பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அழுகை அரசியல் ஆரம்பித்துவிட்டது

குஜராத் தேர்தலை வைத்து உங்கள் அரசியல் சண்டைக்கு எங்கள் நாட்டை ஏன் இழுக்குறீர்கள் என பாஜகவிற்கு பாக். கண்டனம் அட அவர்கள் சும்மாவே அழுவார்கள், இனி விடுவார்களா? உலகெல்லாம் சென்று அழுவார்கள். மோடியின் அழுகையினை விட பாகிஸ்தானின் அழுகை மகா கொடூரமாக இருக்கும் பொறுத்து பாருங்கள் ஆக அழுகை அரசியல் ஆரம்பித்துவிட்டது

தோல்வி வந்துவிடுமோ என கலங்கும் மோடி…

பல விஷயங்களில் தோல்வியும், மேற்கொண்டு தோல்வி வந்துவிடுமோ எனும் கலக்கமும் ஒரு மனிதனை பெரும் விரக்திக்கும் அலறலுக்கும் உள்ளாக்கிவிடும் என்பதற்கு பாரத பிரதமரே பெரும் சாட்சி இல்லாவிட்டால் அகமது பட்டேலை குஜராத் முதல்வராக்க பாகிஸ்தானும் மணிசங்கர அய்யரும் மன்மோகன் சிங்கும் சதி செய்கின்றனர் என புலம்புவாரா? அப்படி சதிசெய்ய வேண்டுமென்றால் பதவியில் இருந்தபொழுது மன்மோகன்சிங்கால் செய்திருக்க முடியாதா? இப்பொழுதுதான் செய்ய வேண்டுமா? என்ன பைத்தியகாரதனம் இது, அபாண்டமான பொய். இதனை அக்கட்சியின் அடிப்பொடிகளோ இல்லை வழக்கமான உளறல்காரர்களோ […]

மீன்களை போலவே மீணவரின் அழுகையும்

கன்னியாகுமரிக்கும் எங்கள் ஊருக்கும் வெறும் 30 கிமீட்டர்தான் தூரம், ஆனால் இன்னும் பல குளங்கள் அப்பகுதியில் நிரம்பவில்லை என்றால் அப்பகுதி எப்படி என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் அப்படியும் சில பகுதிகள் இருக்கின்றன, இயற்கை சதி, பராமரிப்பு இல்லா கால்வாய்கள், அணை கட்டுகின்றேன் என கிளம்பிய அரசுகள் என இதற்கு பல காரணங்கள் குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு எத்தனை பேர் தயார் என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம், தெரிந்தே தற்கொலை செய்ய பலர் தயாராக இல்லை […]

ரஜினி அங்கிள்தான் கியூட்

இந்த ரஜினிகாந்த் என்பவர் மீது நமக்குத்தான் அவரின் அரசியல் மோசடி காரணமாக அபிமானம் இல்லையே தவிர உலகெல்லாம் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள், குறிப்பாக குழந்தைகள் அதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய், சீன , ஜப்பான் குழந்தைகள் என்றல்ல. எல்லா குழந்தைகளுக்கும் அவரை பிடிக்கின்றது அதில் என் அருமை மகளும் சேர்ந்துவிட்டாள், நானும் அண்ணாமலை, பாண்டியன் என எத்தனையோ படங்களை காட்டி பார் அந்த ஆண்டிதான் அழகு என்றாலும் “இல்லப்பா ரஜினி அங்கிள்தான் கியூட்” எனும் அளவிற்கு […]

ஒரே தாஜ்மஹால்.. ஒரே குஷ்பு

ஆசியாவின் அழகான பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்ததாக ஈஸ்டர்ன் ஐ எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது அது ஈஸ்டர்ன் ஐ அல்ல ஈஸ்டர்ன் பிளைண்ட் எனும் குருட்டு பத்திரிகையாக இருக்க வேண்டும் உலகின் அழகான ஒரே பெண் என குஷ்புவினை இவ்வுலகம் என்றோ அங்கீகரித்தபின்னும் பிரியங்கா எனும் பூனைகண்ணும், பசுமாட்டு உதடும் கொண்ட பெண் அழகி என்றால் எப்படி இந்த ஈஸ்டர்ன் ஐ பத்திரிகையினை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது, சங்கத்தின் சட்ட நிபுணர்கள் அதன் மேல் […]

விஷாலுக்கு அரசியல் என்றால் என்ன என விளங்கிகொண்டிருகின்றது

ஒருவழியாக விஷாலுக்கு அரசியல் என்றால் என்ன என விளங்கிகொண்டிருகின்றது ஆர்.கே நகரில் விரட்டபட்ட கொஞ்ச நேரம் கூட தாமதிக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தில் வரிந்து கட்டி நிற்கின்றார்கள் சேரன், டி.ஆர் என இம்சை தாளவில்லை இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள் என தெரியவேஇல்லை, இப்பொழுது ஏன் வந்தார்கள் எனவும் தெரியவில்லை தயாரிப்பாளர்களை கதற வைக்கும் அன்புசெழியன் பற்றி கேட்டால் அவரை போலீஸ் தேடும், எங்களுக்கு விஷால்தான் குறி என ஒரே அழிச்சாட்டியம் மைக்கேல் ராயப்பன் போன்ற தயாரிப்பாளரை காணவில்லை சிம்பு […]

பாரதி பிறந்தநாள் இன்று

மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன். அவன் எங்கள் நெல்லை மண்ணின் அறிவின் அடையாளம், பொதிகை மலை பெற்ற‌ தமிழ்த்தாயின் தலைமகன் ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, அதில் அவன் தவறு என்ன இருக்கிறது? விதி. 6 வயதில் கவிதை எழுதினார், […]

நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை புறக்கணித்த இந்தியா : செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை புறக்கணித்த இந்தியா : செய்தி அதாவது அணுசக்தி ஒழிப்பு தொடர்பான விவகாரங்களில் இந்தியா அக்கறைகாட்டவில்லை என அணுவுலை எதிர்ப்பாளர்கள் பொங்குகின்றார்கள், அப்படி சென்றால் நம்மை ஏதும் ஒப்பந்ததிற்கு இழுத்துவிடுவார்கள் என இந்தியா யோசிக்கின்றது சரி இது வேறு விஷயம் இப்போதைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை இந்தியா ஏன் புறக்கணித்தது என செய்தி அதிமுகவினரை எட்டினால் என்னாகும்? “எங்கள் இதய தெய்வம் அம்மாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்காததை கண்டித்து […]

காற்றினிலே வரும் கீதம் கேட்டு கொண்டே இருக்கும்

இசை என்பது ஒரு ஆசீர்வாதம், கடவுளின் வரம் மிக சிலருக்கே அந்த பிராப்தம் வாய்க்கின்றது. அதனை முறைபடி பயன்படுத்தியவர்கள் மிக பெரும் உயரத்தை அடைகின்றார்கல், தாம் பிறந்த நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றார்கள், அவர்களின் ஒருவர்தான் “இசை பேரரசி” என அழைக்கபட்ட எம்.எஸ் சுப்புலட்சுமி மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி உலகிலே தாயின்பெயரை இன்சியலாக கொண்ட மிக சிலரில் அவரும் ஒருவர், காரணம் துயரமானது. தாய் பாடகி எனினும் தந்தை சுப்பிரமணிய அய்யர் என்பதை பின்னாளில்தான் அறிந்தார், அதனால் தாயின் […]

இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா வளைத்தாயிற்று

ஒரு வழியாக இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா வளைத்தாயிற்று. பெரும் பணம் கொடுத்து அதனை அவர்கள்தான் நிர்மாணம் செய்தார்கள் இப்பொழுது 99 வருட குத்தகைக்கு எடுத்தாயிற்று, இது இந்தியாவிற்கு நிச்சயம் அச்சுறுத்தல், எவ்வளவோ முயன்றும் இந்தியாவால் அதனை தடுக்க முடியவில்லை திரிகோணமலை அங்கு மிகமுக்கியமான இடம், இன்னும் இந்திய கட்டுப்பாட்டிலே இருக்கின்றது என்பது ஆறுதலான விஷயம் என்றாலும் அதற்கு மிக அருகில் ஹம்பாந்தோட்டாவில் சீனா கால்வைத்திருப்பது நல்ல அறிகுறி அல்ல‌ இது எங்கள் கடல்வணிகத்திற்கான பாதையில் ஓய்வெடுக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications