திருச்சூர் ஆலயத்தின் பூரம் விழா
இந்தியாவின் இந்துமத பண்டிகை எல்லாம் அந்நாடு வாழ்ந்த பெருவாழ்வின் பிரதிபலிப்புகள், இந்துமதம் அங்கு கொண்டாடபட்ட வகையினையும் அம்மதம் கொடுத்த பிரமாண்ட வாழ்வினையும் நினைவு கூறும் காட்சிகள்
அது தஞ்சை கோவில் விழா, மதுரை சித்திரை திருவிழா, திருவாரூர் தேர், பூரி ஜனநாதர் ஆலய விழா இன்னும் நாடெங்கும் நடக்கும் விழாக்களில் அழகாக தெரியும்
எவ்வளவு வசதியும் வளமும் வாழ்வும் செல்வமும் கற்பனைக்கும் எட்டா ஐஸ்வர்யமும் இருந்திருந்தால் அவ்வளவு செல்வத்தையும் ஞானத்தையும் இந்துமதம் கொடுத்திருந்தால் இதெல்லாம் சாத்தியம் என்பதும் விளங்கும்
ஒவ்வொரு இந்துவிழாவும் ஒவ்வொரு வரலாற்றை சொல்பவை, பாரம்பரியத்தை சொல்பவை
அவ்வகையில் கேரள திருச்சூர் ஆலயத்தின் பூரம் விழா கொண்டாடபட்டுகொண்டிருக்கின்றது
பிரமாண்டமான கூட்டமும் யானைகளின் அணிவகுப்பும் ஊர்வலமும் முத்து குடைகளும் யானைக்கான தோரணங்களும் இன்னும் பலவும் அந்த இந்து மண்ணின் பெருவாழ்வை சொல்கின்றது
அந்த விழா அக்கால மன்னன் வடக்குநாதன் ஆலயம் எனும் சிவாலயத்துக்கு ஏற்படுத்திய விழா அது, இந்து மன்னர்கள் எப்படியான பக்தியினை வளர்த்திருக்கின்றார்கள், எப்படியான பக்தி கொண்டாட்டங்களை கொடுத்திருக்கின்றார்கள் என்பதை சொல்லும் விழா அது
சேரநாட்டின் யானைகள் தனி சிறப்பு வாய்ந்தவை, சேரநாடு வேழமுடைத்து எனும் அளவு சிறப்பானவை
அந்த பண்டைய அடையாள யானைகள் அணிவகுப்போடு அவர்களின் பிரசித்தியான இசையோடு தனித்துவமான இந்து கலாச்சாரத்தோடு பூரம் விழாவினை கொண்டாடுகின்றது அந்த பரசுராமன் பூமி
இந்த பூர திருவிழாவில் சாவர்க்கர் உள்ளிட்ட தேசாபிமானிகள் படங்களும் குடைகளில் இடம்பிடித்தன என்கின்றன செய்திகள்
திருச்சூர் பூரம் ஒரு தேசிய பண்டிகை, இந்நாட்டின் பெருவாழ்வினையும் இந்த தேசம் கொண்டிருந்த பிரமாண்ட கொண்டாட்டத்தையும் சொல்லும் பண்டிகை
அதனை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் தேசாபிமானிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றார்கள்
ஜெய் மகாதேவா…
பூரம் விழா என்றாலே பிரம்மாண்டம் தான்….]
இதனை “பூரங்களின் பூரம்” என்றும் அழைப்பர். இந்த திரிசூர் பூரம் திருவிழா, அலங்காரங்களுக்கும், வண்ணம் தீட்டப்பட்ட அழகிய காட்சிகளுக்கும், உற்சாகத்தை அளிக்கும் உணர்விற்கும், உயர்வான காட்சிகளின் உந்தத்திற்கும், பிளிரிக்கொண்டு திமிரி எழும் யானைகளுக்கும், வெகு திரளான கூட்டத்தினரின் வருகைக்கும் பிரசித்திபெற்று பெருமையுடன் விளங்குகிறது. வாழ்வில் ஓரு முறையாவது இந்த திருவிழாவை சென்று பார்க்க வேண்டும்.