பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சந்திர சேகர வெங்கட் ராமன்

தமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன் திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர் சந்திர சேகர வெங்கட் ராமன் இயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் […]

கமலஹாசனின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக்கள்

தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் சீனிவாச கமலஹாசன். கடந்த வருடம் வரை அப்படித்தான் இருந்தார், இப்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப‌ செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர். பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜாம்பவான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). அக்காலத்தின் எல்லா நடிகர்களோடும் நடித்தார் இந்த இடைகாலத்தில் அவர் நடனம்,இயக்கம்,எடிட்டிங்,கவிதை,பன்மொழி என சகலத்தையும் […]

புதிதாக ஒரு வில்லங்கம் வந்திருக்கின்றது

பஸ்டாண்டுக்கு வரசொன்ன காலங்களை அடுத்து புதிதாக ஒரு வில்லங்கம் வந்திருக்கின்றது அதாவது மோடி புனிதராம், பாஜக புனித கட்சியாம். எமக்கு நாட்டுபற்று என்றால் என்ன? பிரதமர் என்றால் யார்? அவரை எப்படி புகழ்வேண்டும் என தெரியவில்லையாம் மாண்புமிகு பாரத பிரதமரை எல்லாம் கலாய்க்க கூடாதாம், அது மாபெரும் தவறாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் அப்படி செய்யமாட்டானாம் புனிதமான மசூதியினை இடித்தவன் எல்லாம் எப்படிபட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் என கேட்டால் பதில் இல்லை.மாறாக எமக்கு பல விஷயங்கள் தெரியவில்லையாம். […]

பிரதமர் யார் எது எழுதிகொடுத்தாலும் வாசிப்பாரா?

மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடைக்கோடி வரை கொண்டு சென்றது தினத்தந்தி: பிரதமர் மோடி இவர் என்றைக்காவது தினதந்தி படித்திருப்பாரா? யாரோ எழுதிகொடுத்ததை வாசித்துவிட்டு சென்றிருக்கின்றார். ஒரு பிரதமர் யார் எது எழுதிகொடுத்தாலும் வாசிப்பாரா? காமராஜர் முதல் எந்த தேசியவாதியினையும் ஆதரித்த ஏடு அல்ல அது, நாம் தமிழர் கோஷம் செல்லுபடியாகாததால் பின் திமுக கோஷமிட்டு நேரத்திற்கொரு நடிப்பு நடித்த ஏடு அது பின்பு ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் தொழிலினை செய்தது, செய்கின்றது அது எந்த மக்களின் […]

கலைஞரை சந்திக்கிறார் நரேந்திர மோடி

நான் மட்டும் இல்லீங்க, உங்க தமிழக பாஜக தலைவர்கள் பண்ணுற காமெடியில தமிழகமே சந்தோஷமா சிரிச்ச்சிட்டுதாங்க இருக்கு இந்த சால்வை உங்களுக்காக ஷார்ஜா சுல்தான் கொடுத்துவிட்டதுங்க, அவரும் திமுகவில் ஒருத்தர்தான்”   “இவரை ஏன்யா இங்க கூட்டிட்டு வந்தீங்க.. சும்மா இருந்த நவாஸ் ஷெரிப் கூப்பிடாமலே பாகிஸ்தானுக்கு போய் தலையில கை வச்சவருய்யா இவரு , அதோட நவாஸ் காலி, குடும்பமே ஊழல் வழக்குல சிக்கிட்டு இருக்கு போன்வருஷம் சசிகலா தலையில கைவச்சாருய்யா, அந்தம்மா முடிஞ்சிட்டு இப்போ […]

மானிட குலத்தின் மகத்தான நாள் அந்த நவம்பர் 7

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது அந்த புரட்சி நடந்த நூற்றாண்டு விழா நாளை தொடங்குகின்றது, அந்த செங்கொடி எழுந்து நாளையோடு நூறு ஆண்டுகள் ஆகின்றது ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், பெரியார் அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது. 1917ல் ரஷ்யாவில் எழுந்த செங்கொடி, உலகெல்லாம் […]

பாலா முன்பு குமுதம் ரிப்போர்ட்டரில் வேலை செய்தானா?

என்னது அந்த பாலா முன்பு குமுதம் ரிப்போர்ட்டரில் வேலை செய்தானா? அதெல்லாம் அவன் வேலைதானா? தலைவி பற்றி பெரும் அவதூறுகள் குமுதத்தில் கிளம்பிய காலத்தில் அவன் அங்குதான் இருந்தானா? ஓகே… கொங்கு நாட்டு தங்கம், இரண்டாம் சேரன் இரும்பொறை பொன்மன செம்மலின் வாரிசு, புரட்சி தலைவி இரும்பு பெண்மணியின் எக்கு வாரிசு பழனிச்சாமி வாழ்க. அவரின் பொற்கால ஆட்சி வாழ்க வாழ்க.  

வைகோ பிரபாகரனை சந்தித்த சம்பவத்தை கேட்டு பிரமித்தேன் : நடிகர் சத்தியராஜ்

வைகோ பிரபாகரனை சந்தித்த சம்பவத்தை கேட்டு பிரமித்தேன் : நடிகர் சத்தியராஜ் அதாவது சென்னையில் ஈழம் தொடர்பான புத்தகம் வெளியிட்டார்களாம், அன்னார் இதில் இப்படி சொல்லியிருக்கின்றார் இதே சென்னை மழையில் கலைஞர் ஒரு விழாவில் கலந்திருந்தால் வரிந்து கட்டி கிளம்புவார்கள், ஆனால் இவர்கள் தமிழர்கள் அல்லவா? அதனால் விழா நடத்தலாம் ஏதோ வைகோ என்பவர் மட்டும்தான் உலகிலே பிரபாகரனை சந்தித்தது போல சத்யராஜ் பிரமிக்கின்றாராம் யார் சந்திக்கவில்லை? பண்ருட்டி ராமசந்திரன், பா.சிதம்பரம் என பிரபாகரனின் ஆரம்ப கால […]

அமலா பால் ஜிம்மில் இருக்கும்பொழுது எடுத்த செல்பி

கார்ட்டூன் வெளியிட்டால்தான் கைது செய்வார்களா? இப்படி மக்களை பயமுறுத்தும் தன் சுயபடத்தினை வெளியிடும் அமலா பால் என்பவரை எல்லாம் கைது செய்ய மாட்டார்களா? அம்மணி ஜிம்மில் இருக்கும்பொழுது எடுத்த செல்பி இதுவாம் இப்பொழுதெல்லாம் ஜிம்மில் இருந்து வரும் செல்பி படம் தான் ரொம்ப பேமஸ், ஆனால் ஸ்டாலினை தொடர்ந்து ஏன் அமலா பால் ஜிம் படம் வெளியிட்டிருக்கின்றார்? அவரை கலாய்க்கின்றாரா? ஆக அம்மணி இப்பொழுதே தன் படம் ஹிட் அடிக்க ரகசியமாக பாஜ்கவினரின் ஆதரவினை பெற விரும்புக்கின்றார் […]

கருத்து சுதந்திரம் இல்லாமல் பாலா கைது செய்யபட்டுவிட்டாராம்…

கருத்து சுதந்திரம் இல்லாமல் பாலா கைது செய்யபட்டுவிட்டாராம், பத்திரிகை சங்கங்கள் பொங்கிகொண்டிருக்கின்றன‌ இதே பத்திரிகைகளில் ஒன்று குஷ்பூவினை மிக கீழ்தரமாக விமர்சித்தபொழுதும், இன்னொரு பத்திரிகை அவர் சொல்லாததை சொன்னதாக திரித்து எழுதி எல்லா நீதிமன்றங்களுக்கும் அலையவிட்டதெல்லாம் என்ன வகை? அப்பொழுதெல்லாம் பத்திரிகையாளர்கள் எங்கிருந்தார்கள்? உண்மையான பத்திரிகா தர்மம் எங்கிருக்கின்றது? திமுக அமைச்சர் இருக்கும்பொழுது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வரவேண்டிய இடத்தில் 50 ஆயிரம் கோடி வந்தால் அது ஊழல் என சொன்ன பத்திரிகைகளை பாஜக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications