பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அப்பா இன்னைக்கு Women’s Day யா?

“அப்பா இன்னைக்கு Women’s Day யா? ஆமாம்மா அப்போ GentleMen’s என்னைக்குப்பா? அப்படி ஒரு நாளே கிடையாதும்மா ஏம்பா, அவங்கல்லாம் பாவம் இல்லியா? உனக்கு தெரியுது, இந்த உலகத்துக்கு தெரியலியம்ம்மா” (அருகிருந்த பாகம்பிரியாள் அது ஏப்ரல் 1ம் தேதிடி என சொல்லிவிடுவாளோ என அச்சமாக இருந்தது, நல்ல வேளையாக சொல்லவில்லை) “நிமிர்ந்த நன்னடை நேர்க்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” “நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” […]

மக்கள் ஒத்துழைத்தால் ஏன் சட்டம் ஒழுங்கு கலையபோகின்றது

திருச்சியில் காவலர் உதைத்து கர்ப்பிணி பெண் பலி என இந்த ஊடகங்கள் எல்லாம் பெரும் கலவரம் செய்கின்றன‌ ஏதோ அந்த காவலர் யார் இங்கே கர்ப்பிணி என வீடுதேடி வந்து மிதித்தது போல் செய்திவெளியிடுகின்றன, உண்மையில் என்ன நடந்திருக்கின்றது திருச்சியில் சாலை சோதனையில் காவலர் பணியில் இருந்தபொழுது ஹெல்மெட் போடாத கணவனுடன் அப்பெண் பைக்கில் வந்திருக்கின்றாள், காவலர் நிறுத்த சொல்லியிருக்கின்றார், அவன் நிறுத்தாமல் சென்றிருக்கின்றான் தவறு இங்குதான் தொடங்குகின்றது பொதுவாக சாலையில் காவலர்கள் சும்மா நிற்பதில்லை மாறாக […]

பெண்மையைப் போற்றுவோம் : மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் அனைத்தும் செயலற்று போயின, உலகம் அதுவரை கண்டிராத புதிய பரபரப்பு, இப்படியும் நடக்குமா? என வியந்த அதிசயம். காரணம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக போராட‌ புறப்பட்டனர். பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் வேண்டும், வேலை நேரத்தினை எட்டு மணி நேரமாக குறையுங்கள் , என்றெல்லாம் கோரிக்கை வைத்து உலக வரலாற்றிலே அதிரடியாக பெண்கள் புரட்சி நடந்தது. இந்த போராட்டத்தின் […]

பெரியார் ஒரு சமூக‌ புரட்சி சகாப்தம்

கால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள். இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார். புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை நிச்சயம் கலைத்தே விட்டு அவர்களை […]

சசிகலா நீதிபதி முன் ஆஜராகவில்லை

தமிழகத்தில் எதெல்லாமோ விவாதிக்கபடுகின்றது, ஆனால் ஒரு விஷயத்தை எந்த ஊடகமும் எழுதவில்லை ஜெயலலிதா என்றொருவர் முன்பு முதல்வராக இருந்தார் பலருக்கு நினைவிருக்கலாம், அவர் அப்பல்லோவில் சிலமாதம் இருந்து இறந்தும் போனார் அது மர்ம மரணம் என அவரை அடக்கம் செய்தபின்புதான் பலர் சொன்னார்கள், அதுவும் பதவி இழந்தபின்புதான் பன்னீர் செல்வம் என்பவருக்கும் சந்தேகம் வந்தது, இவ்வளவிற்கும் ஜெயா அப்பல்லோவில் இருந்தபோது அவர்தான் முதல்வர் அந்த ஜெயாவின் மரணத்தை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி என்பவரை நியமித்தார்கள், அவரும் ஒவ்வொருவராக […]

கிம்மின் மாறிய மனம் இப்படியே இருக்கட்டும், வாழ்த்துக்கள் மிஸ்டர் கிம்

உலகெல்லாம் ஒரு மாதிரியானவர்கள் திருந்தும் நேரமிது பெரியார் சிலை சர்சையில் தமிழிசை கொஞ்சம் திருந்தி இருபது தெரிகின்றது, அமித்ஷா கூட சிலைகளை இடிப்பது கட்சி கொள்கைக்கு எதிரானது(!) என்கின்றார் இப்படி இந்தியாவின் அல்ட்ராசிட்டிகள் அமைதி கொடுக்க, உலகின் மிகபெரிய அல்ட்ராசிட்டியான வடகொரியாவும் ஆறுதல் கொடுத்திருக்கின்றது அதாவது தென்கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை வடகொரியா அனுப்பியதில் இருந்து இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை நடக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது இப்பொழுது தென்கொரிய அரசு குழு வடகொரிய அதிபரை சந்தித்திருக்கின்றது, […]

பெரியார் என்னதான் செய்தார்….

நீ தாழ்த்தபட்டவன் , உன்னை ஆலயத்தினுள் அனுமதித்தால் ஆலயம் தீட்டாகும், கோவில் நிழலில் கூட உன் கால் படகூடாது என விரட்டபட்ட காலத்தில்தான் பெரியார் போரட வந்தார் கடவுளின் பெயரால் மனிதனை அனுமதிக்கா ஆலயத்தின் உள்ளிருப்பது கடவுளாக இருக்கமுடியுமா? என கேட்டார் இந்த எளிய பாமர மக்கள் நுழையா ஆலயம் எதற்கு? கோவில் எதற்கு? என்ற ஆத்திரத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலே அது சாமி அல்ல, கல் என்றார் சில சிலை உடைப்பு போராட்டம் என மண்ணினால் செய்யபட்ட […]

எச்.ராசாவின் அட்மின் பிடிபட்ட தருணம்..

ஏம்பா எச்.ராசா அட்மின், நீ யாருன்னு தெரிஞ்சி போச்சாம், பெரும் படை வந்துகொண்டிருக்கின்றதாம் நீ தப்புவதற்கு ஒரே வழிதான் இருக்கின்றது நாளை எச்.ராசா பெரியார் திடலில் மன்னிப்பு கேட்பார் என ஒரு பதிவினை இட்டுவிட்டால் உன்னை தமிழகம் மன்னிக்க தயார் ராசா நீதான் தவறு செய்தாய் என்கின்றார், நீயே பிராயசித்தம் தேடிக்கொள் என்ன கட்சி இது? ஒருவன் சிக்கிவிட்டால் அப்படியே விட்டுவிடுவார்கள் போல‌ ராசா சிக்கலில் மாட்டினால் கட்சி தலைவர் தமிழிசை அவர் கருத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை […]

பிரம்மோஸ் ரஷ்ய தயாரிப்பு என சொல்லிவிட்டோமாம்….

ஒரு சில அறிவாளிகள் நம்மை மடக்கிவிட்டார்களாம், எப்படி என்றால் இப்படித்தானாம் பிரம்மோஸ் இந்தியாவின் ஆகபெரிய பலம், அப்துல்கலாம் அதில் பணியாற்றினார் என சொல்லி இருந்தோமாம் இப்பொழுது பிரம்மோஸ் ரஷ்ய தயாரிப்பு என சொல்லிவிட்டோமாம் அதனால் ஆங்காங்க கலாய்கின்றார்களாம் இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி சீனாவிலும் ஓடும், இருவருக்கும் முதல் சர்ச்சை அந்த நதியில்தான் வந்தது மாஸ்கோ நதி ரஷ்யாவினுடையது, மாஸ்கோ நகரம் அதன் அருகேதான் அமைந்துள்ளது இந்த அதிவேக ஏவுகனையினை ரஷ்யாவின் சூப்பர்சானிக் ரக மாடலின் கூட்டாக இந்தியாவும் […]

எச்.ராசாவினை விட மகா மோசனானவர்கள் இச்செயலை செய்தவர்கள்

எச்.ராசாவினை விட மகா மோசனானவர்கள் இச்செயலை செய்தவர்கள் எச்.ராசா எப்படி கூமுட்டையோ அதைவிட மகா மோசமான பைத்தியங்கள் பெரியார் இயக்கத்திலும் உண்டு. பன்றிக்கு பூனூல் போட கிளம்பியவை அவைதான் இந்த தண்டிக்க வேண்டிய செயலை அவை செய்ததா இல்லை எச்.ராசாவே ஆள்வைத்து செய்தாரா என்பது இன்னொரு கோணம் இச்செயலை செய்தவனையும், ராசாவையும் ஒரே சட்டம், ஒரே தண்டனை, ஒரே சிறையில் அடைக்க வேண்டும்  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications