பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கரியப்பா , மானெக்‌ஷா வரிசையில் மறக்க முடியாதவர் அர்ஜன் சிங்

மார்ஷ்ல் அர்ஜன் சிங், இந்த தேசத்திற்கு ஆற்றிய சேவை மகத்தானது. 1962ல் சீனாவிடம் இருந்து பின்வாங்கிய நிலையில், இந்தியா பலவீனபட்டுவிட்டதாக கருதிய பாகிஸ்தான் அமெரிக்க கருவிகள் துணையோடு 1965ல் நம்மீது படையெடுத்தது. ஆனால் அமெரிக்காவே அலறும் வண்ணம் பாகிஸ்தானை பின்னி எடுத்து விரட்டியது இந்தியா, அந்தபோர் தொடர்ந்திருக்குமானால் முழு காஷ்மீரை அன்றே மீட்டிருப்போம். லால்பகதூர் சாஸ்திரியும் அத்திட்டத்தில்தான் இருந்தார் ஆனால் தாஷ்கண்ட் அமைதிபேச்சில் அவர் முழு காஷ்மீரையும் கைபற்றும்வரை யுத்தம் நிற்காது என சொல்லிவிட்டு வெளியேறிய பின்புதான் […]

பிறந்தநாள் வாழ்த்துக்கள், மோடிஜி…

நமது பத்திரிகைகள் எப்பொழுதாவது சொல்லும் சேதி அது, அதாகபட்டது மோடி தமிழகத்தை பொருத்தவரை தமிழக பாஜக மீது அதிருப்தியில் இருக்கின்றாராம். “எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் கட்சி வளர்க்க உங்களுக்கு தெரியவில்லை..” என சலித்து கொள்வாராம் நமது பத்திரிகைகள் உண்மையே சொல்லும் என்பதால் இதனையும் நம்பலாம். அந்த கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துகொள்வார்கள் போல.. ஆக தனக்கும் நல்ல பெயர் இருப்பதாக நம்பிகொண்டிருக்கும் அந்த அப்பாவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். […]

காலத்தினால் வந்தவன், காலத்தை வென்றவன்

கால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள். இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார். புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில், பர்மாவில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை நிச்சயம் கலைத்தே விட்டு […]

கலகக்கார கிழவர் “பெரியார்”

அந்த காலத்தில் தென்னிந்திய ஊர்களிலும், பாமரர் வாழும் இடங்களிலும் அருகிலும் அவருக்கு மேடை போட்டு கொடுப்பார்கள், அதிலே ஒரு கட்டிலும் போடுவார்கள், அவர் வந்து பேசுவார் , சிந்திக்க சொல்வார் பிராமணர், இந்து கடவுள்கள்,சாதி என கடுமையாக தாக்குவார், எல்லா இடத்தில் கிடைப்பது போலவே ஆங்காங்கு இருந்து கற்களும் இன்னபிற பொருள்களும் வரும், அமைதியாக சொல்லுவார் “இந்த கற்களை வைத்து வீடு கட்டலாம், என்னை கட்டிவிட முடியாது” ஈரோட்டில் வெங்கட நாயக்கரின் மகனாகத்தான் பிறந்தார், ராமசாமி நாயக்கராக […]

ஹெச். ராஜா தோல்வி மற்றும் பிக்பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க்….

சட்டத்திற்கு புறம்பாக நடந்த சாரண – சாரணியர் தேர்தல் செல்லாது: எச்.ராஜா பேட்டி நல்ல வேளையாக “நான் போட்டியே இடலங்கிறேன்” என சொல்லாமல் இருந்தாரே அது வரைக்கும் நலல்து. மத்தியில் அசுரபலம், மாநில அரசின் முதுகிலும் அமர்ந்தாயிற்று ஆயினும் ஒரு சாதாரண இயக்க பதவியினை பிடிக்க முடியவில்லை கேட்டால் இன்றிரவு தாமரை மலரும், நாளை மாலை மலரும் என அள்ளிவிட வேண்டியது. இந்த கோஷ்டியினையும் ஏதோ பெரிய இயக்கமாக எண்ணி சிலர் பதில் சொல்லிகொண்டிருப்பதுதான் காமெடி. இன்னும் […]

பெட்ரோல் விலை மர்மம் என்ன ?

பெட்ரோல் விலை பீப்பாய்க்கு 140 டாலர் என உயர இருந்தபொழுதும் லிட்டர் 70க்கும் மேல், இப்பொழுது கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு இருக்கும்பொழுதும் அதே விலையா? மோடி அரசு மோசடி செய்கின்றது, அம்பானி கொள்ளை, அதானி கொள்ளை, மோடி நொள்ளை என பலர் சொல்லிகொண்டிருக்கின்றான் விலைவாசி ஏற பல காரணம் இருந்தாலும், அது இறங்க பலர் ஒத்துழைப்பு அவசியம், இந்த பெட்ரோல் விஷயத்தில் என்ன நடக்கின்றது என்றால் இதுதான் பெட்ரோல் விலை உச்சத்தில் இருந்தபொழுது சமாளித்தது […]

லைக்கா தயாரிக்கும் படத்தினை இயக்க போகின்றார் சீமான்

லைக்கா தயாரிக்கும் படத்தினை இயக்க போகின்றார் சீமான் லைக்கா நிறுவணம் ராஜபக்சேயுடன் நெருக்கமானது என முன்பு பல தகவல்களும் , சர்ச்சைகளும் வந்தது நினைவிருக்கலாம். லைக்கா சுபாஷ்கரனுக்கும் ராஜபக்சேக்கும் வியாபாரம் இருக்கலாம், ஆனால் சுபாஷ்கரன் ஒரு தமிழ்பிள்ளை என்பதற்காக அங்கிள் சைமன் இயக்க போகின்றார். எளிய பிள்ளைகளின் போராட்டம் இப்படித்தான் இருக்கும். சோனியா களத்தில் இல்லை, கலைஞரும் அமைதி அந்த நாசமாய் போன ராஜபக்சேவும் பதவியில் இல்லை. பின் அங்கிள் என்னத்தான் செய்யமுடியும்? யாரை திட்ட முடியும்? […]

அலறி அடித்து இருக்கைக்கு ஓடுவதன் பெயர் தற்காலிக வாபஸாம்

“அரசினை எச்சரிக்கின்றோம், அடுத்த தேர்தலில் நாங்கள் எங்களில் ஒருவரை நிறுத்தினால் கட்டாயம் வெல்வோம், அதன் பின் எங்களுக்கான உரிமையினை நாங்களே எடுப்போம்” : ஜேக்டோ ஜியோ ஒஹோ.. நீங்களே நின்று நீங்களே வாக்களித்து நீங்களே வெல்வீர்களா? இப்படி ஒரு கனவா? விவசாயி, மீணவன் அல்லது தொழிலாளி எல்லாம் இப்படி நிறுத்தினால் நீங்கள் தாங்குவீர்களா? அப்படி ஒரு பாமர தொழிலாளி வென்று வந்துவிட்டான் என்றால் உங்கள் நிலை என்னாகும் என்பதை கொஞ்சம் யோசித்துவிட்டு சவால் விடுங்கள் (என்ன தைரியத்தில் […]

மகா விசித்திரமான மனிதர் சுப்பிரமணியன் சாமி

இந்தியாவிற்கே, ஏன் உலகிற்கே மகா விசித்திரமான மனிதர் சுப்பிரமணியன் சாமி முழுக்க தேவைபடும் அரசியல்வாதி என்று சொல்ல முடியாது, அதே நேரம் முழுக்க தேவையில்லாதவர் என்றும் சொல்லிவிட முடியாது. சர்ச்சைகுரிய அரசியல்வாதிதான் ஆனால் சில விஷயங்களில் அவரின் அணுகுமுறை பாராட்டபட வேண்டியது. புலிகளுக்கு எதிராக அவர் இன்றுவரை காட்டும் உறுதிக்கு வாழ்த்தலாம், 1991 முதல் 1996 வரையிலான ஜெயாவின் காட்டு தர்பாரை எதிர்த்த முதல் ஆள் சுப்பிரமணியன் சாமிதான். அதன் பின் அவர் தொடுத்த வழக்குத்தான் இன்று […]

இன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள்

இன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள். இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் “இன்சினியர் தினம்”, வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம். நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர். காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் […]