தருமை ஆதீனத்தின் பாரம்பரிய
தருமை ஆதீனத்தின் பாரம்பரியமான, பல நூறு வருடங்களாக நடக்கும் அந்த பட்டின பிரவேச விழா நடக்க கூடாது என தடை விதித்திருப்பது சரியல்ல
மனிதனை மனிதன் சுமக்கலாமா எனும் பகுத்தறிவு கேள்வி எல்லாம் இங்கு எடுபடாது, உதாரணத்துக்கு கிறிஸ்தவ போப்பும், கிறிஸ்தவ ஆயர்களும் கொண்டாடபடுவது வழமை இதெல்லாம் மத உணர்வு
இங்கு தருமை ஆதீனம் யாரையும் அடிமை படுத்தி பல்லக்கை சுமக்க வைக்கவில்லை, காசு கொடுத்து பல்லக்கு தூக்க வைக்கவில்லை
இது குருவுக்கும் சீடர்களுக்குமான உறவு, அந்த சீடர்கள் தங்கள் குருவினை ஊர்வலமாக சுமந்து வருகின்றார்கள், சன்னிதானம் எனும் மகா குருவினை நேரடியாக காணமுடியா மக்கள் அவரை கண்டு தரிசித்து நம்மை வழிநடத்தும் அடியார் என வணங்கும் நிகழ்வு இது
இதற்கு பகுத்தறிவில் தடை என்பதெல்லாம் சரியான விஷயம் அல்ல
நவாப் ஆட்சி, வெள்ளையன் ஆட்சியில் கூட விழாத தடை. கருணாநிதி ஆட்சியிலும் விழாத தடை இந்த ஆட்சியில் விழுகின்றது என்றால் எங்கோ குழப்பமும் தவறான வழிகாட்டலும் இருக்கின்றது எனபதுதான் விஷயம்
குருவினை சீடன் கொண்டாடுவதும் தூக்கி சுமப்பதும் அவன் விருப்பம், குருவினை தெய்வ கோலத்தில் கொண்டாடும் விஷயம்
இந்த மண் முன்பெல்லாம் குருக்களை தேரில் வைத்து குதிரைக்கு பதிலாக சீடர்களே இழுத்துவந்த பாரம்பரியம் உடையது, இந்த பட்டின பிரவேசம் அதன் ஒரு பகுதியே
இங்கு படபெட்டியினை சினிமா ரசிகன் சுமக்கலாம், சினிமா நடிகனை சுமக்கலாம், அரசியல்வாதி வெற்றி பெற்றால் அவனை சுமக்கலாம் அதெல்லாம் அனுமதிக்கபடும் என்பதும், இந்து குருவினை அவன் சீடன் சுமந்தால் அதற்கு தடை என்பதும் மிக மிக முரண்பாடுகள், ஏற்றுகொள்ளமுடியா விஷயங்கள்
தருமை ஆதீனத்தின் பட்டின பிரவேசத்துக்கு தடை என்பது அரசு மறுபரீசிலனை செய்யவேண்டிய விஷயம் , அதை செய்வார்கள் என நம்புவோம்
மதுரை ஆதினம்:
மடத்துக்கு ஆளுநர் சென்றதால் தான் தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதிப்பு.
உயிரே போனாலும் பரவாயில்லை,தருமபுர ஆதின பல்லக்கை நானே சுமப்பேன்.
*-மதுரை ஆதினம்*……
இப்படி மடாதிபதிகள், இந்துக்கள் ஒற்றுமையுடன் நம் பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
உலகத்தில் உள்ள இந்திய மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் , அடுத்த நொடி எந்த அரசியல் உள் நோக்கம் இல்லாமல் மக்களுக்கு உதவுவது நமது பாரத பிரதமா் மாண்புமிகு.மோடி ஜி அவா்கள் தான் மட்டும் தான் தன்னலமற்ற தலைவா்…. மோடியின் வழிகாட்டின் படி அண்ணாமலை இலங்கை சென்றுயுள்ளார். நிச்சயம் நன்மை இருக்கும்…. அவர் வெற்றியுடன் திரும்புவார். ராகுல் காந்தி போல் உல்லாச பயணம் செல்லவில்லை