பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஹலோ ஸ்டாலின், கொஞசம் நிதானம்..

அன்று திருப்பூரில் திமுக கூட்டம் நடந்தது பலர் பேசினர், ஸ்டாலின் பேசும்பொழுது உணர்ச்சியில் கொடிகாத்த குமரன் பிறந்த ஊர் இது என முழங்கினார் இறுதியாக பேசிய கலைஞர், கொடிகாத்த குமரன் திருப்பூரில் பிறந்தவர் அல்ல, அருகிலிருக்கும் சென்னிமலையில் பிறந்தவர் என அழுத்தமாக சொன்னார் அதாவது ஒரு விஷயத்தை பேசவோ, விவாதிக்கவோ பொது இடத்திற்கு வரும்பொழுது சிறுபிசகும் வரகூடாது என்பது அவர் மறைமுகமாக சொன்னது ஸ்டாலினை அவர் முழுக்க புரிந்தே இருந்திருக்கின்றார், அவர் தயக்கத்திலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கின்றது. […]

இது பொங்கல் சீசன் …

ஒரு பொங்கல் விடுமுறை அறிவிப்பிற்கே இப்படி தமிழகத்தை , அதுவும் இந்த தகவல் தொடர்பு யுகத்திலே கதறவிடுகின்றார்களே ஒன்றும் இல்லாத காலங்களில், அதாவது பத்திரிகை மட்டும் வந்த, அதுவும் மக்களுக்கு படிப்பறிவில்லா காலங்களில் எப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பார்கள்?? எப்படி எல்லாம் கதை கட்டி இருப்பார்கள்? அட்டைகத்தி எம்ஜிஆரை “இவன் நின்றால் பொது கூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு” என ஏன் புகழ்ந்திருக்கமாட்டார்கள் எம்ஜிஆர் காமராஜர் ஆட்சியில் சுடபட்டார், என ஏன் கொதித்திருக்கமாட்டார்கள்? காமரஜருக்கும் எம்ஜிஆருக்கும் […]

ஜெயா பாணியினை கொஞ்சமும் பிசகாமல் பின்பற்றும் சின்னம்மா..

சசிகலாவினை பார்க்கும்பொழுது 30 வருடம் ஜெயாவிடம் அரசியல் படித்தவர் என்பது புரிகின்றது இப்போதைக்கு அப்படியே ஜெயா பாணியினை கொஞ்சமும் பிசகாமல் பின்பற்றுகின்றார், தேர்தலில் எப்படியோ? அங்குதான் அவருக்கு சிக்கலே இருக்கின்றது. ஸ்டாலினை பார்க்கும்பொழுது கலைஞரிடம் பாடம் படித்தவராக தோன்றவே இல்லை, ஏதோ கலைஞரை தொலைதூரத்தில் இருந்து பார்த்துவிட்டு பதவிக்கு வந்தது போல தோன்றுகின்றது கலைஞரிடம் பாடம் படித்துவிட்டு வாரிசாக வந்திருந்தால் இப்படி இருக்கமாட்டார் கலைஞரின் வரம், அவரின் அறிக்கைகள், வாதங்கள், அழகான உவமையோடு கூடிய விளக்கங்கள், எல்லாவற்றிற்கும் […]

டிரம்பும் இஸ்ரேலும் அடாவடி பார்ட்டிகள்…

கிட்டதட்ட 2000 ஆண்டுகள் நடத்திய போராட்டத்தில் யூதர்கள் வென்றுகொண்டிருகின்றார்கள், அவர்கள் இலக்கு நிறைவேற போகின்றது அதாகபட்டது ஜெருசலேம் யூதர்களின் பூமி என்பதே அவர்கள் கொள்கை, அவர்கள் மத நூலெங்கும் அது நிரம்ப கிடக்கின்றது, அவர்கள் வாழ்வு,கனவு, ஏக்கம், புனிதம் எல்லாமே அந்த ஊரும் அதில் இருந்த ஆலயமுமே யூதன் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் அதற்காகவே, அவன் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசமும் அந்த ஜெருசலேமிறாகவே தாவீது அரசர் காலத்தில் இருந்து எங்கெங்கோ சுற்றினாலும் இறுதியி ஜெருசலேம் வந்துவிடும் யூதர்களுக்கு […]

பொங்கலுக்கு விடுமுறை தொடர்பாக சர்ச்சை

பொங்கலுக்கு விடுமுறை தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் நிலவுகின்றன‌ அதாகபட்டது இந்தியா எனும் மாபெரும் நாட்டில் பல்வேறு இனங்களும் கலாச்சாரமும் உண்டு, எல்லா இனங்களுக்கும் தனி தனி கொண்டாட்டம் உண்டு நாட்டின் தேசிய கொண்டாட்டம் என சில உண்டு , சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி என தேசிய உணர்வுகளும், மத ரீதியாக தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ், மகாவீரர் ஜெயந்தி, குருநாணக் ஜெயந்தி என்ற பண்டிகைகளுக்கும் விடுமுறை உண்டு இது மத்திய அரசின் அறிவிக்கபட்ட […]

குறு குறு செய்திகள்…

நீட் தேர்வு சர்ச்சையில் தமிழக குரல் இன்னும் ஒலிக்கவில்லை தமிழக அரசு ஒரு வகையில் செத்துவிட்டது, அது அப்படித்தான். தூக்கிபோட்டு மிதித்தாலும் அதில் ஒரு அசைவும் இருக்காது. வெறும் பிம்பமாக அது மாறிவிட்டது, இப்பொழுதுள்ள வகையில் ஸ்டாலினின் பெரும் போராட்டத்தை ஆதரிப்பதுதான் ஒரே வழி கலைஞர் இல்லாத போராட்ட களங்களை திமுக சந்திக்கின்றது, எப்படி எதிர்கொள்கின்றது என பார்க்கலாம் ஆனால் நிச்சயம் ஆதரிக்கவேண்டிய போராட்டம் அல்லாவிடில் மருத்துவபடிப்பு சாமான்யர்களுக்கு கிடைக்காமலே போய்விடும்.. ராஜாஜியினை வெற்றிகண்ட திமுக இதில் […]

1965களில் காமராஜர் சொன்ன வார்த்தைகள்

விவசாயிகள் தற்கொலை தொடர்கின்றது, இன்றும் ஒருவர் பலி “ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி கொடுண்ணு திமுக காரன் எல்லாம் சொன்றாண்ணேன்.. அப்படி குடுக்க முடியுமாண்ணேன்..” அப்படி விலையில இலவசமா குடுத்தா விவசாயி ஈரமண்ணையா அள்ளி திம்பாம்ண்ணேன்… விவசாயிக்கு நிறைய மானியம் குடுத்துட்டுத்தான் அரிசி விலையில கைவைக்கணும்ணேன், விவசாயி கஷ்டம் எனக்கும் தெரியும்ணேண்.. நாடு வளரணும், விவாயிக்கு நிறைய செஞ்சிட்டு, அவன வாழ வச்சா அவன் நாட்ட வாழ வைப்பாம்ண்ணேன், அதுக்கு இன்னும் நிறைய திட்டம் தீட்டணும்ணேன்.. அரைகுறையா அரசியலுக்காக […]

பிரபாகரன் வழியில் நடைபோட்டு வருகிறவன் : வைகோ

இதனை பார்த்துவிட்டு மானம் இருந்தால் நிச்சயம் அரசியலை விட்டு ஓடுவார் , இருந்தால் தானே… மிஸ்டர் வைகோ, அவன் சுடுவானா இல்லை உங்கள் பேச்சை அங்கு கேட்டு கைதட்டிகொண்டிருப்பனா? ஒருவேளை அப்படி கைதட்டிதான் மண்டை பிளந்ததோ? கோவில்பட்டி தேர்தலில் நிற்காமல் ஓடியவர் எல்லாம் பேசிகொண்டிருக்கின்றார்.. இணைப்பு [facebook url=”https://www.facebook.com/subaththira/videos/1210691609006764/” /] நான் பிரபாகரன் வழியில் நடைபோட்டு வருகிறவன். சுற்றி ராணுவம் நிற்கும் போது எனது உரையை பிரபாகரன் கேட்டு இரத்தத்தை சூடேற்றுவார். (வைகோ) இராணுவம் சுற்றி நிற்கும் […]

தத்து எடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகள்

குழந்தைகளை தத்து எடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகள் அமல்.. மண்ணாங்கட்டி, 28 வயதும், 80 கிலோ எடையுள்ள குழந்தையினை தத்தெடுத்து அதற்கு உலக சாதனை திருமணத்தையும் செய்து வைத்த விசித்திரத்தை தமிழகம் எப்பொழுதோ பார்த்துவிட்டது, 28 வயதுள்ள , 80 கிலோ குழந்தையினை எப்படி தத்தெடுக்கலாம்? என மத்திய அரசு கேட்கவே இல்லை. சேட்டை செய்ததென்று அந்த குழந்தையினை ஓட அடித்தார்கள், அப்பொழுதும் கேட்கவே இல்லை ஆச்சரியமாக இப்பொழுது அந்த குழந்தையினை காணவே இல்லை, ஒருவேளை […]

ஜெ. சிகிச்சை தகவல்களை தர தயார் : அப்பல்லோ

ஜெ. சிகிச்சை குறித்த தகவல்களை தர தயார் : அப்பல்லோ நிர்வாகம் முன்பு சிகிச்சை தரவுகளை தரவே முடியாது என அடம்பிடித்ததும் இதே அப்பல்லோதான் இப்பொழுது நீதிமன்றம் மற்றும் உள்துறை அமைச்சகம் நெருக்கடிகளை தொடங்கிய பின் கொஞ்சம் இறங்கி வந்திருக்கின்றது சிபிஐ விசாரணை என மத்திய அரசு இறங்கியிருப்பதுதான் பல கேள்விகளை எழுப்புகின்றது. நல்ல வேளையாக முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வந்து சென்றதால் தகவல்களை சில ஒப்பீட்டுகளை செய்து பார்த்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. எப்படியும் […]