பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயா சாவு தொடர்பாக விசாரணை நடக்கின்றது

ஜெயா சாவு தொடர்பாக விசாரணை நடக்கின்றது. ஒரு விசாரணை நடக்கும்பொழுது தகவல்கள் கண்டிப்பாக அந்த கமிஷனிடம் மட்டுமே கொடுக்கபட வேண்டும், அப்படி செய்யாமல் தனியாக தகவல்களை வெளியிடுவது தண்டனைகுரிய குற்றம். அந்த மிக பெரும் குழப்பத்திற்குரிய , கண்டிக்க கூடிய காரியத்தினை புதிய தலைமுறை டிவி செய்கின்றது. இது நிச்சயம் கண்டிக்கதக்கது. தன்னிடம் இருக்கும் தகவலை கமிஷன் முன் சொல்லலாம், அல்லது நீதிபதிகள் முன் சொல்லலாம் மாறாக மகா முக்கிய விசாரணையில் இப்படி செய்தி வாசிப்பது திசை […]

‘பிளேபாய்’ நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்

பிரபல கவர்ச்சி இதழான ‘பிளேபாய்’ நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார் அன்னார் இந்த உலகிற்கு ஆற்றிய பணி கொஞ்சமல்ல, மர்லின் மன்றோ முதல் நமது நாட்டு ஷெர்லின் சோப்ரா வரை அவர்தான் உலகிற்க்கு உணர்த்தினார். அந்த வரிசை சொல்லி மாளாது, உலகின் கவர்ச்சி கன்னிகளை எல்லாம் தேடி பிடித்து படமெடுத்து, தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்தவர். வீர அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி எல்லாம் அவருக்கு சரிவராது, “மன்மத” அஞ்சலிதான் செலுத்த […]

நோக்கம் நிறைவேறியதும் அவன் வாழ்வு முடிகின்றது

பெரியாரும் கலைஞரும் கடவுளை திட்டினதால் தான் மூத்திரப்பையோட இருக்கிறார்கள் , அண்ணாவிற்கு புற்றுநோய் வந்தது என பல ஆன்மீகவாதிகள் வாய்வலிக்க சொல்லி திருப்தியடைகின்றார்கள் ஆன்மீகம் பேசிய ரமணருக்கு கூடத்தான் புற்றுநோய் வந்தது, இன்னும் ஏராளமான சந்நியாசிகள் இளவயது நோயிலே இறந்தார்கள். விவேகானந்தர் சாகும்பொழுது என்ன வயது? அவர் ஆத்தீகம் பேசி செத்தாரா? சங்கரரும், திருஞான சம்பந்தரும் கூடத்தான் சிறுவயதிலே மரித்தார்கள். முத்துராமலிங்க தேவரை விட பெரும் முருக பக்தனை காட்டிவிட முடியுமா? அவர் என்ன நூறாண்டு வாழ்ந்தாரா? […]

வேதங்கள் அறைகின்ற உலகங்கள் யாவிலும் உயர்ந்தது உன் பாதங்கள்

“வேதங்கள் அறைகின்ற உலகங்கள் யாவிலும் உயர்ந்தது உன் பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ “ என்பது கம்பனின் வரிகள். அதாவது மந்திரங்கள் முழங்கும் மூவுலகிலும் மிக உயர்ந்தது இந்த கால்களே. கால்களே இப்படி என்றால் முழு வடிவம் எப்படி இருக்கும் என பாடலை தொடங்குகின்றான் கம்பன். நாம் திரையில் குஷ்பூவினை காணும்பொழுது அவன் வரிகளே நினைவுக்கு வருகின்றது. தலைவி காலை மறைத்து, விரல் மட்டுமே தெரியும் படம் இது, அட அட என்ன அழகு? கம்பன் […]

குறவர்களை பற்றி அங்கிள் சைமன்

குறவர்களை பற்றி ஏதோ அங்கிள் சைமன் சொல்லியிருக்கின்றார் என சர்ச்சைகள் வருகின்றன. தமிழை கேவலம் குறவர் தமிழாக மாற்றிவிட்டார்கள் என அங்கிள் குறைபட்டுகொண்டாராம். குறவர்கள் என்பவர்கள் யார்? குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் குறவர்கள் என அழைக்கபட்டனர். அவர்கள் பேசியதும் தமிழே. இன்று அவர்கள் பேசுவதும் தமிழின் திரிபே, ஆதிகால தமிழ் அந்த சாயலில்தான் இருந்தது.. அவர்களும் நிச்சயமாக தமிழர்களே. குற்றால குறவஞ்சி எனும் காவியமே தமிழில் உண்டு. அவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகனே வள்ளி எனும் […]

அத்தை எப்போ சாவாள், சாவிகொத்து எப்போ கைக்கு வரும்?

ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு: மாதவனுடன் தீபா மீண்டும் திருமணமா? : செய்தி அதாவது தமிழகத்திற்கு கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் உழைத்துவிட்டு, பல தியாகங்கள் செய்த தீபா என்பவர் நான் ஏன் இன்னும் முதலமைச்சராக முடியவில்லை என்ற விரக்தியில் ஜோதிடரை அணுகினாராம் அந்த ஜோதிடரோ, உங்கள் மக்கட் பணியில் ஒரு குறைவுமில்லை, மணாளனை பிரிந்த ஜாதக தோஷமே காரணம். அதனால் ஜெயா சமாதி முன் திருமணம் மட்டும் செய்தால் தோஷம் தீரும். நீர் நிச்ச்சயம் முதல்வராவாய் என […]

பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது : யஷ்வந்த் சின்கா

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியால் தான் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது : யஷ்வந்த் சின்கா சொல்லியிருப்பவர் யார்? பாஜகவின் மூத்த தலைவர். ஒரு பக்கம் புதிய “இந்தியா பிறந்திருக்கின்றது” என மோடி சொல்ல, இன்னொரு பக்கம் இவரோ, நன்றாக‌ இருந்த “இந்தியா செத்து கொண்டிருக்கின்றது” என சொல்லிகொண்டிருக்கின்றார். பாஜகவின் மூத்த தலைவரே தங்கள் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதை ஒப்புகொள்கின்றார். எல்லா அரசும் தேர்தல் நெருங்கும் நேரத்தில், “இது எங்கள் சாதனை எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு […]

மரண அரசியல்…

ஜெயா சாவு விசாரணை எனும் சர்ச்சையினை கிளப்பிவிட்டதில் நீட்டும் மறைந்தது, அனிதாவும் மறைந்தாள், டெங்கும் மறைந்தது இன்னும் என்னவெல்லாமோ மறைந்தன‌ ஆக செத்தும் கெடுக்கின்றார் ஜெயலலிதா.. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இதுவேதான்.  ஜெ., மரணம்: 3 மாதத்தில் விசாரணை அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவு! பாஸ்தீனம் மீதான படுகொலைகளை இஸ்ரேலே விசாரிக்கும் , முள்ளிவாய்க்கால் சர்ச்சைகளை சிங்கள அரசே விசாரிக்கும் என்பது போன்ற வரிசையில் ஜெயலலிதா மரணத்தை தமிழக […]

சர்ச்சை மறுபடியும் பெரிதாக வெடிக்கின்றது…

இந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற சர்ச்சை மறுபடியும் பெரிதாக வெடிக்கின்றது. ஆளாளுக்கு ஒன்றை சொல்லிகொண்டிருக்கின்றார்கள். ஒருவர் பார்த்தேன் என்கின்றார், இன்னொருவர் பார்த்தவனை பார்த்தேன் என்கின்றார் ஜெயாவின் காலை காணவில்லை, இன்னும் எதனை எல்லாமோ காணவில்லை என்றொரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது. ஜெயா உடல்நிலை ஒன்றும் அதற்கு முன்பு அவ்வளவு நன்றாக இல்லை 2015களிலே அவர் நடக்கும்பொழுதே தடுமாறினார். பல கூட்டங்களை வீடியோ கான்பெரன்ஸ் முறையில்தான் நடத்தினார் அவர் நெடுநாள்கள் காணாமல் போக, கலைஞரே ஜெயாவிற்கு என்ன ஆயிற்று […]

ஜெ சிகிச்சை பெற்ற போது உடன் இருந்தவர்கள் யார்? : தமிழிசை

எச்.ராஜா மணி விழா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து டெங்கு உட்பட பல பிரச்சினைகளில் தமிழகம் சிக்கி தவிக்கும்பொழுது பொறுப்பான பதவியிலிருக்கும் முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் எல்லாம் எங்கு அணிவகுத்திருக்கின்றார்கள்? ஸ்டாலினை பார்த்து பன்னீர் சிரித்தார் என்பதையே தாங்க முடியாத சசிகலா, இவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து சிரிப்பதை கண்டால் எப்படி மயங்கிவிழுவாரோ? ஆக எச்.ராசா மணிவிழாவிற்கு வந்தாயிற்று, அடுத்து எங்கே? அது சங்கராச்சாரி விழாவாக இருந்தால் கூட இனி ஆச்சரியம் ஏதுமில்லை. […]