பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிராமண எதிர்ப்பு என்பது மாயமான்

என்ன சொல்லிவிட்டோம் என்று தெரியவில்லை, நீ பிராமண வெறியன், கருப்புசட்டை போட்ட காவி சட்டை , நீ ஏன் கலைஞரை கண்டாய் என்றெல்லாம் பல மண்வாரி தூற்றல்கள் கலைஞரை கடுமையாய் எதிர்த்த இந்திரா முதல் சோ ராமசாமி வரை கண்டபொழுது, அவரை நான் காண கூடாதா? அட வைகோவினை விடவா பெரும் துரொகம் கலைஞருக்கு செய்தேன்? என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆரிய கொடுமை தெரியாதா, உடன்கட்டை, குழந்தை திருமணம், தீண்டாமை என ஏகபட்ட விஷயங்கள் இந்த உலக வரலாற்றை […]

திமுகவில் வாரிசு சண்டைகள்…

இன்று மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கபட்ட தினம் என பலருக்கு திடீர் நினைவு வந்தாயிற்று திமுகவில் வாரிசு சர்ச்சைகள் திராவிட கழகத்தில் இருக்கும்பொழுதே தொடங்கியது, அப்படித்தான் பிரிந்து வந்தார்கள் பின் ஈவிகேஎஸ் சம்பத் அடித்தே விரட்டபட்டார், கண்ணதாசன் போன்றோர் தலைதெறிக்க ஓடினர் அதன் பின் ராமசந்திரன் தனிகொடி பிடித்ததும் வேகம் தணிந்தது பின் வைகோவா ஸ்டாலினா என்பதில் வைகோ பாகத்தை பிரித்துகொண்டு போனார், பின் ஒன்றுமில்லாமல் வந்து கஞ்சிக்கு காவல் இருப்பது வேறுவிஷயம் அப்படிபட்ட திமுகவில் கலைஞரின் […]

உண்மையில் நாடார் சங்கம் திருந்திவிட்டதோ?

முன்பெல்லாம் ஏதும் சலசலப்பு என்றால் இந்த நாடார் சங்கங்கள் தெற்கே குதியோ குதி என குதிக்கும் அது அரசியலோ, சாதியோ, தாது மணலோ எது என்றாலும் ஓடிவந்து கருத்து, கண்டனம் எல்லாம் தெரிவிப்பார்கள் இப்பொழுது என்னாயிற்றோ தெரியவில்லை, சுருண்டு தூங்கும் பூனை போல் ஆகிவிட்டார்கள் இந்த ராக்கெட் ராஜா விவகாரத்தில் கூட சத்தமே இல்லை, ஒரு கண்டனமோ, சத்தமோ இல்லை அட ராம்குமாரை கொன்றது போல் கொன்றுவிட கூடாது என்ற எச்சரிக்கையுமில்லை “என் பின்னால எத்தன நாடார் […]

நம்பியாற்றை காக்க உயிர்விட்ட காவலருக்கு அஞ்சலி

இயற்கையினை காப்போம், மண் கொள்ளையினை தடுப்போம் என முழக்கமிட்ட பலரை, நெல்லை நம்பியாற்று மணற்கொள்ளையினை தடுக்க சென்று கொல்லபட்ட காவலர் விஷயத்தில் காணவே இல்லை இதுவே போலிஸ் மோதலில் ஒருவர் கொல்லபட்டிருந்தால் , காவல்துறை அராஜகம் என கிளம்பியிருப்பார்கள் மனித உரிமை கமிஷன், கழுதை உரிமை பேரவை எல்லாம் பொங்கி தீர்த்திருக்கும் ஆனால் காவலர் கொடூரமாக கொல்லபட்ட நிலையில் ஏதும் சத்தமில்லை அன்று திருச்சியில் கர்பிணியினை மிதித்துகொன்றார் காவலர் என பொங்கினார்கள், இதோ இந்த கொல்லபட்ட காவலரின் […]

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் இருக்கும் : ஸ்டாலின்

எங்களது போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் பேட்டி இப்படி அறிக்கை விட்டுகொண்டே இருக்க வேண்டும், என்றாவது காவேரி மேலாண்மை வாரியம் அமைந்தவுடன், எங்கள் போராட்டம் வென்றது இனி போராட்டத்தை முடிகின்றோம் என அறிவிக்க வேண்டும் அப்படி இவர்கள் போராட்டம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் இருக்கும் .

காங்கிரஸ் ஒரு குடும்பத்தை வழிபடுகிறது: பிரதமர் மோடி

  “அரே பழ்னிச்ச்சாமி ஜி, நம்பிள் தோஸ்த் எஸ்.வீ சேகர்ஜி நல்ல்லா இருக்கா?. ராக்கெட் ராஜாஜி மாத்ரி நிம்பிள் அவரே அரஸ்ட் பண்ணே, நம்பிள் டென்சன் ஆய்ருவான் ஜாக்கிர்தை ஜி” பாஜக தன்னை தேசத்துக்கு அர்ப்பணிக்கிறது; காங்கிரஸ் ஒரு குடும்பத்தை வழிபடுகிறது: பிரதமர் மோடி அந்த குடும்பம் அன்று தேசத்திற்கு அள்ளி கொடுத்தது, நேரு பல்லாண்டு சிறையில் இருந்தார் இந்திராவும் ராஜிவும் தன் உயிரையே தேசத்திற்கு கொடுத்தார்கள் எத்தனையோ சோதனைகளை சந்தித்த சோனியா இந்நாட்டு மகளாகவே இங்கு சேவையாற்றி […]

தனிப் பெரும்பான்மை கிடைத்தால் பிரதமராவேன்: ராகுல் காந்தி

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைத்தால் பிரதமராவேன்: ராகுல் காந்தி ஆக இந்த கூட்டணிகளை வைத்து கொண்டு ஆட்சி நடத்துவது மகா சிரமம் என ராகுலுக்கு தெரிந்துவிட்டது யார் சொல்லியிருப்பார்? மன்மோகன் சொல்லியிருப்பாரோ? முக அழகிரி, அன்புமணி போன்றவர்களை கூட்டணிக்காக அமைச்சர் பதவியில் வைத்து கொண்டு அவர்பட்ட பாடு கொஞ்சமா? எப்படியோ மன்மோகனின் கசப்பான அனுபவம் ராகுலுக்கு ஞானத்தை வழங்கி இருக்கின்றது

டிரம்பினை இஸ்ரேல் முட்டாளாக்குகிறதாம்…

கலககாரனை அருகில் வைக்காதே, அவன் உன்னை எங்காவது சண்டைக்கு இழுத்துவிடுவான் என்பது ஒரு பழமொழி இது இந்த டிரம்ப் என்பவருக்கு தெரியவே இல்லை, மிக மோசமான காரியம் ஒன்றை இஸ்ரேல் எனும் கலகக்காரன் தூண்டிவிட இவர் செய்துவிட்டார் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார், இது பல நெருக்கடிகளை அரேபியாவில் கொண்டுவரும் ஈரானின் அணுசக்தி கண்காணிப்பு உரியது என்றும், அதற்கு ஈரான் ஒத்துழைக்கும்பட்சத்தில் அதன் மேல் பொருளாதார தடை நீக்கபடும் என ஒபாமா முன்பு பிரிட்டன், பிரான்ஸ், […]

செங்கோட்டையில் தேசியகொடி பறக்க வில்லை

ஒவ்வொரு நாட்டிலும் தேசிய வளாகம் அல்லது சதுக்கம் என்றொரு இடம் தலைநகரில் இருக்கும் அங்குதான் அந்நாட்டு கொடி எந்நாளும் பறக்கும், மேற்கொண்டு சிறப்பு நாட்களில் ஆட்சியாளர்கள் கொடியேற்றி கொண்டாடுவார்கள் இந்தியாவில் தேசிய சதுக்கம் என எதுவுமில்லை, மாறாக செங்கோட்டையிலே ஏற்றி பழக்கபட்டுவிட்டார்கள், அங்கு எந்நாளும் தேசிய கொடி பறந்துகொண்டிருக்கும் இப்பொழுது செங்கோட்டை தனியாரிடம் பராமரிப்பிற்கு ஒதுக்கபட்ட நிலையில் அங்கு தேசியகொடி 3 நாளாக ஏற்றபடவில்லை என்கின்றார்கள் அப்படி நடந்திர்ந்தால் அது தேசிய அவமானம் நாட்டுபற்று என்பது இஸ்லாமியனிடமும், […]

தலைவிக்காக ஓர் திருவெண்பா…..

“நீலமா மலரை கண்டு  நிலையில்லா தலையும் வண்டு நிற்பதும் பறப்பதும் போய் நின்விழி மயக்கம் கொண்டு கோலமார் நெடுமால் வண்ண‌ குளிர்முகம் தன்னை கண்டு கொஞ்சிடும், பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று ஏலமார் குழலி அந்த‌ இருவிழி சிறிது நேரம் சங்கம் வசம் திரும்புமாயின் ஏங்கிய காலம் சென்று தமிழக அமைச்சர்காள் போல் அழிவில்லா ஆனந்தம் கொண்டு அடியோர் மகிழ்வு காண்போம் அருள்செய்வாய் கமல தாயே”  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications