பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மலேசியாவில் மே 9 2018 பொதுதேர்தல்

மலேசியாவில் நாளை பொதுதேர்தல், இதனால் பொதுவிடுமுறை அறிவித்தாகிவிட்டது நம்மை விட 10 வருடம் கழித்து சுதந்திரம் வாங்கினார்கள், 14ம் பொதுதேர்தல் வருகின்றது ஆளும் கூட்டணிதான் கடந்த 60 வருடமாக இங்கு ஆட்சியில் இருக்கின்றது, அது இன்னும் தொடரலாம் சீரான வளர்ச்சி, ஏழை பணக்காரன் இடைவெளி பெரிதாக இன்மை, எல்லோரும் எல்லா வசதிகளையும் அனுபவித்து வாழ வசதி என பல விஷயங்கள் இருப்பதால் பெரும் அதிருப்தி என ஒன்றுமில்லை அரசு அதன் கடமையினை சரிவர செய்வதால் மக்களுக்கு பெரும் […]

நெல்லை பக்கம் என்ன தகறாறு?

நெல்லை பக்கம் என்ன தகறாறு? அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள் கன்னியாகுமரியில் நடப்பதென்ன? பெரும்பாலும் நாடார்கள் ஆனால் அவர்களுக்கும் மீணவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது சாத்தூர் விருதுநகர் பக்கம்? மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம் அந்த கமுதி பக்கம்? இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி விழுப்புரம் பக்கம்? அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு இருக்கும் வரவேற்பே சொல்லும், திருமாவின் எழுச்சியும் சில […]

நாடுண்ணா ஜெர்மன், எப்படி ஒரு நாடுண்ணே …

கார் வாங்குனா பென்ஸ் அல்லது பிஎம்டபிள்யூ வாங்கணும் அப்படியா நாடுண்ணா ஜெர்மன், எப்படி ஒரு நாடுண்ணே ஓஹோ செட்டில் ஆகணும்னா அங்கதான் ஆகணும் சரி அப்படி ஒரு நாடு, அப்படி ஒரு மக்கள் அடேய் அது ஹிட்லர் நாடு, நாசிச பூமி அண்ணே அதெல்லாம் பழங்காலத்து கதை, இப்போ அவங்கல்லாம் மாறிட்டாங்க, நீங்க எந்த காலத்த்து கதையோ பேசிட்டு, போங்கண்ணே இந்த பிராமணர்கள்? அய்யகோ அவன கொல்லணும், பாம்புக்கு முன்னால அவனதான் அடிக்கணும். பொல்லாதவனுக , வன்மம் […]

அண்ணே உங்களுக்கு பிராமண கொடுமை தெரியாது….

“அண்ணே உங்களுக்கு பிராமண கொடுமை தெரியாது, சூத்திரன் படித்தால் அவன் காதில் ஈயத்தை ஊற்றுமளவு மனுநீதியினை பின்பற்றும் கொடியவர்கள் அப்படியா ஆமாம், அடுத்தவனை படிக்கவே விடமாட்டார்கள், நாசமாய் போனவர்கள். உனக்கு அதெல்லாம் தெரியாது. அம்பேத்கர் தெரியுமா? தெரியும், தலித்தாக பிறந்து சட்டமேதையாக உயர்ந்தவர் அது பீமாராவ் அம்பேத்கர் யார்? பீமாராவ் எல்லாம் இல்லண்ணே, அவர்தான் அம்பேத்கர் அம்பேத்கர் என்பது பீமராவ் எனும் தாழ்த்தபட்டவனுக்கு பாடம் நடத்திய பிராமண ஆசிரியர். அந்த நன்றிகடனுக்குத்தான் பீமராவ் அந்த ஆசிரியர் பெயரை […]

மாநில அரசை கலைக்க வேண்டுமென்றால் சும்மா கலைக்க மாட்டார்கள்

மாநில அரசை கலைக்க வேண்டுமென்றால் சும்மா கலைக்க மாட்டார்கள் எல்லாவற்றிலும் அரசியல் கணக்கு உண்டு எதிர்கட்சி என்பது டெல்லியில் செய்யும் அரசியலை பொறுத்தே மாநில அரசு கலைக்கபடும். அந்த அரசை கலைக்கும் அளவு இங்கிருக்கும் எதிர்கட்சிகள் திறமையாக செயல்பட வேண்டும் அதில் முன்பு கலைஞர் அரசை கலைத்த காட்சி எல்லாம் தந்திரமிக்கவை. டெல்லியினை அப்படி சாதுர்யமாக நம்ப வைத்து காரியம் நடத்தினார்கள் ஆனானபட்ட கலைஞர் அரசையே கலைக்க வைத்தவர்கள் அன்று இருந்தார்கள் இன்று பழனிச்சாமி அரசை அசைக்க […]

தீப்பொறி ஆறுமுகத்தையும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள்

இங்குள்ள எதிர்கட்சிகள் எல்லாம் ஒழுங்காக காய் நகர்த்தி இருந்தால் கன்னட தேர்தலோடு தமிழகத்திலும் தேர்தல் நடந்திருக்கும் அதை செய்வார்கள், இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என பார்த்தால் இந்த சிவி சன்முகம் என்பவர் தலையினை வழிப்பாரா? மீசையினை எடுப்பாரா என கேட்டுகொண்டிருக்கின்றார்கள் அண்ணாவும், கலைஞரும் உருவாக வேண்டிய நேரத்தில் வெற்றிகொண்டானையும், தீப்பொறி ஆறுமுகத்தையும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள் சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை பின்னே? எல்லா கட்சிக்காரனும் ரஜினியின் படம் […]

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கின்றது பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கின்றது பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை என பல கேள்விகள் எழும் விலையினை குறைக்க அரசுக்கும் விருப்பமே, எந்த அரசும் விலையினை ஏற்றி வைக்க விரும்பாது, சிக்கல் எங்கிருக்கின்றது? இந்திய ஆயில் நிறுவணங்களின் பணியாட்களின் சம்பளத்திலும், சலுகையிலும் இருக்க்கின்றது. அவ்வளவு சம்பளம் இந்த விலைக்கு பெட்ரோல் விற்றால்தான் அவர்கள் சம்பளமே கொடுக்கமுடியும், இதுபோக பென்சன் , ஓய்வுநிதி பல்க் கமிஷன் அது இது என பல விஷயங்கள் பெட்ரோல் விலை குறைத்து விற்கபடும் […]

இஸ்லாத்திலும் சாதிக்கொடுமை

இஸ்லாம் இந்தியாவில் சாதியினை ஒழித்தது என மிக பெருமையோடு இருந்தது கிறிஸ்தவம் செய்யமுடியா சாதனையினை இஸ்லாம் தமிழகத்தில் செய்தது என பெருமைகள் இருந்தன‌ எல்லாம் தேனி சம்பவத்தோடு நொறுங்கிவிட்டது இஸ்லாமியரிலும் சாதிவெறியர்கள் இருக்கின்றார்கள் என்பது புரிகின்றது ஆக சாதியினை ஒரு மதத்தாலும் ஒழிக்கமுடியாது. அதை ஒழிக்க வந்த புத்தமதமே இங்கு ஒழிந்துபோயிற்று மதங்கள் சாதியினை ஒழிக்கும் என்பதெல்லாம் மாயை, அதனை ஒழிக்க வேறுவழிதான் தேட வேண்டும் தேனி சம்பவத்தை எந்த தலித் அமைப்புகளும் கண்டிக்கவில்லை, திருமா எல்லாம் […]

உலக செஞ்சிலுவை & செம்பிறை நாள்

  அப்பொழுது ஆஸ்திரியா ஹங்கேரி என்றொரு வல்லரசு இருந்தது. அதற்கும் ஜெர்மனுக்கும் உறவும் இருந்தது. அவர்களும் உலகாள ஆசைபட்டனர் இதில் ஆட்டோமன் சாம்ராஜ்யமும் சேர்ந்து கொண்டது அதனை ஒழித்துகட்ட பிரிட்டன் தொடங்கியதே முதலாம் உலகப்போர், அது ஐரோப்பாவில் பெரும் அழிவினை கொடுத்தது, காயம்பட்டோரை கூட மீட்க முடியவில்லை அப்பொழுது ஈஸ்டர் பண்டிகை வந்ததால் 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என முடிவு செய்தார்கள், அப்பொழுது ஹென்றி டியூனண்ட் என்பவர் சிகப்பு சிலுவை கொடியுடன் சாமாதான அடையாளம் […]

எதிர்க்க வேண்டியதும் , ஒழித்துகட்ட வேண்டியதும் அதிமுக எனும் கட்சி

நீங்கள் என்ன சொன்னாலும் சரி, தமிழகத்தில் செய்ய வேண்டியது பிராமண எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு எல்லாம் அல்ல‌ எதிர்க்க வேண்டியதும் , ஒழித்துகட்ட வேண்டியதும் அதிமுக எனும் கட்சி அதற்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. எதற்காக அது இயங்குகின்றது என்பது அவர்களுக்கே தெரியாது அதுவே இம்மாநிலத்தின் பெரும் சாபக்கேடு, அந்த சாக்கடையில் இருந்து பல கொசுக்கள் வந்துகொண்டே இருக்கும் நேற்று கூட ஒரு டெங்கி கொசுவும், மலேரியா கொசுவும் பரிவட்டத்தோடு நின்றது, பார்க்க சகிக்கவில்லை ஆக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications