பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கால் பந்து வீரர் மாரடோனா பிறந்த தினம்

கால்பந்து ரசிகர்களுக்கு அவர் என்றும் அபிமானத்திற்குரிவர். கிரிக்கெட்டில் பிராட்மேன், சச்சின் என்றொரு வரிசை உண்டென்றால் கால்பந்தில் பீலே, மாரடோனா என்றொரு வரிசை நிச்சயம் உண்டு 1980களின் கால்பந்து உலகம் அவருக்கானது, அவருக்காகவே ஆட்டங்கள் நடத்தபட்டன, கிட்டதட்ட 12 ஆண்டுகாலம் கால்பந்து உலகம் அவரை சுற்றியே சுழன்றது. அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையினை அவர்தான் பெற்றுகொடுத்தார். 1986ல் அவர் ஆடிய ஆட்டம் அபாரமானது, நொடிபொழுதில் தட்டிய கோல் இன்றுவரை கடவுளின் கை என்றே சொல்லபடுகின்றது. கால்பந்து விதிமுறைபடி அது சர்ச்சை […]

சன்னி லியோன் சீற்றம்

என் கணவர் இல்லாதபொழுது என்னை இரவில் மிரட்டுகின்றார்கள், கதவினை தட்டுகின்றார்கள், கையில் கத்தியோடு சுத்துகின்றேன், அவன் கையில் கிடைத்தால் சொருகி விடுவேன் : சன்னி லியோன் சீற்றம் ஏராளமான‌ நடிகைகள் திரையுலகில் என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லும் பொழுது, சன்னிக்கு அப்படி சொல்லமுடியாது, காரணம் அவரின் “நடிப்பு” அப்படி. என்னையும் கையினை பிடித்து இழுத்தார்கள் என சன்னி சொன்னால், உலகம் வாய்விட்டு சிரிக்கும். அம்மணி வேறு என்ன செய்ய முடியும், இப்படித்தான் சொல்லிகொள்ள முடியும் […]

அமலா பால் , பொன்னார் , வீரமணி

வரி ஏய்ப்பில் சிக்கினார் நடிகை அமலா பால் அதாவது அம்மணிக்கு பென்ஸ்கார் வாங்க ஆசை, ஆனால் நேரடியாக வாங்கினால் வரி அது இது என கறந்துவிடுவார்கள் என அஞ்சிய அவர் புதுச்சேரியில் ஒரு போலி முகவரி மூலம் கார் வாங்கியிருக்கின்றார் இதனால் கேரள அரசின் வருமானம் குறைந்துவிட்டதாம், நிலமை சிக்கலாகின்றது அம்மணி மீது புகார் நிரூபிக்கபட்டால் சிறைதான் என்ன செய்வது? இதற்குத்தான் ஏதாவது ஒரு கட்சியில் இருக்க வேண்டும் என்பது, இருந்தால் அரசியல் பழிவாங்கல் என சொல்லி […]

காஷ்மீர் விவகாரம்

அரசியல் செய்ய ஆயிரம் காரணம் தேடலாம், ஆனால் சில விஷயங்களை வைத்து அரசியல் செய்ய கூடாது, அதனை சோதித்து பார்ப்பதே தவறு காஷ்மீருக்கு தன்னாட்சி என காங்கிரஸ் சொல்லியிருப்பது கண்டிக்கதக்கது. நம்மோடு இணையும்பொழுது என்ன ஒப்பந்தம் போடபட்டதோ அந்த சிறப்பு அந்தஸ்து இன்னும் தொடர்கின்றது, இன்னும் எவ்வளவோ சலுகைகள் கொடுக்கபட்டு கொண்டுதான் இருக்கின்றது. பல மாநிலம் இருக்கும் நாடு இது, எல்லா மாநிலத்திலும் ஒரு சில அதிருப்தி குரல்கள் கேட்டுகொண்டுதான் இருக்கும். காஷ்மீருக்கு தன்னாட்சி என்றால் மறுநிமிடம் […]

எண்ணூர் பகுதிகளில் கமலஹாசன் ஆய்வு

எண்ணூர் பகுதிகளில் கமலஹாசன் ஆய்வு மனிதர் களத்தில் இறங்கிவிட்டாராம், இப்படி எல்லா இடங்களையும் ஆய்வு செய்வாரம். வடசென்னைக்கு இதனால் பெரும் ஆபத்து என யாரோ சொன்னதால் அன்னார் வந்துவிட்டார் அப்படியே இந்த கூடங்குளம் அணுவுலை பக்கம் எப்பொழுது வரபோகின்றீர்கள் மிஸ்டர் கமலஹாசன்?

தலைவி காலில் அடிபட்டு விட்டதாக சில தகவல்கள்

தலைவி காலில் அடிபட்டு விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஞ்ச காலமாகவே அவரின் காலில் அடிபட்டு வருவது கவலையளிக்கும் விஷயம், பொதுவாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி ஆகும் என்பார்கள். தலைவி அடுத்த தேர்தலில் அமைச்சர், தமிழக காங்கிரஸ் தலைவர் என பெரும் பொறுப்புக்களை ஏற்க இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் திருஷ்டி ஏற்பட்டு, விரும்பதகாத சம்பவங்கள் நடக்கின்றன‌ தலைவி விரைவில் நலம்பெற வேண்டியும், அவரின் கம்பீர நடை திரும்ப வரவேண்டியும் சங்கமும், சங்க உறுப்பினர்களும் உலகெல்லாம் உள்ள […]

விவசாயம் வீழ்ச்சியடைந்ததால்…

விவசாயம் வீழ்ச்சியடைந்ததால் உலகெல்லாம் விவசாய பொருட்களின் விலை அதிகரிக்கதான் செய்கின்றது வருங்காலத்தில் இரண்டே வாய்ப்புதான், ஒன்று விவசாயம் செய்ய வேண்டும், அல்லது வாங்கும் சம்பளத்தை அப்படியே உணவிற்கு செலவழிக்க வேண்டும் அதுவும் தரமான உணவென்றால் கடன்வாங்கி செலவழிக்க வேண்டும் விவசாய வீழ்ச்சியும், வியாபார உலகமும் அந்நிலைக்கு கொண்டுவந்தாயிற்று. விவசாயியும் வாழவில்லை, வாங்குபவனும் உச்சவிலை கொடுக்கின்றான் என்றால் அதுதான் முதலாளித்துவம் ஜப்பான் போன்ற நாடுகள் இதனை வேறுவிதமாக சமாளிக்கின்றன, அதாவது யாராயிருந்தாலும் கட்டாயம் சிலமணி நேரம் விவசாய வேலை […]

தேவர் சிலைக்க்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது

தேவர் சிலைக்க்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது. அப்படி அந்த தேவர் என்ன செய்தார்? நாட்டிற்கு போராடிய ஆயிரகணக்கானவர்களில் அவரும் ஒருவர். அதை தாண்டி கொண்டாடபட காரணம் என்ன? குற்றபரம்பரை சட்டத்தை முதலில் எதிர்த்தவர் ஒரு நாயர், அவரை தொடர்ந்து ஏராளமானோர் எதிர்த்தனர் , அவர்களில் ஒருவர்தான் தேவர் மதுரை கோவிலில் தலித்துகளை அனுமதிக்க போராடியது யார்? காந்திய வழியில் நம்பிக்கையுள்ள ஒரு ஐயர்தான் அதற்கு போராடினார், பின்னாளில் வந்தவர்தான் தேவர் பின் எதற்கு இவ்வளவு அழிச்சாட்டியம்? தன் […]

நான் உயர்வடைய இஸ்லாமிய நண்பர்களே காரணம் : ரஜினிகாந்த்

என் வாழ்வில் நான் உயர்வடைய இஸ்லாமிய நண்பர்களே காரணம் : ரஜினிகாந்த் என்ன இவர்? சுபாஷ்கரன் எனும் ஈழ பணக்காரர் நட்பு கிடைத்தபின்புதான் ஈழமும் அங்கு நடந்த படுகொலைகளும் அவருக்கு நினைவு வருகின்றன‌ இப்பொழுது எந்திரன் 2.0 துபாய் மார்க்கெட்டை குறி வைத்ததால் இஸ்லாமிய நண்பர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றார்கள் இனி வசூலை கூட்ட தமிழக அரசியல் அறிவிப்பு குழப்பமும், ரசிகர்களும் நினைவுக்கு வருவார்கள் எல்லாம் சுபமாக முடிந்துவிட்டால் இமயமலை நினைவுக்கு வருகின்றது ராமசந்திரன் மீது ஆயிரம் […]

உலகில் நீண்ட நாள் மன்னராக இருந்தவர் தாய்லாந்து அரசர் பூமிபால்

உலகில் நீண்ட நாள் மன்னராக இருந்தவர் தாய்லாந்து அரசர் பூமிபால் அரசபதவி என்பது நிரந்தரமானதுதான், ஆனால் அதில் மக்கள் விரும்பும் வண்ணம் எப்படி ஆட்சி செய்தார் அவர் என்பதில்தான் அவர் சிறப்பு இருக்கின்றது கிட்டதட்ட 70 ஆண்டுகள் தாய்லாந்தை ஆண்டவர் அவர், அவருக்கு எதிராக ஒரு முணுமுணுப்பு இல்லை, அதிருப்தி இல்லை மாறாக அவருக்கே தேசமே ஒத்துழைத்தது அவர் இறந்து ஒருவருடம் துக்கம் கொண்டாடி இப்பொழுது உச்சகட்ட மரியாதையினை அவருக்கு கொடுக்கின்றது தாய்லாந்து மிகபெரும் இக்கட்டில் போதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications