பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை : பன்னீர் செல்வம்

திராவிட இயக்கம் இருக்கும்வரை தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலுன்ற முடியாது என தான் கூறியக் கருத்து, மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை : பன்னீர் செல்வம் அதாவது இவர் சொல்வதற்கு எல்லாம் வேறு அர்த்தம் என செய்தியாக்கிவிடுகின்றார்களாம், அன்னார் மிகுந்த வேதனையில் இருக்கின்றார் அதனால் இவர் துணை முதல்வராக இருப்பதற்கு என்ன அர்த்தம் என யாரும் கேட்டுவிட கூடாது என மறைமுகமாக கோரிக்கை வைக்கின்றார்.  

இந்திய வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருக்கிறது: சீனா

இலங்கை துறைமுகத்தை சீன ராணுவப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்திய வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருக்கிறது: சீனா இரண்டும் தனிதனி செய்திகள், ஆனால் நடந்திருக்கும் விஷயத்தின்படி சீனா சொல்லியிருப்பது விஷயம் அல்ல விஷமம் அதாகபட்டது இலங்கையில் சீனா வலுவாக காலூன்றிவிட்டது, அதனை முடக்கும் விஷயத்தில் இந்தியாவிற்கு வெற்றி இல்லை. முன்பு அமெரிக்க கால்பதிப்பினை இந்திராவும் ராஜிவும் விரட்டியது போல பாஜகவினால் முடியவில்லை விளைவு என்னாயிற்று? அன்று இரண்டாம் திட்டமாக ராஜிவினால் தொடங்கபட்ட […]

ஸ்டாலின் என்ன செய்யபோகின்றாரோ?

கர்நாடக முதல்வரைச் சந்திக்க முதல்வர் பழனிச்சாமி எங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின் எதற்கு? அப்படியே சசிகலா முன்னால் இருவரும் செல்பி எடுத்துவிட்டு வரவா? கூட உதயநிதியினையும் அழைத்து செல்லலாமா? ஸ்டாலின் தான் கேட்டிருக்கின்றார் என்றால், இந்த குதிரைபேர அரசுடன் நீங்கள் ஏன் வரவேண்டும் என கேட்க அங்கும் ஆளில்லை. ஆளும்கட்சியுடன் இணைய ஸ்டாலின் விரும்புவதை விட, இங்குள்ள எதிர்கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் சேர்த்து பெரும் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பதே இப்போதைக்கு திமுக தேவை அதனால் […]

ஜீயர் சோடாபாட்டில் விவகாரம் என்னாயிற்று

அந்த ஜீயர் சோடாபாட்டில் விவகாரம் என்னாயிற்று என தெரியவில்லை, அவர் வருத்தம் தெரிவித்தார் என்றார்கள் ஆனால் யாரிடம் தெரிவித்தார் என சொல்லவில்லை சோடா பாட்டிலிடம் தெரிவித்திருக்கலாம் ஆனால் திமுகவினர் அட்டகாசமாக ஸ்கோர் செய்யும் இடம் இது, பரிதாபமாக‌ விட்டுவிட்டார்கள். கலைஞர் நலமாக இருந்தால் எப்படி சொல்லியிருப்பார். “வன்முறை அவர்களுக்கு புதிதா? ஒரு காலத்தில் உடன்கட்டை என இளம்பெண்களை துடிக்க கொன்றவர்கள்தானே அவர்கள்? அதனைபோல் எத்தனை பெரும் கொடுமைகளை எல்லாம் செய்தார்கள்? , அவ்வளவு ஏன்? பெரியார் மீது […]

அன்புசெழியன் என்ன அஹிம்சைக்கான காந்தி விருது பெற்றவரா?

அன்புச்செழியன் தேடப்படும் குற்றவாளி கிடையாது, என் குடும்ப விழாவில் பங்கேற்றதில் தவறு இல்லை: செல்லூர் ராஜூ பின் அன்புசெழியன் என்ன அஹிம்சைக்கான காந்தி விருது பெற்றவரா? அவர் மேல் தவறில்லை என்றால் ஏன் ஓடி ஒளிகின்றார் அவர் தேடபடும் குற்றவாளி இல்லை என்றால் இவர் அவரை பேனர் வைத்து வரவேற்றால் என்ன? அசோக்குமாரின் தற்கொலை தமிழகத்தை உலுக்கிய விவகாரம், அதில் தேடபடும் அன்புசெழியன் இன்னும் சரணடையவில்லை வாக்குமூலம் வழங்கவுமில்லை, நீதிமன்றம் அவரை விடுவிக்கவும் இல்லை இந்நிலையில் அவரை […]

கலைஞரை சந்தித்த கதை….

கலைஞரை சந்திக்க முயன்றபொழுது முதலில் உறுதிகொடுத்தவர் எல்லோரும் நழுவிவிட்டார்கள், காரணம் பொங்கல் நாளில் தொண்டர்களை சந்தித்ததில் கலைஞர் உடல் சற்று தளர்ந்திருந்தது என்றார்கள். அவரை சந்திக்கும் வாய்ப்பு குறைவானது போல் தோன்றிற்று Somas Kandhan அவர்களை அழைத்து வந்திருப்பதை சொன்னபின் அவர் பெரும் முயற்சி செய்தார், 18ம் தேதி மாலை சந்திக்கலாம் என உறுதியாக சொன்னார். சென்னை நெரிசலுக்கு தப்பி ஒரு வழியாக மாலை 7 மணிக்கு கோபாலபுரத்தை அடைய முடிந்தது. கலைஞரின் வீட்டினை அடையாளம் கண்டு சென்றாயிற்று […]

முருக பக்தர்கள் இன்று தை பூசத்தை கொண்டாடுகின்றார்கள்

உலகெல்லாம் வாழும் முருக பக்தர்கள் இன்று தை பூசத்தை கொண்டாடுகின்றார்கள் நட்சத்திர மண்டலத்தின் 8ம் நட்சத்திரமான பூசம், தைமாதத்தில் பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் தைபூசம் கொண்டாடபடும் முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று. இந்நாளில்தான் அன்னை பார்வதி அசுரரை அழிக்க முருகனுக்கு வேல் கொடுத்தார் என்கின்றது புராணம் இந்நாளுக்காக மார்கழி மாதமே முருக பக்தர்கள் விரதம் ஆரம்பிப்பார்கள், அது துளசி விரதம் என அழைக்கபடும். நாளெல்லாம் கந்த சஷ்டி கவசம் எல்லாம் பாடி அவரை தொழுவார்கள், […]

இந்திய பயணம் இனிதாகவே முடிந்தது…

அவிழ்த்து விடபட்ட கன்று ஒன்று தொழுவத்தில் கட்டபட்டாயிற்று, செக்கு மாட்டின் கழுத்தில் நுகத்தை பொருத்தியாயிற்று அதாவது சங்கம் இந்திய பயணத்தை முடித்துவிட்டு திரும்பிவிட்டது. எத்தனையோ பயணங்களை செய்தாலும் இப்பயணம் வாழ்வில் மறக்க முடியாது, அந்த அளவு நண்பர்கள் நெகிழ செய்திருக்கின்றார்கள், சிறிய கொடியில் பெரும் பூசனி காய்ப்பது போல இந்த முகநூல் எனும் சிறிய முயற்சி ஏராளமானவர்களை பெற்று கொடுத்திருப்பது அங்கு சென்றபின்புதான் தெரிந்தது நண்பர் Kennedi M G விமான நிலையத்திற்கே வந்திருந்தார், அவர் இல்லத்திற்கு அழைத்து அற்புதமான […]

ஓரளவு அர்த்தமுள்ள எதிர்ப்பு அது…

திராவிடர் திருநாளை முன்னிட்டு ஜனவரி 15, 16ல் பறையாட்டம் ஒயிலாட்டம் நடக்கும் : திராவிட கழகம் அறிவிப்பு தமிழரின் தனிபட்ட இசைகருவி யாழ், பண்டைய தமிழ் இலக்கியம் அதனைத்தான் சொல்கின்றது, அதனை போன்ற பல உண்டு, வீணை கூட தமிழர் மரபில் ஒன்றுதான் அவற்றை எல்லாம் இசைக்க மாட்டார்கள், ஏனென்றால் யாழும் தெரியாது, அதனை இசைக்கவும் தெரியாது, வரலாறும் தெரியாது சும்மா எதனையாவது போட்டு அடித்து இதுதான் தமிழர் இசை, நடனம் என சொல்லி ஏதாவது செய்ய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications