பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லட்சுமி படம் பெரும் விவாதபொருள் ஆகிவிட்டது

லட்சுமி படம் பெரும் விவாதபொருள் ஆகிவிட்டது, ஊடகங்கள் எல்லாம் விவாதிக்க தொடங்கிவிட்டன‌ இதெல்லாம் எதனை சொல்கின்றன என்றால், விரைவில் சிம்புவின் “லெட்சுமணன்” என்றொரு படம் வரவிருப்பதை சொல்கின்றன. சும்மாவே மனிதர் ஆடுவார், இம்மாதிரி விஷயம் கிடைத்தால் விடுவாரா? மனிதர் மணிரத்னத்திடம் சிக்கிகொண்டார் போல, அந்த மதம் கொண்ட யானைக்கு மணிரத்னம் இந்நேரத்தி சங்கிலி போட்டு வைத்துவிட்டார் இதனால் “லெட்சுமணன்” என்றொரு ஆண் உரிமை படைப்பு தள்ளி போய்கொண்டிருக்கின்றது

அரசின் பிடி ஆளுநர் கையில்தான்

கமலஹாசன், முக ஸ்டாலின் என்றால் பொங்கும் அதிமுக அமைச்சர்கள் ஆளுநர் என்றால் எப்படி பொங்குவார்கள்? அவர் இவர்களை காலில் போட்டு மிதித்தாலும் கட்டி வைத்து அடித்தாலும் பாஷா ரஜினி போல ரத்தம் வழிய வழிய‌ சிரித்துகொண்டே இருப்பார்களேயன்றி எதிர்ப்பு எல்லாம் வராது ஏன்? இந்த அரசின் பிடி ஆளுநர் கையில்தான் இருக்கின்றது, நன்றாக தெரிகின்றது இது உட்கட்சி சிக்கலால் பெரும்பான்மை இழந்து ஆளுநரால் மட்டுமே காப்பாற்றபட்டு கொண்டு இருக்கும் அரசு என்பது அந்த ஆளுநரையா பகைப்பார்கள், ஒரு […]

அண்ணே ரைடு எப்படின்னே?

பாஜக நண்பர் ஒருவர் அழைத்தார் அண்ணே ரைடு எப்படின்னே? மாலிக்காபூர் காலத்திற்கு பின் டெல்லியிலிருந்து பெரும் படை படையெடுத்து வந்தது இப்பொழுதுதான் அப்படித்தாண்ணே, மோடி அரசு சும்மா இல்ல, ஒரு பய தப்பமுடியாது. ஒரு பைசா இருந்தாலும் விட மாட்டாரு அப்படியா, இதில் அரசியல் இல்லையா? சுத்தமா இல்லண்ணே, இத்தன வருஷமும் திராவிட கட்சி எப்படி எல்லாம் சுருட்டிருக்குண்ணு தெரியுதாண்ணே, காங்கிரஸ் கட்சி வோட்டுக்கு பயந்து சும்மா இருந்து, மோடி தைரியசாலிண்ணே ஓஹோ ஆமாண்ணே இன்னும் நிறைய […]

சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் என சொன்ன விஷயம் செல்லூர் ராஜூ போல விமர்சிக்கபடுகின்றது அவர் சொன்னது வியப்பல்ல, அது உலகெல்லாம் நடக்கும் விஷயமே அதாவது மேல் நாடுகளில் வீடுகளும் அதன் அமைப்பும் திட்டமிட்டு கட்டபடுவதால் மனித கழிவுகள் இந்திய வீடுகளை போல குழிக்குள் இறங்குபவை அல்ல, மாறாக தூரமாக ஆழ்பதிந்த குழாய் மூலம் கொண்டு செல்லபட்டு அவை சில வேலைகளுக்கு பின் உரம் ஆக்கபடும் அது விவசாயத்திற்கு பயன்படுத்தபடும், […]

விவேக் வீட்டில் கள்ள துப்பாக்கி சிக்கியது

விவேக் வீட்டில் கள்ள துப்பாக்கி சிக்கியது, அவர் மாமனார் செம்மர கடத்தல் தொடர்புடையவர் என்பதால் இந்த விஷயம் விஸ்வரூபமாகின்றது : செய்தி என்னது விவேக் மாமனார் செம்மரம் கடத்திய கும்பலா? என அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை மன்னார்குடி குடும்பத்தில் நெல்சன் மண்டேலாவும், சே குவாரேயுமா சம்பந்தம் செய்வார்கள், செம்மரம் கடத்தும் கும்பல்தான் சம்ப்ந்தம் செய்யும். ஒரு ஒலிம்பிக் கிராமம் போல ஏகபட்ட உறவுகள் இருக்க, வெறும் 28 வயது பையனிடம் இவ்வளவு பொறுப்பினை கொடுக்கும் பொழுதே […]

நூல்களை அனுப்பிவைத்த அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

நடக்கும் சில விஷயங்களை நினைத்தால் எனக்கே வெட்கமாகவும் அச்சமாகவும் இருகின்றது நானும் ஏதோ எழுத்தாளன் போல பல நண்பர்கள் புத்தகம் எல்லாம் அனுப்பி வைத்து உதவிகொண்டிருக்கின்றார்கள் சமீபத்தில் சரவணன் எனும் நண்பர் அனுப்பியிருந்தார் அதனை வாசித்து முடிக்கும் முன் கு.பா.இளங்கோவன் எனும் பெரியவரும் சில புத்தகங்களை அனுப்பியிருந்தார் ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் உணவோ நீரோ கூட அருந்தாமல் மூழ்கிவிடுவது வழக்கம், குஷ்பூவே வந்தாலும் பார்க்க தோன்றாது ஆனால் கு.மா.பா இளங்கோவன் அவர் தந்தையின் […]

தமிழன் ஆண்டாலும் நிலமை சரி இல்லை

தமிழக மீணவர்களை இந்திய கடற்படையே சுட்டுவிட்டதாக சில தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன‌ நிச்சயம் அம்மாதிரியான துப்பாக்கி சூடுகளை இந்திய பாதுகாப்புபடை செய்திருக்காது, செய்யவேண்டிய அவசியமுமில்லை. தாங்கள் எச்சரிக்கை மட்டும் செய்ததாகவும் சுடவில்லை என்றும் காவல்படை தெரிவிக்கின்றது சுட்ட காயமும் மீணவர்களிடம் இல்லை தமிழரை நடுகடலில் கொன்றே தீரவேண்டும் என்ற அபத்த நோக்குடன் தாக்குதல் நடக்கவில்லை என்பது உறுதி ஏதும் விவகாரம் கிடைக்காதா? ஏய் இந்தியமே என சீற முடியாதா என காத்துகிடந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள் அந்த மீணவரிடம் இந்தியில் விசாரித்தார்களாம் […]

செய்திகள் சில ….

தவறாக பொருள் சேர்க்கும் யாரும் தப்ப முடியாது: விவேக் ஜெயராமன் பேட்டி இவர் சசிகலாவிற்கு சொல்கின்றாரா? இல்லை சிறையில் இருக்கும் தாய்க்கா? இல்லை தினகரனுக்கா? மனிதர் தன் குடும்பத்தில் யாரையோ மறைமுகமாக எச்சரிக்கின்றார், அது யார் என்பதுதான் இப்பொழுது பெரும் கேள்வி. லட்சுமி குறும்பட நடிகை லட்சுமிபிரியா தீவிர கமல் ரசிகை : செய்தி ஒஹோ.. பின் லட்சுமி படம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கும். அதில் ஆச்சரியமில்லை. கூடங்குளம் அணுவுலையில் பொருத்தபட்டுள்ள‌ 50% பொருட்கள் உள்நாட்டு […]

இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை

இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை முதலாவது ஓட்டோமன் பேரரசு பற்றியது, இதுபற்றி Pa Raghavan போன்றோர் பத்தோடு பதினொன்றாக சொல்லியிருக்கின்றார்களே அன்றி அதன் முழு வரலாறு சொல்லபடவில்லை உலகின் போக்கினை மாற்றி நின்ற மிகபெரும் சக்தி அது. அந்த பேரரசுதான் இன்றைய பல மாற்றங்களுக்கு காரணம் அடுத்த விஷயம் இஸ்ரேலிய ராணுவ மேதை மோசே தயான் நிச்சயம் அலெக்ஸாண்டர், நெப்போலியன் வரிசையில் மிக பெரும் ராணுவ மேதை அவர் இஸ்ரேல் என்பது இன்றுவரை நீடிக்கவும், ஆரம்ப […]

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான் மோடியினினை மன்னிப்பு கேட்க சொல்லும் இவர் என்ன நெல்சன் மண்டேலா வகையறாவா? எவ்வளவு பொய்கள்? எவ்வளவு அழிச்சாட்டியம்? முத்துராமலிங்க தேவர் முதல் பெரியார் வரை எத்தனைபேரை சுமந்துவிட்டு குப்புற வீசிய துரோகம் அந்நிய நாட்டு தீவிரவாத கும்பலுக்காக கொடி பிடித்த தேச துரோகம் இன்னும் எத்தனையோ பிராடுகள், இந்தியா பற்றி இல்லா பொல்லா பொய்கள் என அவிழ்த்துவிட்ட இவர், பாரத நாட்டின் நலனுக்காக சில […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications