பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மனைவி லதா நிழலாக வருகின்றார்

முன்பெல்லாம் ரஜினி தனியாகத்தான் எல்லா விழாவிற்கும் வருவார், ஆனால் இப்பொழுதெல்லாம் மனைவி லதா நிழலாக வருகின்றார் எப்பொழுதிலிருந்து? அந்த லதா ரஜினி எம்.ஜி.ஆர் போல நல்லவர் என சொன்னதில் இருந்து பெண்கள் எப்பொழுதும் சில காரியங்களில் மகா கவனமாகவே இருக்கின்றார்கள்..   Like

திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா? : கனிமொழி

திருச்சியில் கனிமொழி சர்ச்சை பேச்சு பேசியிருக்கின்றார், “திருப்பதி உண்டியல் பணத்திற்கு காவலர் எதற்கு? பகவானுக்கு சக்தி இல்லையா?” என்று பேசியிருக்கின்றார் இதெல்லாம் நிச்சயம் நல்ல பலனை கொண்டுவராது, வெறும் கடவுள் மறுப்பு ஒருவோட்டு கொண்டுவராது என்றுதான் அண்ணாவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என ராகத்தை மாற்றினார் கலைஞர் பிராமணர்களை சாடுவாரே அன்றி, இம்மாதிரி விஷயங்களை எல்லாம் கவனமாக கையாள்வார். என்னதான் பகுத்தறிவு பேசினாலும் திருவாரூர் தேரை எல்லாம் பழுதுபார்த்து கொடுத்து சில காரியங்களில் கவனமாக இருப்பார். […]

போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் : தமிழிசை

போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் , பஸ்களை அரசுடைமை ஆக்கி, நஷ்டத்தில் தள்ளிவிட்டதே திராவிட கட்சி ஆட்சியாளர்களின் சாதனை : தமிழிசை சீற்றம் அதானே, எல்லா விஷயங்களையும் அம்பானி போல தனியாரிடம் கொடுத்தால் அக்காவும் அவர் கட்சியும் மிக்க சந்தோஷபடும் போல‌ தனியார்கள் கையில் இருந்த போக்குவரத்து கழகத்தை ஏழை மக்களும் பலன்பெறும் வகையில் திராவிட கட்சிதான் மாற்றியது, எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது சிக்கல் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த அதிமுக […]

ஞான பீட விருது யாருக்கு

ஞான பீட விருது யாருக்கு என்ற சர்ச்சையில் இந்த மாபெரும் இலக்கியவாதியின் பெயரை எப்படி மறக்கலாம் நன்றி கெட்ட தமிழகம் இந்த மாபெரும் இலக்கியவாதியினை மறந்த பின் அந்த தமிழகம் எப்படி நிம்மதியாக இருக்கும்? எப்படி பேருந்து ஓடும்? ஓடவே ஓடாது.

குஷ்பு இல்லாத‌ மலேசிய நட்சத்திர விழா

நட்சத்திரங்கள் மட்டும் நிரம்பிய நிலவில்லா வானம் போல இருந்தது குஷ்பு இல்லாத‌ மலேசிய நட்சத்திர விழா என சொல்லி சலித்து கொள்கின்றது மலேசியா ரஜினிக்கு அடுத்து குஷ்புவினைத்தான் மலேசிய மக்கள் தேடியிருக்கின்றார்கள் என செய்திகள் சொல்கின்றன, அந்த அளவு உலகெல்லாம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கின்றார் குஷ்பு #தலைவிடா..

அக்கோவ், கனிமொழி அக்கோவ்….

கடவுளை நம்பும் பக்தர்கள் விபத்தில் அடிபட்டால் கோவிலுக்கு ஓடாமல் மருத்துவமனைக்கு தானே ஓடுகிறார்கள்? : கனிமொழி விபத்தில் அடிபட்டால் மருத்துவமனைக்குத்தான் ஓட வேண்டும், அங்குதான் ஓடுவார்கள் , அது இல்லாமல்  சிஐடி காலணி வீட்டுக்கா ஓடுவார்கள்? இதென்ன அபத்தம்? சரி பகுத்தறிவாளர்கள் என்ன செய்கின்றார்கள்? குல்லா வைத்துகொண்டு நோன்பு கஞ்சி குடிக்கவும், கிறிஸ்மஸ் விழா என கேக்வெட்டவும் ஓடுகின்றார்கள் அல்லவா? அதுதான் ஆச்சரியம் கனியக்கா , அக்கோவ், கனிமொழி அக்கோவ். இங்கே பூஜை செய்வது எப்படி என அய்யரிடம் […]

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு ஒப்பானது : திவாகரன்

போக்குவரத்து துறையின் இந்த அவல நிலைக்கு திராவிட கட்சிகளே காரணம் , பஸ்களை அரசுடைமை ஆக்கி, நஷ்டத்தில் தள்ளிவிட்டதே திராவிட கட்சி ஆட்சியாளர்களின் சாதனை : தமிழிசை சீற்றம் அதானே, எல்லா விஷயங்களையும் அம்பானி போல தனியாரிடம் கொடுத்தால் அக்காவும் அவர் கட்சியும் மிக்க சந்தோஷபடும் போல‌ தனியார்கள் கையில் இருந்த போக்குவரத்து கழகத்தை ஏழை மக்களும் பலன்பெறும் வகையில் திராவிட கட்சிதான் மாற்றியது, எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது சிக்கல் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த அதிமுக […]

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மலேசியாவில் கொடுத்த பேட்டி….

சமீபத்திய பேட்டிகளிலே பரபரப்பானது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மலேசியாவில் கொடுத்த பேட்டிதான் அன்னார் விளம்பர ஆட்டம் போட்டதும் அதனை அடுத்து நடிகர் சங்க கட்டடம் கட்ட 2.5 கோடி கொடுத்ததும் பழைய செய்தி, உடனே “நானும் ரவுடிதான்” படத்தில் 10 லட்சத்தை பார்த்ததும் எப்படி ஆனந்த ராஜ் விஜய்சேதுபதியினை கொண்டாடுவாரோ அப்படி நடிகர் சங்கமும் “நீயும் நடிகன்யா வாய்யா” அன்னாரை சேர்த்து கொண்டு மலேசியா பறந்தது மலேசியாவில் அவர் பேட்டி கொடுத்திருக்கின்றார், விளம்பரத்தில் நடிக்கும் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா […]

நாம் ரஜினியினை ஆதரிக்கவில்லை

நாம் ரஜினியினை ஆதரிக்கவில்லை, அவர் கட்சி எல்லாம் அல்ல‌ ஆனால் ஜனநாயக நாட்டில் ரஜினியினை வரவேண்டாம் என சொல்ல சீமானுக்கு என்ன உரிமை? அதனைத்தான் கண்டிக்கின்றோம் இந்நாட்டில் மதசார்பற்ற அரசு வேண்டும் என்பதிலும், இம்மாநிலத்தில் சுயாட்சியினை பாதுகாக்கும் அரசும் வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை “மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி..” என்பதே இங்கு சரியான‌ நிலைப்பாடு, இந்நாட்டின் ஒருமைபாட்டுக்கும் ஒற்றுமைக்கும் மாநில உரிமை பாதுகாப்பிற்கும் அதுவே உகந்தது  

மிகபெரிய புளுகுமூட்டை அந்த புத்தகம்

ராஜிவ் கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் புலி ஒரு புத்தகம் எழுதிவிட்டாராம், பெரும் ரகசியங்கள் உடைகின்றன என சிலர் ஒரே ஒப்பாரி ஒரு ரகசியமும் உடையவில்லை, மாறாக திசை திருப்ப நினைக்கின்றார்கள் புத்தகம் சொல்வது என்னவென்றால், சிவராசன் மாத்தையா தரப்பு புலியாம், பிரபாகரனுக்கு தெரியாமலே வந்து இந்திய உளவுதுறையினரை சந்தித்தானாம், பின் ராஜிவை கொன்றானாம். அதாவது சிவராசனை வழிநடத்தியது வெளிநாட்டு சக்தியாம்,, (பின் என்ன மண்ணாங்கட்டிக்கு சிவராசன் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை பொட்டு அம்மானுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications