பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லால்பகதூர் சாஸ்த்திரி

நேர்மை,வீரம், நாட்டுபற்று என சகலத்திற்கும் எடுத்துகாட்டாய் இருந்தவர் லால்பகதூர் சாஸ்த்திரி இந்தியா சந்தித்த மிக தைரியமான பிரதமர்களில் அவரும் ஒருவர். சீனாவிடம் பின்வாங்கி, நேருவும் மறைந்த குழப்பான காலங்களில் இந்தியா சிக்கி இருந்தபொழுது பாகிஸ்தான் நரிதன திட்டமிட்டது, அது எப்பொழுதும் அப்படித்தான், மிக நேர்த்தியாக திட்டமிடுவதாக செய்து வசமாக மாட்டிகொள்ளும் அப்படி அந்த சிக்கலான காலங்களில் சாஸ்திரியினை மிக சாதரணமாக எண்ணி படையெடுத்தது. அமைதியான சாஸ்திரி அன்று விஸ்வரூபம் காட்டினார், அவரிடம் அப்படி ஒரு துணிச்சலை உலகம் […]

இந்தியப் பெருங்கடல் வெப்பமடைந்து, நிலத்தடி நீர் குறைகிறது :ஐஐடி

இந்தியப் பெருங்கடல் வெப்பமடைந்து வருவதே இந்தியாவில் நிலத்தடி நீர் குறைய காரணம்: ஐஐடி ஆய்வில் தகவல் 10 மீட்டருக்கு ஒரு போர்வெல் தமிழகத்தில் சர்வ சாதாரணம், அதுவும் கிட்டதட்ட 600 அடி ஆழம் வரை செல்கின்றது இந்தியா முழுக்க இப்படி நிலை ஆகிகொண்டிருக்கின்றது. இப்படி பெரும் நீர் திட்டங்கள் இன்றி, மக்களை தங்களுக்கான நீரை தாங்களே தோண்டி நிலத்தடி நீரை இல்லாமல் ஆக்கிவிட்டாயிற்று. விவசாயி, பொதுமக்கள், மினரல்கம்பெனிக்காரன் என பலரும் போர்வெல் அமைத்து அதனை 800 அடி […]

கச்சகஸ்தான்,வெள்ளை மாளிகை, பைரவா இன்ன பிற…

கச்சகஸ்தானில் வாரக்ணக்காக தூங்கும் கிராம மக்கள் : வினோத செய்தி இது என்ன வினோதம்? தமிழ்நாடு 60 வருடமாக தூங்குகின்றது. வோட்டுபோட மட்டும் எழும்பும். தூக்க கலக்கத்தில் வாக்களித்துவிட்டு மறுபடியும் தூங்கும் இது அல்லவா பெரும் வினோதம். தனது மருமகனை வெள்ளை மாளிகை ஆலோசகராக நியமித்தார் டிரம்ப் முன்பு கலைஞருக்கு அவரின் மருமகன் முரசொலிமாறன் சகலமுமாக இருந்தார், இன்று ஸ்டாலினுக்கு அவர் மருமகன் பக்கபலம் என்கின்றார்கள் டிரம்பும் ஒரு திமுக ரசிகர் போலிருக்கின்றது பொங்கலுக்கு தமிழக திரையரங்குகளுக்கு […]

சீமான் அள்ளிவிடுவதில் ஆச்சரியமில்லை

மலேசியா, சிங்கப்பூர் அரசுகள் பொங்கலுக்கு விடுமுறை அளிக்கின்றன : கொதிக்கும் சீமான் சீமான் அள்ளிவிடுவதில் ஆச்சரியமில்லை, அவர் அப்படித்தான் மலேசியாவில் இந்தியர்கள் குறிப்பிட்ட இனம், மொத்த இந்தியருக்குமான விடுமுறையாக தீபாவளி அளிக்கபடுகின்றது பத்துமலை தைபூசம் அக்கோயில் அமைந்திருக்கும் மாநில விடுமுறையே அன்றி மலேசிய தேசிய விடுமுறை அல்ல ஆயினும் தமிழர்களுக்கான பிரதிநிதுத்தவமாக அது பார்க்கபடுகின்றது குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாழும் சீக்கியர்கள் குருநாணக் ஜெயந்தி விடுமுறை கேட்டபொழுது மலேசிய அரசு இசையவில்லை ஆக மொத்த மலேசிய இந்தியருக்குமான ஒரே […]

‘அத்தையின் மருமகளே வருக… அம்மாவின் ஆட்சியைத் தருக’

‘அத்தையின் மருமகளே வருக… அம்மாவின் ஆட்சியைத் தருக’ இப்படி தீபாவினை பேனர் வைத்துவரவேற்கின்றார்களாம் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்தபொழுது “நேருவின் மகளே வருக..நிலையான ஆட்சி தருக” என வரவேற்றார் கலைஞர் அதனை இன்று அதிமுகவினர் தீபாவிற்கு காப்பியடித்துள்ளார்கள் இப்படியா கலைஞரை காப்பியடிப்பீர்கள்? கலைஞருக்கு நன்றி என சொல்லிவிட்டு காப்பியடித்திருக்க கூடாதா? அவரை நன்கு படியுங்கள், தீபாவிற்கு எழுத இன்னும் ஏராளமான நல்ல வசனங்களும், அடைமொழிகளும் கிடைக்கும் அதிமுக காரர்களுக்கே கலைஞர்தான் கைகொடுக்கின்றார் 🙂

எருமை மாட்டு பொங்கல் .. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்..

பொங்கலுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்ல கிளம்பியாயிற்று.. எருமை மாட்டு பொங்கல் வாழ்த்து ஏதும் உண்டா? என தெரியவில்லை. அப்படி இருந்தால் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அவர்களின் அதீதீவிர அடிமைகளுக்கும் தெரிவிக்க வேண்டியது தமிழர்களின் கடமை அப்படி எருமை பொங்கல் வாழ்த்துகுரியவர்கள் பல பேர் இருக்கின்றார்கள். “முதல்” எருமை பொங்கல் வாழ்த்து யாருக்கு சொல்லவேண்டும் என்பது சொல்லி தெரியவேண்டியது அல்ல‌ பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லா டிவிகளும் அறிவிக்கின்றன‌ ஒரு டிவியாவது விவசாயி ஏன் சாகிறான்? அவனுக்குள்ள பிரச்சினை […]

உலகில் முன் தோன்றிய‌ மூத்த குடி அல்ல..

விவசாயி செத்துகொண்டிருக்கின்றான், விவசாயம் அழிந்துகொண்டிருக்கின்றது விவசாயம் என்றால் என்ன என தெரியாதவனெல்லாம் விவசாயி பண்டிகையான‌ பொங்கலுக்கு போராட்ட பொங்கல் வைத்துகொண்டிருக்கின்றான் மாநில அரசு தூங்கிகொண்டிருக்கின்றது மணல் கொள்ளையே நிலத்தடி நீர்மட்டம் நாசமாகி விவசாயி தற்கொலைக்கு முதல் காரணம் என்கின்றது ஒரு செய்தி மணல் கொள்ளையர்கள் யாரென்றால் இதே அரசியல்வாதிகள்.. ஆக விவசாயி செத்தாலும் கண்டுக்கொள்ளாதவர்கள் அவன் பண்டிகைக்கு மட்டும் கொடிபிடிப்பார்களாம் எல்லாம் அரசியல், எவன் செத்தாலும் அதில் நடக்கும் அரசியல், ஈழ பிணங்களின் மீது கொஞ்சகாலம் நடந்த […]

விவரம் கெட்ட கட்சி இந்த பாரதீய ஜனதா

சுத்தமாக விவரம் கெட்ட கட்சி இந்த பாரதீய ஜனதா, அதுவும் தமிழக பாஜக மகா மோசம் தமிழகத்தில் நுழையும் வழியோ, அரசியல் செய்யும் வழியோ சுத்தமாக தெரியவில்லை, சரி தமிழக அரசியலை குழப்பியாவது விடலாம் அல்லவா? அந்த சாதுரியமும் இல்லை எதனையோ செய்கின்றோம், கட்சி வளர்க்கின்றோம் என இவர்கள் எதில் போய் நிற்கின்றார்கள் தெரியுமா? ஒவ்வொரு தமிழனையும் பெரியாரை தேட சொல்கின்றார்கள், இவர்களின் ஒவ்வொரு அசைவும் தமிழகத்தை பெரியார் பக்கம் தள்ளுகின்றது. இவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே பரணில் […]

நீ ரசத்தை ஊத்து புள்ள … : விஜயகாந்த்

இனி கவலைபட்டு என்னாக போகுது புள்ள‌, எல்லாம் அந்த வைகோ பயலால வந்த வினை இப்படி தலையில துண்ட போட்டுட்டு போயிட்டான… இப்போதைக்கு ஒரே ஆறுதல் அதிமுகவுல சேர்ந்த நம்ம கட்சிகாரங்கள நினைச்சித்தான், பயபுள்ளைக‌ கொஞ்சமா பாடுபட்டுட்டு இருப்பாங்க, அத நினைச்சி கொஞ்சம் சிரிச்சிக்குறேன்.. உன்ன கும்பிடமாட்டேன்னு சொன்ன பண்ருட்டி அங்க போய் சசிகலா கால்ல விழுந்து கிடக்காரம் புள்ள.. சசிகலாவ விட நான் நல்லாத்தான் பேசுறேன்னு சிலர் சொல்லிகிட்டாங்களாம்… அங்க தனியா நின்னு சாப்ப்டுறவங்க மேல […]

கரும்புச்செய்திகள்….

விரைவில் கரும்பினை சீனி தயாரிக்கும் பொருள், மக்கள் கடிக்க அனுமதி இல்லை எனும் வகையில் மத்திய அரசு சேர்த்துவிட்டது, தமிழனுக்கு கரும்பு கடிக்க உரிமை இல்லை என்ற வதந்தி வந்தாலும் வரும் உடனே நம் தலைவர்கள் எல்லாம் கையில் கரும்போடு காட்சி அளிப்பதை காணலாம். கரும்பு மன்மதன் வில் என்பார்கள், அப்படியானால் நம் தலைவர்கள் நிற்பது மன்மத கோலம் என்றாகிவிடும் அதுவும் அங்கிள் சைமன் தடையினை மீறி கையில் கரும்பு வில்லோடு மன்மதகோலத்தில் நிற்கும்பொழுது அவர் மனைவிக்கே […]