பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெருசலேம் விவகாரம் விஸ்வரூபமாகின்றது

இந்த ஜெருசலேம் நகர் சர்ச்சை பெரும் விவகாரமாகின்றது. இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றன, துருக்கி ,மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் பெரும் எதிர்ப்பு குரலை எழுப்புகின்றன‌ அதிலும் துருக்கி கிழக்கு ஜெருசலேமில் எங்கள் தூதரகத்தை அமைப்போம் என பகிரங்கமாக மிரட்டுகின்றது ஆனால் இஸ்ரேல் கள்ளசிரிப்பு சிரிக்கின்றது அதாவது அமெரிக்கா மேற்கு ஜெருசலேமில் தூதரகத்தை திறந்து அதனை இஸ்ரேலிய தலைநகர் ஆக்கினால், கிழக்கு ஜெருசலேமில் துருக்கி தூதரகத்தை அமைத்து அதனை பாலஸ்தீன தலைநகராக்குவோம் என்கின்ற ரீதியில் பேசுகின்றது […]

திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் ஆரம்பம்…

எதிர்பார்பினை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள் வந்தாயிற்று. மக்கள் பாஜகவிற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். பெரும் அதிருப்தி என அவர்கள் எதனையும் உணரவில்லை போலிருகின்றது. பாஜக அரசு தொடரலாம் என அனுமதித்துவிட்டார்கள் பாஜக அதன் அசுர பலத்துடன் தொடர்கின்றது என்பதற்கு எடுத்துகாட்டான விஷயங்கள் இவை. இந்த வெற்றி இனி அவர்களை உற்சாகத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்த சொல்லும் காங்கிரஸின் நிலை படுமோசமில்லை. அக்கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கின்றது. அந்த ஜாதி வெறியன் ஹிர்திக் பட்டேலை கூட்டு சேர்த்ததுதான் சிக்கலோ […]

குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிவிட்டன

“அய்யோ பரமா சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா… ஏதாவது செய்யணும் பரமா..” ஆத்தா S Prema உங்க பார்ட்டி ஜெயிச்சிட்டு, அதுக்காக ரொம்ப சிரிக்காதீங்க‌ இந்த குழந்தை பையன் பயந்துபோயிட்டேன் , அந்த லட்டு கொடுத்திங்கண்ணா வாங்கிட்டு ஓடிபோயிருவோம், அப்புறமா சிரிச்சிக்கோங்க‌ குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிவிட்டன, இனி அக்கும்பல் கொண்டாடி தீர்க்கும் போல‌ வோட்டுமெஷின் எல்லாம் குறை சொல்லமுடியாது. அதில் தில்லுமுல்லு என்பது சச்சினின் மட்டையில் ஸ்பிரிங் உண்டு என்பது போல் அபத்தமானது, வேறு காரணங்களை வேண்டுமானால் தேடலாம் […]

அந்த கவியரசிக்கு வாழ்த்துக்கள்

அந்த பெண் கவிஞர் நிச்சயம் வாழ்த்துகுரியவர், தமிழகத்தில் அவ்வையாருக்கு பின் பெண் கவிஞர்கள் குறைவு, அதுவும் தமிழக திரையிசைபாடல்களில் பானுமதி என்பவர் ஏதோ எழுதினார் என்பார்கள் உறுதியான செய்தியில்லை. ஆனால் பெரும் போராட்டத்திற்கு பின் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர் அவர், எளிதில் பிடித்துவிட்ட இடம் அல்ல அது. Kavignar Thamarai , அவர் பாடல் எழுத வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டதாம் கவிஞர்களில் அவர் கொஞ்சம் வித்தியாசமானவர், ஆச்சரியமானவர் . சுத்த தமிழ்வார்த்தைகளில்தான் பாடல் எழுதுவேன் என […]

குஜராத் ஓட்டு எண்ணிக்கை இன்று துவக்கம் : செய்தி

குஜராத் ஓட்டு எண்ணிக்கை இன்று துவக்கம் : செய்தி “மிஸ்டர் மோடி, ஜெயிச்சிருவோமா? ஜெயிச்சாலும் சந்தோஷம், ஜெயிக்கா விட்டாலும் சந்தோஷம்ணா அதானே, தோற்றால் உமக்கு என்ன நஷ்டம்? எனக்குத்தான் நஷ்டம். என் கைகாசு தானே செலவாயிருக்கு” ஆர்.கே.நகர் தொகுதியை வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி மு.க முத்துவினை கலைஞர் குடும்பத்தில் பேணி பாதுகாத்தது போலவா?  

செங்கொடி கதாநாயகனுக்கு வீரவணக்கம்

உலகம் அந்த இரும்பு மனிதனை மறக்க முடியாது. வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர் செருப்பு தைத்த தொழிலாளியின் மகன் உலகையே ஆட்டிய பெரும் சக்த்தியாக மாறிய அதிசயம் அவர். பிறப்பால் அவர் ரஷ்யர் அல்ல, ஜார்ஜியா நாட்டுக்காரர் ஆனால் லெனினின் பொதுவுடமை போராட்டத்தில் அவரோடு நின்றார், சிறைசென்றார், வெளிவந்து ஆயுதமேந்தினார் கிட்டதட்ட 20 வருடம் லெனினோடு போராடி ரஷ்ய புரட்சியில் பெரும்பங்கு வகித்து சோவியத் யூனியன் அமைக்க காரணமானவர் ஸ்டாலின் லெனினுக்கு பின் சோவியத்தில் குழப்பம் […]

நமக்கு எப்பவுமே தொடங்க தெரியுமே தவிர முடிக்க தெரியாது

நமக்கு எப்பவுமே தொடங்க தெரியுமே தவிர முடிக்க தெரியாது பாபர் மசூதியினை இடித்தோம் அதன்பிறகு என்ன செய்ய என இன்றுவரை தெரியவில்லை பசுமாடு முக்கியம் என்போம் , காக்கவேண்டும் என்போம் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதும் தெரியாது கருப்பு பண ஒழிப்பு என்போம் அதிரடியாக தொடங்குவோம், அதற்கு பின் என்ன செய்ய என தெரியாமல் விழிப்போம் பணமதிப்பினை ஒழித்து பொருளாதாரம் வளர்ப்போம் என்போம், பணமதிப்பு ஒழிப்பினால் ஏற்படும் சிக்கலில் முழிப்போம் இப்பொழுது வங்கி பக்கம்வந்திருக்கின்றோம், ஏதாவது அழிச்சாட்டியம் […]

அடுத்தவருடம் பிறக்க போகின்றதா?

என்னது? இருவாரத்தில் இந்த வருடம் முடிந்து அடுத்தவருடம் பிறக்க போகின்றதா? அதற்குள்ளகவா? எங்கள் தலைவிக்கு இன்னொரு வயது ஏறபோகின்றதா? கொஞ்சமும் தாங்க முடியவில்லை. ஏ பூமியே கொஞ்சம் மெதுவாக சூரியனை சுற்றி தொலை….  

இதே டிசம்பர் 17ல்தான் முதன் முறையாக விமானம் பறந்தது…

மானிட குலம் முன்பொருமுறை பெரும் ஞானத்துடன் இருந்திருக்கின்றது, பறக்கும் விமானம் முதல் இன்று காணும் பல விஷயங்கள் அவர்களுக்கு சாத்தியமாகியிருக்கலாம் என்கின்றார்கள் ஆனால் பின்பு சுத்தமாக அழிந்திருக்கின்றது, பெரும் அழிவு நடந்திருக்கின்றது. குமரி கண்ட அழிவு என இப்பக்கமும், அட்லாண்டிஸ் கண்ட அழிவு என அப்பக்கமும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உலகம் அழிந்த கதை இந்து புராணங்களிலும் , பைபிளிலும் சொல்லபட்டிருகின்றது அதன் பின் வந்த மனிதன் எல்லாவற்றையும் புதிதாக தொடங்க வேண்டியிருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக விட்டுபோன அந்த ஞானத்தை […]

சோனியா அப்படி என்ன சாதித்துவிட்டார் எஎந கேட்போருக்கு ….

சோனியா அப்படி என்ன சாதித்துவிட்டார் என சிலர் கேட்கின்றார்கள், அது கொஞ்சம் சில நாட்டு அரசியல்களை பார்த்துவிட்டு வந்தால்தான் தெரியும் பக்கத்து நாட்டு பாகிஸ்தானையே எடுத்துகொள்ளுங்கள். அங்கு பூட்டோ என்றோருவர் இருந்தார். பாகிஸ்தானுக்கு அவர் நல்லதைத்தான் செய்தார். அணுகுண்டு இல்லா பாகிஸ்தானை இந்தியா நேரம் போகாத பொழுது எல்லாம் இனி போட்டு அடிக்கும் என்பது வங்கப்போருக்கு பின் விளங்கிற்று அணுகுண்டு செய்வது என தீர்மானித்து, அதில் இறங்கி சிலரை நம்பி பின் அமெரிக்கா பாகிஸ்தானின் அணுதிட்டத்தை தூக்குவதா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications