பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சி

நடிகர் நாகேஷின் ஆக சிறந்த நடிப்பு என்றொரு வீடியோ தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது. அதில் நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சியும் ஓடியது, பிணமாக அவ்வளவு அட்டகாசமாக நடித்திருந்தார் நாகேஷ். அந்த காட்சிதான் அப்பல்லோ நாடகளுக்கு மூல திட்டத்தை கொடுத்திருக்க வேண்டும். நாகேஷ் பிணமாக நடித்த அந்த காட்சிதான், பின் அப்பல்லோவில் பிணத்தை வைத்து அவர்கள் ஆடிய நாடகத்திற்கு அடி எடுத்து கொடுத்தது.

அது நிச்சயம் மோடியின் வெற்றி, உறுதியாக சொல்ல முடியும்.

மோடியின் திட்டம் தோல்வி, கள்ள‌ பண ஒழிப்பு தோல்வி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அதிருப்தி என பல குரல்கள் எழுகின்றன‌ ஜிஎஸ்டி என்பது காங்கிரசால்தான் வரையறுக்கபட்டது, இன்று காங்கிரஸ் அரசு தொடர்ந்திருந்தாலும் அது வந்திருக்கத்தான் செய்யும். அதே நேரம் ஜிஎஸ்டியால் பல பொருட்கள் விலை குறைந்திருப்பதை பற்றி யாரும் பேசவே இல்லை. அது கவனிக்க வேண்டியது. ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கியதில் இந்திய பொருளாதாரம் படுத்துவிட்டது என்கின்றார்கள். உண்மையில் எந்த தொழில் படுத்திருக்கின்றது என்றால் எதெல்லாம் கள்ள கருப்பு […]

பவர் பாண்டி : திரை விமர்சனம்

பவர் பாண்டி என்றொரு புத்தம் புது படத்தை இப்பொழுதுதான் பார்க்கின்றேன், குஷ்பூ படங்களையே எப்பொழுதும் பார்ப்பதால இம்மாதிரி படங்கள் சில நேரம்தான் பார்க்க முடிகின்றது. தனுஷ் நடிகர் என ஒப்புகொள்ளமுடியாவிட்டாலும், நல்ல இயக்குநர் என இப்படம் ஒப்புகொள்ள வைக்கின்றது. சில நாடக தன்மை இருந்தாலும், அருமையான படமாக கொடுத்திருக்கின்றார் தனுஷ். எல்லோரும் ரசிக்க கூடிய படமிது. ஆனால் ராஜ்கிரண் அந்த பைக்கிலே லாங் டிரிப் செல்லும் காட்சியினை சிம்பு மட்டும் கோபத்தில் பல்லை கடித்த படிதான் பார்த்திருப்பார் […]

தன்மான சிங்கம் டி.ஆர்

ஒருவன் வீட்டில் ஏதும் பேசமுடியா நிலையில், பேசினால் அடிவிழுமோ எனும் நிலையில் வெளியிடத்தில் பொங்கி தீர்ப்பான் என்பது உளவியல். அதற்கும் கீழே சொல்லபடும் விஷயத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக நினைத்துவிட கூடாது. மேல் சொல்லபட்டது ஒரு தத்துவம். சம்பவம் என்னவென்றால், டி.ஆர் ஒரு சினிமா விழாவிற்கு சென்றிருகின்றார், மேடையில் அமர்ந்திருக்கின்றார். அங்கு ஆளாளுக்கு பேசியிருக்கின்றார்கள். படத்தின் நாயகி தன்ஷிகாவும் பேசியின்றார். பலர் பேசும்பொழுது தன்ஷிகாவினை கபாலி நாயகி என சொல்லிகொண்டே இருந்திருக்கின்றார்கள், டி.ஆருக்கு அதிலே கடுப்பு போல‌ அடுத்து […]

ஏம்மா தமிழிசை, நீர் ஒரு மருத்துவர் அல்லவா?

ஒருவழியாக தமிழகத்திற்கு கவர்ணரை நியமித்துவிட்டார்கள், அந்த அதிமுக அரசினை நீட்டிக்கவா, இல்லை சனியனை விரட்டிவிட்டு கவர்ணர் ஆட்சியினை நிறுத்தவா என்பது இனிதான் தெரியும். இரண்டாவது விஷயத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.. ஏம்மா தமிழிசை, நீர் ஒரு மருத்துவர் அல்லவா? எங்கே? ஜெயலலிதா பற்றி ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த கேள்விகளை எல்லாம் தேசிய கட்சியான பாஜக கேட்டு சிபிஐக்கு விசாரணையிட்டால் எப்படி இருக்கும்? பாஜக மீது எவ்வளவு மரியாதை வந்திருக்கும்? அப்படி செய்ய்யாமல் […]

குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி!

குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி!   மிக பெரும் சொதப்பல்களை செய்து வந்த விகடன் பத்திரிகை, தலைவி குஷ்பூ பற்றி பிறந்தநாள் வாழ்த்து கட்டுரை எழுதி தன் களங்கத்தை தீர்த்துகொண்டது. சங்கத்தின் சார்பாக விகடனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் அந்த கட்டுரையாளர் சுகுணா திவாகரன் என்பவர், நாம் குஷ்பூ நமஹ தொடரில் சொல்லிபடி உண்மையினை எழுதியிருக்கின்றார், மறுபடியும் வாழ்த்துக்கள் ஆனால் குஷ்பூ சிறந்த நடிகையல்ல என்றொரு வரியினை சேர்த்திருக்கின்றார், இதற்கு சங்கம் மென்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது. அவரை கடத்தி […]

ரஜினியும் கமலும் பாஜகவுக்கு பாதை போடுகிறார்களா? : கி.வீரமணி

ரஜினியும் கமலும் பாஜகவுக்கு பாதை போடுகிறார்களா? கி.வீரமணி அறிக்கை நாளையே பெரியார் சொத்துக்கள் அரசுடமை என்றால் அதனை தடுக்க‌ இவர் ஐ.எஸ் இயக்கத்தையும் ஆதரிக்க தயார். ஆனால் இவர்தான் ரஜினியினை கமலை விமர்சிக்கின்றாராம். பெரியார் நூல்களை கூட அரசுடமை ஆக்க மனமில்லாத இவர் பெரியாரின் வாரிசான கொடுமைதான் ரஜினி கமல் எல்லாம் பாதை போடுவது அதனை மறைத்துவிட்டு என்னவெல்லாமோ பேசுகின்றார்.

ஜெயாவிற்கான நியாயத்தினை திமுகத்தான் பெற்றுகொடுக்க போகின்றது

“ஒரு சபதம் செய்கின்றேன், என் வாழ்நாளில் திமுகவினை பூண்டோடு அழிப்பேன்..” என அருகிருந்த சசிகலா மீது சத்தியம் செய்யாத குறையாக முழங்கினார் ஜெயலலிதா இன்று அவர் இல்லை, அதனை விட பரிதாபம் அவர் மரணம் மீதான ரகசியம் அவர் கட்சிகாரர்களாலே மறைக்கபடுகின்றது அந்த பரிதாபத்திற்குரிய ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை திமுகவின் மு.க ஸ்டாலின் பட்டியல் இட்டு கேள்விகள் கேட்கின்றார். சாதரணமாக கடந்துபோக கூடிய கேள்விகள் இல்லை அவை, எந்த நீதிபதியும் தயக்கமின்றி ஏற்றுகொள்ள கூடிய கேள்விகள். […]

திருமுருகன் காந்தியினை மறுபடியும் அள்ளிகொண்டு சென்றிருக்கின்றார்கள்

திருமுருகன் காந்தியினை மறுபடியும் அள்ளிகொண்டு சென்றிருக்கின்றார்கள் அதாவது வைகோவிற்கு ஐநா சபையில் சிங்களர் கொடுத்த நெருக்கடி காரணமாக இங்கொரு கும்பல் சென்னை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டது இங்கு திருமுருகன் காந்தியும் சென்றிருக்கின்றார், சென்று சத்தம் போட்டுவிட்டு அருகில் டீகடையில் டீ குடித்துகொண்டிருந்தபொழுது போலிஸ் அமுக்கிவிட்டது அதற்குள் இங்கு டீ குடித்தது குற்றமா? என சில குரல்கள், டீ என்ன அங்கு நின்றுகொண்டு பஞ்சாமிர்தம் உண்டாலும் தூக்கத்தான் செய்வார்கள். ஒரு விஷயம் கவனிக்கதக்கது இந்த திடீர் போராளிகள் எல்லாம் […]

மும்பை ரயில்நிலைய நெரிசலில் 22 பேர் பலி!

மும்பை ரயில்நிலைய நெரிசலில் 22 பேர் பலி! பழைய கூரை கனமழையில் இடிந்து விழுந்தும், மக்கள் அதனை கண்ட பயத்தில் அலறி ஓடியதிலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கின்றது. அந்த அளவு மக்கள் நெரிசல் இருந்திருக்கின்றது, பொது போக்குவரத்து அவ்வளவு பெரும் கூட்டத்தை சமாளிக்க முடியாததாய் இருந்திருக்கின்றது. இந்த மும்பையில்தான் சிவாஜிக்கு பல நூறு கோடி செலவில் சிலை வைக்கபோகின்றார்களாம்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications