பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈழ தமிழர் போராட்டத்தை சொல்லும் 18.5.2009 படம் வெளிவந்தாயிற்று

ஈழ தமிழர் போராட்டத்தை சொல்லும் 18.5.2009 படம் வெளிவந்தாயிற்று, சத்தியராஜ் போன்றவர்கள் இப்பொழுதே படத்திற்கு விளம்பரம் தேடியாயிற்று எல்லா முள்ளிவாய்க்கால் கடைசி நிமிடங்களையும் துணிச்சலாக காட்டி இருக்கின்றார்களாம் ஆனால் இறுதி யுத்தத்தை நிறுத்த இந்தியா வைத்த கோரிக்கைகள், புலிகள் ஆயுத ஒப்படைப்பு செய்துவிட்டு 1987ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்க வெண்டும் என்ற நிலைப்பாடு பற்றி எல்லாம் படம் நிச்சயம் பேசாது உலகிலே ஒரே முறை விசித்திரமாக இந்திய ராணுவம் புலிகளோடு மோதியபொழுது, இந்தியாவில் புலிகள் சிகிச்சை எடுத்த […]

சர்ச்சையாக பேசாதீர்கள் : கட்சிகாரர்களுக்கு மோடி கண்டிப்பு

சர்ச்சையாக பேசாதீர்கள், அது பாஜகவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” : கட்சிகாரர்களுக்கு மோடி கண்டிப்பு என்னது நற்பெயரா? கட்சியின அடையாளமே உடைத்தல், கொல்லுதல், காயபடுத்துதல், கலவரத்தை தூண்டுதல், பயமுறுத்தல், அவ்வப்போது திடீர் காமெடிகள் தானே இதில் என்றைக்கு கட்சிக்கு நற்பெயர் இருந்தது? கட்சியின் ஒரே அடையாளம் கண்டபடி பேசுவதுதான், அவர்கள் திருந்திவிட்டால் காந்தி தொண்டர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? பின் காவியினை எறிந்துவிட்டு காந்தி குல்லா மாட்டிகொண்டு அஹிம்சாவாதிகளாக மாற வேண்டியதுதான் சர்ச்சை பேச்சை நிறுத்திவிட்டால் ஏது […]

சவுதி அரேபியாவில் திரையரங்கம் திறக்கபட்டது

நீண்ட காலத்திற்கு பின் சவுதி அரேபியாவில் திரையரங்கம் திறக்கபட்டிருக்கின்றது மிக இறுக்கமான சட்ட திட்டங்களை கொண்ட நாடு சவுதி, அதுவும் 1970 ஈரானிய புரட்சிக்கு பின் அதன் சட்டங்கள் மிக இறுக்கமாயின, திரையரங்குகள் மூடபட்டது அப்பொழுதுதான் இப்பொழுது மிக பெரும் எண்ணெய் வளம் இருந்தாலும் சவுதி அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை, மக்களின் மகிழ்ச்சி என பல விஷயங்களில் கவனம் செலுத்துகின்றது குறிப்பாக அவர்கள் அதிருப்தி அடைந்து புரட்சியில் ஏதும் இறங்கிவிட கூடாது எனும் அக்கறை அதிகம் […]

மதுரை ஆதீனம் ஆவேசம்

பாலியல் தொந்தரவில் ஈடுபடுவனின் கை கால்களை வெட்டி முச்சந்தியில் நிறுத்தவேண்டும் : மதுரை ஆதீனம் ஆவேசம் என்னதான் சாமியார் என்றாலும் நித்தியானந்தாவினை எப்படி இடம் பார்த்து குறிவைக்கின்றார் பார்த்தீர்களா? நித்தியானந்தாவினை எப்படி பழி தீர்க்க ஆசைபட்டாரோ அதை இப்பொழுது சொல்லிகொண்டிருக்கின்றார் போல

ஏர் இந்தியாவினை தலைமுழுக இந்திய அரசு தயாராகின்றது

உலகெல்லாம் எல்லா தொழிலிலும் அரசியல் போலவே கடும் போட்டி ஏற்பட்டிருக்கின்றன, அதில் விமான போக்குவரத்தும் தப்பவில்லை பட்ஜெட் விமானங்களின் வரவு பெரும் விமான நிறுவண சாம்ராஜ்யங்களையே அசைத்து பார்க்கின்றன, இன்றைய தேதியில் ஓரளவு நிலைத்து நிற்பவை அரபு நாட்டு விமான சேவைகள் காரணம் எண்ணெய் பலம், அதுவும் இல்லை என்றால் அவர்களும் இல்லை முன்பு இந்தியாவில் ஏர் இந்தியா மட்டும் இருந்தது, மகராஜா கம்பீரமாக வலம் வந்தார். பல விமானங்கள் குவிய மகராஜா தடுமாறினார் உள்நாட்டில் ஸ்பைஸ் […]

வைரமுத்துவிற்கு வாயில் சனி

ஐரோப்பிய கிறிஸ்தவர் வரவில்லை என்றால் இங்கு கல்வியே வந்திருக்காது : வைரமுத்து வைரமுத்துவிற்கு வாயில் சனி, இது இனி பரிகாரம் செய்யாமல் தீராது, இல்லாவிட்டால் இப்படி எல்லாம் பேசமாட்டார் வெள்ளையனிடம் அன்று என்ன மன்ணாங்கட்டி இருந்தது? அப்படி எல்லாம் இருந்தால் ஏன் எதனையோ தேடி இங்குவரப்போகின்றான்? அட அலெக்ஸாண்டரே இந்தியா என் கனவு என்றுதான் ஓடிவந்திருக்கின்றான் உண்மையில் அரேபிய, சீன, இந்திய தொடர்பு கிடைத்தபின்பே அவனின் கல்வி மேம்பட்டிருக்கின்றது எண்கள் முதல் பல குறியீடுகள் இங்கிருந்துதான் மேற்கே […]

ஒரிஜினல் புரட்சி தலைவனும், டூப் புரட்சி தலைவனும்

மானிட வராலாற்றில் மக்களே அரசர்களை ஒழிக்கமுடியும் என முதன் முதலில் உலகிற்கு அறைந்து சொல்லிகொடுத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று பல்லாயிரம் ஆண்டாக தொடர்ந்த அந்த மானிட வரலாற்றினை, அரசர்கள் மட்டுமே ஆளதெரிந்தவர்கள் என்ற பொய்யினை அவன் தான் உடைத்தெறிந்தான் விளாடிமிர் லெனினின் பிறந்தநாள் இன்று, அவன் தான் வரலாற்றாளன், புரட்சியின் தலைமகன் ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சி அப்படி கொடுமையாய் இருந்தது, பொறுத்துகொண்டிருக்க அவர்கள் என்ன தமிழக மக்களா? தமிழர்கள் போல் இருந்தால் எப்படி […]

மொகலாயர்கள் இந்தியாவிற்கு கொடுத்த கொடை பிரியாணி

இந்த மொகலாயர்கள் இந்தியாவில் ஆளும்பொழுது எவ்வளவோ நல்ல விஷயங்களை கொடுத்தார்கள். நிச்சயம் அவர்கள் ரசனையாளர்கள் தாஜ்மகால், செங்கோட்டை போன்ற அழகும் கம்பீரமும் கொண்ட கட்டங்களை அவர்கள்தான் கொடுத்தார்கள் உலகில் சாலமோன் அரசருக்கு பின் மிக ரசனையான வாழ்வு அவர்களுக்கு அரண்மனை முதல் உணவு வரை இருந்திருக்கின்றது. மிக மிக ரசித்து வாழ்ந்தவர்களாகத்தான் மொகலாயர்கள் இருந்திருக்கின்றார்கள் மொகலாயர்கள் இந்தியாவிற்கு கொடுத்த கொடை பிரியாணி அவர்களால் இங்கு கிடைத்ததுதான் பிரியாணி, அதுவும் ஸ்பெஷல் மொகல் பிரியாணி அது ஹைதரபாத் என […]

பாலஸ்தீனத்தை சேர்ந்த பேராசிரியர் கோலலம்பூரில் கொலை

பாலஸ்தீனத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கோலலம்பூரில் கொல்லபட்டிருக்கின்றார் விமான பொறியியல் பாடம் நடத்தும் அவர் கோலாலம்பூரின் ஸ்பாடாக் ஏரியாவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நேற்று மாலை சுட்டுகொல்லபட்டிருப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்திற்று உலகமெல்லாம் பலத்த அதிர்வினை இந்த படுகொலை ஏற்படுத்தியிருக்கின்றது விசாரணை தொடங்கியதில் அவர் ஹமாஸ் இயக்கத்து ஆதரவாளர் என்பதும், ஹமாஸின் ஏவுகனை நுட்பத்தில் பங்கெடுத்திருக்கலாம் என்கின்றார்கள். பாலஸ்தீனம் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றது, ஹமாஸின் பெரும் மூளைகள் இப்படி கொல்லபடுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும் […]

அப்பாவுவினை பேசவைக்கும் அளவிற்கா திமுகவில் ஆளில்லாமல் சென்றுவிட்டது???

கலைஞர் டிவியில் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு பேசிகொண்டிருக்கின்றார் மனிதர் ஆரம்பம் முதல் திமுக தொண்டர் அல்ல, தாமாகாவில் இருந்தவர், பின் சுயேட்சை ராதாபுரம் தொகுதி அவரை நம்பியது, கலைஞரும் நம்பினார் திமுகவில் சேர்த்தார் அதன் பின் தானே ராதாபுர குறுநில மன்னன் நானே என நினைத்துகொண்டார் அப்பாவு, யாரையும் மதிப்பதில்லை, யாரையும் அனுசரித்து செல்லவுமில்லை ஏதோ பிச்சைகேட்டு வருபவரை போல எல்லோரையும் அவர் நடத்த தொடங்கிய விளைவு தேர்தலில் வெளிப்பட்டது அவருடன் இருந்த பலரே அவரை விட்டு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications