பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காவேரி இல்லை

  கன்னட தேர்தலில் ராகுல் தலமையில் காங்கிரஸ் கோஷ்டி கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது பாஜக தரப்பு மோடி, அமித்ஷா, யோகி என களமிறங்குகின்றது. யோகிக்கும் கன்னடத்திற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. உபி அரசினை போட்டுவிட்டு அந்த சாமியாரும் வந்திருக்கின்றார்   இப்படி இருதேசிய கட்சிகளும் வரிந்து கட்டி கன்னடத்தில் பிரச்சாரத்தில் நிற்கும்பொழுது ஒரு விஷயத்தை அப்படியே இருவரும் மறைக்கின்றார்கள் அது காவேரி விவகாரம். தொட்டால் அவ்வளவுதான் என்பதால் இருவருமே அதை மறைத்து வேறு என்னமோ அணல் பிரச்சாரம் […]

“இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர்

தன்னிடம் இந்திய விடுதலை பற்றி பேசிய சென்பகராமனிடம் “இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர் பின் நேதாஜியிடம் “போரில் வென்றால் இந்திய அதிபராக இரும்புகரம் கொண்டு அந்நாட்டை நடத்து, ஜனநாயகம் என்பது இந்தியருக்கு புரியாது” என்றான் அதே ஹிட்லர் “இன்று சுதந்திரம் கேட்கும் இந்திய தலைவர்களில் பெரும்பாலானோர் சுயநலவாதிகள், அம்மக்களுக்கும் ஜனநாயக மகத்துவம் தெரியாது அதனால் இந்தியா சீரழியும்” என்றார் சர்ச்சில் “இந்தியர்கள் உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பார்களே ஒழிய அறிவுபூர்வமாக சிந்திப்பதே இல்லை” என்றான் […]

விசித்திரமான நகரங்களில் முதலிடம் மதுரைக்கே..

மதுரையின் பிரமாண்ட திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது, அவ்வளவு பெரும் பக்த கூட்டம் ஆனால் தேர்தல் என்று வந்தால் திராவிட கட்சிகள்தான் வாக்குகளை அள்ளும், ஏன் என்றால் ராமசந்திரன் காலத்தில் இருந்து செல்லூர் ராஜூ காலம் வரை அப்படித்தான் மதுரை முத்து காலத்திலிருந்து அட்டாக் பாண்டி காலம் வரை அதன் அரசியல் விசித்திரமானது பக்தி கொண்டாட்டம் என வரும்பொழுது பெரும் ஆரவாரம் காட்டும் மதுரை, வைகையாற்றில் அழகரை இறக்கும் அதே மதுரை சிலிர்க்க வைக்கின்றது ஆனால் அதே மதுரை செல்லூர் […]

ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள்

73 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள் உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே […]

புத்தம் சரணம் கச்சாமி

ஒரு காலத்தில் மொத்த இந்தியாவயும், கிழக்காசியா, ஆப்கன் எல்லாம் புத்தமதம் ஆண்டிருக்கின்றது என்றால் நம்பித்தான் ஆகவேண்டும், அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது. இன்று இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என முழக்கமிடும் நாம், அன்றே இலங்கைக்கு இந்தியா அனுப்பிய புத்தமதமே சகலகொடுமைகளுக்கும் மூலம் என்பதை மறந்துவிட்டோம், இந்தியா அன்றே கொடுத்து கெடுத்திருக்கிறது. ஆனால் புத்தரின் கொள்கைகள் உயர்வானவை, நேர்மையான கட்சியும், நல்ல தலைவர்களும் இந்திய தேர்தலில் காணமல் போவது போல. நல்ல கொள்கைகள் கொண்ட அம்மதமும் இந்தியாவில் […]

அக்கடா இக்கடா செய்திகள்

பதிவு ஏதும் தாமதமானால் பேப்பர் போடும் பையனை மிரட்டுவதை போல அதட்டுகின்றார்கள் இனி தாமதிக்கும் நேரமெல்லாம் பதிவினை போடுகின்றாயா இல்லையா என கல், உருட்டுகட்டை எல்லாம் எடுத்துவிடுவார்கள் என்பது தெரிகின்றது. எதற்க்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் காவேரி விவகாரம் தொடர்பாக மோடியிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை : முதல்வர் பழனிச்சாமி மோடி எந்த காலத்தில் அய்யா காவேரி வரும் என சொன்னார்? நீதிமன்றத்தில் மத்திய அரசு 2 வாரம் அவகாசம் கேட்டது மோடி குரலா? […]

கலைஞரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர்

“என்னய்யா டெல்லிகாரனுகள நம்பி தனிமாநிலம் வாங்கின, இப்போ என்னாச்சி? இதுக்குதான்யா காங்கிரஸை இங்க நான் காலடியில வச்சிருந்தேன். நான் இருந்தவரை தமிழக பாஜக ஒரு வார்த்தை பேசிச்ச்சா, இல்ல பேச விட்ருவேனா? எங்க சுத்தினாலும் டெல்லிய எதிர்க்கணும்னா இங்க வந்துதான் ஆகணும், இதை இன்னும் 4 பேர் கிட்ட போய் சொல்லுய்யா”

பாண்டிய நெடுஞ்செழியன் இன துரோகி இல்லையா?

கண்ணகி பிறந்த பூம்புகார் பற்றி 4 வார்த்தை தெரியாது, சிலப்பதிகாரத்தின் 1 வரி கூட உருப்படியாக தெரியாது தமிழச்சியாக பிறந்து, தமிழனால் கணவனை இழந்த தமிழச்சிக்கு எப்படி விழா எடுப்பார்கள்? இன்னொரு இனத்தான் கொன்றால்தானே இவர்களுக்க்கு உணர்ச்சி வரும்? பாண்டிய நெடுஞ்செழியன் இன துரோகி இல்லையா? எப்படியோ போகட்டும், ஆனால் இந்த பெரும்பாட்டியின் சிலையினை முன்பு ஜெயா தூக்கி எறிந்தபொழுது இந்த பேரப்பிள்ளை வங்க கடலுக்குள் மூழ்கி கிடந்தது என்பதுதான் சோகம்  

சித்திரா பவுர்ணமியில் நோக்க‌ வேண்டியது கண்ணகி ஆலயமே

சித்திரை மாத முழுநிலவன்று தமிழக கேரள எல்லையிலுள்ள தமிழக கண்ணகி கோயிலில் தமிழக பக்தர்கள் கூடுவது வழக்கம். இன்னும் சாலை வசதி தமிழக அரசால் ஏற்படுதபட்டதா என்றால் இல்லை? கேரளா வழியாக தான் வாகனத்தில் வரமுடியும், கோயில் இடம் எங்களுக்கு என்ற கேரள சர்ச்சையும் உண்டு, நிச்சயம் தமிழர் இடம்தான் ஆனால் கேரள ஆதிக்கம். கண்ணகி விண்ணகம் சென்ற இடமான இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு, தமிழகம் வழியாக செல்ல வேண்டும் என்றால் பக்தர்களுக்கு ஆபத்தான நடைபயணம். […]

பாரதியின் தமிழ் பற்றும் , பாரதிதாசனின் தமிழ் வெறியும்…

பாரதிக்கு தமிழ்பற்று இருந்தது, அதை விட அதிகமாக தேசாபிமானம் இருந்தது   பாரதியின் தாசன் என சொல்லிகொண்டிருந்தவருக்கு தமிழ்வெறிதான் இருந்தது, அதுவரை மெல்லிய பூ எடுத்துவீசுவது போன்றிருந்த தமிழ் கவிதைகள், பாரதிதாசன் காலத்திலே கல்லெடுத்து வீசுவது போல் மாறின‌ 100% முழு தமிழ் உணர்வாளர்களுக்கு அவர் பெரும் கவிஞராக தெரிவதில் நியாயமிருகின்றது ஆனால் பாரத்திக்கு இருந்த பெரும் இந்திய அபிமானமும், பெரும் பெருமிதமும் பாரதியின் தாசன் என சொல்லிகொண்டவருக்கு சுத்தமாக இல்லை பாரதிதாசன், இந்த ஈழத்து காசி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications