பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதிமுகவினை உடைக்க ஆரிய சதி : கி.வீரமணி

அதிமுகவினை உடைக்க ஆரிய சதி : கி.வீரமணி மிஸ்டர் வீரமணி, திமுகவினை உடைத்து அதிமுக உருவானதே ஆரிய சதி என உங்களுக்கு தெரியாதா? தெரிந்ததை ஏன் மறைக்கின்றீர்? அந்த ஆரிய சதி 1972லே நடக்கவில்லையா? அன்று நீங்கள் பிறக்கவில்லையா? சரி ஆரியசதிப்படி உடைந்த இயக்கம், பின் ஆரிய பழக்கவழக்கங்களில் மூழ்கிய இயக்கம், எம்ஜிஆர் காலத்தில் கடவுள் நம்பிக்கைக்கு வந்த இயக்கம் ஜெயாகாலத்தில் பழம் மூடபழக்க வழக்கங்களுக்கு, அதாவது உங்கள் பாஷையில் சொல்லபோனால் காட்டுமிராண்டிதனத்திற்கு திரும்பிவிட்ட இயக்கத்தை ஆரியம் […]

அதிமுகவின் வாரிசு அஜீத் குமாரா?

அவர் மீது யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை விஜய் படங்கள் பெரும் சிக்கலில் மாட்டியது போல அஜித் படங்கள் சிக்கவில்லை என்ற கோபமாக இருக்கலாம் உங்கள் அரசியலில் என்னை ஏன் இழுக்கின்றீர்கள் என அவர் ஒருமுறை கலைஞரிடம் கண்ணீர் விட்ட காட்சிகளாக இருக்கலாம் அவனும் அரசியலுக்கு வரவில்லை, நம்மையும் ஆதரிக்கவில்லை, சரி சினிமாவிட்டும் போகமாட்டான் எனும் எரிச்சலாக இருக்கலாம் அவனுக்கும் ஒரு கூட்டம் இருக்கின்றது, ஆடிக்கொரு படம் வந்தாலும் கொண்டாடுகின்றது எனும் எரிச்சலாக இருக்கலாம். இவ்வளவிற்கும் அவர் […]

இன்றைய செய்தித் துளிகள்….

சசிகலாவுடன் அமைச்சர்கள், போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சந்திப்பு, பல விஷயங்கள் குறித்து ஆலோசனை விரைவில் ஆளுநரும் அருண்ஜெட்லியும் சசிகலாவினை சந்தித்து எல்லாவற்றையும் உறுதிபடுத்துவார்கள் என நம்புவோம் சரி அமைச்சர்களும், போலீஸ் அதிகாரிகளும் சசிகலாவினை சந்தித்து ஆலோசனை நடத்த மிஸ்டர் பன்னீர்செல்வம் என்ன செய்கிறார்? ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகின்றாரோ?  சென்னை வந்த ராகுல் காந்தி கலைஞரை சந்திக்காதது ஏன்? : பீட்டர் அல்போன்ஸ் சீற்றம் ஜெய்காந்தனை எம்ஜிஆர் அழைத்தார் அவர் செல்லவில்லை மாறாக ஜெயிலில் […]

முதல்வரின் நண்பர் ரெட்டி வீட்டில் ரெய்டு

  முதல்வரின் நண்பர் ரெட்டி வீட்டில் ரெய்டு: 100 கோடி ரொக்கம், 120 கிலோ தங்கம் பறிமுதல் அங்கிள் சைமன் எங்கே போய் தொலைந்தீர்கள், தமிழகத்தில் ஒரு தமிழன் முதல்வராகி இருப்பதை கொண்டாடிகொண்டிருக்கின்றீர்களா? இதோ பாருங்கள், அந்த தமிழன் முதல்வரின் வடுக வந்தேறி நண்பர் வீட்டில் ரெய்டு நடந்திருக்கின்றது, பெரும் பணம் சிக்கி இருக்கின்றது, இது தமிழரின் பணமாக இருக்க வாய்ப்பு உண்டல்லவா?, இந்த பணத்தில் எத்தனை பனமரம் நடலாம், ஆடுமாடு வாங்கலாம், அதனை செய்யாமல் தமிழன் […]

இந்த கணக்கு கோபாலபுரத்தில் ஓடிகொண்டிருக்கும்…

தமிழகத்தில் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒரு பழக்கம் உண்டு, அதாவது என்ன சர்ச்சை என்றாலும் திமுகவினையும் கலைஞரையும் கை காட்டிவிட்டு செல்லலாம் என்பது சீனப்போர், பாகிஸ்தான் போரை தவிர எல்லா பிரச்சினைகளிலும் திமுகவினையும் கலைஞரையும் இழுத்துபோட்டு சாத்துவார்கள் அப்படித்தான் இப்பொழுதும் சசிகலா அதிமுகவினை கைபற்றுவதில் திமுகவிற்கு விருப்பமில்லை, அதுதான் பலரை தூண்டிவிட்டுகொண்டிருக்கின்றது என சிலர் கிளம்பியிருக்கின்றார்கள் கொஞ்சம் கவனமாக பார்த்தால் சில விஷயங்கள் புரியும் அதாவது கலைஞர் ஊழல்வாதி அவரை எதிர்த்து அரசியல் செய்யவந்த எம்ஜிஆர் மகா […]

மறைவுக்கு பிறகு கிளம்பும் மர்மங்கள்…

ஜெயலலிதா வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஏதோ சசிகலா பற்றி சொல்லிவிட்டாராம், உடனே சிலர் வந்து சசிகலா பற்றி என்ன தெரியும் என பொங்குகின்றார்கள். அதாவது 1989களில் ஜெயலலிதாவினை மன்னார்குடி குடும்பம்தான் காப்பாற்றியது, அதுவும் திவாகரன், நடராஜன் எல்லாம் வீரகாவியம் படைத்து அவரினை காத்தார்களாம், சசிகலா உயிருக்கு துணிந்து ஜெயாவிற்கு காவல் இருந்தாராம் அதனால் சசிகலாவினை ஏதும் யாரும் சொல்ல கூடாதாம், பேசிகொண்டே இருக்கின்றார்கள் எல்லா தலைவர்களும் இப்படியான நெருக்கடிகளை கடந்தவர்கள். கலைஞர் வாங்காத அடிகளா? அவரை சாக்கடையிலிருந்து அன்றொரு […]

சசிகலாவும் பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்துகின்றார்களாம்…

சசிகலாவும் பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்துகின்றார்களாம், என்ன ஆலோசனையாக இருக்கும்? அவர் நாற்காலிதான் காலி, மற்றபடி அந்த நாற்காலி உனக்கு இந்த நாற்காலி எனக்கு என்பதை தவிர என்ன ஆலோசனையாக இருக்க முடியும்? அம்மா படத்தை மாற்றிவிட்டு, அம்மா என பெயர் இருக்கும் இடமெல்லாம் “சின்ன” என ஒரு சின்ன மாற்றம் செய்தால் எப்படி இருக்கும் என ஆலோசிக்கலாம். யாரேனும் கருப்பு ஆடு கட்சி தாவினால் இருக்கவே இருக்கின்றது வழக்கு, கஞ்சா முதல் மசாஜ் சென்டர் வரை வழக்கு […]

இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள்…

ஜெயலலிதா உடலில் போர்த்தபட்ட இருந்த தேசியகொடி, கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லா ஒருவரிடம் வழங்கபட்டது, இத்தனைக்கும் அவர் ஒரு குற்றவழக்கில் தீர்ப்புக்கு காத்திருப்பவர் பெண் தோழி கஞ்சா வழக்கு, இன்னும் பல வழக்குகளில் சிக்கி, காணமலே போயிருந்த ஒருவர் இறுதிமரியாதை செலுத்துகின்றார் மொத்த இந்தியாவும் இந்த காணுவதற்கு அரிதான காட்சியினை பார்த்துகொண்டிருந்தது. ஜெயலலிதாவோடு சேர்த்து தமிழகத்து மானமும் அடக்கம் செய்யபட்டாகிவிட்டது. முதல்வர் உடலில் போர்த்தப்ட்டிருந்த புனிதமான தேசியகொடி , ஒரு தீர்ப்புக்கு காத்திருக்கும் குற்றவாளியின் கையில் ஒப்படைக்கபட்டது கஞ்சா […]

அங்கும் இங்கும் எங்கும்…

ஜெயலலிதா அடக்கத்தின் இறுதிகட்டத்தில் ஒரு விஷயம் நன்றாக தெரிந்தது அதாவது ராகுல்காந்தி இறுதிவரை இருந்தார், கூட திருநாவுக்கரசர் மட்டும் இருந்தார் வேறு ஒருவரையும் காணவில்லை காங்கிரஸின் உச்ச தலைவர் இருந்த இடத்தில் உள்ளூர் தலைவர்களை காணவே இல்லை, இருந்த திருநாவுக்கரசரும் நடராஜனோடு குலாவிகொண்டிருந்தார் நடராஜனும், திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவின் பெரும் எதிரிகள் , இருவரையும் ஓட விரட்டியவர் ஜெயலலிதா என்பது இன்னொரு விஷயம். அந்த இடத்தில் அகில இந்திய செய்திதொடர்பாளர் குஷ்பூவினையும் காணவில்லை. இது பெரும் தவறு. ஒரு […]

வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம்

வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம் அந்த முருகன் கோயிலும் தெப்ப குளமும் மதங்களை தாண்டி வள்ளியூரின் பாரம்பரியம் என அதற்கு பெரும் அடையாளம் உண்டு, அதனை சீரமைக்க சிலர் நடவடிக்கை எடுக்கின்றார்கள் அவர்களை வாழ்த்துவோம், அவர்கள் முயற்சி வெற்றிபெறட்டும் சில லட்சங்கள் தேவைபடும் பணி என சொன்னார்கள், இருக்கலாம் அந்த திருப்பணிக்கும், வள்ளியூர் பாரம்பரியத்தை காக்க விருப்பம் உள்ளவர்கள் 9443121117 என்ற எண்ணுக்கு அண்ணன் வெங்கடேஷ் அவர்களை தொடர்பு கொள்ளலாம் நீர்நிலைகள் மீது அக்கறை கொண்டவரும், சுழ்நிலை […]