பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை

பெரும் பரபரப்பினை எற்படுத்திய வழக்கும், திமுகவிற்கு பெரும் நெருக்கடி என கருதபட்டதுமான ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யபட்டுவிட்டனர், நியாயம் வென்றிருக்கின்றது. திமுக எனும் யானையினை காயபடுத்தி கட்டுபடுத்தி பயமுறுத்திய சங்கிலி உடைத்தெறியபட்டிருகின்றது கலைஞர் டிவியும் முடக்கத்தில் இருந்து தப்பிவிட்டது நீதிக்கும் , நேர்மைக்கும், கண்டிப்பிற்கும் பெயர் போன நீதிபதி ஷைனி தன் சுத்தமான தீர்ப்பில் தன் பெருமையினை தக்க வைத்துகொண்டார் எவ்வளவு பெரும் பூகம்பாக அது வெடித்தது? 2 லட்சம் கோடி ஊழல் என்றார்கள், […]

கச்சதீவு விவகாரத்தில் என்ன நடந்தது?

கச்சதீவினை இந்தியா ஏன் கொடுத்தது என பலர் பொங்குகின்றார்கள், வழக்கமாக பொங்குபவர் யாரென்றால் சீமான் கோஷ்டி. மற்றபடி அதிமுக திமுக இரண்டும் மாறி மாறி குற்றம் சொல்லும் ஆனால் டெல்லியிடம் மண்டியிட்டு நின்றுகொள்ளும் உண்மையில் கச்சதீவு விவகாரத்தில் என்ன நடந்தது? கச்சம் என்றால் ஆமை, ஆமைகள் மட்டும் ஒதுங்கும் தீவு அது, மனிதர்கள் வாழமுடியா தீவு. இலங்கை மற்றும் தமிழக மீணவர்கள் வலைகளை உலர்த்தி இளைப்பாறும் இடம் அது. மீணவர்களுக்கு காவலான புனித அந்தோணியார் ஆலயம் 100 […]

இந்த அருவி மாதிரி படம் எடுய்ய்யா…..

“ஏம்பா சீமான், உனக்கு அரசியல் வரல்ல , வரவும் வராது, போய் இந்த அருவி மாதிரி படம் எடுய்ய்யா எனக்கு அந்த அருவி மாதிரி பெண்களை உருவாக்கத்தான் தெரியும், தம்பிகளும் அதான் செய்றாங்க, ஆனால் அந்தமாதிரி படம் எல்லாம் எடுக்க தெரியாதுங்க அய்யா….”

இந்திராவினை போல் பல மாநிலங்களை ஆள்கின்றோம், பாஜக பெருமிதம்

இந்திராவினை போல் பல மாநிலங்களை ஆள்கின்றோம், பாஜக பெருமிதம் பல மாநிலங்களை ஆண்டுவிட்டால் இந்திரா போல் ஆகிவிடுவீர்களா? அந்த அம்மணி இருந்தவரை பாகிஸ்தான் அரண்டு இருந்தது, இலங்கை அவரின் காலடிக்குள் இருந்தது, நேப்பாளம் அஞ்சி இருந்தது, சீனாவே தன் வாலை சுருட்டி இருந்தது. ஆசியாவின் சக்திமிக்க நாடு என்பதை மிக ஆணித்தரமாக காட்டி நின்றார் இந்திரா. அப்படி ஆளமுடியமா? அவர் சாதனையில் எதனை நீங்கள் தொட்டுவிடுவீர்கள் சொல்லுங்கள்? அட இந்த‌ இலங்கையினை அடக்கிவிட முடிகின்றதா? திரிகோணமலையில் அமெரிக்கா […]

இன்று ஆர்.கே நகரில் மட்டும் அல்ல, ஐ.நா சபையிலும் தேர்தல் நடக்கின்றது

இன்று ஆர்.கே நகரில் மட்டும் தேர்தல் அல்ல, ஐ.நா சபையிலும் தேர்தல் நடக்கின்றது அதாவது ஜெருசலேம் தொடர்பாக டிரம்ப் அறிவித்த அறிவிப்பினை திரும்பபெற கோரி சில நாடுகள் ஐ.நா பொதுசபையில் இன்று தீர்மானம் வருகின்றது முன்னதாக பாதுகாப்பு சபையில் வந்த தீர்மானத்தை அமெரிக்கா தன் வீட்டோ பவர் மூலம் முறியடித்தது இப்பொழுது பொதுசபைக்கு விஷயம் வந்திருக்கின்றது, அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் கூட எதிர்த்து வாக்களிக்கலாம் எனும் நிலை இருப்பதால் அமெரிக்கா இப்படி எச்சரிக்கின்றது “எதிர்த்தா வாக்களிப்பீர்கள்? அளியுங்கள். […]

“நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கும் போல பெரியம்மா…”

“பாத்தீர்களா பெரியம்மா, ஸ்பெக்டரம் விசாரணை நடந்தபொழுது உங்களுக்கு அல்மைசர், நினைவே இல்லை என சொல்லி மருத்துவ சான்றிதழ் கொடுத்தார் அப்பா இன்று தீர்ப்பு வரும்பொழுது அவருக்கே அல்மைசர் வந்துவிட்டது, எப்படி தீர்ப்பு வந்தாலும் உணரும் நிலையில் அவர் இல்லை. நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கும் போல இருக்கு பெரியம்மா”

என்னையும் ஒரு எழுத்தாளனாக மதித்து….

சங்கம் வைத்து குஷ்பு புகழ் வளர்த்தும் அவர் வீட்டு வாட்ச்மேன் கூட , அட அவன் கால் ஷூ கூட‌ கண்டுகொள்ளா உலகில், என்னையும் ஒரு எழுத்தாளனாக மதித்து , வோட்டு கேட்கும் அளவிற்கு சென்றுவிட்ட பிள்ளாய், நீர் யாரென தெரியவில்லை உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது சாமி….நீ ரொம்ப நல்லா இருப்பப்பா.. நல்லா இருப்ப‌ என் கல்லீரல் கிட்னி எல்லாம் உனக்குத்தாம்பா, எது வேணுமோ எடுத்துக்க‌    

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications