பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டத்தால் தான் மோடியும், டிரம்பும் பதவிக்கு வந்தனர்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி அமெரிக்காவினை விடுங்கள், ஆனால் இந்தியாவில் இதற்கு முன்பு ஆண்டது யார்? மம்மி வழிகாட்டலில் மன்மோகன் சிங் அல்லவா 10 ஆண்டுகள் ஆண்டார் அப்படியானால் மன்மோகன் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது என ஒப்புகொண்டுவிட்டீர்கள் என்றாகிவிடாதா? இப்படியா சிக்குவீர்கள் ராகுல்காந்தி… இதற்குத்தான் “அவர்” உடல்நலத்தோடு இருக்கும்பொழுதே கோபாலபுரத்தில் கோச்சிங் கிளாஸ் செல்லவேண்டும் என்பது.

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

அந்த பெட்ரோப் அப்பொழுது ரஷ்ய ராடார் முன் அமர்ந்திருந்தார், அது 1983ம் வருடம், செப்டம்பர் 26 திடீரென அவரின் ரேடார் அமெரிக்க ஏவுகனைகள் மொத்தமாக ரஷ்யாவினை நோக்கி வருவதாக காட்டிற்று, அவர் இருந்தது மிக பொறுப்பான பதவி அதாவது அவர் சொல்வது எல்லாமே உறுதிபடுத்தபட்ட தகவலாக இருக்கும் என்பதால் அவர் சொல்லிவிட்டால் ரஷ்யா தன் பதில் நடவடிக்கையினை தொடங்கும். வருவது என்ன ரக ஏவுகனை, அணு ஏவுகனையா? சோதனையா? என அவருக்கு தெரியவில்லை, ஆனால் அவர் சொல்லவேண்டும், […]

எடப்பாடி புனித நீராடல்… சன்னிலியோன் மழை நீராடல்

“எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது” : முதல்வருக்கு எதிராகச் சீறுகின்றார் தினகரன் நாம் சற்றுமுன் சொன்னதை தினகரனும் சொல்லியிருக்கின்றார், அதாவது முதல்வர் பழனிச்சாமி புனித நீராடியதை அப்படி சொல்லியிருக்கின்றார். ஆனால் முன்பு கும்பகோணம் மகாமகத்தில் ஜெயா,சசிகலா குளிக்கபோய் ஏராளமானோர் செத்து, பலர் காயமடைந்து மருத்துவமனையில் இருக்க அவர்களை பார்க்க கூட செய்யாமல் திரும்ப வந்த அந்த பாவம் எந்த நதியில் மூழ்கினால் தீரும் என்பதை தினகரன் சொல்லவில்லை. பாவங்களை போக்கும் மகா புஷ்கரத்தில் எடப்பாடி பழனிசாமி, […]

“அம்மா என்போம்… மம்மி என்பதைத் தவிர்ப்போம்” – துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு

“அம்மா என்போம்… மம்மி என்பதைத் தவிர்ப்போம்” – துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அப்பொழுதும் அவருக்கு அன்னை, தாய் போன்ற வார்த்தைகள் வரவில்லை, அம்மா தான் வந்திருக்கின்றது எல்லாம் அப்பல்லோவில் தொடங்கி ஜெயாவின் இறுதிசடங்கு அதை தொடர்ந்த நிகழ்வுகளில் அதிமுகவினரோடு நெருக்கமாக இருந்ததால் வந்த பழக்கம்.  

ஈழ விவகாரம் பேச போகின்றேன் : இயக்குநர் கவுதமன்

ஈழ விவகாரம் பேச போகின்றேன் என ஐ.நா சென்ற இயக்குநர் கவுதமன் என்ன பேசியிருக்கின்றார்? தமிழ்நாடு நிம்மதியாக இல்லை, பிரிட்டன் எங்களை அடிமைபடுத்தி இந்தியோடு இணைத்தது. இங்கு பெரும் போராட்டம் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீருக்கு நிகராக நடக்கின்றதாம், உலகம் கண்டுகொள்ளவில்லையாம் தமிழில் உச்சநீதிமன்றத்தில் வாதாட முடியவில்லையாம் (மலையாளம், கன்னடம் இன்னும் மற்ற மாநிலம் எல்லாம் எப்படி என அன்னார் சொல்லவில்லை), இப்படி தமிழரை கொடுமைபடுத்துகின்றார்களாம், தமிழக மாணவர்களுக்கு கல்வி மறுக்கபட்டதாம், அப்துல் கலாம் பேசிய அதே ஐ.நா […]

இந்திய வரலாற்றின் மிக குறிப்பிடதக்க நாள் செப்டம்பர் 20, 1857

இந்திய வரலாற்றின் மிக குறிப்பிடதக்க நாள் செப்டம்பர் 20, 1857 அதுவரை கிழகிந்திய கம்பெனியின் நாடாக இருந்த இந்தியா, அன்று தொடங்கிய கலவரங்களின் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசின் கட்டுபாட்டிற்கு சென்று பிரிட்டிஷ் இந்தியா ஆனது. அதாவது எத்தனை நாள்தான் டாஸ்மாக் எனும் தங்க சுரங்கத்தை தனியாரிடம் விட்டுவைப்பது, நாமே நடத்தினால் என்ன என அரசு கைபற்றியது அல்லவா? அப்படி இந்தியாவினையும் பிரிட்டன் அரசு எடுத்தது. அது எடுத்தபின்பே பல சட்டங்களும்,முறையான அரசும் இந்தியாவிற்கு வந்தன, அதன் அடிப்படையிலேதான் […]

காவேரியில் நீர் வராதது பிரச்சினையா?

“விவசாயிக்குத் தண்ணிப் பிரச்னை இல்ல… தன்மானம்தான் பிரச்னை” – நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த ஆள் என்ன வகையறா? அவனவன் 1000 ஆடிக்கு போர்வெல் அமைத்து ஒரு சொட்டு தண்ணீருக்காக தவித்துகொண்டிருக்கின்றான் காவேரியில் நீர் வராதது பிரச்சினையா? இல்லை விவசாயிக்கு மான பிரச்சினையா? கொஞ்சமேனும் நாட்டு நிலவரம் தெரிந்தால் மனிதர் இப்படி பேசுவாரா? இவ்வளவிற்கும் விவசாயிகள் கூட்டத்தில் பேசினாராம், எப்படி அடிக்காமல் விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை, ஒருவேளை விவசாயி வேடம் போட்டவர்கள் கூட்டம் நடத்தினார்களோ என்னமோ? ஆக கன்னடத்துகார […]

AICUF : அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு நிறுவணமா?

இந்த அய்க்கப் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக கண்டவன் என்ற முறையின் அந்த அமைப்பு எப்படிபட்ட குதர்க்கமானது என்பது தெரியும் நான் படித்த கல்லூரியில் அக்கய்ப் இருந்தது, நானும் கொஞ்சநாள் இருந்தேன், ஆனால் எதற்கெடுத்தாலும் விழிப்புணர்வு எனும் பெயரில் அரசுக்கு எதிரான சிந்தனைகளையே அவர்கள் வளர்த்துகொண்டிருந்ததால் விலகிவிட்டேன். அதில் இருந்த மற்ற மாணவர்களை நோக்கினேன் , நாளைய புரட்சியாளர்கள் போலவே பேசிகொண்டிருந்தார்கள். அதாவது மாணவர்களுக்கு ஒரு வெறியூட்டும் வேலையினைத்தான் இது செய்கின்றது அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு […]

செப்டம்பர் 29தான் “குஷ்பூ டே” அல்லது “பிரபஞ்ச பேரழகு தினம்”.

தலைவி தன் பிறந்தநாள் செப்டம்பர் 29 என அறிவித்துவிட்டார், இணையத்தில் மோடியின் சாதனைகளை போல அவரின் பிறந்த நாள் தவறாக இன்று என பதிவிடபட்டிருக்கின்றது. இன்று பிறந்தநாளாக இருந்திருந்தால் சங்கம் சும்மா இருக்குமா? நள்ளிரவு 12 மணிக்கே கொண்டாட்டம் தொடங்கி பெரும் ஆரவாரமாக கொண்டாடி கொண்டிருக்காதா? ஆக ரசிக கண்மணிகள் தங்கள் பிரார்த்தனைகளை, வாழ்த்துக்களை செப்டம்பர் 29 அன்று தெரிவிக்குமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்கின்றோம் செப்டம்பர் 29தான் “குஷ்பூ டே” அல்லது “பிரபஞ்ச பேரழகு தினம்”. ஆச்சரியமாக […]

இதற்கா 33 வருடம்?

தலைவி ரவி சாஸ்திரியின் தீவிர ரசிகை என்பது உலகிற்கே தெரிந்தது, அவரே சொல்லியிருக்கின்றார். சென்னை வந்த ரவி சாஸ்திரியினை சந்தித்திருக்கின்றார் குஷ்பூ, அவருக்கு மிக்க மகிழ்ச்சி, அதனால் சங்கத்திற்கும் மகிழ்ச்சி. ஆனால் இவரை சந்திக்க 33 ஆண்டுகள் ஆனதாக குஷ்பூ சொன்னதுதான் வேதனை, துக்கம், துயரம்   ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ராவணனை வாலில் கட்டி இழுத்து வந்த வாலிபோல, ரவிசாஸ்திரியினை தூக்கி வந்து குஷ்பூ வீட்டு வாசலில் சங்கம் நிறுத்தியிருக்காதா? இதற்கா 33 வருடம்?   […]