பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்த பேராசிரியையின் புரோக்கர் பேச்சு இந்த ஆட்சியில் வெளிவந்தது

அந்த பேராசிரியையின் புரோக்கர் பேச்சு இந்த ஆட்சியில் வெளிவந்தது இப்பொழுது பழனிசாமி அரசு என்பதால் யார் அந்த விஐபி, ஹையர் அத்தாரிட்டி என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் யாருக்கும் இல்லை எவனாய் இருந்தால் என்ன என விட்டுவிட்டு அந்த பேராசிரியினை போட்டு சாத்திகொண்டிருக்கின்றார்கள் திமுக மட்டும் இப்பொழுது ஆட்சியில் இருந்திருந்தால் செயல் தலைவரை இழுத்துபோட்டு ஆளாளுக்கு கதைகட்டியிருப்பார்கள் அதுவும் சன்னிலியோன் வீடியோக்களே தோற்றுபோகும் அளவு கற்பனையில் பல செய்திகளை அவர்களாக கலந்துகட்டி அடிப்பார்கள் திமுக எதிர்கட்சி ஆனதும் நல்லதற்காகத்தான் […]

போராளி ஆக அனுதாபம் மட்டும் போதாது அறிவும் வேண்டும்

சாதியால் கணவனை இழந்தவள் எல்லாம் போராளியாகவேண்டுமென்றால் முதுகுளத்தூரிலும், நெல்லையிலும், விழுப்புரத்தில் இருந்தும் பெரும் போராளி பெண்படையே வந்திருக்க வேண்டும் போராளி ஆக அனுதாபம் மட்டும் போதாது அறிவும் வேண்டும் இந்த கவுசல்யா என்னவெல்லாமோ பேசுகின்றது, 2009ல் ஈழவிவகாரத்தில் திமுக நிலை கேள்விக்குறியாம் அம்மா உனக்கு என்ன தெரியும்? 1978முதல் 1990 வரை திமுக ஈழபோராளிகளுக்கும் ஈழமக்களுக்கும் செய்த விஷயம் தெரியுமா? ஈழவிவகாரத்திற்காக இருமுறை ஆட்சி இழந்தும் 1991ல் படுதோல்வியுற்ற கதை தெரியுமா? நீ அப்பொழுது பிறக்கவே இல்லையம்மா, […]

சென்னையில் பாரதிராஜா சீமான் ஆலோசனை

சென்னையில் பாரதிராஜா சீமான் ஆலோசனை என்ன ஆலோசனை? இதுதான் “என்ன சொன்னாலும் நம்மை விட்டுகொண்டே இருக்க இது கலைஞர் அரசு அல்ல, இது பழனிச்சாமி அரசு அதனால் நீ அப்டிக்கா ஓடு , நான் இப்படிக்கா ஓடுறேன்” அந்த கவுசல்யா என்னதான் சொன்னது? திமுகவினர் எல்லாம் போட்டு கொந்தளித்துகொண்டிருக்கின்றனர்..

இந்திய ராணுவ தளபதிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கின்றது

இந்திய ராணுவ தளபதிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கின்றது இதெல்லாம் சாதரண காலத்தில் நடக்கும் கூட்டம் அல்ல, சிரியாவில் மினி உலகப்போர் தொடங்கியிருக்கும் நிலையில் இந்தியா தன் பாதுகாப்பினை வலுபடுத்த தொடங்கியிருப்பது புரிகின்றது. இந்தியா மட்டும் அல்ல , எல்லா நாடுகளுமே தங்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திகொண்டிருக்கின்றன‌

சார்லஸ் சாப்ளின் கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன்

அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள் ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி வலியினை , ஏழையின் கதறலை தன் ஒற்றை காட்சியில் நடித்தவன் சார்லஸ் சாப்ளின், கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன் அவன் பிறக்கும்பொழுது அக்குடும்பம் நன்றாக இருந்திருக்கின்றது, அவனுக்கு […]

நிலமை மோசமாகிகொண்டிருக்கின்றது

ஆசிபாவிற்காக இந்தியாவும் இப்பொழுது உலகமும் அழ ஆரம்பித்தாயிற்று ஆயினும் ஒரே ஒரு கேள்வி எழும்புகின்றது காஷ்மீர் மாநில அரசின் முதல்வர் பெண், இன்னும் உணர்வுபூர்வமாக நோக்கினால் இஸ்லாமிய முதல்வர் ஆனால் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை என்பதில் சில சர்ச்சைகள் வருகின்றன. இப்பக்கம் அவர்களை கை காட்டுகின்றார்கள், இவர்கள் அவர்களை குற்றம்சாட்டுகின்றார்கள் இது தேசத்தின் அமைதிக்கும் நிலைதன்மைக்கும் சவால்விடும் விஷயமாக மாறிகொண்டிருகின்றது. நிச்சயம் இக்கொடுமையினை கேட்ட யாரும் கொதித்து எழத்தான் செய்வார்கள் நிலமை மோசமாகிகொண்டிருக்கின்றது இது பெரும் […]

பாகிஸ்தானும் ஏவுகனை சோதனையினை செய்தாயிற்று

அரசியல் குழப்ப நிலை, ஆங்காங்கே போர் சூழல் என்ற நிலையில் பாகிஸ்தானும் நாங்களும் இவ்வுலகில் உண்டு என காட்ட ஏவுகனை சோதனையினை செய்தாயிற்று அவர்கள் ஏவுகனை ஆராய்ச்சி எல்லாம் வெகு சிம்பிள், சீனாவின் ஏவுகனைகளை வாங்கி ஏதாவது பெயர் எழுதி பறக்கவிடுவார்கள். ஆனால் பெயர் வைப்பதில்தான் அவர்களின் கோபமும், குயுக்தியும் தெரியும் எந்த இஸ்லாமிய‌ மன்னன் எல்லாம் இந்தியாவினை வென்றானோ அவன் பெயரை அட்டகாசமாக சூட்டுவார்கள் அதில் முக்கியமானது கோரி ரகம். கோரிமுகமது எனும் கொடியவனின் நினைவாக […]

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் அறவே ஆகாது

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் அறவே ஆகாது, “என்றேனும் ஒருநாள் உன்னைபிடித்து உன் மூஞ்சில குத்தல, இது சீனா இல்லேடா” என அனுதினமும் சீனா சொல்லிவிட்டுத்தான் கண் விழிக்கும் ஜப்பான் சீனாவில் முன்பு செய்திருக்கும் அட்டுழியம் அப்படி, இப்பொழுது சீனா வல்லரசு என்பதால் திருப்பி அடிக்க துடிக்கின்றார்கள் ஆனால் அமெரிக்க ஆதரவு ஜப்பானுக்கு இருப்பதாலும், ஜப்பானும் பாஷாபாயாக இல்லாமல் மாணிக்கமாக இருப்பதாலும் முறைப்போடு நின்றுகொள்கின்றார்கள் இதில் சீனா ஜப்பானை மிரட்டும் பெரிய காரியங்களில் அரியவகை மணலும் உண்டு என்னதான் ஐசி […]

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியா 26 தங்கங்களுடன் மூன்றாம் இடம்

ஒரு வழியாக காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தாயிற்று, இந்தியா 26 தங்கங்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கின்றது இதனால் இந்தியா தடகளத்தில் உயர்ந்துவிட்டதா என்றால் ஆசிய விளையாட்டுபோட்டியில் ஒரு தங்கத்திற்கே படாத பாடுபடும் நிலைவரும் சீனா ஜப்பான் கொரியா என களமிறங்கி மிரட்டுவார்கள் அதன்பின் ஒலிம்பிக் என்றால் ஒரு வெண்கலத்திற்கே ஏங்க வேண்டும். அமெரிக்கா ரஷ்யா ஜெர்மன் ஹாலந்து என பின்னி எடுப்பார்கள் தடகள விளையாட்டுகளில் இந்தியா இன்னும் கொஞ்சதூரம் கடக்க வேண்டும் ஏன் தடகளத்தில் அப்படி எல்லா நாடுகளும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications