பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புரட்சி வசனங்களை அணல் தெறிக்க பேசுகின்றார் தலைவி

கலைஞரின் பிறந்தநாளையொட்டி சிறப்பு திரைப்படங்களில் பொன்னார் சங்கர் ஓடிகொண்டிருக்கின்றது அற்புதமான படம், மாபெரும் வெற்றியினை அது பெறாமல் போனதில் தியாகராஜனுக்கும் அவர் மகனுக்கும் மட்டுமே பங்கு, வேறு எல்லாம் கிளாசிக் வகை படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் தலைவி குஷ்பு, அந்த தாமரை பாத்திரத்தில் அப்படி ஜொலித்திருந்தார் அரசிக்கு ஏற்ற கம்பீரம், கலையாடும் முகம், ராணி முகத்திற்கேற்ற கருணையான பாவம் அட அட அட அக்கால மங்கம்மா, ருத்திரமா எல்லாரும் இப்படித்தான் இருந்திருப்பர் என சொல்ல வைக்கும் […]

சங்கம் அதன் கடமையில் இருந்து தவறுவதே இல்லை

ஐரோப்பிய சுற்றுபயணத்தில் இருக்கும் தலைவியின் சார்பாக தமிழக தலைமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கம் அதன் கடமையில் இருந்து தவறுவதே இல்லை தலைவி சார்பாக சங்கம் தன் மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதில் பெருமை அடைகின்றது

ஸ்டெர்லைட்டை விட ஆபத்தான விஷயம் தாதுமணல் தொழிற்சாலை

ஸ்டெர்லைட்டின் பாதிப்பு என்னவென்பது நேரில் கண்டதில்லை, பாதிக்கபட்டவர்களின் ஓலம் மட்டும் கேட்டது. சில நிபுணர்களின் ஆய்வுகள் ஸ்டெர்லைட் அபாயகரமானது என சொன்னபின் அது வெடித்தது ஸ்டெர்லைட்டை விட ஆபத்தான விஷயம் தாதுமணல் தொழிற்சாலை, அதன் கழிவுகள் சூழலை மட்டுமல்ல கடலையே நாசபடுத்தியவை அந்த வைகுண்டராஜனின் அரசாங்கள் தூத்துகுடிக்கு வடக்கே இருந்து கன்னியாகுமரி வரை ஆண்ட பொழுது கடலே சிகப்பு நிலத்தில் இருந்தது, அப்படி ஒரு கொடும் அழிவு எங்கும் சாத்தியமில்லை மீணவர் தொழில் அழிந்தது, மீன் இனம் […]

கலைஞர் மாபெரும் தமிழின தீர்க்கதரிசி

அந்த மகா துடிப்பான, போர்குணமிக்க கலைஞர் பல போராட்டங்களை நடத்திகொண்டிருந்த 1960களில் அவரிடம் கேட்டார்கள். “காமராஜர் நல்லாட்சி நடத்தினார், பக்தவச்சலம் ஆட்சியிலும் பெரும் குறை இல்லை, மத்திய அரசும் உங்கள் பல கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கின்றது பெரியார் கூட காமராஜர் ஆட்சி தொடரவேண்டும் என்கின்றார், பின்னர் ஏன் போராடிகொண்டிருக்கின்றீர்கள் இந்த நல்லாட்சியிலே பல நியாயமான‌ கோரிக்கைகளுக்கு போராடித்தான் முடிவு கிடைக்கின்றது என்றால், வருங்காலத்தில் மகா மோசமான அரசுகள் அமைந்தால் தமிழகம் எப்படி எல்லாம் போராட வேண்டும் என நினைத்துபாருங்கள்? […]

அய்யதுல்லா கோமேனி

வரலாற்றில் பாரசீகம் என்று பெர்சியா என்றும் தனி இனமாக இருந்த நாடு அது, இஸ்லாமை பின்பற்றுவார்களே தவிர‌ அரபு வகையறாவில் அவர்கள் வரமாட்டார்கள். பாபிலோனின் நெபுகாத்நேச்சர், அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான் போன்றோரிடம் அடிமையாக இருந்தாலும் மீண்டு எழுந்தார்கள் பாரசீக பேரரசு ஆசியாவினை மிரட்டிய காலமும் உண்டு, இந்தியாவின் மேல் படையெடுத்து ஷாஜகானின் மயிலாசனம், கோஹினூர் வைரம் எல்லாம் எடுத்து சென்றார்கள் கலை, அறிவியியல், கல்வி, ,உணவு, வர்த்தகம், ராணுவம் என பல விஷயங்களில் தனித்துவம் கொண்ட இனம் அது, […]

இனியாவது ரஜினி திருந்தட்டும்

காலா படத்திற்கு கன்னடத்தில் தடை என்றால் அரசியல், இனி வாட்டாளுக்கு வெட்ட வேண்டியதை வெட்டாமல் அங்கு படம் ரிலீசாகாது, அன்னார் எதிர்ப்பார்ப்பது அதுதான் கன்னடத்தில் தடை இப்பொழுது வந்திருக்கலாம், படம் வரும்பொழுது மும்பையிலும் தடை வரலாம், பொறுத்து பாருங்கள் ஆனால் ஐரோப்பாவில் தடை என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம், விஷயம் உறுதி இல்லை எனினும் சாத்தியம் உண்டு பொதுவாக இம்மாதிரி படங்களை கவனமாக எடுக்க வேண்டும், அதுவும் உலகம் முழுக்க ஓடவேண்டிய ரஜினி படத்தினை எடுக்க கடும் […]

சீதை உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபி : உபி அமைச்சர் பேச்சால் சர்ச்சை

சீதை உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபி : உபி அமைச்சர் பேச்சால் சர்ச்சை அவர்களுக்கு இதை தவிர என்ன பேசமுடியும்? நாரதர் உலகின் முதல் இமெயில் சர்வர், மகாபாரத காலத்திலே இணையம் இருந்தது என்ற வரிசையில் இதுவும் ஒன்று சீதை டெஸ்ட் டியூப் என்றால், ராமனின் பிறப்பு சொல்வது என்ன? அவர் யாகபாயாசத்தில் பிறந்தவர் என சொல்கின்றது ராமாயணம் இதன் மூலம் அன்னார் உலக விஞ்ஞானிகளுக்கு சொல்ல வருவது என்ன வென்றால், யாக‌ பாயாசத்தின் மூலம் […]

“தென்றலை தீண்டியதில்லை நான் தீயினை தாண்டி இருக்கின்றேன்” : கலைஞர்

சாதியால் அவர் மிக பிற்படுத்தபட்டவர், படிப்பால் மிக பின் தங்கியவர் படிப்பினையே முடிக்கவில்லை, குடும்பமோ மிக ஏழ்மையான குடும்பம், பிறந்த இடமோ சிறு குக்கிராமம். இந்த பின்புலத்தில் ஒரு மனிதன் தனக்கு இருக்கும் தாழ்வுகளை எல்லாம், பலஹீனங்களை எல்லாம் பலமாக மாற்றி வாழ்வில் ஜெயித்தான் என்றால் நமது வாழ்நாளில் நாம் கண்ட பெரும் உதாரணம் கலைஞர். சாதாரண வசனகர்த்தா, சக்தி கிருஷ்ணசாமி போலவோ அல்லது திருவாரூர் தங்கராசு போலவோ ஒரு அடையாளத்தோடு வாழ்ந்திருக்கவேண்டியவர் ஆனால் இன்று பெரும் வரலாறாலாக […]

சோழனுக்கு சிலைகண்ட கலைஞருக்கு நாளை பிறந்தநாள்

கலைஞருக்கு பூம்புகார், பாஞ்சாலங்குறிச்சி, வள்ளுவன் அவதரித்த வள்ளுவ நாடு கொண்ட கன்னியாகுமரி போலவே தஞ்சை கோவிலின் மேலும், ராஜ ராஜ சோழன் மீதும் தனி கவனம் இருந்தது, தேடல் இருந்தது பூம்புகார் நினைவு சின்னங்கள் அவராலே அந்த கடற்கரையில் நிறுவபட்டது தஞ்சை பற்றியும் அந்த ஆலயம் பற்றியும் சிற்பம் பற்றியும் அவர் எழுதியது ஏராளம், அவரின் உளியின் ஓசை படம் கூட அதை சுற்றித்தான் வரும் அப்படிபட்ட கலைஞருக்கு ராஜராஜ சோழனுக்கு சிலைஎடுக்கும் ஆசை வந்தது, அந்த […]

இப்பொழுது சிலையோடு காவேரியும் திரும்பி இருக்கின்றது

தற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் சிந்தனையினை கிளறும், இப்படியும் இருக்குமோ என யோசிக்க தோன்றும் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஏராளம் உண்டு, தலைகீழாக நின்றாலும் அதை உணரமுடியுமே தவிர காரணம் கண்டுபிடிக்க முடியாது என்பதை சில இடங்களில் உணர முடிந்தாலும் தற்போது நடக்கும் தஞ்சை சம்பவம் அதை உறுதிபடுத்துகின்றது என்ன சம்பவம்? ராஜராஜ சோழன், உலமகாதேவி சிலைகள் மறுபடி தஞ்சைக்கு கொண்டுவரபட்டு கோவிலில் வைக்கபட்ட செய்தி எல்லோரும் அறிந்தது ஆச்சரியமாக அது அந்த கோவிலுக்குள் கொண்டுவரபட்ட மறுநொடியில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications