பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஐஸ்வர்யாய் தெரிந்த அளவு குஷ்புவினை தெரியவில்லை

திரிபுரா மக்களுக்கு கிடைத்திருக்கும் முதல்வர் ஒரு தமாஷ் பேர்வழி, அடிக்கடி சர்ச்சையில் சிக்க ஆரம்பித்துவிட்டார் அங்கும் எச்.ராசா உருவாகிவிட்டார். மஹாபாரத காலத்தில் வைபை இருந்தது என அவர் கொளுத்திபோட்ட சர்ச்சை அடங்குவதற்குள், இப்பொழுது இந்திய உலக அழகிகள் பக்கம் போய்விட்டார் அதாவது உலக அழகுசாதன சந்தையாளர்கள் இந்தியாவினை குறி வைத்திருப்பது ரகசியமல்ல, சோப்பு முதல் நகப்பூச்சு வரை இந்தியாவில் விற்க ஆரம்பித்தால் அவர்கள் நிறைய சம்பாதிக்கலாம் இதனால் சுஷ்மிதா சென் முதல் டயானா ஹைடன் வரை நிறைய […]

சும்மா காவேரியினை திற என கத்துவதோடு சரி

காவேரி தொடர்பாக வரைவு திட்டம் தாக்கல் செய்ய இரு வார அவகாசம் கேட்ட மத்திய அரசிற்கு கண்டனங்கள் எழுகின்றன‌ கன்னட தேர்தல் முடியும் வரை என பகிரங்கமாகவா கேட்க முடியும்? சரி ஒருவேளை கோர்ட்டில் எதிர்கட்சியான காங்கிரசை அழைத்தால் என்ன சொல்லியிருக்கும் இதேதான் சொல்லியிருக்கும் என்பதுதான் விஷயம் இதோ மத்திய அரசு காலம் தாழ்த்துகின்றது, இங்கு அன்று ஐபிஎல் அரங்கை அடித்து நொறுக்க கிளம்பிய கும்பல் இப்பொழுது எங்கிருக்கும் என தெரியாது இப்பொழுதும் இங்கு யாராவது பழனிச்சாமி […]

இணைந்த கைகள் இணந்ததாகவே இருக்கட்டும்

கடந்த 50 வருடத்தில் ஒரு பகுதி போரின் விளிம்பிற்கு சென்றுவிட்டு அமைதியாகின்றது என்றால் கொரியபகுதிதான் வடகொரிய அதிபர் முதன் முறையாக எல்லை தாண்டி தென்கொரியா சென்றிருக்கின்றார், அவர்களும் அன்போடு வரவேற்றிருக்கின்றார்கள் இனி கொரியாவில் போர் இல்லை, போரில் பிரிந்த குடும்பம் இணையலாம், எல்லை நெருக்கடிகள் தளத்தபடும் என இருவரும் கூட்டாக அறிவித்தபொழுது மக்களின் ஆனந்தம் சொல்லிமாளாது இரு நாடுகள் பிரிக்கபட்டிருக்கும் பொழுது எல்லை மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. இதில் இந்தியாவின் பஞ்சாப் பகுதி படும் […]

இந்தோ சீனா பாய் பாய்

சீனாவின் உகான் நகரில் சீன அதிபரை தனிமையில் சந்தித்தார் மோடி, அதிகாரபூர்வமற்ற சந்திப்பு என்பதால் ராஜதந்திரிகள் இடம்பெறவில்லை அப்படி என்ன பேசியிருப்பார் “அய்யா ஜின்பிங், நாம் இருவரும் நேருவின் பஞ்சசீல கொள்கையினை ஏற்று நடந்தாக வேண்டும், ஆனால் நான் இப்படி பேசியது வெளிவந்தால் எம் நாட்டில் காங்கிரஸ் கட்சியினை ஏற்றுவிட்ட பாஜக பிரதமர் என கிண்டலடிப்பார்கள் அதனால் இது நமக்குள்ளே இருக்கட்டும், பஞ்ச சீல கொள்கை வாழ்க‌ இந்தோ சீனா பாய் பாய்”  

இங்கு யாரெல்லாமோ வந்தார்கள், ஆண்டார்கள்.

இங்கு யாரெல்லாமோ வந்தார்கள், ஆண்டார்கள். அவர்களில் தெலுங்கர்கள் சில நல்ல உணவுகளை கொடுத்தார்கள் நிலைத்தார்கள். சாம்பாரை விடுங்கள் சில உணவுகள் மகா சுவையானவை இஸ்லாமியர் அட்டகாசமான பிரியாணி, கபாப் என கொண்டுவந்தார்கள் நிலைத்தார்கள் இந்த வெள்ளைக்கார பயலும் வந்தான், பிரட்டும் இன்னும் சில உப்பு சப்பில்லா பண்டங்களை கொண்டுவந்தான். அதை கண்டாலே எரிச்சலாக வருகின்றது அவனின் ஒரு சாப்பாடும் உருப்படி இல்லை ஒரு மனிதன் சாப்பிட கூடிய உணவுகளா அது? அறுசுவையில் ஒரு சுவை கூட இல்லாமல் […]

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கின்றது, மதுரையின் மிக உற்சாகமான விழா அது, அதனை கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அவர்கள் கொண்டாடட்டும், மீனாட்சி திருகல்யாணம் அவர்கள் கொண்டாட்டம் சங்கம் இது பற்றி ஒரு முடிவிற்கு வந்திருக்கின்றது, இனி ஒவ்வொரு வருடமும் தலைவியின் திருமண விழாவினை மானாட்சி கல்யாணம், மயிலாட்சி கல்யாணம் என விமரிசையாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியாயிற்று அகில உலகெல்லாம் தலைவியின் திருமண நாள் இனி மானாட்சி கல்யாண விழா என‌ மகா விமரிசையாக கொண்டாடபடும்  

புலிகள் சிங்கள பாஸ்போர்ட்டில் உலகம் சுற்றலாம்?

கனிமொழி பதவியினை காப்பாற்ற கலைஞர் ஈழபோரினை நிறுத்தவில்லை என்கின்றது ஒரு கூட்டம் சிங்களனை எதிர்த்து யுத்தம் புரிந்தான் பிரபாகரன், அவன் மகள் சிங்கள பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று படிக்கலாம், அவன் குடும்பம் பறக்கலாம் புலிகள் சிங்கள பாஸ்போர்ட்டில் உலகம் சுற்றலாம் இதை பற்றி எவனாவது பேசுவானா? அமைதிபடை காலத்திலே பிரேமதாசாவோடு கை கோர்த்தவர் புலிகள், என்னதான் சண்டை என்றாலும் சிங்களனுக்கும் புலிகளுக்கும் ஒரு புரிந்துணர்வு இருந்திருக்கின்றது புலிகளின் குடும்பமோ, ஏன் பிரபாகரனின் குடும்பம் கூட சிங்கள விமான […]

சவுக்கு சங்கர்

இந்த சவுக்கு சங்கர் மீது முன்பொரு ஒரு அபிமானம் இருந்தது, இன்றோடு அது போயிற்று. ஆனால் கலைஞர் உண்ணாவிரதத்திற்கும், திலீபன் உண்ணாவிரதத்திற்கும் கூட வித்தியாசம் தெரியா மனிதர் எனும்பொழுது மிக்க வேதனையாயிற்று இது கூட தெரியாத பிண்டமா? பெரும் … போல எழுதிகொண்டிருக்கின்றார் மிக எளிதான விஷயம் அது, பிரமாண்ட ஆய்வெல்லாம் கூட தேவையில்லை. திலீபன் உண்ணாவிரதத்தின் மோசடிகள் அச்சூழலை நோக்கிய உடனே புரிந்துகொள்ள கூடியது அப்படிபட்ட மகா அயோக்கிய உண்ணாவிரதம் அது, திலீபன் தற்கொலைபடையாய் செத்த […]

திலீபன் ஏன் சாகடிக்கபட்டான்

  திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை என சில பதர்கள் கிளம்பியிருக்கின்றன‌ காரணம் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த நாளாம் இன்று திலீபன் உண்ணாவிரதத்தின் கள்ளதனம் என்ன என்பது, நுட்பபமாக கவனித்தால் அன்றி விளங்காது அன்று அமைதி ஒப்பந்ததை எங்கள் வசூல் பாதிக்கபடும் இன்னபிற சிக்கல்கள் உண்டு ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் மாதம் 50 லட்சம் வேண்டும் என்றெல்லாம் சொல்லியே ஏற்றுகொண்டனர் புலிகள், அவர்கள் மனதில் யுத்தம் தொடங்கும் நோக்கமே இருந்தது ராஜிவ் […]

சாமியார் அஸ்ரம் பாபு .. ஓஸ்ரம் பல்பு….

அஸ்ரம் பாபு எனும் சாமியார் சிறையில் அடைக்கபட்டு அவருக்கு ஆயிரம் கோடி சொத்து இருக்கின்றது என செய்தி வந்ததுதான் தாமதம் கற்பழிப்பு சாமியாரின் பல்புகளை வாங்கமாட்டோ, உடைத்தெறிவோம் என ஒரு கும்பல் ஓஸ்ரம் பல்புகளை புறக்கணிக்க தொடங்கிவிட்டதாம். அது அவரின் கம்பெனி பல்ப் என எவனோ கிளப்பிவிட்டிருக்கின்றான் அஸ்ரம் சாமியாருக்கும் ஜெர்மனியின் ஓஸ்ரம் பல்புகளுக்கும் என்ன சம்பந்தம்? ஆனாலும் கொஞ்சமும் யோசிக்காமல் ஓஸ்ரம் பல்புகளை புறக்கணிப்போம் என ஒரு கும்பலும், இந்த சிகப்பு விளக்குகளை மட்டும் பயன்படுத்தாலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications