பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு இந்தியா வந்தார்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு இந்தியா வந்தார் ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பின் வாங்கியது, இஸ்ரேலுடனான டாங்க் எதிர்ப்பு ஏவுகனை ஒப்பந்தத்தை ரத்து செய்தது போன்ற பல விவகாரங்களுக்கு பின் இஸ்ரேல் அதிபர் இந்தியா வந்திருக்கின்றார் இஸ்ரேலிய பிரதமர் ஒன்றும் சாமன்யம் அல்ல, உளவுதுறை ராணுவம் என எல்லாவற்றிலும் பணியாற்றிவிட்டு பதவிக்கு வந்திருக்கும் ஜெகஜால கில்லாடி மோடியுடன் சிரித்து பேசினாலும் அவரின் உள்மனம் இப்படித்தான் சொல்லும் “நான் யாருண்ணு உலகத்துக்கே தெரியும், நீர் யாருண்ணு எனக்கு தெரியும், […]

பூ பூக்கும் மாதம் தை மாதம்

எத்தனை கோடி பொங்கல் வாழ்த்து வந்தாலும் தலைவியின் “பூ பூக்கும் மாதம் தை மாதம்.” எனும் பொங்கல் வாழ்த்திற்கு ஈடாகாது. தலைவி அட்டகாசமாக தொடங்கிய‌ “பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு” எனும் பாடல் வரிதான் இன்று தமிழர் கீதம் டிவி, வானொலி எல்லாம் அந்த பாடலையே பரப்பி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து கொண்டிருக்கின்றது இனி காணும் பொங்கலுக்கும் தலைவியின் “போவாமா ஊர்கோலம்..” பாடலையே தமிழர்கள் கேட்க போகின்றார்கள் குஷ்பு தமிழர் வாழ்வில் கலந்துவிட்டவர் என […]

அடக்க முடியா ஜல்லிகட்டு காளை இதுதான்…

தமிழகத்தில் ஜல்லிகட்டு தொடக்கம் : செய்தி இந்த ஜல்லிகட்டு பந்தயத்தில் சூதாட்டம் நடக்குமா, இல்லையா என்பது பற்றி இதுவரை செய்தியில்லை. காளையினை பற்றி அறிந்தவர்கள் இடையே ரகசியமாக நடக்கலாம் நம்மை பெட் கட்ட சொன்னால் மிக தில்லாக இந்த காளை மீதுதான் கட்டுவோம், இதனை அடக்க எந்த கொம்பனும் இல்லை. அடக்க நினைத்தவனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தில்லாக திமில் குலுங்க நிற்கின்றது அடக்க நினைத்து தொட்டவன் எல்லாம் குடல் சரிந்து கிடக்கின்றான், கொஞ்சம் பேர் கிரவுண்டுக்கு […]

மாடுகளை கொண்டாட வேண்டமா?

சும்மா இருக்கும் நேரம் எல்லாம் மாடு, மாடு என கட்டிகொண்டு அழுவது, ஆனால் மாட்டுபொங்கலுக்கு ஒரு சத்தமும் இல்லை, வாழ்த்துமில்லை உண்மையான மாட்டு அபிமானிகள் என்றால் நாளை ஒவ்வொரு மாட்டுக்கும் வாழ்த்து சொல்லி மாடுகளை கொண்டாட வேண்டமா? இப்படி எல்லாம் இருந்தால் எப்படி தமிழகத்தில் காவி கொடி பறக்கும்? எப்படி தாமரை மலரும் அக்கோய் தமிழிசை, நாளை கமலாயத்தில் 4 மாடுகளுக்கு வைக்கோல் போட்டு, சாணி அள்ளாவிட்டால் உங்கள் கட்சியின் மாட்டு அபிமானம் மீது மக்களுக்கு பெரும் […]

ஜனவரி 15, 16ல் பறையாட்டம் ஒயிலாட்டம் நடக்கும் : திராவிட கழகம் அறிவிப்பு

திராவிடர் திருநாளை முன்னிட்டு ஜனவரி 15, 16ல் பறையாட்டம் ஒயிலாட்டம் நடக்கும் : திராவிட கழகம் அறிவிப்பு தமிழரின் தனிபட்ட இசைகருவி யாழ், பண்டைய தமிழ் இலக்கியம் அதனைத்தான் சொல்கின்றது, அதனை போன்ற பல உண்டு, வீணை கூட தமிழர் மரபில் ஒன்றுதான் அவற்றை எல்லாம் இசைக்க மாட்டார்கள், ஏனென்றால் யாழும் தெரியாது, அதனை இசைக்கவும் தெரியாது, வரலாறும் தெரியாது சும்மா எதனையாவது போட்டு அடித்து இதுதான் தமிழர் இசை, நடனம் என சொல்லி ஏதாவது செய்ய […]

வேலுநாச்சியார், ஜான்சிராணி வழிவந்த அந்த வீரமங்கை

நேதாஜியுடன் இத்தேசத்திற்காக போராடிய அந்த வீரப்பெண் இனி இல்லை, நேதாஜியோடு போராடியவர்களில் எஞ்சி இருந்த மிக சிலரில் ஒருவரான ராஜாமணி இனி இல்லை வேலுநாச்சியார், ஜான்சிராணி வழிவந்த அந்த வீரமங்கை இனி இல்லை இத்தேசத்தின் மிகபெரும் தியாகி அவர், எந்த போராளிக்கும் குறையாத தியாகம் அவர் செய்தது. வரலாற்றில் வாழும்பொழுது மறைக்கபட்ட பெரும் தியாகி, இத்தேசம் இன்னும் அவரை அங்கீகரிக்கவில்லை அவர் பர்மாவின் மிக செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் அப்பொழுது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. பர்மாவில் […]

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகி பெயரினை வைத்துவிடலாம்

மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட விசிக உண்ணாவிரதம் : செய்தி ஏற்கனவே முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என ஒரு கோஷ்டி சொல்லிகொண்டிருக்கின்றது நாளை கமல் அரசியலுக்கு வந்தால் மருதநாயகம் பெயரை வைக்க வேண்டும் என சொன்னாலும் சொல்வார் இதற்கெல்லாம் ஒரே தீர்வாக பேசாமல் கண்ணகி பெயரினை வைத்துவிடலாம்.

ஆர்.கே நகரில் பணம் கொடுத்து…

ஆர்.கே நகரில் பணம் கொடுத்து வென்றார்கள் என எல்லா கட்சிகளும் சொல்லிகொண்டிருக்கின்றன, அது ஆச்சரியமல்ல‌ அப்படி எல்லாம் அல்ல‌, எங்கள் தொகுதி பணத்திற்கு விலை போகும் தொகுதி அல்ல , நாங்கள் பணம் வாங்கி வாக்களிக்கவில்லை என ஒரு ஆர்.கே நகர்வாசியாது சொல்வார் என எதிர்பார்த்தால் ஒருவரும் சொல்லவில்லை அல்லவா? அதுதான் மகா ஆச்சரியம் ஆக மறைமுகமாக பணம் வாங்கியதை ஒப்புகொள்கின்றார்கள், வாழ்க ஜனநாயகம்

எல்லா வளங்களும் எல்லோருக்கும் பொங்கட்டும்

மனிதகுலம் தோன்றி, வேட்டையாடுதலை விட்டு ஆற்றங்கரையில் விவசாயம் தொடங்கி நிலையாக வாழ ஆரம்பித்தபொழுதே நாகரீக வாழ்வு ஆரம்பமாயிற்று. மயன் நாகரீகம்,எகிப்து,சுமேரியா,சிந்து வெளி,சீனா என பெரும் பழைய நாகரீகங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் மிக பழமையானது ஆதிச்சநல்லூரில் புதைந்துகிடக்கும் பழம்நாகரீக உலகம். அதுதமிழனின் அடையாளம் என்பதற்காக இன்றுவரை அதில் கவனம் செலுத்தபடவில்லை, இன்னும் செலுத்தவும் மாட்டார்கள். ஆயிரம் உண்மைகளை கொண்டு உறங்கிகொண்டிருக்கின்றது அது, உறங்கட்டும் காலம் வரும் வரை உறங்கட்டும். அதைத்தான் மறைக்கமுடியுமே தவிர, அந்த தமிழ் நாகரீக வேளான்மை […]

விஜய் சேதுபதி, பார்த்திபன் உட்பட 11 பேருக்கு பெரியார் விருது : வீரமணி அறிவிப்பு

விஜய் சேதுபதி, பார்த்திபன் உட்பட 11 பேருக்கு பெரியார் விருது : வீரமணி அறிவிப்பு வளர்மதிக்கு இலக்கியத்திற்கான பெரியார் விருது என்பதே சர்ச்சையான நிலையில் இவர்களுக்கு எதற்கு பெரியார் விருது? பெரியார் விருதுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? போகிற போக்கில் தகுதியான நபர்களுக்கு விருதுவழங்கும் ஒரே கமிட்டி என ஜெயமோகனின் விஷ்ணுபுரம் கும்பல்கள் விரைவில் கிளம்பும், அதனை நினைத்தால்தான் பகீர் என்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications