பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்.எஸ். கிருஷ்ணன் காமெடி ஒன்று உண்டு

என்.எஸ். கிருஷ்ணன் காமெடி ஒன்று உண்டு அவர் தெருவில் நடந்துசெல்வார், ஒரு சிறுவன் கல்லை தூக்கி எறிவான். தலையினை தடவிகொண்டு அந்த சிறுவனை அழைத்து 10 பைசா கொடுப்பார் கலைவாணர் கொடுத்துவிட்டு சொல்வார், ” எனக்கும் என் நண்பருக்கும் குறிபார்த்து எறிபவனை ரொம்ப பிடிக்கும், என் நண்பர் அடுத்துவருவார் சரியாக எரியவேண்டும் , உன் எறி பிடித்திருந்தால் அவரும் உனக்கு காசு தருவார்” என சொல்லிவிட்டு சென்றுவிடுவார் அச்சிறுவனும் பின்னால் வரும் மாமிச மலை மீது பெரிய […]

உபியில் ஜெர்மனி சுற்றுபயணி மீது தாக்குதல்

உபியில் ஜெர்மனி சுற்றுபயணி மீது தாக்குதல் அந்த உபி என்ன நினைத்துகொண்டிருக்கின்றது என்பது விளக்கபட வேண்டும், யோகி முதல்வரானால் அது இந்து ராஜ்ய நாடாகிவிடுமா? அப்படியும் வெளிநாட்டு சுற்றுபயணிகளை தாக்குவது என்ன நியாயம்? சமீபத்தில்தான் சுவிஸ் தம்பதியினை தாக்கினார்கள், அதற்குள் இப்பொழுது ஜெர்மன் பயணி தாக்கபட்டிருக்கின்றார் இனி என்னாகும், கமல் சொன்னதைத்தான் ஐரோப்பாவும் சொல்லும், வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது இது தொடர்ந்தால் இந்தியாவில் “இந்து பயங்கரவாதிகள்” தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதால் ஐரோப்பியர்கள் அங்கு செல்ல வேண்டாம் […]

கார்ட்டூனிஸ்ட் பாலா கார்ட்டூன் கொஞ்சம் ஓவர்தான்

கார்ட்டூனிஸ்ட் பாலா அந்த கார்ட்டூனை எல்லை மீறித்தான் வரைந்திருந்தார், அது கொஞ்சம் ஓவர்தான் ஆனால் சில எச்சரிக்கைகளை கொடுத்துவிட்டு கைது செய்திருக்கலாம். கலெக்டர், எஸ்பி, முதல்வரை கேலிசித்திரம் மூலம் அசிங்கபடுத்திவிட்டார் என அவரை கைது செய்தார்களாம் சைமன் கோஷ்டிகள் இந்த தேசத்தை பேசி பேசி செய்யும் அவமானம் கொஞ்சமல்ல, சிலர் சீனாவே வந்து தமிழ்தேசியம் அமைத்து தா என்றளவில் பகிரங்கமாக பேசிகொண்டிருந்தார்கள் கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு ஒரு நீதி, இவர்களுக்கு ஒரு நீதியா? ஒரு கலெக்டர், ஒரு எஸ்பி […]

கலங்காதே ராசாத்தி காலம் இருக்கு

நன்றாக இருக்கின்றேன் என ஒருவார்த்தை சொன்னால் போதாதா? இந்த வீடியோ அனுப்பாவிட்டால் என்ன? முகத்தில் களைப்போடு, முடியாத நிலையில் ரசிகர்களுக்காக நன்றி சொல்லும் தலைவியினை பார்க்க கண்ணீர் வருகின்றது. இதையெல்லாம் நெஞ்சம் தாங்குமா? ரத்தம் நெஞ்செல்லாம் வழியாதா? “கலங்காதே ராசாத்தி காலம் இருக்கு” வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி.. நியாயத்திற்கு வெற்றி, தர்மத்திற்கு வெற்றி, தமிழக எதிர்காலத்தின் வெற்றி, காலத்தின் வெற்றி வெற்றிமேல் வெற்றி ஆம், தலைவிக்கு நடந்த அறுவை சிகிச்சை மிக வெற்றிகரமாக நடந்து அவர் […]

கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும்

கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் ; ராணுவ தளபதி கோரிக்கை இந்திய ராணுவத்தில் மிக சிறந்த ஜெனரல்களாக கருதபடுபவர்கள் கரியப்பாவும், மானெக்ஷாவும். இருவர்தான் இன்றளவும் பீல்டு மார்ஷல் என்ற தகுதியினை பெற்றவர்கள், வேறு யாரும் பெறவில்லை அந்த பெரும் பெருமையினை பெற்ற கரிப்பாவினை, பல போர்களில் நாட்டினை காப்பாற்றிய அந்த மாவீரன் கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கபடுகின்றது கரியப்பாவிற்கு ஏன் பாரத ரத்னா வழங்கபடவில்லை அது கொஞ்சம் […]

சவுதிக்கும் ஈரானுக்கும் சண்டை மூட்ட முயற்சிகள்

சவுதி ஏமனில் குண்டு வீசி தீவிரவாதிகளை ஒழிப்பதில் மும்முரமாக இருக்கின்றது, தீவிரவாதிகளும் பதிலுக்கு சவுதியில் எப்பொழுதாவது குண்டுவெடிப்பு என பதிலுக்கு தாக்கிகொண்டிருந்தார்கள் இப்பொழுது முதல் முறையாக ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது என செய்திகள் வருகின்றன‌ ஏமன் தீவிரவாதிகள் ஈரானிய கூட்டணி என்பதால் இம்மாதிரி ஏவுகனைகள் அவர்கள் கொடுத்ததாக இருக்கலாம் என சில தியரிகள் ரியாத்தினை குறிவைத்து அந்த ஏவுகனையினை தடுத்துவிட்டததாக சவுதி அறிவித்தாலும், அது குறி தவறி தாக்கியிருக்கலாம் என்பது இன்னும் சிலர் சொல்லும் செய்தி , […]

அட்டகாசமாக நகர்கின்றது அரசு

சென்னையில் சில இடங்களை தவிர சிக்கல் இல்லை என்கின்றன செய்திகள், அரசின் மீது பெரும் குற்றசாட்டு இல்லை ஆச்சரியமாக அது உண்மை, இந்த அரசு அனுபவமே இல்லாதவர்களால் இயக்கபட்டாலும் அரசு இயந்திரம் அட்டகாசமாக இயங்கத்தான் செய்கின்றது மத்திய அரசின் ஒத்துழைப்பு இருக்கின்றது, தமிழக அரசு அதன் வழிகாட்டலில் சிக்கல் இல்லாமல் இயங்குகின்றது. ஒரு சிக்கல் இல்லை, ஒரு இடத்திலும் பழனிச்சாமி அரசு திணறியதாக தெரியவில்லை. அட்டகாசமாக நகர்கின்றது அரசு. அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் எதுவும் நடந்ததாக […]

ஜப்பான் , தென்கொரியா பயணத்தை தொடங்கிவிட்டார் டிரம்ப்

ஜப்பான் , தென்கொரியா நாடுகளுக்கான தன் பயணத்தை தொடங்கிவிட்டார் டிரம்ப் சும்மா செல்லவில்லை, ஒரு வித்தியாசமான சிக்னலை உலகிற்கு காட்டிவிடுத்தான் கிளம்பியிருக்கின்றார் அதாவது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தொடக்கத்தில் ஒதுங்கித்தான் இருந்தது, ஜப்பான் அதன் மீது குண்டு வீசி பல அமெரிக்கர்களை கொன்றபின்புதான் அது களமிறங்கிற்று முதன் முதலில் தன் சொந்த மக்களை, சொந்த மண்ணில் அந்நியரால் அமெரிக்கர் இழந்த முதல் சம்பவம் அதுதான், அந்த கோபம் பின் ஜப்பானில் அணுகுண்டாய் வெடித்தது ஜப்பானுக்கு செல்லுமுன் டிரம்ப் […]

ஆறு, குளங்களை கடவுளாக நினைத்து காக்க வேண்டும் : கமலஹாசன்

ஆறு, குளங்களை கடவுளாக நினைத்து காக்க வேண்டும் : கமலஹாசன் கங்கை நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா நேற்று வாரனாசியில் நடந்தது : இன்னொரு செய்தி ஆக இரு கோஷ்டியும் ஒன்றாகத்தானே பேசிகொண்டிருக்கின்றீர்கள், பின் ஏன் அவர் மீது வழக்கு? இங்கு ஏறகுறைய தினமும் மழை பெய்கின்றது, சில நேரம் அடைமழை கொட்டுகின்றது (தமிழகம் போல விடுமுறை விடுகின்றார்களா என்றால் இல்லை, மழை அவர்களை பாதிப்பதே இல்லை அந்த அளவுக்கு வடிகால் வசதிகள் வைத்திருக்கின்றார்கள்) என்ன நாடு […]

ஐடி கம்பெனிகள் என்ன தமிழக அரசியலா?

ஐடி தொழிலில் பெரும்பாலும் பிராமணர்கள் உயர்பதவி வகிக்கின்றார்களாம், அவர்கள் எப்படி அப்படி உயர்பதவிக்கு செல்கின்றார்கள் என தெரியவில்லையாம் ஐடியில் ஒரு பெரியார் உருவாகாமல் இதில் முடிவு வராதாம், அந்த பிராமணர்களை அடித்து வீழ்த்தி எல்லோருக்கும் எல்லாமும் கம்பெனியில் கிடைக்க வேண்டுமாம் இன்னொரு கோஷ்டி வித்தியாசமானது அதாவது ஐடி தொழிலில் தெலுங்கர்கள் அதிகமாக இருக்கின்றார்களாம், எங்கு பார்த்தாலும் வந்தேறி தெலுங்கர்களாம் அதாவது அமெரிக்காவிற்கு வந்தேறியாக சென்றிருக்கும் தமிழனே அவனையும் வந்தேறி என சொல்லிகொண்டிருக்கின்றான், இரண்டு பயலும் அமெரிக்காவிற்கு வந்தேறி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications