பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேபி சுந்தராம்பாளுக்கு இன்று நினைவுநாள்

  கே.பி சுந்தராம்பாள் தமிழகம் மறக்க முடியாத பெயர். கொடுமுடி பாலம்மாள் சுந்தராம்பாள் என்பவர் அவர், மிக சிறிய வயதிலே நாடகதுறைக்கு வந்தவர். அந்த வயதிலே பெரும் பணமும், புகழும் குவித்தவர் 20 வயதிற்குள் ஏராளமான நாடுகளில் நாடகம் நடத்தி அவர் பெறாத புகழ் இல்லை, குவிக்காத செல்வமில்லை. இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி, இலக்கணம் தெரியாதவர் களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர் முதலில் கே.பி.எஸ எடுத்த எடுப்பிலே உச்சஸ்தானியில் 4 […]

குஷ்புவே நமஹ ! : 10

பத்து பாகங்களாக தலைவியின் முதல் இன்னிங்க்ஸின் சுருக்கத்தை எழுதியாயிற்று, வாய்ப்பு கொடுத்த Anthanan Shanmugam அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகள். ஒருவேளை தலைவியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவரின் நேரடி திருத்துதல்களோடு இன்னும் பல விஷயங்களோடு, தலைவியின் சுயசரிதை புத்தமாக வெளியிடலாம். அந்த அசாத்திய பெண்மணிக்கு வாழ்த்துக்கள், அவரின் கோடான கோடி ரசிகர்களின் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி. காங்கிரசில் இருந்தாலும் தன் மனதில் பட்டதை பேசிகொண்டிருந்தார் குஷ்பூ. கட்சி நிலைப்பாட்டையும் தாண்டி அவரின் குரல் ஓங்கி ஒலித்தது. டெல்லி பல்கலைகழக […]

இன்றைய அரசியல் நிலவரம்

ஸ்ரீரங்கம் கோவிலில் டி.டி.வி. தினகரன் தரிசனம் எதற்கு? எம்ஜிஆர் காலத்தில் கட்டிமுடிக்கபட்ட கோபுரம் காக்கும் என்றா? நடக்குமா? எதற்கு அங்கு சென்றிருப்பார் தினகரன்? இந்த நாஞ்சில் சம்பத் என்பவரை கொஞ்ச நாளாக காணவில்லை, அந்த கோவில் பக்கம் ஏதும் கடைபோட்டு மாறுவேடத்தில் அலைகின்றாரோ என பார்க்க போயிருக்கலாம் தினகரன். மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது : ப.சிதம்பரம் டிவிட் இவர் அதிமுகவினை சொல்கின்றாரா? இல்லை காங்கிரசை சொல்கின்றாரா? அல்லது மோடி அரசின் இந்தியாவினை சொல்கின்றாரா என்பதுதான் […]

ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்

இலங்கையில் தமிழனுக்கு ஒரு அநீதி நடந்திருக்கின்றது, இங்கு தட்டிகேட்பார் யாருமில்லை அதாவது பந்துவீச்சில் சாதனை படைத்த தமிழன் முத்தையா முரளீதரன். அவர் விளையாண்ட காலம் எல்லாம் அவர் பந்து எதிரிக்கு சிம்ம சொப்பணம். இலங்கைக்கு உலக‌ கோப்பை பெற்று தந்ததில் முரளிதரனின் பங்கு அதிகம். இன்றும் அதிக விக்கெட்டுகள் வீசிய சாதனை அவர் வசமே இருக்கின்றது. அவரை முடக்கி ஷேன் வார்ணேயினை உயர்த்திவிடும் எல்லா ஆஸ்திரேலிய திட்டங்களும் தவிடுபொடியாயின‌ இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கிரிக்கெட்டர்களில் முரளிதரனும் […]

அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது

நாங்கள் சிவசேனை மற்றும் பாஜகவின் தயாரிப்பேதான், அதனை நிரூபித்துகொண்டே இருப்போம் என செய்துகாட்டுபவர்களில் அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது அவ்வப்போது நிரூபிப்பார்கள், இப்பொழுது பெரியார் பக்கம் வந்துவிட்டார்கள் அதாவது பெரியார் ஈழவிடுதலைக்கு உதவவில்லை, குமரி பிரிவினைக்கு உதவவில்லை, சென்னை போராட்டத்திற்கு உதவவில்லை , அதனால் அவர் தமிழின துரோகி என சொல்ல ஆரம்பித்தாயிற்று தமிழக அமைப்பின் சாதிக்கு சற்றும் குறையாதது யாழ்பாண சாதிவெறி, இது பெரியாருக்கு தெரியாதது அல்ல, அதனால்தான் யாழ்பாண வர்க்கம் இங்கு ஆதரவு […]

காசுக்கு துணைபோகும் கூட்டம் எது?

” இந்து கோவில் ஆனால் நீ உள்ளே வர கூடாது, இது இந்துக்கள் கிணறு ஆனால் நீ நீர் எடுக்க கூடாது நீனும் இந்து , நானும் இந்து ஆனால் ஒன்றாய் அமரவோ உண்ணவோ கூடாது. நீ கீழாவனன் நான் மேலாவவன், என்னை கண்டால் 10 அடி தள்ளி நிற்கவேண்டும், மேலாடை அணிய கூடாது. நீ படிக்க கூடாது, நீ சிந்திக்க கூடாது, விலங்குகளில் ஒன்றாய் நீ இருக்கவேண்டும். வாழலாம், ஆனால் நீ எப்படி வாழவேண்டும் என்பதை […]

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

https://youtu.be/sMdjTc6uwJA  அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று, அவன் போராட கிளம்பி கிட்டதட்ட 90 வருடமாயிற்று. போராட்டத்தை முடித்தும் கிட்டதட்ட 45 வருடமாயிற்று. ஆனாலும் அந்த கிழவன் பெயரை கேட்டவுடனே பலருக்கு எவ்வளவு வயிற்றேரிச்சல் வருகின்றது, எவ்வளவு அலறல் வருகின்றது? கிழவன் அப்படி அடித்திருக்கின்றான் . ஒரு பெரு மரம் இருந்திருக்கின்றது, அதில் மந்தி கூட்டம், கோட்டான் கூட்டமும் கொடுநாகமும் குழுமியிருந்திருக்கின்றன, தாங்கொணா துயரை எல்லாம் அவை கொடுத்திருக்கின்றன. ஆத்திரமடைந்த கிழவன் கோபத்தில் தைரியமாக பொங்கிவிட்டான், அது பாம்பு […]

நாங்கள் பாஜகவிற்கு அடிமை அல்ல : ஜெயகுமார்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் வாக்களித்த மக்கள் வேதனையோடு பார்க்கிறார்கள்: வானதி சீனிவாசன் ஏம்மா, தகுதி நீக்கும் செய்யும் ஐடியா எல்லாம் இந்த பழனிச்சாமிக்கும், தனபாலுக்கும் உதிக்கவா செய்யும்? இப்படி எல்லாம் ஆடும் அளவிற்கு அவர்கள் வொர்த் இல்லை, ஏதோ ஒரு சக்தி திட்டம் தீட்டி கொடுக்கின்றது அவ்வளவுதான் அதனைத்தான் நாங்கள் வேதனையோடு பார்க்கின்றோம் தாயே… தினகரனும், ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் அது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் […]

உலகம் பதை பதைப்பில் இருக்கின்றது

ஆறுமுறை அணுகுண்டு வெடிப்பினை தொடர்ந்து, நீண்ட தூர ஏவுகனை சோதனையிலும் முழுவெற்றி பெற்றது வடகொரியா ஆனானபட்ட ஹிட்லரையே சமாளித்த அமெரிக்காவிற்கு வடகொரியா பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கின்றது, இனி இன்னும் பொருளாதார தடைகளை இறுக்குவார்கள் ஏற்கனவே ஒவ்வொரு பொருளாதார தடையின்பொழுதும் ஒரு ஏவுகனை + ஒரு அணுகுண்டு என சோதித்து வெறுப்பேற்றுவது வடகொரிய ஸ்டைல் இப்பொழுது புதிய தடைவேறு என்ன ஆயுதம் சோதனை செய்யபோகின்றார்களோ அல்லது எத்தனை நாள் பொறுப்பது என ஜப்பானை போட்டு அடிக்க போகின்றார்களோ என்னவோ, […]

சென்னை மும்பை நட்புறவின் அடையாளம் இந்த படம்

என்ன இருந்தாலும் மராட்டியர்கள் நன்றிமிகுந்தவர்கள், ஹேம மாலினியினை அங்கே வரவேற்று கொண்டாடி ஏற்றுகொண்டு மறக்காமல் குஷ்பூவினை தமிழகத்திற்கு அனுப்பிவிட்டனர். சென்னை மும்பை நட்புறவின் அடையாளம் இந்த படம்.           தமிழக அரசியலில் வைஜெயந்தி மாலாவிற்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தது, ஆனால் தவறவிட்டார். தான் தவறவிட்ட வாய்ப்புகளை எல்லாம் குஷ்பூவும் விட்டுவிட கூடாது, அவர் அரசியலில் ஜொலிக்கட்டும் என வாழ்த்துகின்றார் வைஜெயந்திமாலா. வைஜெயந்திமாலா விரும்பினால் குஷ்பூ ரசிகர் மன்றத்தின் சீனியர் பதவி அவருக்கு […]