பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு” : இயக்குநர் வெற்றிமாறன்

“பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு” : இயக்குநர் வெற்றிமாறன் ஓஹோ, அந்நிய நாட்டு தீவிரவாதி, தன் தேசத்து தலைவனை கொலை செய்ய துணை போனதெல்லாம் வரலாறா? அது வரலாறென்றால், இந்த‌ வெற்றிமாறன் ஒரு அசிங்கமான துரோகத்தின் வரலாறு. இச்செய்திகளை வெளியிடும் விகடன் ஒரு தேசவிரோத வரலாறு. மிஸ்டர் வெற்றிமாறன், இந்த மலையூர் மம்பெட்டியான், ஆட்டோ சங்கர், வீரப்பர் எல்லாம் உங்கள் வரலாற்றில் வரமாட்டார்களா?

இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்…

அந்த திருமுருகன் காந்தி என்ன நாட்டிற்காக பல ஆண்டு சிறையில் இருந்துவிட்டா வருகின்றான்? ஏதோ சீனாவுடன் யுத்தம் புரிந்து அதில் அகபட்ட கைதி 14 வருடம் சிறையிருந்து வருவது போலவும், பெரும் தேசபக்தன் ஒருவன் சிறைமீள்வது போலவும் ஏகபட்ட பில்டப்புகள், என்ன கிழித்துவிட்டான் என்று இவருக்கு இவ்வளவு பில்டப்? சிறை சென்றுவிட்டாராம். ஆட்டோ சங்கர் கூட சிறையில்தான் இருந்தான், வீரப்பன் கூட்டாளிகள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். தேசத்திற்கு எதிரான வழக்கில் உள்ளே சென்றுவிட்டு வருபவருக்கு ஏன் ஆர்பாட்டம்? […]

ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?

விஜயகாந்தும் நானும்தான் மக்களுக்காக கட்சி தொடங்கினோம், நான் அவரை மிக மதிக்கின்றேன் : சீமான் இப்படி ஒரு பல்டியினை யாராவது அடிக்க முடியுமா? ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரர்களால் கூட முடியாது. அந்த விஜயகாந்தினை தெலுங்கன், வந்தேறி என்றெல்லாம் எப்படி எல்லாம் தூற்றினார் சீமான். அதுவும் விஜயகாந்த் கட்சியின் மைக்கேல் ராயப்பனை அதிமுக கவ்விகொண்டு போக, அப்பொழுது விஜயகாந்திற்கு பதில் கொடுத்தது எல்லாம் சீமான் தான். அதிமுக அப்பொழுது அமைதியாக இருந்தது, அதன் பிரதிநிதியாக கத்திகொண்டிருந்தார் சைமன். வைகுண்டராஜனை […]

காவேரியினை மீட்டதா? : தமிழிசை

காவேரி பிரச்சினைக்கு 18 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியிலும், பல ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? காவேரியினை மீட்டதா? : தமிழிசை அப்படி கேளுங்கள் அக்கா, அவர்கள்தான் துரோகிகள், சுயநலவாதிகள், தமிழகத்தை சீரழித்தவர்கள் அந்த 18 ஆண்டில் வாஜ்பாய் காலமும் உண்டு மேடம், அப்படியானால் பாஜகவும் காவேரியில் துரோகம் செய்தது என சொல்வீர்களா? சரி 3 ஆண்டுகளாக உங்கள் மோடி என்ன செய்கின்றார்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? கன்னடத்திலும் பாஜக ஆட்சி நடந்தது, காவேரியினை […]

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

இந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட பல வழக்குகளில் சென்னைக்கு புகழ்மிக்க வழக்கறிஞர்கள் எல்லாம் வருகின்றார்கள். கபில் சிபல் வருகின்றார், இன்னும் இந்தியாவின் முண்ணணி வழக்கறிஞர்கள் எல்லாம் வந்து ஆஜராகின்றார்கள். அழைத்துவருவது யார்? இங்குள்ள கட்சிகள். ஆனால் காவேரி வழக்கிற்கோ, அனிதா வழக்கிற்கோ இவர்களை அமர்த்தினார்களா என்றால் இல்லை. அங்கெல்லாம் தேங்காய் மூடி வக்கீல்களை வைத்து வாதாடிவிட்டு இங்கு குதிப்பார்கள். ஆனால் இவர்கள் வழக்கு என்றால் என்ன பணம் செலவழித்தும் பெரும் வக்கீல்களை அழைத்து […]

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு முன்பே சொல்லியிருந்தோம், இலங்கையில் இந்திய படைகளை எதிர்த்து விரட்டவேண்டிய சிங்களனுக்கு உதவியாகத்தான் புலிகள் போராடினர் அதாவது இலங்கை ராணுவம் ஈடுபடவேண்டிய மோதலில் புலிகள் ஈடுபட்டனர். அவ்வகையில் அவர்கள் செய்தது இலங்கை தேசியத்திற்கான பெரும் உதவி. அப்படி ஒரு காலத்தில் இந்திய படைகளை விரட்டிய பெரும் இலங்கை மாவீரன், தேசபக்தன் என பிரபாகரன் கொண்டாடபடுவார் என நாம் முன்பே சொன்னதை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ […]

முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை

நவராத்திரி விழாவிற்காக ஊரெல்லாம் கொலு வைக்கின்றார்களாம். அழகான பொம்மைகள் வாங்கி அடுக்குகின்றார்களாம் இதனை விடவா அழகிய கொலுபொம்மை உலகில் கிடைத்துவிடும்? “தெய்வீக கொலு” பொம்மை இதுதான். இந்த பொம்மையினை வைக்காமல் எந்த கொலுவும் முழு நிறைவு அடையவே அடையாது. முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை, சங்கத்தின் கொலுவின் எல்லா சிலைகளும் இது மட்டும்தான். இந்த உலகிற்கு மிக அழகிய கொலு பொம்மையினை அடையாளம் காட்டியதில் சங்கம் பெருமையடைகின்றது.  

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது, இந்து நண்பர்களுக்கு அடுத்த 9 நாட்களும் முக்கியமான நாட்கள், மகா சிரத்தையாக ஒன்பது நாட்களும் நோன்பிருப்பார்கள், பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு நிறைவு பெறும். ஒன்பது நாட்கள் நோன்புடன் பிரார்த்தித்து, பத்தாம் நாள் ஆசியோடு நிறைவு செய்வது என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல, பழமையான ஆசிய,ஐரோப்பிய மதங்களிலும் உண்டு, கலாச்சாரங்களிலும் உண்டு. அவ்வளவு ஏன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஒரு கத்தோலிக்க ஆலய திருவிழாவோ அல்லது சிறப்பு ஜெபங்களோ 9 நாள் […]

ரொகிங்கியா பிரச்சினைதான் என்ன?

உலகம் முழுக்க ஏராளமான இனங்கள் உண்டு, அவைகள் எல்லாம் சில நேரம் இணைந்தோ, பல நேரம் தனியாகவோ வாழ்த்துகொண்டிருந்தன‌ அப்படி பர்மாவில் இருந்த இனம்தான் ரொகிங்யா, அது பர்மாவில் ஓர் இனம். தமிழக செட்டியார்கள் பர்மாவினை கட்டியாண்ட பொழுது, அவர்கள் ரொக்கைன் மாநிலத்தில் இருந்திருக்கின்றார்கள், அவர்களுக்கும் மொழி இன்னபிற விஷயங்கள் இருந்திருக்கின்றன‌ அதாவது சைமன் பாணியில் சொல்வதானால் அது ஒரு தேசிய இனம். அவர்களுக்கும் ஒரு காலத்தில் அரசன் எல்லாம் இருந்திருக்கின்றான், பர்மியர்களுக்கும் அவர்களுக்கும் அன்றே பொருந்தவில்லை, […]

“ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே…”

இயேசுநாதர் காலத்தில் இஸ்ரேல் நாடு ரோமர் ஆளுகையில் இருந்தது, அதனை எதிர்த்து பல கலகம் நடந்தது அதாவது கடவுளின் நேரடி மக்களான யூதர்களுக்கு கடவுளே அரசன், அவர் ஒருவருக்குத்தான் அவர்கள் வரி செலுத்தி வணங்கவேண்டும், அதனால் பலர் ரோமரை ஏற்க தயங்கினார்கள், பல கலவரம் நடந்தது. அப்பொழுது இயேசு போதித்துகொண்டிருக்க அவரிடம் கேட்டார்கள், “நாம் ரோமருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?” அது அவரை சிக்கவைக்கும் கேள்வி, வரி செலுத்துங்கள் என்றால் அவர் கடவுளை அவமதித்ததாகும், இயேசு […]