பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிராமண எதிர்ப்பு, நாத்திகம் இனி எடுபடாத விஷயங்கள்…

பிராமண எதிப்பு , பிராமண ஒழிப்பு, பிராமண ஆதிக்க தகர்ப்பு என என்னவெல்லாமோ சொல்லி கொண்டிருக்கின்றார்கள் ஒருவேளை திராவிட நாடு அடைந்திருந்தால் ஹிட்லரின் கொடுமைகள் இங்கும் நடந்திருக்கும் போல‌ இவர்களிடம் தனி நாடு சிக்கினால் உடனே எல்லா பிராமணரையும் விரட்டிவிடுவார்களா? இவர்கள் உருவாக்கும் சித்திரத்தை கண்டால் சாதிக்கொரு நாடு கொடுக்காமல் பிரச்சினை தீராது போல‌ இலங்கையில் என்ன சிக்கல்? பெரும்பான்மை சிங்களனுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறாம், திறமை அடிப்படையில் யாழ்பாணத்தானுக்கு கல்வி, வேலை என கொடுக்க […]

ஆப்கனில் 7 இந்தியர்கள் கடத்தப்பட்டனர்..

ஆப்கனால் 1970 வரைக்கும் சிக்கல் இல்லை, சோவியத் ரஷ்யா அங்கு கால்பதித்தபின் இந்தியாவிற்கும் சோவியத்திற்கும் இடையில் பாகிஸ்தான் என்றொரு தேசம் கிடுக்குபிடியில் மாட்டியது பின் அமெரிக்க விளையாட்டு இன்னபிற சிக்கல்களால் ரஷ்யா வெளியேறியது அதன் பின் பாகிஸ்தானை இன்னொரு பக்கம் இருந்து அடிக்கும் வாய்ப்பினை இந்தியா இழந்தது, பாகிஸ்தானும் தாலிபன் போன்றோரை வளர்த்து அங்கு தன் பிடியினை இறுக்கிற்று இப்பொழுது தாலிபன்களின் வீழ்ச்சிக்கு பின் இந்தியாவும் அங்கு பல விஷயங்களை செய்கின்றது ஆப்கனின் தேவை இந்தியாவிற்கு பல […]

வடகொரிய அதிபரும், டிரம்பும் எங்கே சந்திப்பர்?

இரு பெரும் வல்லவர்கள் சந்திக்கும்பொழுது பலத்த பாதுகாப்புகள் செய்யபடும் பாஷா படத்தில் ரஜினியும் ரகுவரனும் சந்திப்பார்கள் அல்லவா அப்படி இப்பொழுது வடகொரிய அதிபரும், டிரம்பும் எங்கே சந்திப்பது என பலத்த யோசனை தென்கொரியாவில் அவரை சந்திக்க கிம்முக்கு விருப்பமில்லை, சீனா செல்ல டிரம்பிற்கு விருப்பமில்லை இதனால் இருவரின் தேர்வும் சிங்கப்பூர் ஆகின்றது இரு தலைவர்கள் சந்திக்க எவ்வளவு பாதுகாப்பான தேசம் வேண்டும்?, பின் ஏன் பல நாடுகளை விட்டுவிட்டு சிங்கப்பபூரை தேர்ந்தெடுத்தார்கள் சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகளின் […]

கல், சாராயம் , மண் விற்க ஒரு அரசு…

அனுமதியில்லாத இறக்குமதி மணலை விற்றால் 2 ஆண்டு சிறை: தமிழக அரசு உத்தரவு ஆமாம் பழனிச்சாமி அரசும் அவர் சகாக்களும் மட்டுமே இங்கு மணல் விற்கும், அதையே எல்லோரும் வாங்க வேண்டும் அரசே மதுவிற்கும் அதையே எல்லோரும் குடிக்க வேண்டும், மீறி வேறு மது குடித்தால் அது கள்ளசாராயம் அப்படி வேறு மணல் வந்தால் அது கள்ள மணல், அரசு சும்மா விடாது, பின் எப்படி கட்சிக்காரர் பிழைக்க, இவர்கள் கல்லா கட்ட? அதனால் மண் , […]

நவீன இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் விருப்பம் : : மோடி

நவீன இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் விருப்பம் : : மோடி விருப்பம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது, ஆனால் செயல் அதள பாதாளத்தில் கிடக்கின்றது நவீன இந்தியாவிற்கு ஆசைபட்டுவிட்டு பசுமாடு , சாணம், சாமியார் யோகி, திரிபுரா காமெடியன் என கட்சியில் இருந்தால் என்னாகும்? இவர் விரும்புவது கிழக்கே விடியல் ஆனால் ஓடுவது மேற்கு நோக்கி…    

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் சர்ச்சையாகின்றது, சினிமாக்காரர்களே காரி துப்புகின்றார்கள் என்றால் படம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது இதற்காகவெல்லாம் அந்த படத்தை பார்க்கும் எண்ணமில்லை, கலாச்சாரத்தை காக்கும் பொறுப்பு அவர்களுக்கு மட்டும்தான் இருக்கின்றதா? நமக்கும் உண்டு வழக்கமாக இந்தமாதிரி சர்ச்சைகளில் சிம்புதான் சிக்குவார் அருமையான படம் போய்விட்டது என வருந்துகின்றாரா இல்லை தப்பிவிட்டோம் என மகிழ்கின்றாரோ என தெரியவில்லை அன்னார் வருத்ததில் இருக்கவே வாய்ப்பு அதிகம் இருட்டு அறையில் முரட்டு குத்து […]

ராக்கெட் ராஜா என்பவர் கைது செய்யபட்டார் என செய்திகள் வருகின்றன‌

ராக்கெட் ராஜா என்பவர் கைது செய்யபட்டார் என செய்திகள் வருகின்றன‌ தென்னகத்தில் சாதிவெறி அதிகம், அதனை வைத்து சில ரவுடிகளை உருவாக்கி காரியம் சாதிப்போர் அதிகம் இது 1980களில் நெல்லையில் தொடங்கியது, தொடங்கி வைத்தது யாரென்றால் அரசியல்வாதிகள், அதன் பின்பு தொழிலதிபர்கள் செல்வின், ஜாண் பாண்டியன், முத்துலிங்கம் என தென்னகத்தை மிரட்டிய ரவுடிகள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள். வெங்கடேச பண்ணையாரும், பசுபதி பசுபதி பாண்டியனும் தங்கள் சொந்த பகையினை சாதியில் புகுத்தி ரத்த ஆறு ஓட வைத்தார்கள் […]

மோடி சவாலை எதிர்கொள்கின்றார்.. அதில் வெல்ல வேண்டும் …

பிரிட்டன் வெளியேறும்பொழுது இந்த தேசத்தை முதலில் இரண்டாக பிளந்தார்கள், அத்தோடு இந்தியா இன்னும் உடையும் என்றார்கள் இத்தேசம் நின்றது, நேரு மிகபெரும் தலைவனாக அறியபட்டார் நேருவினை குறிவைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தூண்டிவிட்டார்கள் , இங்கு திமுகவும் பாகிஸ்தான் சீன போர்களும் நேருவினை பலவீனபடுத்தின‌ நேரு காலமானதும் இந்தியா உடையும் என்றார்கள், சாஸ்திரி அட்டகாசமாக தேசத்தை நிறுத்தினார் ஆனால் அவரும் மர்மமாக இறந்தார், இத்தோடு இந்தியா காலி என்றார்கள் இந்திரா மிக உறுதியாய் இந்திய அடையாளமானார், தேசம் நின்றது. […]

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி ஆமாம், பாஜக மத்தியில் ஆளும்பொழுது வன்முறைக்கு இடம் அளிக்க கூடாது மற்ற கட்சிகள் ஆளும்பொழுது மசூதி இடிக்கலாம், மும்பையில் கொளுத்தலாம், குஜராத்தில் வெட்டலாம் ஆனால் பாஜக ஆளும்பொழுது மட்டும் வன்முறைக்கு இடமளிக்கவே கூடாது அடேய் பிஜேபிஸ் மோடி பற்றி ஏதும் சொன்னால் “நமஸ்தே ஜி”, “தேங்க்ஸ் ஜி”, “பாரத் ஜி” “சூப்பர் ஜி” என ஜிலேபி விற்றுகொண்டிருந்தால் ஒரு கவுன்சிலர் இடம் கூட வெல்ல மாட்டீர்கள் ஏன் […]

விமானத்தில் இணைய தொடர்புக்கு அனுமதி

விமானத்தில் இணைய தொடர்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து இனி முகநூலும் பயன்படுத்தலாம் : செய்தி ஓட்டை பைக்கில் சென்றாலே 10 படம் போட்டு கடும் அலப்பறை செய்பவர்கள் நிறைந்த முகநூல் இது, இனி விமானத்தில் இருந்து படமாக, வீடியோவாக போட்டு தள்ளிகொண்டே இருப்பார்கள் அடுத்த பெரும் இம்சை வருகின்றது, அவ்வளவுதான் விஷயம் இந்த அறிவிப்பு மோடிக்கு பெரும் வசதி, அந்தரத்தில் இருந்தே இனி டிவிட் செய்வார் “நான் 125 கோடி மக்களுக்காக 40 ஆயிரம் அடி உயரத்தில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications