்குற்றந் தமதே பிறிதன்று – முற்றுணர்ந்தும்தாமவர் தன்மை யுணராதார் தம்முணராஏதிலரை நோவ தெவ” நன்கு கற்றவர்கள் கல்லாதவருக்கு எவ்வளவோ போதிப்பார்கள், தன்னிடம் படித்தவன் குற்றம்செய்தால் அது தன் குற்றமாக கருதி நாணுவார்கள். ஒருவனுக்கு போதிக்கும் முன் அவன் குணம் அறிந்து முழுவதும் சிந்தித்து பின் போதிக்கவேண்டும், அப்படி உணரமால் போதித்துவிட்டு அவரால் அவமானபட்டு வருந்துவதில் பலனேதுமில்லை ஒருவனுக்கு போதிக்கும் முன் அவன் அந்த கல்விக்கும் போதனைக்கும் தகுதியானவனா என சோதித்துவிட்டுத்தான் போதிக்க வேண்டும் […]

மயில்விருத்தம் : 06 சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்சகல லோகமு நடுங்கச்சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்சஞ்சலப் பட உமையுடன்கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்தகாரம் பிறந்திட நெடுங்ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்கற்றைக் கலாப மயிலாஞ் சிங்கார குங்கும படீரம்ருக மதயுகளசித்ரப் பயோ தரகிரித்தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்திருத்தணிமகீரதன் இருங்கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலயக்ருபாகரன் கார்த்தி கேயன்கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரிகிழிபட நடாவு மயிலே. முதல்வரி இதோ “சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்சகல லோகமு நடுங்கச்” இவ்வரி “சங்கார காலம் […]

பூரி ஜெகநாதர் ஆலயம்

பாரத திருநாட்டின் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட அடையாளங்களில் முக்கியமானது ஒரிசாவின் பூரி ஜெகநாதர் ஆலயம் அந்த பூரி ஜெகநாதர் ஆலயம் மகாபாரத காலத்துடன் தொடர்புடையது, ஒரிசா பகுதி மக்கள் வாழ்வில் மட்டுமல இந்திய மக்களின் வாழ்விலும் ஒன்றிணைந்தது காசி போல, ராமேஸ்வரம் போல அது அகில இந்திய அடையாள ஷேத்திரம். தமிழருக்கு மதுரை பழனி போல அப்பகுதி மக்களுக்கு அது அவ்வளவு முக்கியமானது, 2004 சுனாமி அல்ல அதற்கு முந்தைய பல நூற்றாண்டுக்கு முற்பட்ட சுனாமியில் கூட […]

ஆச்சார கோவை : 11

“உடுத்து அலால் நீர் ஆடார் ஒன்று உடுத்து உண்ணார்உடுத்த ஆடை நீருள் பிழியார் விழுத்தக்கார்ஒன்று உடுத்து என்றும் அவை புகார் – என்பதேமுந்தையோர் கண்ட முறை” சிறப்பான பெருமையும் அறிவும் உடையவர்கள் ஒரு ஆடை உடுத்தாமல் நீராட மாட்டார், இரு ஆடை அணியாமல் உண்ணமாட்டார், ஆடைகளை நீரில் பிழியாமல் இருக்கமாட்டார், பெரும் அவையில் ஒற்றை ஆடையுடன் செல்லமாட்டார் என்பது முன்னோர்கள் கண்ட முறை என்கின்றார் ஞானியார் இடுப்பில் ஒரு ஆடை அணியாமல் குளிக்க கூடாது, இடுப்பிலும் மேலும் […]

ஆஷாட நவராத்திரி

ஆஷாட நவராத்திரி தொடங்கும் நேரமிது ஆஷாடம் என்றால் நட்சத்திர கூட்டத்தை குறிப்பது, பூர்வ ஆஷாடம் என்றும் உத்திர ஆஷாடம் என்றும் இரு கூட்டங்கள் உண்டு, அது தமிழில் பூராடம் , உத்திராடம் என மருவிற்று இந்த நட்சத்திரமொன்றோடு பவுர்வணமி வரும் மாதம் ஆஷாட மாதம், அது தமிழில் ஆனிமாதம் ஆயிற்று அந்த மாதத்தில் அமாவாசை முதல் நவமி வரை வரும் காலங்கள் ஆஷாட நவராத்திரியாக கருதபடும் அவ்வகையில் அது இப்பொழுது நடக்கின்றது இந்துக்களுக்கு 4 நவராத்திரிகள் உண்டு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications