பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் தலைவர் முக அழகிரி

ஓஹோ.. திமுக எப்படி வோட்டு வாங்கும் எனும் ரகசியம் இவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் போல‌ ஒருவேளை இவரிடம் இருந்துதான் தினகரன் அந்த ரகசியத்தை களவாடி வென்றிருப்பாரோ? இனி “செயல்தலைவர்” பக்கத்தில் “தேர்தல் தலைவர்” என அழகிரியினை அமர்த்தாவிட்டால் அவ்வளவுதானா?  

வியுகம் வரவில்லை என சொல்லி நாள் கடத்தலாம்னு இருக்கேன் : ரஜினி

“ரசிகர்களோட சந்திப்புன்னு நடத்துறோம், இப்போ ரசிகர்னு சொல்லிட்டு அந்த வாடகை பாக்கிக்காரன் வந்து லதா வாடகை தரலேன்னு சொன்னா நல்லா இருக்காது பாபாஜி எப்படியாவது அவன வரவிடாம பண்ணிருங்க, நானே வீரம் வந்துட்டு ஆனால் வியுகம் வரவில்லை என சொல்லி நாள் கடத்தலாம்னு இருக்கேன்”

பேனசிரின் நினைவு நாள் இன்று…

இஸ்லாமிய நாடு ஒன்றில் ஒரு பெண் பிரதமாராக இருந்தார் என்ற முதல் பெருமைக்குரியவர் பேனசிர் பூட்டோ, அவரை தொடர்ந்தே வங்கதேசத்தில் பெண் பிரதமர் வந்தார்கள் இஸ்லாமிய நாட்டினை ஒரு பெண் வழிநடத்துவதா என்ற குரல்கள் கேட்கதொடங்கின, ஆனாலும் அசராமல் நடத்தினார் பேனசிர் இருமுறை அந்நாட்டின் பிரதமராக இருந்தாலும் , பூட்டோவினை விரட்டிய சக்திகள் பெனசிரையும் குறிவைத்தன‌ காரணம் பூட்டோவிற்கும், பேனசிருக்கும் கட்டுபாடான பாகிஸ்தான் பிடிக்கவில்லை. துபாய், துருக்கி போன்ற மதத்தால் இஸ்லாமாக ஆனால் நவீன உலகோடு ஒட்டிவரும் […]

இதோ.. பலுசிஸ்தான் தனிகொடி பிடிக்கின்றது….

இந்தியா பிரியும் பொழுது பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கு பலுசிஸ்தான் மக்கள் இந்தியாவோடே இருக்க விரும்பினர், ஜின்னாவின் பாகிஸ்தான் அவர்களுக்கு பிடிக்கவில்லை எல்லை காந்தி கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார் மூன்று துண்டாக உடைந்த இந்தியா 4 துண்டுகளாக உடையும் நிலை வந்தது, நாங்கள் தனிநாடாக இயங்கமாட்டோம் மேற்கு இந்தியா கிழக்கு இந்தியா என இயங்குவோம் […]

எஸ்.வி சேகர் என்பவரின் பாஜக அக்கறை…

இந்த எஸ்.வி சேகர் என்பவருக்கு பாஜக அக்கறை பொத்துகொண்டு வந்திருக்கின்றது, தமிழிசையினை மிக மோசமாக திட்ட தொடங்கியிருக்கின்றார் பாஜக கட்சி ஆயிரம் வோட்டு வாங்கி இருப்பதே மிக பெரும் சாதனை, அந்த சாதனைக்கு சொந்தக்காரர் தமிழிசை தமிழிசையும் இல்லை என்றால் அக்கட்சி 10 வோட்டு கூட வாங்கி இருக்காது, அந்த நன்றியும் சேகருக்கு இல்லை பொதுவாக தமிழகத்தில் கட்சி வளர்க்கவேண்டும் எனும் எண்ணம் பாஜகவிற்கு சுத்தமாக இல்லை, இங்கிருக்கும் பாஜகவினருக்கும் இல்லை, சும்மா பெயருக்கு ஒன்றை வைத்துகொண்டு […]

மிகபெரும் சக்தியாக வளரும் எங்கள் தலைவிக்கு வாழ்த்துக்கள்

தன் அகில இந்திய செய்தி தொடர்பாளர் எனும் பதவிக்கு ஏற்ப டெல்லியில் மிக அட்டகாசமான பேட்டியினை கொடுத்திருக்கின்றார் தலைவி குஷ்பு பென்கள் பாதுகாப்பு பற்றி மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார், தினகரன் நல்ல அரசியல்வாதி ஆகமுடியாது என மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார் இந்திய அளவில் கோலோச்சும் பிஜேபி தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது என முழங்கியிருக்கின்றார் ரஜினியின் அரசியல் ஆட்டம், திருநாவுக்கரசரின் புலம்ப, மோடி கலைஞர் சந்திப்பு, ஸ்பெக்டரம் தீர்ப்பு என எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் அட்டகாசமான […]

என்ன சொல்லிவிட்டார் குருமுர்த்தி?

என்ன சொல்லிவிட்டார் குருமுர்த்தி? தமிழக முதல்வர் ஆண்மையற்றவர் என சொல்லிவிட்டாரா? இதற்கா இவ்வளவு சர்ச்சை காந்தி மகனை தன் மகளை காட்டி மயக்கி பதவி பெற்றார் ராஜாஜி என மிக மட்டமான வசைகளை எல்லாம் அன்றே ராஜாஜி மீது பொழிந்த இடம் தமிழகம் மவுண்பேட்டன் மனைவியினை நேரு ரிலேஷின்ஷிப்பில் வைத்து கொள்ள, நேருவுக்கு பயந்தே வெள்ளையன் சுதந்திரம் கொடுத்தான் என கொஞ்சமும் கூச்சமின்றி சொன்னவர்கள் நிறைந்த தமிழகம் இது காமராஜர் ஒரு அலி, காமராஜர் ஆண்மை அற்றவர் […]

அம்மு வெரி பேட் கேள்ர்ல் ஜானு

“இங்க பாரு ஜாணும்மா, பூலோகத்தில் இருந்து இப்போதான் இந்த லெட்டர் வந்துச்சி, அந்த தினகரன் இந்த அம்மு விட அதிக வோட்டு வாங்கி ஜெயிச்சிருக்கானாம் ஆக இவ்வளவு நாளும் இந்த அம்மு கட்சி வளர்க்காம சும்மாவே இருந்திருக்கு, அம்மு இல்லண்ணாலும் சசிகலா அபாரமா ஜெயிச்சிருக்கும் போல இந்த அம்மு வெரி பேட் கேள்ர்ல் ஜானு.”  

குல்பூஷன் விவகாரத்தில் நல்ல முடிவு வர பிரார்த்திப்போம்

ஒரு உருக்கமான செய்தி சுற்றி வருவதை கவனித்திருப்பீர்கள், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் குல்பூஷனை சந்திக்க அவர் தாய்க்கும் மனைவிக்கும் பாகிஸ்தான் அனுமதி கொடுத்திருக்கின்றது இந்த உலகிலே மோசமான, அறவே பாதுகாப்பில்லா அரசு தொழில் உண்டென்றால் உளவுதுறை. ஆனால் அது இல்லை என்றால் பாதுகாப்பு இல்லை என்றால் வள்ளுவரே சொல்லியிருக்கின்றார் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் யார் உண்மையான உளவாளி, யார் தவறாக கைதுசெய்யபட்டார் என சொல்ல முடியாது. சிக்கும் வரை சிக்கல் இல்லை சிக்கிவிட்டால் அவரை காப்பாற்ற […]

அதிமுகவின் சொத்து குவிப்பினை கண்டு கொள்ளாமல் இருந்தது திமுக-தானே?

ஆர்.கே நகரில் தினகரன் பெரும் பணம் கொடுத்துவிட்டார் என திமுக புலம்பிகொண்டிருக்கின்றது தினகரன் என்ன அண்ணமலை செட்டி வம்சமா? இல்லை ஐதரபாத் நிஜாம் வகையறாவா? இல்லை யூதனை போல உலகளாவிய தொழில் செய்தவரா? 1989வரை அந்த குடும்பத்திடம் சல்லி காசு கிடையாது, 1991க்கு பின் குவித்தார்கள், அதன் பின் வந்த திமுக என்ன செய்தது? வோட்டு ரீதியாக அவர்களை முடக்கும் வேலை செய்தார்களே ஒழிய சசிகலா குடும்ப சொத்துக்களையோ அது பெருகும் விதத்தையோ கட்டுபடுத்தவே இல்லை அவர்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications