பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடித்து ஆடவேண்டிய நேரத்தில் ..

அடித்து ஆடவேண்டிய நேரத்தில் விதிவசத்தால் ஓரமாய் இருந்து தவிப்பவர்கள் இரண்டுபேர். ஒன்று கலைஞர் இன்னொருவர் நடராஜன். இருவரும் ஆடிய அரசியல் ஆட்டம் கொஞ்சமல்ல, எத்தனையோ பேர் கதறிகொண்டு ஓடியதற்கும், காணாமல் போனதற்கும் காரணம் இவர்கள். தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்கவிடாமல் தடுத்ததிலும், தந்திரமாக அவர்களை காலடி செருப்பாக பயன்படுத்தியதிலும் வித்தகர்கள். தாங்கள் யார் என நிரூபிக்க வாய்ப்பு கண்முன் இருந்தும் அவர்களால் செயலாற்ற முடியவிலை. இரண்டு வித்தகர்களையும் களம் திறந்துகிடக்கும் இந்நேரத்தில் காலம் அடக்கி, ஒடுக்கி மூலையில் […]

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம் – செல்லூர் ராஜு

அமைச்சர்கள் அனைவருமே ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம் – செல்லூர் ராஜு உயிரோடு இருந்தை பார்த்தார்களா? இல்லை அவர் இறந்தபின் பார்த்தார்களா என்பது பற்றி அமைச்சர் சொல்லவே இல்லை. ஒருவர் பார்க்கவேயில்லை என்கின்றார், ஒருவர் நாங்கள் பொய் சொன்னோம் என்கின்றார், இதோ ஒருவர் மொத்தமாக பார்த்தோம் என்கின்றார். ஒருவேளை பல ஜெயலலிதாக்கள் இருந்திருப்பார்களோ? ஒரிஜினல் ஜெயலலிதாவினை விரட்டிவிட்டு டூப்ளிகேட் ஜெயலலிதாவினை மருத்துவமனையில் சேர்த்திருப்பார்களோ? அந்த டூப்ளிகேட் ஜெயலலிதா கவர்ணருக்கு கையினை உயர்த்தி, இன்னும் பலருக்கு தலையினை உயர்த்தி பேசியிருப்பாரோ? […]

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

அந்த பேராசிரியருக்கு கவிஞர் என்பதை தாண்டி பல முகங்கள் உண்டு வரலாற்று கல்வெட்டு ஆய்வாளர், குழந்தைகளுக்கான தமிழ் பாடல்களை எழுதியவர், ஏராளமான உரைகளை கொடுத்தவர், நூல்களை கொடுத்தவர் என்றேல்லாம் சிறப்புகள் உண்டு. உலகெல்லாம் இருந்த பல நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்து கொடுத்தவர், அதில் உமர்கய்யாமின் பாடல்களும் உண்டு தமிழுக்கும், தமிழர் வரலாற்றிற்கும் , கல்வெட்டு ஆராய்ச்சிகள் அவர் செய்தது ஏராளம் இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ் கவிஞர்களில் அவரும் ஒருவர், அதில் சந்தேகமே இல்லை. பல மொழிகள் […]

ஒரு கல்லறையினையும் விடுவதாக இல்லை

படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா? அஞ்சலி செலுத்துகின்றார்களாம். பேச்சிபாறை அணையினை கட்டிய வெள்ளையன் கல்லறை அங்கேதான் இருக்கின்றது. இந்த அணை என் வாழ்நாள் சாதனை, என் உடல் இங்கேதான் புதைக்கப்ட வேண்டும் என் சொன்னான் அந்த மின்சின் ஓரளவு லிங்கா கதையுடன் ஒத்துபோகும் வரலாறு மின்சின். அந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அவ்வளவு முக்கியம் அந்த அணைக்கட்டு முன்ன்னால் எல்லாம் நாஞ்சில்நாடு அதிகம் விளைவிக்கவில்லை. அந்த அணையே பல திருப்பங்களை கொடுத்தது. பின்னாளில் கன்னியாகுமரியினை விடமாட்டோம் என […]

ஏம்பா திருமுருகா …

ஏம்பா திருமுருகா ஆஸ்திரேலியா CFC கோழிகடைக்கு நீ ஏஜண்டாமே, அதனால்தான் அமெரிக்க KFC கோழிகடையினை கண்டித்து ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தீராமே இன்னும் பல பகீரங்க தகவல்கள் எல்லாம் வருகின்றன‌ ஐரோப்பாவில் அடைக்கலமாக , அதாவது இந்தியா மனிதன் வாழமுடியா நாடு எனவே எனக்கு ஐரோப்பாவில் அடைக்கலம் தாருங்கள் என அந்த மலைலா யூசுப் அளவிற்கு சீன் போட்டு அங்கு செல்வதுதான் உச்ச கட்டம் திட்டமாம் அப்படியா? உன் முன்னாள் கூட்டாளி உமர் நைன் சொல்வதை எல்லாம் கேட்டால், […]

அவர் வீரம் Expiry ஆகிவிட்டது போல..

இந்த சீமான், திருமுருகன் , வேல் முருகன் போன்ற வீர தமிழர்கள் இருக்கும் தமிழகத்தில், வீரதமிழச்சிகள் இல்லாவிட்டால் எப்படி? அப்படி அம்மையார் வீரலட்சுமி என்பவர் வந்தார், முதலில் டெய்லரிடம் சென்று கலர் கலராக ஜாக்கெட் தைத்தார், ஒருவித ஸ்டைலில் நின்றுகொண்டு நான் தமிழச்சி, இது தமிழ்நாடு என குரல் எழுப்பினார். “தமிழர் முன்னேற்றபடை” என்றொரு கட்சியும் தொடங்கினார், எத்தனை தமிழர்களை முன்னேற்றினார் என்பது தெரியாது. பிரபாகரன் சிலையினை எடுத்தால் சோபன் பாபு சிலையினை தகர்ப்போம் என்றெல்லாம் கிளம்பினார், […]

உன்னத தலைவனை விரட்டினால் தமிழகத்திற்கு என்ன கிடைக்கும்?

அது காமராஜர் முதல்வரான காலம், ஒரு ஆலை அனுமதி தொடர்பாக அவரிடம் வந்து நிற்கின்றார்கள் கம்பெனியார். மிக பெரும் முதலீட்டான ஆலை அது. கோவை அருகே அருகில் கிட்டதட்ட 50 கிராமங்களை தாண்டி அனுமதி கொடுக்கின்றார் காமரஜார். “அவ்வளவு தூரம் தள்ளி ஏன் அந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என கேட்கின்றனர் அதிகாரிகள்” காமராஜர் சொன்னார் “எல்லா கிராமங்களுக்கும் சாலையும், மின்சாரமும் கண்டிப்பா கொடுக்கணும்கிறது நமது திட்டம், இந்த 50 கிராமங்கள் தாண்டி அந்த ஆலை அமைந்தால், […]

ஸ்டாலின் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுகின்றார்

வைகோ மீதான தாக்குதல் முயற்சி கவலையளிக்கிறது: ஸ்டாலின் அதாகபட்டது ஐ.நா மனித உரிமை அவையில் போர்குற்றம் என சிங்களர்களை வைகோ சாட, “ஏண்டா டேய்.. உன்னையெல்லாம் கள்ளதோணி ஏறிவந்த அன்னைக்கே சுட்டுருக்கணும்” என சிங்களர்கள் சூழ்ந்து கத்தியிருக்கின்றார்கள். அது வைகோ மீதான தாக்குதல் முயற்சி என சொல்லபட்டாயிற்று, விரைவில் ஈழதமிருக்காக சிங்களனிடம் அடிவாங்கினார் வைகோ என்றளவில் செய்திகள் வரலாம் இச்சம்பவம் தொடர்பாக ஸ்டாலினும் தன் வருத்தத்தை சொல்லிவிட்டார் சிங்களன் சொன்னது கூட வலித்திருக்காது, ஆனால் ஸ்டாலின் சொன்னது வைகோவிற்கு […]

அந்த நாள்தான் இதே செப்டம்பர் 26

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடி கொண்டிருந்த நேரம் ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம்  புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட அமைதியாக இருக்க‌ மாதாந்திர 50 லட்சத்தையும் வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் […]

“ஆரவ்வை ஏன் காதலிக்கணும்?” : ஓவியா

 “நான் லவ் பண்ண நிறைய‌ பேர் இருக்கும்போது, ஆரவ்வை ஏன் காதலிக்கணும்?” : ஓவியா மிஸ்டர் Omm Prakash புரியுதா? ஒரு பெண் இவ்வளவுதான் சொல்லமுடியும். என்னதான் நடிகை என்றாலும், அவளுக்கும் அச்சம், நாணம், மடம்..அப்புறம் ஆங் பயிர்ப்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும் உமக்கு இன்னும் வாய்ப்பிருக்கின்றது.   மா.நடராஜன் கவலைக்கிடம் : மருத்துவமனை தகவல் என்னடா அதிமுகவிற்கு வந்த சோதனை? ஜெயா இல்லை, சோ ராமசாமி இல்லை, சசிகலா உள்ளே. இப்பொழுது நடராஜனும் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டாராம். இனி […]