பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிவாஜி சிலைக்கு மிக மிக பொறுத்தமான இடம்

சிவாஜி கணேசன் நடிப்பினையும் அவர் உலகபுகழ் பெற்றதையும் சொல்வது, குஷ்பூ அழகானவர் என்பதை போன்றது அதாவது எல்லோருக்குமே தெரிந்த விஷயம், ஆனால் சிவாஜி பெயரால் அவரின் ரசிகர்களும் போலிசாரும் கண்ணாமூச்சி ஆடும் விளையாட்டு ஒன்று திருச்சியில் நடப்பது பலருக்கு தெரியாத விஷயம் அதாகபட்டது 2010 வாக்கில் திருச்சியில் சிவாஜிக்கு சிலை அமைக்க உதவியவர் கே.என் நேரு, இவர் திமுக்காரர். அதன் பின் வந்தது அம்மையார் ஆட்சி, 2016ல் வென்று வென்றவுடன் அப்பல்லோ போன காலம் அல்ல, 2011ல் […]

எல்லோரும் கொண்டாடுவோம்…

கல்வி, செல்வம், வீரம் என மூன்றின் அருளுக்கும் முப்பெருந்தேவியரை உலகம் வணங்கும், நவராத்திரி திருவிழா என்று அதனைத்தான் கொண்டாடிகொண்டிருக்கின்றது ஆனால் அழகு என்றொரு நான்காம் விஷயத்திற்கு யார் இலக்கணம்? முழு அழகு என்றால் என்ன‌ இந்த உலகிற்கே தெரியாது, அதனை உலகிற்கு சொல்ல வந்தவர்தான் எங்கள் தலைவி. அழகு என்றால் என்ன‌ என்பதற்கு அரிச்சுவடி அவர். மற்றவர்கள் முப்பெருந்தேவியரின் விழா என தசராவினை கொண்டாடட்டும், நாங்கள் ரம்பை, மேனகை, ஊர்வசி முப்பெரும் அழகிகளின் திருவிழாவினையும் குஷ்பூவில் ஒன்றாக […]

கத்தோலிக்க கிறிஸ்தவமும், யூதரும், இஸ்லாமியரில் சிலரும் நம்பும் விஷயம்

கத்தோலிக்க கிறிஸ்தவமும், யூதரும், இஸ்லாமியரில் சிலரும் நம்பும் விஷயம் அது. கடவுளுக்கு முன்பாக 7 வானவர்கள் எப்பொழுதும் நிற்பார்கள். ஒவ்வொரு தூதருக்கு கீழும் ஏராளமான தேவதைகள் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. இவர்களில் கபிரியேல் என்பவர்தான் அடிக்கடி தகவல் கொண்டு வருவார். மரியாள் முதல் நபிபெருமான் வரைக்கும் வந்தவர் அவர்தான். இந்த வானவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் உண்டு, அவர்தான் மிக்கேல் அல்லது மைக்கேல். மிக பெரும் பொறுப்பு அவருடையது. கடவுள் முதலில் வேறு உலகையும் வான தூதர்களையும்தான் […]

கானா பாடலை சாடிய சீமான்

கானா பாடலை சாடிய சீமான் மீது, சென்னைவாசிகள் கடும் கோபம், பலத்த கண்டனம் : செய்தி அதாகபட்டது சினிமா கானா பாடல்கள் தமிழை கெடுக்கின்றன, நரிகுறவ பாஷை போலாக்கிவிட்டது என அங்கிள் சீறினாராம். கானா என்பது சென்னையின் அடையாளம். பல மொழிகள் பேசபடும் நகரம் என்பதால் அதில் மொழிகலப்பு இருக்கலாம். ஆனால் இது சென்னை மண்ணின் தன்மை. கானா பாடல் சென்னை சொத்து என சீறுகின்றார்கள். அதோடு நிறுத்தினாலும் பரவாயில்லை, அடுத்து சொல்வதுதான் அங்கிள் சைமன் சயனைடு […]

ஆயுத பூஜை மோசடி என பொங்கும் பெரியாரிஸ்ட்டுகள்..

இந்த பெரியாரிஸ்டுகள் , சில பகுத்தறிவு வாதிகள் எல்லாம் ஆயுத பூஜை மோசடி என பொங்க ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது தமிழ்நாட்டில் பூஜை விழா என்று ஒன்று கிடையவே கிடையாதாம், எல்லாம் மோசடியாக புகுத்தபட்டதாம். சங்க காலத்திலே இந்திர விழா என்று ஒருவிழா, அதுவும் புத்தமதம் கோலோச்சிய காலத்திலே தமிழகத்தில் கொண்டாடபட்டது சிலப்பதிகாரத்திலே உண்டு, பூந்தொடை விழா என குழந்தைகளை குருகுலத்தில் சேர்க்கும் விழா அது. அதுதான் இன்றைய விஜயதசமி. ஆக அன்றே இம்மாதிரியான விழாக்கள் இத்தேசம் முழுக்க […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 5

நாட்டில் குழப்பம் நடக்கும்பொழுது அந்நிய நாடுகள் அதனை பயன்படுத்தி படையெடுக்கும், நெப்போலியன் காலத்திலும் அதுதான் நடந்தது. பிரிட்டன் டூலன் நகரை பிரிட்டனிடமிருந்து மீட்டாலும், ஐரோப்பிய நாடுகள் பிரான்சின் மீது எப்பொழுது பாயலாம் என குறித்துகொண்டிருந்தன, நெப்போலியன் அப்பொழுது வெறும் கமாண்டர், பத்தோடு ஒன்று என்பதால் அவனை ஐரோப்பாவில் யாருக்கும் தெரியாது. குழப்பமான நிலையில் இருந்த‌ பிடித்துவிடலாம் என அவர்கள் திட்டமிட்டுகொண்டே இருந்தார்கள். நெப்போலியனுக்கோ ஜோசப்பின் கிறுக்கு உச்சத்தில் இருந்தது, கவிதை எழுதினான் அவளோடு சேர்ந்த் ரோஜா செடி […]

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குஷ்பூ!

கல்விக்கொரு தெய்வமுண்டு, அவளருள் கம்பனுண்டு செல்வத்திற்கோர் தெய்வமுண்டு, பெரும்செல்வர் பலருண்டு வீரத்திற்கோர் தெய்வமுண்டு வீராதி வீரருண்டு அழகுக்கோர் தெய்வமேது? அவளருள் பெற்றோர் உண்டோ? மனக்குறை பட்ட‌ கடவுள் மனதார துடித்திட்டான் மேனகை ரம்பை என படைத்து பார்த்திட்டான் ஆனாலும் முழு அழகில்லை என்றே உணர்ந்திட்டான் அழகிற்கோர் படைப்பு உருவாக்க முனைந்திட்டான் அதுவரை படைத்த அழகெல்லாம் கொட்டி புதிதாய் பல வண்ணம் கலந்தே  இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான் மங்கையர் விளக்கே, மரகரத […]

எல்லா சகல பூஜை வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்

பாரதத்தின் பெரும் கொண்டாட்டகாலங்களில் ஒன்றான பூஜை திருவிழாக்கள் உச்ச காலம் இது. துர்கா பூசை,சரஸ்வதி பூசை,ராம்லீலா என சமயம் சார்ந்த சடங்குகளுக்கு ஒருபுறம், தாண்டியா ஆட்டம், தசரா கோலாகல ஊர்வலம் என கொண்டாட்டங்கள் மறுபுறம் பாரதம் கொண்டாடுகின்றது. நான் கொஞ்சகாலமாக இந்தியன் அதற்கு முன்னால் தமிழன், அதற்கு முன்னால் காட்டுமிராண்டி, அதற்கு முன்னால் மனிதனே இல்லை, தமிழனுக்கு மதமே இல்லை என சொல்பவன் எக்காலமும் உண்டு. இதோ வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடபடும்பொழுது தமிழகத்திலும் விழா கொண்டாடபடுகின்றது, […]

பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு

பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு இந்திய ஒருமைபாட்டிற்கு இது நல்ல எடுத்துகாட்டு, வாழ்த்துக்கள். தமிழனை இந்தியாவெங்கும் அடிக்கின்றான் என ஒப்பாரியிடும் கூட்டம் இப்பொழுதெல்லாம் பேசாது ஏம்பா சீமான், தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும், பெங்களூரை பெங்களூர்காரன் ஆளவேண்டும் அதனால் இவர் ராஜினாமா செய்யவேண்டும் என இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம். சூன்யம் வைத்தல், மண் சோறு உண்ணுதல், இலையில் புரளுதல், தீ மிதித்தல் இன்னபிற மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கர்நாடகாவில் புதிய சட்டம் கர்நாடகாவில் இப்பொழுதெல்லாம் ஒரு மவுன புரட்சி […]

அரசு பொது மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு முரசொலிமாறனுக்கு சிகிச்சை என்றால் அமெரிக்காவிலும், தனக்கு சிகிச்சை என்றால் லண்டனிலும், தன் தந்தைக்கு சிகிச்சை என்றால் காவேரியிலும் என சென்று கொண்டிருந்த ஸ்டாலின், டெங்கு புண்ணியத்தில் அரசு மருத்துவ மனைக்கு வந்துவிட்டார் டெங்கு விவகாரம் தொடர்பாக அரசின் சிகிச்சை நடவடிக்கைகளை கண்டறிய தானே நேரில் ஆய்வு செய்துவிட்டார் மு.க ஸ்டாலின் இது இனி ஒவ்வொரு துறையாக நடக்கலாம். ரேஷன் கடைகள் முதல் பல இடங்களின் இனி ஸ்டாலின் […]