பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகின்றார் தங்க தலைவி

மயிலும் அன்னபறவையும் சந்தித்த மகா அற்புதமான தருணத்தை நினைவு கூர்ந்து ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகின்றார் தங்க தலைவி சங்கத்து சார்பாக தலைவியின் துயரில் பங்கெடுத்து , தொடங்கிவிட்ட இறுதி ஊர்வலத்தில் ஶ்ரீதேவிக்கு அஞ்சலியினை தெரிவிக்கின்றோம் இன்னும் ஶ்ரீதேவி உடல் தகனம் கூட நடைபெறவில்லை அதற்குள் ஶ்ரீதேவி நாடார் சாதியா? பிராமணரா? இல்லை தாய்வழி போல இல்லை தெலுங்கரா எனும் பெரும் ஆராய்ச்சிக்குள் பலர் சென்றாயிற்று. இங்கு நிற்கின்றான் தமிழன். அப்படியே துபாய் மருத்துவமனையில் புகுந்து ஶ்ரீதேவி பிளட் […]

இந்தியாவின் தாரகை ஶ்ரீதேவியின் சாதனை அழியாதது : கமலஹாசன்

இந்தியாவின் தாரகை ஶ்ரீதேவியின் சாதனை அழியாதது : கமலஹாசன் அது எப்படிண்ணே? மையம் மய்யம் ஆகுது, தாரகை தாரகய் அல்லது தாரக அய் அப்படித்தானே வரணும்? மய்யத்திற்கொரு கொள்கை? மயிலுக்கு ஒரு கொள்கையா ஆண்டவரே? இத்தனை லட்சம் பேர் தனக்காக அழுவதை ஶ்ரீதேவி ஆன்மா பார்த்துகொண்டிருக்கும் அரசியலில் இறங்காமல் போயிவிட்டோமோ என அது கலங்குமோ இல்லையோ, மதுரையில் மேடை ஏற்றியிருக்கலாம் என கமலஹாசனின் உள்மனம் சொல்லிகொண்டிருக்கும் ஒருவேளை அடுத்த கூட்டத்தில் கமல் தன்னை அழைத்துவிடுவாரோ என ஶ்ரீதேவி […]

ஜெயா சிலையில் மாறுதல் செய்வார்களாம் …

எதனை செய்தாலும் அதில் முழு கவனத்தோடு செய்பவர் கலைஞர், அண்ணாவிற்கும் பெரியாருக்கும் எத்தனையோ சிலைகள் வைத்தார், யாரும் ஒரு குறை சொல்லமுடியாத அளவு நேர்த்தியொடு அவை அமைந்தன‌ அவர் அமைத்த கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் கூடம் என எல்லாமே வலுகவனமாக அமைக்கபட்டவை புதிய சட்டமன்ற கட்டடத்தை இரவு பகலாக பார்வையிட்டு வடிவமைத்தார் கலைஞர். பொதுவாக தேர் என்றால் அவருக்கொரு விருப்பம், ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்ற அரசியலின் அடிநாத கொள்கை அதில் ஒளிந்திருக்கலாம், கலைஞரின் […]

புஷ்பவனம் குப்புசாமி கோபசாமி ஆகிவிட்டார்

தமிழக இசையியல் மற்றும் கவின்கலை பலகலைகழகதுறை துணைவேந்தர் பதவி கைவிட்டு போனதிலிருந்து புஷ்பவனம் குப்புசாமி கோபசாமி ஆகிவிட்டார். தென்னகத்து சுடலைமாட சாமியாக ஆடிக்கொண்டிருப்பவரை கண்டால் கொஞ்சம் அச்சமாகவே இருக்கின்றது அவரின் மனைவியோ மாரியம்மா என பக்தர்கள் ஆடுவது போல கடும் சீற்றம் தம்பதி சகிதமாக இருவரும் ஆக்ரோஷ பேட்டி கொடுப்பதை பார்த்தால் விரைவில் கோவன் ஸ்டைலில் புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பாடலோடு கிளம்பினாலும் ஆச்சரியமில்லை. “கோட்டையில இருக்குதொரு  நன்றி கெட்ட சாமி அதனை போல துரோகி உண்டா  […]

தமிழக மயிலுக்கு ஆழ்ந்த அஞ்சலி

ஒரு சில நடிகர்களே விவரம் தெரிந்த வயதிலிருந்து கடைசி மூச்சு வரை நடிகர்களாகவே இருந்தார்கள். அவ்விஷயத்தில் எம்.ஆர் ராதா முன்னோடி, கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு இருந்தது, அவரே கெடுத்துகொண்டார். நடிகைகளில் அப்படி வாழ்ந்த ஒரே நடிகை ஶ்ரீதேவி, அதில் சந்தேமே இல்லை, கிட்டதட்ட 4 வயதில் நடிக்க வந்தவர். மிக சிறியவயதிலே வந்த நடிகை அவர்தான். மழலை நட்சத்திரம் , குழந்தை நட்சட்திரம் போன்ற நடிகையாக இருந்தேதான் அவரால் படிக்கவும் முடிந்தது , அதுவும் அதிகமில்லை அவரின் […]

ஜெயலலிதா சிலை….

ராமசந்திரன் “புரட்சிதலைவன்” ஆன தமிழகத்தில் , சசிகலா “தியாக தலைவி” ஆன கட்சியில் நடிகை “காந்திமதி சிலை” “ஜெயலலிதா சிலை” என அறிவிக்கபடுவதில் என்ன ஆச்சரியம்? ஆனால் காந்திமதிக்கு சிலைவைக்கும் அளவிற்கு அதிமுகவில் ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சரியம், அதுவும் ஜெயா இறந்தபின்னால் பகிரங்கமாக வைத்திருக்கின்றார்கள் ஆக தமிழகத்தை ஆளும் யோகம் காந்திமதிக்கும் இருந்திருக்கின்றது, அதை அறியாமல் செத்து போயிருக்கின்றார் அந்த காந்திமதி  

கேரளாவில் அரிசிக்காக ஒருவன் அடித்து கொலை

கேரளாவில் அரிசிக்காக ஒருவன் அடித்து கொல்லபட்டிருக்கின்றான், மாபெரும் கொடுமை இது கடவுளின் சொந்த மாநிலமாம் அது, வளமைக்கு குறைவில்லை அங்கே ஒருவன் உணவுக்கு வழியின்றி அரிசி திருடியிருக்கின்றான், அடித்து கொன்றுவிட்டார்கள் கேரளாவில் மழை அதிகம், மலையும் அதிகம் அரிசி அவ்வளவாக விளையாது, அந்த நதிகளை கிழக்கே தமிழகத்திற்கு திருப்பிவிட்டால் இங்கே அரிசி முப்போகம் விளையும் கடவுள் ஒரிடத்தில் செழுமையும் அதனை அடுத்து வறட்சியும் படைத்து வைத்திருப்பது மனிதன் சரியாக நடந்துகொள்கின்றானா, பகிர்ந்து வாழ்கின்றான என சோதித்து பார்பதற்காக, […]

காஞ்சிபுர முதியோர் இல்லம் …

அந்த காஞ்சிபுர முதியோர் இல்லம் பற்றி எழுதினால் அது கிறிஸ்தவ இல்லம் அதனால் நீ மறைத்துவிட்டாய் என்கின்றார்கள், மறைக்க விரும்பினால் அந்த சம்பவத்தையே தொட்டிருக்க வேண்டாம் அக்கால மிஷினரிகள் நோக்கம் உன்னதமாக இருந்தது, பல கல்லூரிகளும் முல்லைபெரியாறு போன்ற அணைகளும், வேலூர் மருத்துவனை போன்றவைகளும் கிடைத்தன‌ இப்பொழுது 1 மிஷினரி உண்மை என்றால், 99 மிஷினரிகள் போலி என்பது ஒன்றும் ரகசியமல்ல. இந்த மோசடியில் பலரகம் உண்டு நெல்லுக்கு பாயும் நீர் தனக்கும் பாயட்டும் என்பது போல […]

சந்தண கட்டை சாமியார்

பதஞ்சலி பாபாராம்தேவ் என்பவரின் வியாபாரங்களில் சந்தணகட்டையும் வந்துவிட்டது . மனிதர் சிகப்பு சந்தன கட்டையினை ஆந்திர அரசிட்ம இருந்து முறைப்படி வாங்கியிருக்கின்றார். ஆனால் அதனை ஏற்றுமதி செய்ய முடியாது என சட்டமிருந்தும் அதனை மீறி சீனாவிற்கு விற்க முயற்சித்து சிக்கியிருக்கின்றார் சாமியார்கள் மீது நடவடிக்க்கை இருக்காது எனும் நவீன இந்திய தத்துவபடி அவர் சிக்கபோவதில்லை ஆனால் “சந்தண கட்டை சாமியார்” என்றாவது அழைக்கலாம்

முதியோர் இல்லங்கள் பணஆசையில் நடத்தபடும் வியாபாரங்கள்

பல முதியோர் இல்லங்கள் பணஆசையில் நடத்தபடும் வியாபாரங்கள், அதில் முதியோர்கள் பணம் கறக்கும் பொருள் என்றுதான் இதுவரை கேள்விபட்டிருக்கின்றோம் கவனிக்கவில்லை, உணவு கொடுக்கவில்லை என்றுதான் புகார்களும் பல சர்ச்சைகளும் வருமே தவிர இப்படி ஒரு கொடூர குற்றசாட்டு வரவில்லை தமிழகத்தில் முன்பு காஞ்சிபுரத்தை கோவில் நகரம் என்பார்கள் , பட்டு நகரம் என்பார்கள், அண்ணா காலம் வரை அந்த நற்பெயர் இருந்தது இப்பொழுதெல்லாம் பெரும் ரவுடிகள் அங்கிருந்துதான் வருகின்றார்கள், மானிட குலம் அஞ்சும் அளவு மகா கொடூர […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications