பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 09

“எனைத்துணைய வேனு மிலம்பாட்டார் கல்விதினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம் – மனைத்தக்காள்பாண்பில ளாயின் மணமக னல்லறம்பூண்ட புலப்படா போல்” இப்பாடல் இப்படி பிரிந்து பொருள் தரும் எனைத்துணைய வேணும் இலம் பாட்டார் கல்விதினைதுணையும் சீர்பாடு இலவாம் மனைக்காள்மாணிலள் ஆயின் மணமகன் இல்லறம்பூண்ட புலப்பாடா போல்” எவ்வளவு கல்வியினை ஒருவன் பெற்றிருந்தாலும் அவன் வறுமையில் வாடினால் அந்த கல்வி தினை அளவு கூட சிறப்பு பெறாது, ஒருவன் எவ்வளவு அறசெயலை செய்தாலும் மனைவி சரியில்லை என்றால் அவன் செயலெல்லாம் சிறப்பில்லாத […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 01

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 01 “எண்ணிலி யூழி தவஞ் செய்திங் கீசனைஉண்ணிலைமை பெற்ற துணர்வு” இக்குறள் “எண்ணிலி ஊழி தவம் செய்திங்கு ஈசனை உண்(ள்)நிலமை பெற்றது உணர்வு” என பிரிந்து பொருள் தரும் அதாவது சிவம் என்பதை உடனே உணரமுடியாது, எண்ணற்ற முறை எண்ணற்ற பிறவிகளில் தவமிருந்துதான் ஈசனை மனதால் உணரமுடியும் என்பது பொருள் “தவம் என்பது ஒரு பிறவியில் வருவது அல்ல,சிவனை அடைவதும் உணர்வதும் […]

வழக்கை மறுவிசாரணைக்கு

ராஜிவ் கொலைவழக்கு நடக்கும் பொழுது வலுவான தீவிரவாத தடுப்பு குழு இல்லை, அதிகாரமிக்க அமைப்புக்கள் இல்லை இப்பொழுது என்.ஐ.ஏ போன்ற மிக வலுவான அமைப்புக்களும் ஆகசிறந்த தொழில்நுட்பங்களும் உள்ளன, ராஜிவ் கொலை விசாரணை குழு தலைவர் கார்த்திகேயனும் இந்தியாவில் இருக்கின்றார் இந்த வழக்கை மறுவிசாரணைக்கு கொண்டுவரலாம், அதுதான் இனி பலனளிக்கும். நிச்சயம் காங்கிரஸ் அதை செய்யாது, பாஜக அதை முயற்சிக்கலாம் எனினும் நீதிபதிகள் சட்டத்தை மட்டும் பார்த்து தீர்ப்பளிப்பது சரி, ஆனால் நாட்டின் மிகபெரிய மிரட்டலான இந்த […]

இந்தியாவின் பெரும் சாபம்

இந்தியாவின் பெரும் சாபம் அதன் துருபிடித்த சட்டங்கள், அந்த சட்டங்களை வைத்துகொண்டிருந்தால் சர்வதேசத்தில் இந்தியா நாணித்தான் தலைகுனியவேண்டும் இதோ குனிந்திருக்கின்றது இந்த தேசத்தின் முன்னாள் பிரதமரை கொன்றதற்காக பிடிபட்ட கூட்டம் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தாயிற்று ராஜிவ் கொலையில் முதலில் 26 பேருக்கு தூக்கு என்றது சிறப்பு நீதிமன்றம், பின் சட்டத்தின் ஒட்டைகளில் ஒவ்வொருவராக தப்பி கடைசியில் 7 பேருக்கு ஆயுள் என்பதோடு முடித்து கொண்டது ஆயுள் தண்டனை என்பது இந்தியாவில் ஆயுளுக்கும் அல்ல, அமெரிக்க சட்டங்களை போல […]

மே 18

மே 18ம் தேதி இந்திய வரலாற்றில் தனித்துவமானது, இந்நாளில்தான் 1974ல் இந்தியா தன்னை அணுசக்தி நாடாக உலகுக்கு அறிவித்தது அது இந்தியா சீனாவிடம் அடிவாங்கிய 1962க்கு பின் மெல்ல பலமான நேரம், நேரு இருந்தவரை குறிப்பிடதக்க வெற்றி ஏதும் பெறாத இந்தியா சாஸ்திரி காலத்தில் பலமாகி திருப்பி அடித்தது சுதந்திர இந்தியாவின் மிக துணிச்சலான உண்மையான பிரதமர் சாஸ்திரிதான், சுதந்திர போராட்டத்தின் வேகமும் தாகமும் நாட்டுபற்றும் அவரிடம்தான் இருந்தன, அவர் சில வருடங்களுக்குள் மரணமடைந்தது நாட்டின் துரதிருஷ்டம் […]

தமிழை வளர்ப்பது என்றால்

தமிழை வளர்ப்பது என்றால் “ஸ்” நீக்குவது “ஷா”வினை நீக்குவது அல்ல, தமிழை வளர்ப்பது என்றால் இந்தியினை எதிர்ப்பதுமல்ல, தமிழை வளர்ப்பதென்றால் அதன் ஆதார வேரில் இருந்து வளர்க்க வேண்டும் நாம் உலகெல்லாம் இருக்கும் புலம்பெயர் தமிழர்களை உற்றுபார்க்கின்றோம், அவர்கள் 18 அல்லது 19ம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்திருக்கலாம், அவர்களில் கிறிஸ்தவ மதம் மாறியவர்கள் அப்படியே ஐரோப்பிய சாயலுக்கும் வாழ்வுக்கும் மாறிவிட்டனர், உடை நடை பாவனை வாழ்க்கைமுறை வீடு வாசல் என எல்லாமே முழுக்க ஐரோப்பா சாயல் நிறம் மட்டும் […]

உதயகிரி

இந்திய கடற்படை நேற்று இரு தாக்குதல் கப்பல்களை கடற்படையில் இணைத்துள்ளது, மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இதனை களத்தில் இறக்கினார் அந்த கப்பல்களுக்கு “சூரத்” என்றும் “உதயகிரி” என்றும் பெயரிடபட்டுள்ளது இந்த பெயரில் சூரத் என்பது சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்திய அடையாளமாக விளங்கிய துறைமுக நகரம் என்பதும், அங்கிருந்த கோட்டையினை குறிப்பதும் சொல்லி தெரியவேண்டியதில்லை இந்த “உதயகிரி” எனும் பெயர்தான் இப்பொழுது கவனிக்கதக்கது, மத்திய அரசு சொல்லி அடிக்கும் விஷயம் ஆம், உதயகிரி என்பது திருவாங்கூர் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 08

“வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும்பரிந்துசில கற்பான் றொடங்கல் – கருந்தனம்கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கெய்த்துப் பொருள்செய் திடல்” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரியும் “வருந்தி தான் கற்றன ஓம்பாது மற்றும்பரிந்து சில கற்பான் தொடங்கல் கரும் தனம்கைத்தல உய்த்து சொரிந்திட்டு அரிப்பபு அரித்தாங்குஎய்து பொருள் செய்து இடல்” ஒருவன் மிக சிரமபட்டு கற்கும் கல்வியினை பின்பற்றாது அதாவது அந்த கல்விபடி நடக்காது, படித்ததை போற்றி பாதுகாக்காது புதிதாய் படிக்க போகின்றேன் என கிளம்புவது கையில் இருக்கும் செல்வத்தை தெருவில் […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 10

“உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரைமெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு” இக்குறள் “உள்ளத்தின் உள்ளே உறப்பார்த்து அங்கு ஓண் சுடரை மெள்ளதான் அர்ச்சிகு மாறு” என பிரிந்து பொருள் தரும் உள்ளத்தின் உள்ளே உறபார்த்து (உற்று பார்த்து ) அங்கு நீண்டு எழும் (ஒண்) சுடரை நிதானமாக (மெள்ள) அர்ச்சிக்க வேண்டும் என்பது பொருள்.யோகதியானத்தில் உள்ளத்தின் உள்ளே உற்று நோக்கி அங்கு எழும் ஜோதி வடிவ சுடரை ஆத்ம தரிசனமாக உணர்ந்து தரிசித்து நிதானமாக வழிபட வேண்டும் என்கின்றார் ஒளவையார் […]

ஆச்சார கோவை : 02

“பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு,நிலக் கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மைஇலக்கணத்தால் இவ் வெட்டும் எய்துப – என்றும்ஒழுக்கம் பிழையா தவர்” நற்குடிபிறப்பு, நீண்ட ஆயுள், நல்ல செல்வம், பொலிவான தோற்றம் , சொந்தமாக நிலம், சொல் வாக்கு அதாவது வாக்கு தவறாமை அந்த வாக்குக்கு மதிப்பு, நல்ல கல்வி, நோயற்ற வாழ்வு இந்த எட்டும் ஒழுக்கம் உடையோருக்கு தேடிவரும் என்பது பொருள் நல்ல செயல்களை செய்பவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் எனும் கவுரவத்தை தன் குலத்துக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications